Saturday, 15 July 2017

வேளாண்மை பயிர்கள்

 



➾  வேளாண்மை பயிர்கள்

⇒   1.தானியங்கள்

>  1.நெல்


  • முளை கட்டிய விதைப்பு, நேரடிவிதைப்பு ஏற்ற பகுதிகள்
  • தமிழத்தின் எல்லாப் பகுதிகளிலும் எங்கெல்லாம் சேற்று நடவு செய்யப்படுகின்றதோ அங்கெல்லாம் நேரடி விதைப்பும் செய்யலாம்.

>  பருவம்


  • நடவு முறை நெல்லுக்கான பருவங்கள் இதற்கும் சரியான பருவங்கள்

Image result for agriculture>  இரகங்கள்


  • நடவுக்கு பயன்படுத்தப்படும் அனதை்து இரகங்களும் சேற்று வயல் நேரடி விதைப்பு மூலம் நன்கு வரும். எனினும், பின்வரும் இரகங்கள் மிகவும் ஏற்றதாக இருக்கும்.
  • இரங்கள் <=> காலம் (நாட்கள்) <=> விதைக்கும் காலம்
  • பொன்மணி<=> 160 - 165 <=> சம்பாவிற்கு ஆகஸ்ட் 1 முதல் 30 வரை
  • கோ 43, ஐ. ஆர் 20, ஏ.டீ.டி 38, ஏ.டீ.டி 39, பொன்னி, வெள்ளை பொன்னி <=> 125 -135 <=> தாளடிக்கு செப்டம்பர் 1 முதல் 30 வரை
  • ஏ.டீ.டி 36, ஏ.டீ.டி 37 <=> 105 - 110 <=> குறுவைக்கு ஜூன் 1 முதல் 10 வரை <=> தாளடிக்கு அக்டோபர் 1 முதல் 10 வரை

>  நிலம் தயாரித்தல்


  • கோடையுழவு அவசியம்
  • விதைப்பதற்கு முன்பாக நீர் கட்டி சேற்றுழவு செய்யப்படுதல் வேண்டும்
  • மிகமிக அவசியம் நிலம் நாற்றங்காலைப் போன்றே சமன் செய்யப்படுதல் வேண்டும்
  • இங்கும் அங்கும் மேடு பள்ளமாகவோ, குண்டும் குழியுமாகவோ இருப்பின் அங்கெல்லாம் நீர் தேங்கி நாற்றுக்கள் சரி வர முளைக்காமல் இடைவெளி அதிகம் காணப்படும்.
  • நிலம் சமன்படுத்துதல் நீர் மேலாண்மைக்கும், களை மேலாண்மைக்கும் அடிப்படைத் தேவைகள் என்பதை நன்கு உணர்ந்து. தக்கவாறு நிலம் சமன் படுத்தப்பட வேண்டும்.
  • அரை அடி அகலத்தில் சிறிய வடிகால் வாய்க்கால்கள் நிலத்தின் குறுக்கேயும், 3 மீ இடைவெளியிலும், வரப்பின் ஒரத்திலும் அமைத்தல் நல்லது.

>  விதைப்பு


  • எக்டருக்கு 60 கிலோ
  • முளை கட்டிய விதைகள்
  • விதை நேர்த்தி முன்னர் குறிப்பிடப்பட்டவை போன்றே செய்யவும்
  • மண் மறைய சிறிய அளவில் நீர் வைத்து நேரடியாகக் கையாலும், சேறும் சகதியுமான சூழ்நிலையில் உருளை விதைப்பான் மூலமும் விதைக்கலாம்
  • ‘இருபயிர்’ முறை என நெல்லும்-பசுந்தாள் உரமும் ஒருங்கே விதைத்து உர நிர்வாகத்தில் சிக்கனமும், மகசூலில் மேன்மையும் பெறலாம். இதற்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள ‘நெல் - பசுந்தாள்’ விதைப்பானைப் பயன்படுத்தலாம்

>  பின்செய் நேர்த்தி


  • பயிர் களையப்படுவதும், பாடு நிரப்பப்படுவதும் விதைத்த 14-21 ஆம் நாட்களில் செய்யப்படவேண்டும். இது மிகவும் முக்கியமான பயிர் செய் நேர்த்தியாகும்.
  • நெல்லும் பசுந்தாள் பயிரும் ஒருங்கே பயிரிடப்பட்டிருந்தால், பசுந்தாள் செடியினை 40 செ.மீ (சுமார் 11/4 அடி) வளர்ச்சியில் அல்லது விதைத்த 30 நாட்களில், இதில் எந்த நிலை முந்துகின்றதோ அப்பொழுதே ‘உருளைக் களை எடுப்பான்’ கருவியைக் கொண்டு மடக்கி அழுத்தி மிதித்து விடல் வேண்டும்.
  • சந்தர்ப்பம் கிடைக்குமானால் மீண்டுமொருமுறை 7-10 நாட்களுக்குள் ‘உருளைக் களை எடுப்பானை’ நெல் வரிசைகளுக்கு இடையே இழுப்பதால் வேரிற்கு புது பிராணவாயு கிடைக்கவும், தேவையற்ற அங்கக அமிலங்கள் வெளியேறவும் வாய்ப்புகள் அதிகம். பயிரின் வேர் புத்துயிர் பெற்று பயிர் மேலோங்கி, நல்ல மகசூல் தரவல்ல ஒரு பயிர் செய் நேர்த்தி என்பதை உயர்த்தல் வேண்டும்
Image result for agriculture

>  உரமிடுதல்


  • நடவு முறைக்கு பரிந்துரைக்கப்பட்ட உர அளவுகள் இம்முறைக்கும் ஏற்றது
  • தழைச்சத்து, சாம்பல் சத்து இரண்டையும் 25 சதங்களாகப் பிரித்து விதைத்த 21 நாட்கள் விரைந்து தூர் பிடிக்கும் பருவம், பூங்கதிர் உருவாகும் பருவம் மற்றும் கதிர் வெளிவரும் பருவங்களில் இடுதல் வேண்டும்
  • பரிந்துரைக்கப்பட்ட மணிச்சத்து முழுவதுமே அடியுரமாக கடைசி உழவின் போது அளிக்க வேண்டும்
  • உயிர் உரங்கள் நடவுமுறை பயிரிருக்கு பரிந்துரைக்கப்பட்டது.
  • நுண்ணூட்டச்சத்துக்கள், இழைவழி உரமிடுதல் போன்றவைகளும் இப்பயிருக்கும் பின்பற்றப்பட வேண்டும். நடவு முறையில் கூறப்பட்டதே இதற்கும் பொருந்தும்

>  களை மேலாண்மை


  • சேற்று வயல் நேரடி விதைப்பில், களை முளைப்பதற்கு முந்தைய களைக் கொல்லிகளான பிரிடில்லாக்குளோர் 0.75 கிலோ / எக்டருக்கு விதைத்த 8-ம் நாளில் அல்லது பிரிட்டிலாக்குளோர் + சேப்னரை (சோபிட்) 0.45 / எக்டருக்கு என்ற அளவில் தெளிப்பதை தொடர்ந்து விதைத்த 40வது நாளில் ஒருமுறை கைக்களை எடுக்க வேண்டும்.
  • சேற்று வயல் நேரடி விதைப்பில், உருளை விதைப்பான் மூலம் விதைத்து, கோனோ களைக் கருவி கொண்டு விதைத்த 10, 20 மற்றும் 30வது நாளில் களையெடுக்க வேண்டும்.
  • நடவு முறையில், நட்ட 15-20 நாள் மற்றும் 45வது நாளிலும் இருமுறை கைக்களை எடுக்க வேண்டும் அல்லது 3.0லி / எக்டர் என்ற அளவில் பென்டிமெத்தாலின் களைக் கொல்லியை நட்ட 8வது நாளில் உகந்த ஈரப்பதத்தில் தெளிப்பதை தொடர்ந்து நட்ட 45வது நாளில் ஒரு முறை கைக்களை எடுக்க வேண்டும்.
  • இரட்டை பயிர் முறையில் சேற்று வயல் நேரடி விதைப்பு நெல் மற்றும் தக்கைப் பூண்டை பயிரிடும் போது அதன் உற்பத்தி திறன் மற்றும் பொருளாதார வருவாயை மேம்படுத்த களை முளைப்பதற்கு முந்தைய களைக் கொல்லியான பிரிட்டில்லாகுளோர் + சேப்னரை 0.45 கிலோ / எக்டர் என்ற அளவில் தெளிப்பதை தொடர்ந்து கோனோ களைக் கருவி கொண்டு வரிசைகளுக்கு இடையிலும், வரிசைகளுக்கு உள்ளே கைக்களை மூலமும் விதைத்த 35வது நாளில் களை எடுக்க வேண்டும்.
  • களை முளைப்பதற்கு முன் களைக் கொல்லியான பிரிட்டில்லாகுளோர் + சேப்னரை 0.45 கிலோ / எக்டர் என்ற அளவில் விதைத்த 3 ஆம் நாளில் தெளிக்கவும் + ரோட்டோ உருளை வடிவ களைக் கருவி மூலம் விதைத்த 45வது நாளில் களை எடுக்க வேண்டும். இதன் மூலம் எகினோக்ளோவா கிரஸ்கல்லி, பேனிகம் ரெபன்ஸ், எக்லிட்டா ஆல்பா மற்றும் மோனோகோரியா வஜினேலிஸ் போன்ற களைகளை கட்டுப்படுத்துவதுடன் அதிக தானிய மகசூல், நிகர லாபம் மற்றும் வரவு செலவு விகிதத்தை பெறலாம்.
  • பாசன மற்றும் மானாவாரி நேரடி நெல் விதைப்பில் களை முளைப்பதற்கு முன் களைக் கொல்லியான பிரிட்டில்லாகுளோர் 0.45 கிலோ / எக்டரை விதைத்த மூன்றாம் நாளிலும் அசிம்சல்பூரான் 35 கிராம் / எக்டரை விதைத்த 20வது நாளிலும் அதனை தொடர்ந்து விதைத்த 45 நாளிலும் கைக்களை எடுக்க வேண்டும்.
  • தக்கைப் பூண்டை ஊடுபயிராக பயிரிடும் போது பிரிட்டில்லாகுளோர் + சேப்னரை 0.45 கிலோ / எக்டர் என்ற அளவில் விதைத்த 4வது நாளில் தெளிப்பதை தொடர்ந்து விதைத்த 35வது நாளில் கைக்களை எடுக்க வேண்டும். இதுன் மூலம் அதிக உற்பத்தி திறனை பெறலாம்.
  • நெல் – நெல் – தரிசு பயிர் முறையில் செஸ்போனியா ரோஸ்ட்ரோடாவை பயிரிட்டு வயலில் அமுத்தி விடுவதால் களைகளைக் கட்டுப்படுத்தலாம். இதனை தொடர்ந்து நட்ட 35வது நாளில் ஒரு கைக்களை எடுக்க வேண்டும்.

>  நீர் மேலாண்மை


  • விதைத்த முதல் வாரத்தில் மண் நனைய நீர் பாய்ச்சுதல் போதுமானது. களைக்கொல்லி இடப்பட்டிருப்பின் அதற்கு ஏற்றவாறு நீர் கட்ட வேண்டும்.
  • நீரின் ஆழம் பயிரின் வளர்ச்சிக்கேற்ப படிப்படியாக ஒ ரு அங்குலம் வரை அதிகரிக்கப்படலாம்.
  • அதன்பின்னர் நடவு முறையில் கூறப்பட்ட வழிமுறையைப் பின்பற்றவும்.
⇒   2.கோதுமை

>  சாகுபடிக்குகேற்ற மாவட்டங்கள்


  • மலைச்சார்ந்த மற்றும் அதன் அருகில் உள்ள சமவெளிப்பகுதிகள் தேனி, திண்டுக்கல், கரூர், கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களிலுள்ள மலைப்பகுதிகள்.

>  பருவம்


  • அக்டோபர் 15 முதல் நவம்பர் முதல் வாரம் வரை விதைப்பிற்கு ஏற்ற பருவுமாகும். நவம்பர் 15க்குள் விதைப்பினை கண்டிப்பாக முடித்துவிட வேண்டும்.

>  இரகங்கள் : கோ. வெ.(கோ) 1, த.வே.ப.க சம்பா கோதுமை கோ.வெ.2


>  இரகங்களின் விபரம்


  • விவரம் <=> கோ. வெ.(கோ) 1 <=> கோ. வெ.(கோ) 2
  • பெற்றோர் <=> HD2646/HW2002A/CPAN3057 <=> NP 200 ன் விகாரி
  • வயது (நாட்கள்) <=> 85-90 <=> 110
  • தானிய மகசூல் (கிலோ / எக்டர்) <=> 2364 <=> 4040
  • தண்டு <=> நேரானது <=> நேரானது முதல் பகுதி நேரானது
  • உயரம் (செ.மீ) <=> 73 – 78 <=> 75-80 செ.மீ
  • தூர்கள் <=> 5-6 <=> 10-12
  • 50 % பூக்கள் தோன்றும் நாட்கள் <=> 50 நாட்கள் <=> 73 நாட்கள்
  • கதிர் வடிவம் <=> பியூசிபார்ம் (முள்ளங்கி வடிவம்) <=> பியூசிபார்ம் (முள்ளங்கி வடிவம்)
  • தானியத்தின் நிறம் பழுப்பு <=> -
  • 1000 நெல்லின் எடை (கி) <=> 37 <=> 41
  • சிறப்பு அம்சங்கள் <=> காயாத செடி மற்றும் மணிகள் உதிராத தன்மை, தண்டு மற்றும் இலை துருநோய் தாக்குதலை தாங்கும் தன்மை, சப்பாத்தி மற்றும் ரொட்டி செய்ய உகந்தது <=> துரு நோய் மற்றும் வெப்பத்தை தாங்கும் தன்மை கொண்டது.

>  நிலம் தயாரித்தல்


  • இரும்பு கலப்பை கொண்டு இருமுறையும், கொக்கி கலப்பைக் கொண்டு இரண்டு முதல் மூன்று முறை நன்றாக உழுதல் வேண்டும்.

>  எரு இடுதல்


  • மக்கிய தொழு உரம் எக்டருக்கு 12.5 டன் என்ற அளவில் இடவேண்டும்.

>  பூஞ்சாணக் கொல்லியால் விதைநேர்த்தி


  • விதைப்பிற்கு 25 மணிநேரம் முன்னர், ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பென்டாசிம் அல்லது திரம் என்ற அளவில் விதைநேர்த்தி செய்யவேண்டும்.

>  பாத்திகள் அமைத்தல்


  • பாத்திகளை 10 அல்லது 20 சதுரமீட்டர் என்ற அளவில் அமைக்கவேண்டும். போதுமான பாசன வாய்க்கால்களை அமைத்திடல் வேண்டும்.

>  உரம் இடுதல்


  • மண் பரிசோதனை பரிந்துரைக்கேற்ப உரமிடுதல் வேண்டும் அல்லது பொது பரிந்துரையான எக்டருக்கு 80, 40, 40 கிலோ தழை, மணி, சாம்பல் சத்துக்களை இடவேண்டும். தழைச்சத்தில் பாதியளவும், மணி மற்றும் சாம்பல் சத்துக்களில் முழுப்பகுதியும் அடியுரமாக இடவேண்டும்.
⇒   விதையளவு : 100 கிலோ/எக்டர்

>  விதைப்பு


  • பாத்திகளில் அடியுரம் இட்ட பின்னர் 20 செ.மீ இடைவெளியில் கோடுகள் போட்டு விதைகளை 5 செ.மீ ஆழத்தில் தொடர்ந்து விதைக்கவேண்டும். ஆழமாக விதைப்பதை தவிர்ப்பது நல்லது.
⇒   பின்செய் நேர்த்தி

>  களைக் கட்டுப்பாடு


  • விதைத்த 3 நாட்களுக்கு பின்னர் எக்டருக்கு 800 கிராம் என்ற அளவில் ஐசோபுரோட்டுரான் என்ற களைக்கொல்லி மருந்தினை தெளிக்கவேண்டும். விதைத்த 35 நாட்களுக்குப் பின்னர் கைக்களை எடுக்கவேண்டும். களைக்கொல்லியை தெளிக்கவில்லையெனில் விதைத்த 20வது மற்றும் 35வது நாட்களில் இரண்டு கைக்களை எடுக்கவேண்டும்.

>  நீர் நிர்வாகம்


  • நிலத்தின் தன்மை மற்றும் மழையைப் பொறுத்து நான்கு முதல் ஆறு முறை நீர் கட்டவேண்டும். கோதுமை பயிருக்கு கீழ்க்கண்ட 5 நிலைகளில் நீர்ப்பாசனம் தருவது அவசியம்.

>  நீர் கட்டவேண்டிய முக்கிய நிலைகள்


  • I<=> விதைத்த பின்
  • II<=> வேர் பிடிக்கும் நிலை <=> 15-20 நாட்கள்
  • III <=> தூர் பிடித்தல் <=> 35-40 நாட்கள்
  • IV <=> பூக்கும் நிலை <=> 50-55 நாட்கள்
  • V <=> மணி பிடிக்கும் நிலை <=> 70-75 நாட்கள்
  • கோதுமையை பொறுத்தவரை வேர்பிடிக்கும் மற்றும் பூக்கும் தருணத்தில் நீர் கட்டுதல் மிக அவசியமாகும். முளைவிடும் தருணத்தில் தண்ணீர் தேங்கக்கூடாது.

>  மேலுரம் இடுதல்


  • வேர் பிடிக்கும் நிலையில் (15-20 நாட்கள்) மீதியுள்ள பாதியளவு தழைச்சத்தினை மேலுரமாக இடவேண்டும்.

>  அறுவடை


  • தானியங்கள் முற்றிய பிறகு மற்றும் தட்டை காய்ந்த பின்னர் அறுவடை செய்யவேண்டும். தானியங்களை பிரித்து தூற்றவேண்டும். செலவினை குறைக்க கதிர் அருப்பானை தானியங்களை பிரிக்க மற்றம் சுத்தம் செய்ய உபயோகிக்கலாம்.

>  விதை நேர்த்தி :


  • பின்வரும் பூஞ்சானக் கொல்லியில் ஏதேனும் ஒன்றை கொண்டு விதை நேர்த்தி செய்யவும்
  • கார்பன்டாசிம் @ 2 கிராம் / கிலோ
  • திரம் @ 2 கிராம் / கிலோ
  • கார்பாக்ஸின் @ 2 கிராம் / கிலோ
  • கோதுமையில் அறுவடை பின்சார் தொழில்நுட்பம்
  • கோதுமை மனிதன் உட்கொள்ளும் தானிய வகைகளில் முக்கியமான இடம் வகிக்கின்றது. கோதுமை மாவு சப்பாத்தி,ரொட்டி மற்றும் அடுமனைப்பொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. கோதுமை டிரிட்டிகம் இனத்தைச் சேர்ந்தது 30,000க்கும் மேற்பட்ட இன வகைகளைக் கொண்டது. கோதுமை வகைகளில் ரொட்டிக்கு டி.சட்டைவம், மாக்ரோனி (பிழியப்படும் பதார்த்தத்தில்) டி.டியூரம் வகையும் பயன்படுத்தப்படுகிறது.
⇒   2.சிறுதானியங்கள்

>  1.மக்காச்சோளம்


>  பருவம் மற்றும் இரகங்கள்


  • பருவம் <=> இரகங்கள்
  • ஆடிப்பட்டம் (ஜூலை - ஆகஸ்ட்) <=> த.வே.ப.க மாக்காச்சோள கலப்பின கோ 6, இளஞ்சோள இரகம் கோ(பிசி) 1
  • புரட்டாசிப்பட்டம் (செப்டம்பர் - அக்டோபர்) <=> த.வே.ப.க மாக்காச்சோள கலப்பின கோ 6, இளஞ்சோள இரகம் கோ(பிசி) 1
  • தைப்பட்டம் (ஜனவரி - பிப்ரவரி) <=> த.வே.ப.க மாக்காச்சோள கலப்பின கோ 6, இளஞ்சோள இரகம் கோ(பிசி) 1

>  நிலம் தயாரித்தல்


  • முதலில் நிலத்தை டிராக்டர் மூலம் கட்டி கலப்பையால் ஒரு முறை உழவு செய்யவும். பின்பு தொழு உரத்தை நிலத்தில் பரப்பிய பிறகு கொக்கி கலப்பை கொண்டு இரு முறையும் நன்கு உழவு செய்யவும்.

>  தொழு உரம் இடுதல் :


  • ஒரு எக்டருக்கு 12.5 டன் தொழு உரம் அல்லது மக்கிய தொழு உரம் அல்லது மக்கிய தேங்காய் நாரைச் சமமாகக் கடைசி உழவிற்கு முன் சீராக இட்டு, அதனுடன் 10 பாக்கெட் (2000 கிராம் எக்டர்) அசோஸ்பைரில்லம் கலந்து பரப்பி நன்கு உழவு செய்யவும்.

>  பார் பிடித்தல்


  • 60 செ.மீ இடைவெளியில் 6 மீ நீளம் கொண்டு பார் அமைக்கவும், பார்களுக்கு குறுக்கே பாசன வாய்க்கால் அமைக்கவும்.
  • பார் அமைக்காவிட்டடால், 10 அல்லது 20 சதுர மீட்டர் அளவில் நீர்வசதிக்கேற்ப பாத்திகள் அமைக்கலாம்.
  • செலவினை குறைக்க டிராக்டர் மூலம் பார் அமைக்கும் கருவிகளை பயன்படுத்தவும்.

>  உரமிடுதல்


  • மண் பரிசோதனைக்கு ஏற்ப தழை, மணி, சாம்பல் சத்துக்களை இடுதல் வேண்டும். இல்லையெனில் பொதுப் பரிந்துரையான 1350, 62.50, 50 கிலோ எக்டர் அளவில் தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்களைப் பொதுவாக அளிக்கவேண்டும்.
  • அடியுரமாக கால் பகுதி தழைச்சத்து, முழு அளவு மணி மற்றும் சாம்பல் சத்து விதைப்பதற்கு முன் இடவும்.
  • பார்களில் கீழிலிருந்து 2/3 பகுதிக்கு 6 செ.மீ ஆழத்திற்கு குழியெடுத்து உரங்களை போட்டு 4 செ.மீ வரை மண் கொண்டு மூடவும்.
  • பாத்திகளில் 6 செ.மீ ஆழத்திற்கும், 60 செ.மீ இடைவெளி விட்டும் குழியெடுத்து உரக்கலவையை இட்டு 4 செ.மீ வரை மண்கொண்டு மூடவும்.
  • உரக்கலவையை பார்களின் ஓரத்தில் இடவேண்டும். 4 செ.மீ ஆழத்திற்கு மண்ணால் மூடவேண்டும்.
  • அசோஸ்பைரில்லம் நுண்ணுயிர் உரத்தைப் பயன்படுத்தினால் 100 கிலோ தழைச்சத்து மட்டும் அளித்தால் போதும்.

>  ஊட்டச்சத்து குறைபாடுகளினால் ஏற்படும் அறிகுறிகள்


>  தழைச்சத்து குறைபாடு :


  • பயிர் வளராமல் அடி இலைகள் மஞ்சள் நிறத்தோற்றத்துடன் தென்படும். பற்றாக்குறை முற்றிய நிலையில் இலைகள் பழுப்பு நிறமாக மாறி காய்ந்துவிடும். இச்சத்து பற்றாக்குறை அறிகுறி முதலில் இலைநுனியில் ஆரம்பித்து நடு நரம்பு வழியாக அடிப்பாகத்திற்கு பரவி இலை முழுவதும் பாதிக்கப்படும். தண்டுகள் மெலிந்து காணப்படும்.

>  மணிச்சத்து :


  • இள இலைகள் ஊதாகலந்த பச்சை நிறத்துடன் தோன்றும். செடியின் வளர்ச்சி மற்றும் முதிர்ச்சி மெதுவாகவும் கதிர்களில் மணிகள் குறைவாகவும் இருக்கும்.

>  சாம்பல் சத்து :


  • இலைகளில் மஞ்சள் அல்லது மஞ்சள் கலந்து பச்சை நிறக்கோடுகள் தென்படும். இலையின் நுனியிலும் ஓரங்களிலும் கருகல் தென்படும். செடியின் நுனியில் மணி பிடிக்காத கதிர்கள் காணப்படும். செடியில் கணுக்களின் இடைவெளி குறைந்து, வலுவிழந்து காணப்படும்.

>  மெக்னீசிய குறைபாடு :


  • முதிர்ந்த இலைகளின் ஓரமும், இலை நரம்புகளின் நடுப்பகுதியும் பச்சையம் இழந்து காணப்படும். கோடுகள் உள்ளது போன்ற தோற்றம் தென்படும்.

>  துத்தநாகக் குறைபாடு :


  • அடியிலைகள் நரம்புகளுக்கிடையே பச்சையம் இழந்து மஞ்சள் நிறக் கோடுகள் காணப்படும். மேலும் இளம் இலை விரிவடையாமல் சுருண்டு வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்துடன் இருக்கும்.

>  இரும்புச்சத்துக் குறைபாடு :


  • இலையின் நரம்புகளுக்கிடையே உள்ள பச்சையம் குறைந்து வெளிறிக் காணப்படும்.

>  நுண்ணூட்டச் சத்து இடுதல்:


  • தமிழ்நாடு வேளாண் துறை உருவாக்கிய நுண்உரக் கலவையை 12.5 கிலோ மணலுடன் கலந்து மொத்த அளவு 50 கி / ஹெக்டர் அளிக்க வேண்டும்.
  • எக்டருக்கு 30 கிலோ தமிழ்நாடு நுண்ணூட்டக் கலவையை ஊட்டமேற்றிய தொழுவுரமாக அளிக்க வேண்டும். (ஊட்டமேற்றிய தொழுவுரம் தயாரிக்க 1:10 என்ற விகிதத்தில் நுண்ணூட்டக்கலவை மற்றும் தொழுவுரத்தை கலக்க வேண்டும். தகுந்த ஈரப்பதத்தில் கலந்து ஒரு மாதம் நிழலில் வைக்க வேண்டும்).
  • (அல்லது) 5 கிலோ துத்தநாகம் + 40 கிலோ கந்தகம் + 1.5 கிலோ போரானை பற்றாக்குறை உள்ள மண்ணில் இட வேண்டும்.
  • துத்தநாக பற்றாக்குறை உள்ள மணலில் கலப்பின மக்காச்சோளத்திற்கு ஏக்கருக்கு 37.5 கி துத்தநாக சல்பேட் பரிந்துரைக்கப்படுகிறது.
  • பார் முறை நடவில், கலவையை மூன்றில் இரண்டு பங்கு வரப்பு மேலயும், வாய்க்காலிலும் தூவ வேண்டும்.
  • பாத்தி முறை பின்பற்றும்பொழுது, குழித்து நுண்ணூட்டக் கலவையை இட வேண்டும்.
  • நுண்ணூட்டக் கலவையை மண்ணில் இணைக்க வேண்டாம்.

>  விதையளவு:


  • நல்ல தரமுடைய விதைகளை தேர்ந்தெடுக்கவும். வீரிய ஒட்டு இரகங்களுக்கு 20 கிலோ, எக்டர் என்ற அளவிலும் இரகங்களுக்கு 25 கிலோ, எக்டர் என்ற அளவிலும் பின்பற்றவும்.

>  இடைவெளி:


  • ஒரு செடிக்கும் மற்றோர் செடிக்கும் இடையே 20 செ.மீ இடைவெளியும், பாருக்கு பார் 45 செ.மீ இடைவெளியும் இருக்கவேண்டும். செடிகளின் எண்ணிக்கை இரகம் மற்றும் வீரிய ஒட்டு இரகங்கள் 10-11 செடிகள், சதுரமீட்டர்.

>  நுண்ணுயிர் உரத்துடன் விதை நேர்த்தி:


  • பூஞ்சாண விதை நேர்த்தி செய்த விதைகளை விதைப்பதற்கு முன் மூன்று பாக்கெட் அசோஸ்பைரில்லம் 1600 கிராம் எக்டர் கொண்டு விதை நேர்த்தி செய்யவேண்டும்.

>  விதைத்தல்:


  • விதையை 4 செ.மீ ஆழத்தில் ஊன்றவேண்டும். விதைக்கும் கருவிகள் கொண்டு விதையை ஊன்றலாம்.

>  களைக் கட்டுப்பாடு:


  • விதைத்த 3-5ம் நாள் களை முளைக்கும் முன் களைக்கொல்லியான எக்டருக்கு 0.25 கிலோ அட்ராஜினை நேப்செக் /ராக்கர் தெளிப்பானில் தட்டையான விசிறி நுண் குழாய் பொருத்தி 500 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும். தொடர்ந்து விதைத்த 30-35-ம் நாளில் கைக்களை எடுக்க வேண்டும். (அல்லது)
  • ஏக்கருக்கு 0.25 கி அட்ராஜின் விதைத்த 3-5ம் நாளில் களை முளைக்கும் முன் களைக்கொல்லியை தெளிக்க வேண்டும். தொடர்ந்து ஏக்கருக்கு 2,4-D 1 கிலோ விதைத்த 20-25ம் நாளில் நேப்செக் /ராக்கர் தெளிப்பானில் தட்டையான விசிறி நுண் குழாய் பொருத்தி 500 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும். (அல்லது)
  • வரிசை முறை விதைப்பில், விதைத்த 3-5ம் நாளில் களை முளைப்பதற்கு முன் அட்ராஜின் எக்டருக்கு 0.25கி தெளிக்க வேண்டும். தொடர்ந்து இரட்டை சக்கர களையெடுக்கும் கருவியைக் கொண்டு விதைத்த 30-35ம் நாளில் களையெடுக்க வேண்டும்.
  • மண்ணில் போதுமான ஈரப்பதம் இருக்கும்பொழுது களைக்கொல்லியை பயன்படுத்தவும்.
  • களைக்கொல்லியை உபயோகித்த பின்னர் மணலை எதுவும் செய்யக் கூடாது.
  • ஊடுபயிராக பருப்பு வகைகள் இருந்தால் அட்ராஜின் உபயோகிக்கக் கூடாது. பென்டிமெத்தலின் ஏக்கருக்கு 0.75 கிலோ விதைத்த 3-5ம் நாளில் களை முளைக்கும் முன் தெளிக்கவும்.

>  பயிர் எண்ணிக்கை பராமரித்தல்:


  • இரண்டு விதைகள் விதைத்து இருந்தால், 12-15வது நாளில் நன்கு வீரியமாக வளர்ந்த ஒரு செடியை ஒரு குழிக்கு வைத்து மற்றதை களையவேண்டும்.
  • விதை முளைக்காமல் உள்ள இடத்தில், தண்ணீரில் ஊறவைத்த விதைகளை குழிக்கு இரண்டு விதை வீதம் விதைத்து உடன் நீர்ப் பாய்ச்சவேண்டும்.

>  களை எடுத்தல்:


  • விதைத்த 30வது நாளில் களைக்கொத்து கொண்டு களை எடுக்கவும்.
  • பின்னர் மண் அணைத்து பார்களை சரிசெய்யவேண்டும். இதனால் செடிகள் சாயாத தன்மை பெறும்.

>  தழைச்சத்து மேலுரம் இடுதல்:


  • விதைத்த 25வது நாளில், தழைச்சத்தில் பாதி அளவு உரத்தை இட்டு மண்ணால் மூடவேண்டும்.
  • மீதம் உள்ள கால் பகுதி தழைச்சத்தை விதைத்த 45வது நாளில் இடவேண்டும்.

>  நீர் நிர்வாகம்


  • மக்காச்சோள பயிர் அதிக வறட்சியும் அதிக நீரையும் தாங்காது. அதனால் பயிரின் தேவைக்கேற்ப நீர்ப்பாய்ச்சுதல் அவசியம்.
  • பயிரின் முக்கியப் பருவங்களில் (45-65 நாட்கள்) போதுமான நீர் பாய்ச்சுவதால் அதிக மகசூல் பெறலாம்.

>  மக்காச்சோளம் - வளர்ச்சி பருவம்


  • விதை முளைக்கும் நேரம் : 1-14 நாட்கள்
  • வளர்ச்சி பருவம் : 15-39 நாட்கள்
  • பூக்கும் பருவம் : 40-65 நாட்கள்
  • முதிர்ச்சி பருவம் : 66-95 நாட்கள்

>  அறுவடை பருவம்


  • பயிரின் வயதைக் கொண்டு கீழ்க்கண்ட அறிகுறிகளை காணவும்.
  • கதிரின் மேல் தோல் பழுத்து முதிர்ந்தவுடன் காய்ந்துவிடும்.
  • விதைகள் கடினமாகவும் காய்ந்தும் காணப்படும். இப்பருவம் அறுவடைக்கேற்றது.

>  பயிர் அறுவடை


  • கோணி ஊசியைக் கொண்டு கதிரின் மேல் தோலைக் கிழித்து கதிர்களை பிரித்து எடுக்கவும்.
  • அறுவடையை ஒரே நேரத்தில் முடிக்கவும்.

>  கதிரடித்தல்


  • கதிர்களை சூரிய வெளிச்சத்தில் நன்கு காய வைக்கவும்.
  • விசைக் கதிரடிப்பான் கொண்டோ அல்லது டிராக்டரை கதிர்களின் மேலே ஓட்டியோ மணிகளைப் பிரித்தெடுக்கலாம்.
  • மணிகளைத் தூற்றி சுத்தப்படுத்தவும்.
  • பின்பு இவற்றை கோணிப்பையில் சேமிக்கவும்.

>  2.சோளம்


  • சோளத்தின் வளர்ச்சி நிலைகள்:நாற்று பருவம்
  • தழைப் பருவம் (முழுவளர்ச்சி (30-40)
  • பூத்தல்/இனப் பெருக்க நிலை
  • முதிர்வு பருவம்
  • பழ முதிர்ச்சி பருவம்
  • 1-15 நாட்கள்
  • 16-40 நாட்கள்
  • 41-65 நாட்கள்
  • 66-95 நாட்கள்
  • 96-105 நாட்கள்

>  விதை தேர்வு:


  • நல்ல தரமான விதைகளை நோய் மற்றும் பூச்சி தாக்காத வயல்களிலிருந்து தேர்வு செய்யவும்.

>  விதை அளவு :


  • பாசனபயிர் நடவு - 7.5 கிலோ/எக்டர்; நேரடி விதைப்பு - 10 கிலோ/எக்டர்
  • மானாவாரி நேரடி விதைப்பு - 15 கிலோ/எக்ட
  • பாசன நிலையில் சோளத்தை நடவு முறை மற்றும் நேரடி விதைப்பு மூலமாகவும் பயிர் செய்யலாம்.
  • நடவு பயிர் பின்வரும் நன்மைகளைக் கொண்டுள்ளது.
  • நடவு வயலில் கால அளவு 10 நாட்கள் குறைகிறது.
  • நேரடியாக நடவு செய்த பயிர்களை தண்டு ஈ முதல் மூன்று வாரங்களில் தாக்குகிறது. இவற்றை கட்டுப்படுத்துவது கடினம். இவை நாற்றங்காலிலேயே திறம்பட கட்டுப்படுத்தப்படுகின்றன.
  • நாற்றுகளில் வெளிறிய மற்றும் அடிச்சாம்பல் நோய் அறிகுறிகள் தென்பட்டால் அவை நீக்கப்படுகிறது. எனவே அடிச்சாம்பல் நோய் நிகழ்வு நடவு வயலில் குறைகிறது.
  • நடவிற்கு ஆரோக்கியமான நாற்றுகளை பயன்படுத்துவதால் எல்லா பயிர்களும் நன்றாக வளர்கின்றன.
  • எக்டருக்கு 2.5 கிலோ என்ற அளவில் விதை வீதம் குறைகிறது.

>  பயிர் எண்ணிக்கை:


  • 10 சதுர மீட்டருக்கு 150 பயிர்கள் என்ற எண்ணிக்கையில் குத்துக்கு ஒரு பயிர் விட வேண்டும்.

>  நாற்றாங்கால் தயாரித்தல்:


  • ஒரு எக்டர் நடவு செய்ய 7.5 சென்ட் நாற்றாங்கால் தேவைப்படும். நாற்றாங்கால் நிலத்தை நன்கு உழுது, கட்டிகள் இல்லாமல் நிலத்தை தயார் செய்யவேண்டும்.

>  தொழுஉரம் இடுதல்:


  • நன்கு மக்கிய தொழு உரம் 750 கிலோவை நிலத்தில் இட்டு நன்கு உழவேண்டும். நாற்றங்காலில் விதைத்தபிறகு 500 கிலோ மட்கிய தொழு உரம் கொண்டு விதையை மூடிவிடவேண்டும்.

>  மேட்டுப்பாத்தி அமைத்தல்:


  • ஒவ்வொரு பாத்தியும் 2 மீட்டர் × 1.5 மீட்டர் அளவுள்ளதாக அமைத்து இடையில் 30 செ.மீ அகலமுள்ள வாய்க்கால்கள் இடையிலும், பாத்தியை சுற்றியும் வருமாறு அமைத்தல் வேண்டும். வாய்க்கால்கள் 15 செ.மீ ஆழமுள்ளதாக இருக்கவேண்டும்.

>  விதைநேர்த்தி:


  • விதைகளை விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன் ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பண்டாசிம் (அ) கேப்டான் (அ) திரம் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
  • நாற்றாங்காலில் விதைப்பதற்கு முன் 3 பொட்டலம் அசோஸ்பைரில்லம் (600 கிராம்/ எக்டர்) மற்றும் 3 பொட்டலம் பாஸ்போபேக்டீரியா (600 கிராம்/ எக்டர்) அல்லது 6 பொட்டலம் அசோபாஸ் (1200 கிராம்/ எக்டர்) கலந்து விதைநேர்த்தி செய்யவேண்டும்.

>  நாற்றங்கால் விதைப்பு:


  • மேட்டுப்பாத்திகளில் 7.5 கிலோ விதையை நாற்றாங்காலில் அதிக ஆழமில்லாமல் விதைக்கவேண்டும்.

>  நீர் நிர்வாகம்:


  • விதைத்தவுடன் மற்றும் விதைத்த 3,7,12,17ம் நாள் நீர் கட்ட வேண்டுதல் அவசியம். களிமண் பாங்கான பூமிக்கு விதைத்தவுடன் மற்றும் விதைத்த 3,9,16 ஆம் நாள் நீர் பாய்ச்சினால் போதுமானதாகும்.

>  நிலம் தயாரித்தல்:


  • நிலத்தை இரும்புக் கலப்பைக் கொண்டு இருமுறையும், நாட்டுக்கலப்பைக் கொண்டு இருமுறையும் உழுது கட்டிகள் இல்லாமல் தயார் செய்யவேண்டும்.

>  தொழு உரம் இடுதல்:


  • 12.5 டன்/ எக்டர் தொழு உரம் பரப்பவேண்டும். அதை நாட்டு கலப்பையைக் கொண்டு உழவேண்டும் மற்றும் 10 பொட்டலம் அசோஸ்பைரில்லம் (2000 கிராம்/எக்டர்) மற்றும் 10 பொட்டலம் (2000 கிராம்/எக்டர்) பாஸ்போபேக்டீரியா அல்லது 20 பொட்டலம் அசோபாஸ் (4000 கிராம்/ எக்டர்) கலந்து மண்ணில் இடவேண்டும்.

>  பார், பாத்தி அமைத்தல்:


  • 45 செ.மீ இடைவெளியில் பார்கள் அமைக்கவேண்டும். அல்லது நீர் அளவை பொறுத்து 10 அல்லது 20 சதுர மீட்டர் பாத்திகள் அமைக்கவேண்டும்.

>  உரங்களின் பயன்பாடு:நடவு பயிர்


  • மண் பரிசோதனை பரிந்துரைப்படி தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல்சத்து இட வேண்டும். மண் பரிசோதனை பரிந்துரைகள் இல்லையென்றால் பொதுப்பரிந்துரையாக எக்டருக்கு 90 கிலோ தழைச்சத்து, 45 கிலோ மணிச்சத்து, மற்றும் 45 கிலோ சாம்பல் சத்து என்ற அளவில் இட வேண்டும் மற்றும் முழு அளவு மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து நடுவதற்கு முன் அளிக்க வேண்டும்.
  • விதைத்த 0, 15 மற்றும் 30-ம் நாளில் நைட்ரஜன் 50:25:25 % அளிக்கவும் மற்றும் முழு அளவு மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து நடுவதற்கு முன் அளிக்க வேண்டும்.
  • வரப்புப் பயிரில் 5 செமீ ஆழத்தில் வரப்பின் ஓரத்தில் பள்ளம் தோண்டி குழித்து உரக் கலவையை இட்டு 2 செ.மீ அளவுக்கு மண் கொண்டு மூட வேண்டும்.
  • நடவு வயலில் 10 பாக்கெட் (2 கிலோ/ எக்டர்) அசோஸ்பைரில்லம் மற்றும் 10 பாக்கெட் (2000 கிராம்/ எக்டர்) பாஸ்போ பாக்டீரியா அல்லது 20 பாக்கெட் (4000 கிராம்/ எக்டர்) அசோபோஸை 25 கிலோ தொழுவுரம் + 25 கிலோ மணலுடன் கலந்து விதைத்தல் / நடவிற்கு முன் இட வேண்டும்.

>  நேரடி விதைப்பு பயிர்:


  • மண் பரிசோதனை பரிந்துரைப்படி தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல்சத்து இட வேண்டும். மண் பரிசோதனை பரிந்துரைகள் இல்லையென்றால் பொதுப்பரிந்துரையாக எக்டருக்கு 90 கிலோ தழைச்சத்து, 45 கிலோ மணிச்சத்து, மற்றும் 45 கிலோ சாம்பல் சத்து என்ற அளவில் இட வேண்டும் மற்றும் முழு அளவு மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து நடுவதற்கு முன் அளிக்க வேண்டும்.
  • விதைத்த 0, 15 மற்றும் 30-ம் நாளில் நைட்ரஜன் 50:25:25 % அளிக்கவும் மற்றும் அடிஉரமிடல் சாத்தியமில்லை என்றால் 24 மணி நேரத்திற்குள் மணலின் மேல் அளிக்க வேண்டும்.
  • படுக்கை முறை நடவில் விதைப்பதற்கு முன் வரப்பிலிருந்து 45 செ.மீ இடைவெளி விட்டு 5 செ.மீ ஆழத்திற்கு குழி எடுக்க வேண்டும். உரக் கலவையை 5 செ.மீ குழியில் வைத்து 2 செ.மீ அளவிற்கு மண் கொண்டு மூட வேண்டும்.
  • சோளத்திற்கு கலப்புப் பயிராக பயறுவகை பயிர் இருந்தால் (உளுந்து, பாசிப்பயறு மற்றும் தட்டைப் பயறு) 30 செ.மீ இடைவெளி விட்டு 5 செ.மீ ஆழத்திற்கு குழி எடுக்கவும்.
  • உரக் கலவையை சோளத்தின் இரண்டு வரிசைகளில் வைத்து 2 செ.மீ மணல் கொண்டு மூட வேண்டும்.
  • பயறுவகை பயிர் வளர்ந்த மூன்றாவது வரிசையை தவிர்க்கவும் மற்றும் உரக் கலவையை அடுத்த இரண்டு வரிசைகளில் வைத்து 2 செ.மீ மணல் கொண்டு மூட வேண்டும்.
  • உயிர் உர பயன்பாடு : பாசன சோளத்தில் அசோஸ்பைரில்லம் அளித்திருந்தால் பரிந்துரைக்கப்பட்ட தழைச்சத்தில் 75% போதுமானது.
  • மண் பரிசோதனை அடிப்படையிலான உர பரிந்துரை மேற்கு மற்றும் வட மேற்கு மண்டலம் அதாவது அல்பிசால், இன்செப்டிசால் மற்றும் வெர்டிசால் போன்றவை குறிப்பிட்ட உற்பத்தி இலக்குகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

>  நுண் உரக் கலவை பயன்பாடு:நடவு பயிர்


  • எக்டருக்கு 12.5 கிலோ வேளாண் துறை, தமிழ்நாடு நுண்உரக் கலவையை போதுமான மணலுடன் கலந்து 50 கிலோ அளவு வரப்பின் ஓரத்தில் அளிக்க வேண்டும்.
  • நுண்உரக் கலவை இல்லையென்றால், 25 கிலோ துத்தநாக சல்பேட்டுடன் மணல் கலந்து மொத்த அளவு 50 கிலோ வரப்பில் அளிக்க வேண்டும்.

>  நேரடி விதைப்புப் பயிர்:


  • வேளாண் துறை, தமிழ்நாடு நுண்உரக் கலவையை எக்டருக்கு 12.5 கிலோவுடன் போதுமான அளவு மணல் மொத்த அளவு 50 கிலோ வரும் வரை கலக்கவும்.
  • வரப்பில் கலவையை சமமாக பரப்பவும்.
  • பற்றாக்குறை மணலில் அடியுரமாக எக்டருக்கு 25 கிலோ துத்தநாக சல்பேட் அல்லது எக்டருக்கு 12.5 கிலோ துத்தநாக சல்பேட் + தொழுவுரத்தை துத்தநாக பற்றாக்குறை மணலில் அளிக்கவும்.
  • இரும்பு பற்றாக்குறை உள்ள மணலில் அடியுரமாக இரும்பு சல்பேட் எக்டருக்கு 50 கிலோவை எக்டருக்கு 12.5 டன் தொழுவுரத்துடன் கலந்து அளிக்கவும்.

>  நடவு வயல் தயாரித்தல்:


  • இடைவெளி : 45 x 15 செ.மீ
  • பயிர் எண்ணிக்கை :15/சதுரமீட்டர்

>  நடவு பயிர்:


  • 15 முதல் 18 நாட்களான நாற்றுகளை பிடுங்கி எடுக்க வேண்டும்.
  • எக்டருக்கு 5 பாக்கெட் (1000கி/எக்டர்) அசோஸ்பைரில்லம் மற்றும் 5 பாக்கெட் (1000கி/எக்டர்) பாஸ்போ பாக்டீரியா அல்லது 10 பாக்கெட் (2000கி/எக்டர்) அசோபோஸை 40 லிட்டர் தண்ணீரில் கலந்து சேறு குழம்பு தயாரிக்கவும். இந்தக் கரைசலில் நாற்றின் வேர்ப்பகுதியை 15-30 நிமிடம் வைத்து பின் நடவு செய்ய வேண்டும்.
  • பள்ளம் வழியாக தண்ணீர் விட வேண்டும்.
  • குன்று ஒன்றுக்கு ஒரு நாற்று நடவு செய்ய வேண்டும்.
  • 3 முதல் 5 செ.மீ ஆழத்தில் நாற்றுகளை நடவு செய்ய வேண்டும்.
  • வரப்பிற்கு மேல் அரை அங்குலம் கீழே அரை அங்குலம் இடைவெளி விட்டு நாற்றுகளை நடவு செய்ய வேண்டும்.
  • பயிர்களுக்கு இடையில் 15 செ.மீட்டரும், வரிசைகளுக்கிடையில் 45 செ.மீ இடைவெளியும்விட வேண்டும்.

>  நேரடி விதைப்பு பயிர்:


  • சோளத்தை தனிப்பயிராக பயிரிடும்பொழுது எக்டருக்கு 10 கிலோ விதை தேவைப்படும்.
  • சோளத்திற்கு கலப்புப் பயிராக பயறுவகை பயிர் இருப்பின் சோள விதை எக்டருக்கு 10 கிலோ மற்றும் பயறுவகை பயிருக்கு எக்டருக்கு 10 கிலோ.
  • சோளத்திற்கு கலப்புப் பயிராக பயறுவகை பயிர் இருப்பின் பயிர்களுக்கான இடைவெளி 15 செ.மீ மற்றும் வரிசைகளுக்கிடையே இடைவெளி 45 செ.மீ.
  • தண்டு ஈ தாக்குதல் இருப்பின், பக்கத் தண்டுகளை நீக்கிவிட்டு ஆரோக்கியமான தண்டுகளை மட்டும் வைத்துக்கொள்ள வேண்டும்.
  • உரங்கள் வைக்கப்பட்ட இடத்தில் விதைகளை வரிசையாக விதைக்கவும்.
  • 2 செ.மீ ஆழத்தில் விதைகளை விதைத்து மண் கொண்டு மூடவும்.
  • சோளத்திற்கு கலப்புப் பயிராக பயறுவகை பயிர் இருந்தால் சோளம் இரண்டு வரிசை பின் பயறுவகை பயிர் ஒரு வரிசை விதைக்க வேண்டும். இரண்டு பயிருக்கும் இடைவெளி 30 செ.மீ இருக்க வேண்டும். சோளத்திற்கு கலப்புப் பயிராக தீவனத் தட்டைப்பயறு இருந்தால் இரண்டு வரிசை சோளம் மற்றும் இரண்டு வரிசை தட்டைப்பயறு நடவு செய்ய வேண்டும்.

>  களை மேலாண்மை:


  • விதைத்த 3-5ம் நாள் களை முளைப்பதற்கு முன் எக்டருக்கு 0.25 கிலோ அட்ராஜின் அளிக்கவும். தொடர்ந்து 24-D எக்டருக்கு 1 கிலோ விதைத்த 20-25ம் நாளில் மணல் பரப்பில் நேப்சேக் / ராக்கர் தெளிப்பானில் நுண்குழாய் பொருத்தி 500 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கவும் அல்லது களைக்கொல்லி உபயோகிக்கவில்லையென்றால், விதைத்த 10-15-ம் நாள் மற்றும் 30-35-ம் நாள் கைக்களை எடுக்க வேண்டும்.
  • விதைத்த 3-5ம் நாளில் களை முளைக்கு முன் அஸ்ராஜின் ஏக்கருக்கு 0.25 அளிக்கவும். அதனைத் தொடர்ந்து விதைத்த 30-35ம் நாளில் கைக்களை எடுக்க வேண்டும்.
  • வரிசையாக விதைத்த பயிரில் விதைத்த 3-5ம் நாளில் களை முளைக்கு முன் அஸ்ராஜின் ஏக்கருக்கு 0.25 அளிக்கவும். அதனைத் தொடர்ந்து விதைத்த 30-35ம் நாளில் இரண்டு சக்கர களையெடுக்கும் கருவி மூலம் களையெடுக்க வேண்டும்.
  • நடவுப் பயிரில் விதைத்த 3-5ம் நாளில் களை முளைக்கு முன் அஸ்ராஜின் ஏக்கருக்கு 0.25 அளிக்கவும். அதனைத் தொடர்ந்து விதைத்த 20-25ம் நாளில் 24-D எக்டருக்கு 1 கிலோ அளிக்கவும்.

>  பயிர் கலைத்தல் மற்றும் பாடு நிரப்புதல் நேரடி விதைப்பு பயிர்:


  • விதைத்த 23-ம் நாள் முதல் கைக்களை எடுத்தபின் பயிர்களுக்கிடையே 15 செ.மீ இடைவெளியை பராமரிக்க வேண்டும். அனைத்து பயறுவகை பயிர்களுக்கும் 10 செ.மீ இடைவெளி பராமரிக்கப்படுகிறது. தட்டைப் பயறுக்கு மட்டும் 20 செ.மீ இடைவெளி விடவும்.

>  பற்றாக்குறை அறிகுறிகள்:


  • துத்தநாகம் : 20 முதல் 30 நாட்கள் வயதுள்ள புதிய இலைகளில் பற்றாக்குறை அறிகுறிகள் முதலில் தென்படுகிறது. முதிர்ந்த இலைகளில் மஞ்சள் கோடுகள் அல்லது இலை நரம்புகளில் வெளிறிய கோடுகள் காணப்படும்.
  • இரும்பு : நரம்பிடை சோகை காணப்படுகிறது. பற்றாக்குறை தொடர்ந்தால் நரம்புகள் உட்பட மொத்த இலையும் வெளிறி காணப்படும். புதிதாக உருவான இலைகளும் வெளிறிய அறிகுறிகளை வெளிப்படுத்தும். முழுப்பயிரும் வெளுத்த, உலர்ந்துவிடும். சில சமயம் பயிர் இறந்துவிடுகிறது.

>  நீர் நிர்வாகம்


  • நடவு வயல் <=> நேரடி விதைப்பு
  • மணற்பாங்கான நிலம் <=> முதல் நாள் <=> முதல் நாள்
  • 4வது நாள் <=> 4வது நாள்
  • 15வது நாள் <=> 17வது நாள்
  • 28வது நாள் <=> 30வது நாள்
  • 40வது நாள் <=> 42வது நாள்
  • 52வது நாள் <=> 55வது நாள்
  • 65வது நாள் <=> 68வது நாள்
  • 77வது நாள் <=> 79வது நாள்
  • மொத்தம் <=> 8 முறை <=> 8 முறை
  • களிமண் நிலம் <=> முதல் நாள் <=> முதல் நாள்
  • 4வது நாள் <=> 5வது நாள்
  • 15வது நாள் <=> 17வது நாள்
  • 28வது நாள் <=> 30வது நாள்
  • 42வது நாள் <=> 45வது நாள்
  • 54வது நாள் <=> 57வது நாள்
  • 66வது நாள் <=> 70வது நாள்
  • மொத்தம் <=> 7 முறை <=> 7 முறை

>  மண்குறிப்பு :


  • பருவகால தட்பவெப்பநிலையைப் பொறுத்து நீர் நிர்வாகம் மாறும்.

>  பயிர் அறுவடை: அறுவடைக்கான அறிகுறிகள்


  • இலைகள் மஞ்சள் நிறமாக மாறி காய்ந்த தோற்றத்தத் தரும்.
  • தானியங்கள் கடினமாகும்.

>  அறுவடை:


  • கதிர்களை தனியாக அறுவடை செய்யவும்.
  • தட்டை ஒரு வாரம் கழித்து வெட்டி நன்கு காயவைத்தபின் சேமித்து வைக்கவும்.

>  தானியங்களை கதிரில் இருந்து பிரித்தல் மற்றும் தரம் பிரித்தல்:


  • கதிர்களை காயவைக்கவும்.
  • விசைக் கதிரடிப்பான் கொண்டு விதைகளைப் பிரிக்கலாம் அல்லது கதிர்களைப் பரப்பி கல் உருளை அல்லது மாடுகளை செலுத்துவதன் மூலமும் பிரிக்கலாம்.

>  மானாவாரி சோளம்: பருவம்


  • வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவ மழையை ஒட்டி விதைப்பு செய்யலாம். சராசரி மழையளவு 250-300 மி.மீட்டர் உள்ள இடங்கள் மிகவும் ஏற்றவை.

>  நிலம் தயாரித்தல்:


  • கோடை மழையைப் பயன்படுத்தி, பயிர் அறுவடைக்குப் பின்பு நிலத்தை சட்டிக் கலப்பைக் கொண்டு ஆழமாக உழவு செய்யவேண்டும். பின்னர் ஒவ்வொரு மழைக்குப் பின்பும் கலப்பைக் கொண்டு நிலத்தை உழுதுவிடவேண்டும். கோடை உழவினால் மண் அரிமானம் தடுக்கப்பட்டு மழைநீர் சேமிக்கப்படுவதுடன், கோடை மழையில் முளைக்கும் களைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. நிலத்தடியில் இருக்கும் கூட்டுப்புழுக்கள் உழவின்போது மேலே கொண்டுவரப்பட்டு அழிக்கப்படுவதால் பயிர்க்காலத்தில் பூச்சித் தாக்குதல் குறையும். மழைக்காலத்தில் மழைநீரைச் சேமித்துமண் ஈரம் காக்க ஆழச்சால அகலப்படுத்தி, சம உயர வரப்பு, சமதள சாகுபடி, நிலப்போர்வை அமைத்தல், களைக் கட்டுப்பாடு போன்ற முறைகளைக் கடைப்பிடிக்கவேண்டும்.

>  விதையும் விதைப்பும்:


  • விதை அளவு : எக்டருக்கு 15 கிலோ
  • இடைவெளி : 45 × 15 செ.மீ அல்லது 45 × 10 செ.மீ

>  விதைநேர்த்தி:


  • விதைகளைக் கடினப்படுத்துதல்
  • வறட்சியைத் தாங்கி வளர, விதைகளைக் கடினப்படுத்தி பின்பு விதைக்கவேண்டும். பொட்டாசியம் டை-ஹைட்ரஜன் பாஸ்பேட் 20 கிராமுடன் ஒரு லிட்டர் நீர் கலந்த கரைசலில் விதைகளை 6 மணி நேரம் ஊறவைத்து நிழலில் தன் எடைக்கு உலர்த்திய பின் விதைப்பதினால் பயிர் வறட்சி தாங்கி வளரும்.

>  நுண்ணுயிர் உரங்கள் விதைநேர்த்தி:


  • ஒரு எக்டருக்கு தேவையான விதைகளை 3 பொட்டலம் (600 கிராம்) அசோஸ்பைரில்லம் மேலும் 3 பொட்டலம் (600 கிராம்) பாஸ்போ பாக்டீரியா அல்லது 6 பொட்டலம் (1200 கிராம்) அசோபாஸ் கொண்டு விதைநேர்த்தி செய்யவேண்டும். இவ்வாறு செய்வதால் விண்ணிலுள்ள தழைச்சத்தைக் கிரகித்து பயிர்களுக்கு அளிக்கிறது.
  • நிலத்தில் இடுவதாக இருந்தால் ஒரு எக்டருக்கு 10 பொட்டலம் (2000 கிராம்) அசோஸ்பைரில்லம் மற்றும் 10 பொட்டலம் (2000 கிராம்) பாஸ்போ பாக்டீரியாவுடன் அல்லது 20 பொட்டலம் (4000 கிராம்/ எக்டர்) அஸோபாஸை 25 கிலோ மணல் மற்றும் 25 கிலோ தொழு உரம் கலந்து தூவவேண்டும்.

>  விதைப்பு:


  • விதைக்கும் பொழுது விதைகளை 15 கிராம் குளோர்பைரிபாஸ் உடன் 150 மில்லி ஒட்டும் பசை சேர்த்து நிழலில் உலரவைத்து பின்பு 5 செ.மீ ஆழத்தில் பரவ மழைக்கு முன்பு விதைக்கவேண்டும்.

>  முன்பருவ விதைப்பு:


  • மழை ஆரம்பிப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பு விதைப்பது தான் முன்பருவ விதைப்பு, விதைகளைக் கடினப்படுத்தி 5 செ.மீ ஆழத்தில் விதைக்கவேண்டும். அந்தந்த மாவட்டங்களில் மழை ஆரம்பத்தைப் பொறுத்து விதைக்கும் தருணம் வேறுபடும். உதாரணமாக கோயமுத்தூர் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை பெரும்பாலும் செப்டம்பர் 2ம் வாரம் முதல் 3ம் வாரத்தில் துவங்கும். ஆகவே இங்கு 2 அல்லது 3ம் வாரத்தில் முன்பருவ விதைப்பு செய்யலாம். மற்ற மாவட்டங்களுக்கான விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
  • மாவட்டம் <=> சரியான தருணம்
  • ஈரோடு, கோவை <=> செப்டம்பர் 3ம் வாரம்
  • சிவகங்கை <=> அக்டோபர் முதல் வாரம்
  • இராமநாதபுரம் <=> அக்டோபர் முதல் வாரம்
  • தூத்துக்குடி <=> செப்டம்பர் கடைசி வாரம் முதல் அக்டோபர் முதல் வாரம்
  • வேலூர், திருவண்ணாமலை <=> செப்டம்பர் இரண்டாம் வாரம் முதல் செப்டம்பர் மூன்றாம் வாரம்.
  • சோளப் பயிருடன் இணை வரிசையில் பயறு வகைகளைப் பயிர் செய்தால் உபரி வருமானம் கிடைப்பதோடு மண்வளத்தையும் கூட்டமுடியும்.

>  ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை


>  உர நிர்வாகம்:


  • ஒரு எக்டருக்கு 12.5 டன்கள் மக்கிய தென்னை நார்க்கழிவு இடவேண்டும். இரசாயன உரங்களை மண்பரிசோதனை சிபாரிசிபடி இடவேண்டும். அல்லது பொதுப்பரிந்துரைப்படி எக்டருக்கு 40: 20 : 0 என்ற அளவில் தழை, மணி, சாம்பல் சத்துக்களை இடவேண்டும்.

>  களைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி: களை நிர்வாகம்


  • சோளப்பயிர் முளைவிட்ட இரண்டாம் வாரம் முதல் 5ம் வாரம் வரை களைகள் இல்லாமல் இருப்பது பயிருக்கு நல்லது. மண்ணில் போதுமான ஈரம் இருக்கும்போது எக்டருக்கு 500 கிராம் அட்ரசின் என்ற களைக்கொல்லி மருந்தினை விதைத்த 3-5 நாட்களுக்குள் 900 லிட்டர் தண்ணீரில் கரைத்து கைத்தெளிப்பான் கொண்டோ அல்லது மணலில் கலந்தோ இடலாம். பயறுவகைப் பயிர்களுடன் ஊடுபயிராக பயிரிட்டிருந்தால் எக்டருக்கு 2 லிட்டர் பெண்டிமிதிலின் தெளிக்கவேண்டும்.

>  மறுதாம்பு சோளம்:


  • மறுதாம்புப் பயிர் சாகுபடியில் கவனத்தில் இருக்கவேண்டியவை.
  • நடவுப் பயிரை அறுவடை செய்யும் போது நில மட்டத்தில் இருந்து 15 செ.மீ தட்டையை விட்டு அறுத்து உடனடியாக நீர் பாய்ச்சவேண்டும்.
  • அறுவடை செய்தவுடன் களை எடுக்கவேண்டும். பின் 15 மற்றும் 30ம் நாள் ஒரு களை எடுக்கவேண்டும்.
  • ஒரு எக்டருக்கு 100 கிலோ தழைச்சத்தை இரண்டாகப் பிரித்து 50 கிலோ மணிச்சத்துடன் மறுதாம்புப் பயிராக விட்ட 15வது நாளில் இடவேண்டும். மீதம் உள்ள தழைச்சத்தை 45வது நாளில் இடவேண்டும்.
  • மண் மற்றும் கால நிலையைப் பொறுத்து நீர் பாய்ச்சவேண்டும். மறுதாம்புப் பயிராக விட்ட 70-80வது நாளில் நீர்ப்பாசனத்தை உடனடியாக நிறுத்திவிடவேண்டும்.
  • பூச்சி நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பயிர்ப்பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

>  குறிப்பு :


  • மருதாம்புப் பயிரின் வயது நடவு பயிரை விட 15 நாட்கள் குறைவாக இருக்கும்.

>  பயிர் பாதுகாப்பு:


  • சோள பயிரைத் தாக்கும் பூச்சிகள்
  • சோள பயிரைத் தாக்கும் நோய்கள்

>  அறுவடை பின்சார் தொழில் நுட்பம் :


  • இந்தியாவில் சோளம் அரிசி மற்றும் கோதுமைக்கு அடுத்தபடியாக முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. முழுமையான மற்றும் உடைத்த சோளம் வேகவைத்து அரிசி போன்றும் பயன்படுத்தப்படுகிறது. முழுச்சோளம் அரைத்து மாவிலிருந்து சப்பாத்தி போன்றும் பயன்படுத்தப்படுகிறது. சோளமானது நொதித்தல் தொழிற்சாலை மற்றும் எரிசாராயம் மற்றும் கரைப்பான் தொழிற்சாலைகளில் மாவுச்சத்து பொருளாக பயன்படுத்தப்படுகிறது.
⇒   3.கம்பு
  • மாவட்டம்/பருவம் <=> ரகங்கள் /கலப்பினம்
  • பாசனம்
  • i.சித்திரைபட்டம் (மார்ச் –ஏப்ரல்) <=> நீலகிரியை தவிர அனைத்து மாவட்டங்களிலும் கம்பு வளரும் <=> கோ 7, கோ (Cu)9, X 7, ICMV 221, த.வே.ப.கழகம் கம்பு கலப்பினம், கோ 9
  • ii. மாசிப்பட்டம் (ஜனவரி-பிப்ரவரி) <=> நீலகிரியை தவிர அனைத்து மாவட்டங்களிலும் கம்பு வளரும் <=> கோ 7, கோ (Cu)9, X 7, ICMV 221, த.வே.ப.கழகம் கம்பு கலப்பினம், கோ 9
  • மானாவாரி
  • i.ஆடிப்பட்டம் <=> (ஜீன்-ஜீலை) <=> கோ 7, கோ (Cu)9, X 7, ICMV 221, த.வே.ப.கழகம் கம்பு கலப்பினம், கோ 9
  • ii. புரட்டாசிப்பட்டம் <=> (செப்டம்பர் – அக்டோபர்) <=> கோ 7, கோ (Cu)9, X 7, ICMV 221, த.வே.ப.கழகம் கம்பு கலப்பினம், கோ 9
⇒   பயிர் மேலாண்மை:

>  நாற்றங்கால் நிலம் தயார்படுத்துதல்:


  • ஒரு ஹெக்டேர் நிலத்திற்கு தேவையான நாற்றுகள் 7.5 சென்ட் நிலம் நீர் ஆதாரம் உள்ள இடத்தில் தேர்வு செய்ய வேண்டும். தேங்கிய நீர் பயன்படுத்தக் கூடாது.
  • நிலத்தை நன்றாக உழ வேண்டும்.

>  தொழு உர பயன்பாடு:


  • 750 கிலோ தொழுஉரம் இட்டு உழுதல் வேண்டும். 500 கிலோ தொழுவுரம் கொண்டு விதைகளை மறைக்க வேண்டும்.

>  நாற்றங்கால் படுக்கை தயாரித்தல்:


  • ஒவ்வொரு சென்டிலும் 3 × 1.5 மீ அளவுள்ள 6 பாத்திகள் அமைக்க வேண்டும். 30 செ.மீ அளவுள்ள வாய்க்கால்கள் ஒவ்வொரு பாத்திகளுக்கு இடையேயும் சுற்றியும் அமைக்க வேண்டும்.

>  வாய்க்காலின் ஆழம் 15 செ.மீ இருக்க வேண்டும்:


  • படுக்கை அளவை பொருத்து வாய்க்காலை பூமியில் அகழ்ந்த குட்டையாக பரப்ப வேண்டும்.
  • குறிப்பு: 6 அடுக்கு பிரிவு கொண்ட ஒரு சென்டிற்கு ஒரு அலகு பாசனம் அமைக்க வேண்டும்.

>  முதன்மை தொற்றை தடுக்க தேன் ஒழுகல் நோய் பாதிக்கப்பட்ட விதைகளில் பூஞ்சை இலை முடிச்சுகளை நீக்குதல்:


  • ஒரு கிலோ உப்பை 10 லிட்டர் தண்ணீரில் கரைக்க வேண்டும்.
  • உப்பு தண்ணீரில் விதைகளை போட வேண்டும்.
  • தேன் ஒழுகல் நோய் மற்றும் பூஞ்சை இழை முடிச்சுகளால் பாதிக்கப்பட்ட விதைகளை நீக்கவும்.
  • விதைகளில் உப்பை நீக்க 2 அல்லது 3 முறை தண்ணீரில் விதைகளை நன்றாக கழுவ வேண்டும்.

>  நிழலில் விதைகளை உலர்த்த வேண்டும்:


  • அசோஸ்பைரில்லம் 3 பாக்கெட்டுகள் (600கிராம்),பாஸ்போபாக்டீரியா 3 பாக்கெட்டுகள் (600கிராம்) அல்லது அசோபாஸ் 6 பாக்கெட்டுகள் (1200கிராம்) கொண்டு விதைகளை விதைநேர்த்தி செய்ய வேண்டும்.

>  நாற்றங்கால் படுக்கையை பூச்சிவிரட்டி சுத்தப்படுத்துதல்:


  • சோளக்குருத்து ஈ தொற்றிலிருந்து நாற்றுகளை பாதுகாக்க மண்மேல் 2 செ.மீ ஈரமான மண் 2 கிலோ கலந்து போரேட் 10 G 180 கிராம் அல்லது கார்போபியூரான் 3 G 600 கிராம் கொண்டு தெளிக்க வேண்டும்.

>  விதைப்பு மற்றும் விதைகளை மூடுதல்:


  • படுக்கையில் விரல்கள் மூலம் 1 செ.மீ குறைவான ஆழத்தில் சிற்றோடை திறக்க வேண்டும்.
  • 7.5 சென்ட்டில் 3.75 கிலோ விதைகள் தேவை (0.5 கிலோ /சென்ட்) மற்றும் சோளகுருத்து ஈ தொற்று உள்ள பகுதிக்கு 12.5 கிலோ/ஹெக்டேருக்கு தரமான நாற்றுகளை உருவாக்க தேவைப்படும்.
  • 500 கிலோ தொழுஉரம் அல்லது மக்கிய உரம் தூவி விதைகளை கைகளால் மிருதுவாக மூடவேண்டும்.
  • குறிப்பு :விதைகளை ஆழமாக விதைத்தால் முளைப்பது பாதிக்கப்படும்.

>   விதை படுக்கைக்கு பாசனம்:


  • 6 அடுக்கிற்கும் ஒவ்வொரு வாய்கால்களிலிருந்து நீர் செல்வதற்கு ஒரு நுழைவாயில் அமைக்க வேண்டும்
  • வாய்க்காலிலிருந்து நீர் உயரும் வரை நீரை அனுமதிக்கலாம். படுக்கை ஈரமாக இருக்கும் போது தண்ணீர் அணைக்க வேண்டும்.
  • பின்வரும் அட்டவணை படி நீர் பாசனம் செய்ய வேண்டும்.
  • <=> இளக்க மண் <=> கடின மண்
  • முதல் பாசனம் <=> விதைத்த உடன் <=> விதைத்த உடன்
  • இரண்டாம் பாசனம் <=> விதைத்த பிறகு மூன்றாம் நாள் <=> விதைத்த பிறகு மூன்றாம் நாள்
  • மூன்றாம் பாசனம் <=> விதைத்த பிறகு ஏழாம் நாள் <=> விதைத்த பிறகு ஒன்பதாம் நாள்
  • நான்காம் பாசனம் <=> விதைத்த பிறகு பன்னிரண்டாம் நாள் <=> விதைத்த பிறகு பதினாறாம் நாள்
  • ஐந்தாம் பாசனம் <=> விதைத்த பிறகு பதினேழாம் நாள்

>  நாற்றுகளை நாற்று பண்ணையில் பூச்சிதாக்குதலிலிருந்து பாதுகாத்தல்:


  • நாற்றுபடுக்கைகள் விதைப்பதற்கு முன் சரியாக பராமரிக்கப்படவில்லையென்றால் நாற்றங்கால்களை பாதுகாக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பூச்சிகொல்லியில் ஏதேனும் ஒன்றை 6 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். எண்டோசல்பான் 35 EC 12 மி.லி, மெத்தில் டெமடான் 25 EC 12 மி.லி, டைமெத்தோயேட் 30 EC 12 மி.லி.

>  குறிப்பு:


  • நாற்றுகளை நாற்றாங்காலில் 18 நாட்களுக்கு மேல் வைக்கக் கூடாது. இல்லையெனில் வளர்ச்சி மற்றும் விளைச்சல் பாதிக்கப்படும்.
  • வெடிப்பு ஏற்பட்ட நாற்றுகளை வளர்க்க கூடாது. சரியான அளவில் பாசனம் செய்வதன் மூலம் இதை தவிர்க்க முடியும்.

>  நிலத்தை தயார் செய்தல்:


  • இரும்பு கலப்பை கொண்டு இரண்டு முறையும், நாட்டு கலப்பை கொண்டு இரண்டு முறையும் நன்றாக உழ வேண்டும். மண்ணை கட்டிகளின்றி உடைக்க வேண்டும்.
  • கடினத்தட்டு மற்றும் உளி கொண்டு மண்ணை உழுதல் : 0.5 மீ இடைவெளியில் உளி கலப்பை கொண்டு மேலோட்டமான ஆழத்தில் கடினதட்டு கொண்டு மண்ணை மூன்று வருடங்களுக்கு ஒரு முறை உழுதல் வேண்டும்.

>  உரம் அல்லது தொழுவுரம் இடுதல் :


  • ஹெக்டருக்கு 12.5 டன் தொழுவுரம் அல்லது மட்கிய உரம் மட்கிய நார் உரம் உழுவதற்கு முன் இடவேண்டும். நாட்டுக்கலப்பை கொண்டு உரங்களை மண்ணுடன் ஒருங்கிணைத்தல் வேண்டும். ஹெக்டருக்கு அசோஸ்பைரில்லம் 10 பாக்கெட்டுகள் மற்றும் பாஸ்போபாக்டீரியா 10 பாக்கெட்டுகள் (அல்லது)அசோபாஸ் 20 பாக்கெட்டுகளை 25 கிலோ மண் மற்றும் 25 கிலோ தொழுவுரத்துடன் கலந்து இட வேண்டும்.

>  சால் வரப்பு/படுக்கை அமைத்தல்:


  • சால் மற்றும் வரப்புகளை (3 வரப்புகளுக்கு) 6 மீ நீளம் மற்றும் 45 செ.மீ. அகலம் கொண்டு அமைக்க வேண்டும். தானியங்களை ஊடுபயிர்களில் விதைக்கும் போது வரப்பு 6 மீ நீளமும் தவிர 30 செ.மீ இருக்க வேண்டும்.
  • வரப்பு நடுதலை தவிர்த்து, படுக்கை நடுதலின் அளவு 10 சதுர மீட்டர் (அல்லது) 30 சதுர மீட்டர் தண்ணீர் கிடைப்பதை பொறுத்து அமைக்க வேண்டும்.
  • பாசன வாய்க்காலை அமைத்தல் வேண்டும்.
  • மானாவாரி பாசனத்தில் மண்ணின் ஈரத்தன்மையை பாதுகாக்க, விதைகளை விதைத்த பிறகு வரப்பு அமைத்து ஊடுபயிர் விதையை விதைத்த மூன்றாவது வாரத்தில் தூவ வேண்டும்

>  உரங்கள் பயன்பாடு:


  • மண் பரிசோதனையின் பரிந்துரைப்படி NPK உரங்களை அளிக்கலாம். மண்பரிசோதனை செய்யவில்லையென்றால் அனைத்து வகையான தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பால் சத்து/ஹெக்டர் 70:35:35 என்ற அளவில் இட வேண்டும். கலப்பினம் என்றால் தழைச்சத்து 80 கிலோ, மணிச்சத்து 40 கிலோ மற்றும் சாம்பல் சத்து 40 கிலோ ஒரு ஹெக்கடருக்கு கொடுக்க வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட தழைச்சத்தினை மூன்றாக பிரித்து ஒரு சென்டிற்கு 25:50:25 என்ற அளவில் விதைக்கும் முன், விதைத்த 15 நாள் மற்றும் விதைத்த 30 நாளில் இட வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட மணிச்சத்து மற்றும் சாம்பல்சத்தினை அடியுரமாக அளிக்க வேண்டும். மானாவாரி பயிர்களுக்கு அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபாக்டீரியம் அல்லது அசோபாஸை பரிந்துரைக்கப்பட்ட அளவில் 75 சதவீத தழைச்சத்து மற்றும் மணிச்சத்தினை சேர்த்து இட வேண்டும்.

>  பயன்படுத்தும் முறை :


  • நாற்று நடுவதற்கு வரப்பின் அடியிலிருந்து 5 செ.மீ ஆழத்தில் (அடியிலிருந்து 1/3 இடைவெளியில்), உரத்தை இட்டு மூட வேண்டும். நேரடி விதைப்பு பயிரில், படுக்கையிலிருந்து 45 செ.மீ இடைவெளி விட்டு 5 செ.மீ ஆழத்தில் குழி அமைக்க வேண்டும். 5 செ.மீ ஆழத்தில் உர வைத்து பின் விதைப்பதற்கு முன் 2 செ.மீ வரை மேல் மண் அணைக்க வேண்டும். தானியங்களை ஊடுபயிர் செய்ய படுக்கையிலிருந்து 30 செ.மீ இடைவெளிவிட்டு 5 செ.மீ ஆழத்தில் குழி அமைக்க வேண்டும். கம்பு வைத்த பிறகு உரம் வைத்து 2 செ.மீ வரை மண் அணைக்க வேண்டும். உருகல் மிகைப்பி அசோஸ்பைரில்லம் விதைகள் விதைக்கும் போது தழைச்சத்து 50 கிலோ/ ஹெக்டர், கலப்பின ரகத்திற்கு 60 கிலோ/ ஹெக்டர், மண் பரிசோதனையின் பரிந்துரைப்படி தழைச்சத்தை 25 சதவீதம் குறைவாக அளிக்கலாம்.

>  நுண்ணூட்டச்சத்து கலவையின் பயன்பாடு:


  • வேளாண்மை துறை வழிகாட்டுதல்படி 12.5 கிலோ /ஹெக்டர் நுண்ணூட்டக் கலவையை அளிக்கலாம். நுண்ணூட்டக் கலவையை போதுமான மண் கொண்டு 50 கிலோவாக செய்து கொள்ள வேண்டும். பிறகு விதைப்பதற்கு முன் / பின்பு விதைகளை மூடும்விதமாக நுண்ணூட்டக்கலவை அளிக்க வேண்டும். நுண்ணூட்டக் கலவை கிடைக்கவில்லையென்றால் 25 கிலோ துத்தநாக சல்பேட்டு ஒரு ஹெக்டேருக்கு அளிக்க வேண்டும். மேலே கூறியவற்றை போதுமான மண் கொண்டு 50 கிலோவாக கலந்து அளிக்க வேண்டும்.

>  நிலத்தை மேலாண்மை செய்தல் :


  • நாற்று நடுதல் அல்லது விதை விதைத்து நாற்று நடுதல்:
  • 15 முதல் 18 நாட்கள் வயதிருக்கும் நாற்றுகளை எடுத்தல்
  • எல்லா ரகத்திற்குமான இடைவெளி 45x 15 செ.மீ.
  • நடவு ஆழம் 3 முதல் 5 செ.மீ இருக்க வேண்டும்.
  • வேரை உயிர் உரங்களில் நனைத்தல் : அசோஸ்பைரில்லம் 5 பாக்கெட்டுகள் (1000 கிராம்)/ஹெக்டர் மற்றும் பாஸ்போபாக்டீரியா 5 பாக்கெட்டுகள் மற்றும் அசோபாஸ் 10 பாக்கெட்டுகள் இவற்றை 40 லிட்டர் தண்ணீரில் கலந்து சேற்று குழம்பு தயார் செய்தல் வேண்டும். இச்சேற்றுக் குழம்பில் நாற்றுகளை நடுவதற்கு முன் 15 -30 நிமிடம் நனைக்க வேண்டும்.

>  நேரடி விதை விதைத்தல்:


  • கம்பு விதைகளை 2 % பொட்டாசியம் குளோரைடு அல்லது 3 % சோடியம் குளோரைடில் 16 மணிநேரம் ஊறவைத்து பின் 5 மணி நேரம் நிழலில் உலர்த்துவதால் விதையின் முளைப்புத்திறன் அதிகரிக்கும்.
  • அனைத்து ரகத்திற்கும் இடைவெளி 45 x 15 செ.மீ. ஊடுபயிர் நடுவதாக இருந்தால் கம்பிற்கு 30 x 15 செ.மீ மற்றும் ஊடுபயிருக்கு 30 x 10 செ.மீ இடைவெளியும் வேண்டும். ஒரு ஜோடி வரிசையில் கம்பும் ஒரு வரிசையில் ஊடுபயிரும் விதைக்க வேண்டும்.
  • பார் மற்றும் வாய்க்கால் முறையில் நடவு செய்வதற்கு 5 கிலோ விதை தேவைப்படும். விதைகளின் இடைவெளி 4-5 செ.மீ இருக்க வேண்டும். ஒரு ஹெக்டருக்கு 1.45,000 பயிர் எண்ணிக்கை இருக்க வேண்டும். குருத்து ஈ தாக்குதல் நிறைந்த பகுதிகளில் 12.5 கிலோ விதைகளை ஒரு ஹெக்டருக்கு விதைக்கவும்.
  • தானிய விதைகளை 5 செ.மீ இடைவெளியில் விதைக்க வேண்டும்.
⇒   களை மேலாண்மை :

>  நடவு பயிர்:


  • களை முளைப்பதற்கு முன் அட்ராசைன் 0.25 கிலோ /ஹெக்டர் நாற்று நட்ட பிறகு தெளிக்க வேண்டும். கையால் களையெடுக்க நாற்று நட்ட பிறகு 30-35 நாம் நாட்களில் எடுக்க வேண்டும். களைகொல்லி பயன்படுத்தி கையினால் களையெடுத்தால் நாற்று நட்ட பிறகு 15 நாளுக்குள் இரு முறையும் மற்றும் 30 – 35 நாளில் களையெடுக்க வேண்டும்.

>  நேரடி விதை விதைப்பு:


  • விதைத்த 3 நாட்களுக்கு பிறகு களை முளைப்பதற்கு முன் அட்ராசைன் 0.25 கிலோ/ஹெக்டர் 500 லிட்டர் தண்ணீரில் கலந்து மண்ணின் மேற்பரப்பில் பேக் -பேக்/நேப்சேக்/ராக்கர் தெளிப்பான் உதவியால் தெளிக்கவும்.
  • மண்ணில் தேவையான அளவு ஈரப்பதம் இருக்கும்பட்சத்தில் களைகொல்லியை பயன்படுத்தவும்.
  • விதைத்த 30-35 நாட்களுக்கு பிறகு கையால் களையெடுக்வும். களைமுளைப்பதற்கு முன் களைகொல்லிகளை பயன்படுத்தவும்
  • களை முளைப்பதற்கு முன் களைகொல்லி தெளிக்கவில்லை என்றால் விதைத்த பிறகு 15 மற்றும் 30 நாட்களில் இரண்டு முறை கையினால் களை எடுக்கவும்.

>  பயிர்கலைத்தல் மற்றும் இடைவெளி நிரப்புதல்:


  • நேரடி விதை பயிரில் முதல் களையெடுப்பது பாசனத்தின்போதும், இடைவெளியை நிரப்ப 15 செ.மீ இடைவெளியில் உள்ள பயிருக்கு 20 செ.மீ இடைவெளியில் தட்டைபயிரும் மற்ற பயிர்களாக இருந்தால் 10 செ.மீ இடைவெளி வேண்டும்.

>   மேலுரமிடுதல்:


  • நாற்று நட்டு அல்லது நேரடி விதைத்த 15 மற்றும் 30 நாட்களில் நைட்ரஜனை மேலுரமாக இட வேண்டும்
  • நாற்று நடுதலாக இருந்தால் ஒரு குச்சியினால் 5 செ.மீ ஆழத்திற்கு ஒரு குழியை தோண்டி அதன் அடியில் உரத்தை வைத்து மூடவேண்டும்.
  • நேரடி விதைத்தலில் உரத்தை பட்டையில் இட வேண்டும். ஊடுபயிராக தானியம் விதைத்திருந்தால் உரத்தை கம்பிற்கு மட்டும் இட வேண்டும்.
  • உரம் வைத்த பிறகு பாசனம் செய்ய வேண்டும்.

>  நீர் மேலாண்மை:


  • முளைக்கும் பருவம் <=> நாற்று நட்ட பிறகு 1 நாள் <=> விதை விதைத்த 1 நாள்
  • 4 –ஆம் நாள் <=> 4 –ஆம் நாள்
  • தழைப் பருவம் <=> 15 ஆம் நாள் <=> 17 ஆம் நாள்
  • 28 ஆம் நாள் <=> 30 ஆம் நாள்
  • பூ பூக்கும் பருவம் <=> 40 ஆம் நாள் <=> 42 ஆம் நாள்
  • 52 ஆம் நாள் <=> 55 ஆம் நாள்
  • 65 ஆம் நாள் <=> 68 ஆம் நாள்
  • முதிர்ந்த பருவம் <=> 77 ஆம் நாள் <=> 79 ஆம் நாள்
  • மொத்தம் 8 பாசனம் <=> 8 பாசனம்
  • கடின மண் <=>முளைக்கும் பருவம் <=> நாற்று நட்ட பிறகு 1 நாள் <=> விதை விதைத்த 1 நாள்
  • 4 –ஆம் நாள் <=> 5 ஆம் நாள்
  • 15 ஆம் நாள் <=> 15 ஆம் நாள்
  • 28 ஆம் நாள் <=> 30 ஆம் நாள்
  • 42 ஆம் நாள் <=> 45 ஆம் நாள்
  • 54 ஆம் நாள் <=> 57 ஆம் நாள்
  • 66 ஆம் நாள் <=> 70 ஆம் நாள்
  • 7 பாசனம் <=> 7 பாசனம்

>  குறிப்பு :


  • இந்த பாசனம் அட்டவணை ஒரு வழிகாட்டலே இது வானிலை தக்கவாறு மாற்றிக் கொள்ள வேண்டும்.
⇒   பயிர்அறுவடை:

>  முதிர்ந்நததற்கானஅறிகுறி:


  • இலைகள்மஞ்சள்நிறத்திற்குமாறிஉலர்ந்ததோற்றத்தில்இருக்கும்.
  • தானியங்கள்கடினமாகஇருக்கும்

>  அறுவடை:


  • தானியகதிரைதனியாகஅறுக்கவேண்டும்.
  • வைக்கோலைஒருவாரம்காயவிட்டுபோக்குவரத்துஎளிதாகஇருக்கும்போதுஅறுவடைசெய்யவேண்டும்.

>  கதிரடுத்தல், தூய்மைசெய்தல், உலர்த்துதல்மற்றும்சேமித்தல்:


  • தானிய கதிரை உலர்த்துதல்
  • இயந்திரத்தின் மூலம் கதிரடித்தல் அல்லது
  • கதிரை பரப்பி உருளைகல் கொண்டு உருட்டுதல்
  • கால்நடை கொண்டு கதிரடித்தல்
  • 10% குறைவான ஈரப்பதம் உள்ளவாறு தானியத்தை உலரவிட்டு 100 கிலோதானியத்திற்கு 1 கிலோவீதம் வெண்களிமண்கலப்பதால் அரிசி அந்துப்பூச்சி தாக்குதலை குறைக்கலாம்
  • சேமிப்புகிடங்குகளில் வைக்கப்பட்டுள்ள பைகளின் மீது மாலத்தியான் 50 EC யை 10 மி.லி/லிட்டருக்கு கொண்டு 100 சதுரமீட்டருக்கு 3 லிட்டர் வீதம் தெளிக்கவேண்டும்.
  • 10% குறைவானஈரப்பதம்உள்ளவாறுதானியங்களைஉலரவிட்டுபிறகுசாக்குபைகளில்சேமிக்கவேண்டும்.

>  பயிர் பாதுகாப்பு:


  • கம்பு பயிரைத் தாக்கும் பூச்சிகள்
  • கம்பு பயிரைத் தாக்கும் நோய்கள்

>  அறுவடை பின்சார் தொழில் நுட்பம் :


  • கம்பு இந்தியாவில் அதிகம் விளையக்கூடிய சிறு தானியம் ஆகும். இது கோதுமையில் உள்ள அளவே புரதத்தைக் கொண்டது. இந்த புரதத்தில் அதிக அளவு புரோலமைன் அடுத்தபடியாக குளோபுலின் மற்றும் அல்புமின் கொண்டுள்ளது. பாலிஷ் செய்த கம்பு சுவையாகவும் தோற்றத்தில் நன்றாகவும் இருக்கிறது. பாப்கார்ன் மற்றும் மால்ட் செய்ய ஏற்றது. அரிசியை போன்று வேக வைத்தும் உண்ணலாம். ராகி மாவு சப்பாத்தி செய்யவும், கூழ் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.
⇒   4.கேழ்வரகு
  • மாவட்டம் /பருவம் <=> ரகம்
  • பாசனம்
  • மார்கழிபட்டம் (டிசம்பர் – ஜனவரி)
  • கன்னியாகுமரி மற்றும் நீலகிரி தவிர அனைத்து மாவட்டங்கள் சித்திரைப் பட்டம் (ஏப்ரல் – மே) <=> கோ 9, கோ 13, கோ.ஆர்.ஏ14, டி.ஆர்.ஒய் 1
  • கன்னியாகுமரி மற்றும் நீலகிரி தவிர அனைத்து மாவட்டங்கள் மானாவாரி ஆடிப்பட்டம் (ஜீன் – ஜீலை) <=> கோ 9, கோ 13, கோ.ஆர்.ஏ14,
  • கன்னியாகுமரி மற்றும் நீலகிரி தவிர அனைத்து மாவட்டங்கள் புரட்டாசிப்பட்டம் (செப்டம்பர் – அக்டோபர்) <=> பையூர் 1, கோ 13, கோ.ஆர்.ஏ14, பையூர் 2
  • கன்னியாகுமரி மற்றும் நீலகிரி தவிர அனைத்து மாவட்டங்கள் <=> பையூர் 1, கோ13, கோ.ஆர்.ஏ14

>  இறவைப் பயிர் பயிர் மேலாண்மை:


  • நாற்றாங்கால் தயார் செய்தல் ( நாற்றங்கால் பாசனம்):

>  நிலம் தயாரித்தல் :


  • ஒரு எக்டர் வயலில் நடவு செய்யத் தேவைப்படும் நாற்றுகள் வளர்க்க 12.5 சென்ட் (500மீ) நாற்றாங்கால் பரப்பு தேவை.
  • 37.5 கிலோ சூப்பர் பாஸ்பேட்டுடன் 500 கிலோ தொழுஉரம் கலந்து, நாற்றாங்கால் பாத்திகளில் சீராக பரப்பிவிடவும்.
  • இறக்கை கலப்பைக் கொண்டு 2-3 முறை அல்லது நாட்டுக் கலப்பை கொண்டு 5 முறை உழ வேண்டும்.

>  மேட்டுப்பாத்தி தயாரித்தல்:


  • 3 மீ x 1.5 மீ அளவுள்ள 6 பாத்திகள் அமைக்கவும். ஒவ்வொரு பாத்திக்கும் நீர் பாய்ச்ச 30 செ.மீ இடைவெளி விடவும்.
  • இடைவெளியில் உள்ள மண்ணை 15 செ.மீ ஆழத்தற்கு தோண்டி வாய்க்கால் ஆக்கவும். தோண்டிய மண்ணை பாத்திகள் மேல் போட்டு சமப்படுத்தி விடவும்.

>  காளான் கொல்லி முன் விதை நேர்த்தி:


  • அசோஸ்பைரில்லம் 3 பாக்கெட்/ எக்டர் (600 கிராம்/எக்டர்) மற்றும் 3 பாக்கெட்/எக்டர் (600 கிராம்/எக்டர்) பாஸ்போபாக்டீரியா கொண்டு விதை நேர்த்தி செய்யவும் அல்லது அசோபாஸ் (1200 கிராம்/எக்டர்) பயன்படுத்தவும்
  • ஒரு பாலித்தீன் பையில் திரம் 4 கிராம்/கிலோ அல்லது கேப்டான் 4 கிராம்/கிலோ அல்லது கார்பன்டாசிம் 2கிராம்/கிலோ மருந்துகளுடன் விதைகளை கலந்து ஒரு சீரான பூச்சை விதைகளில் ஏற்படுத்தவும்.

>  விதைத்தல் மற்றும் விதைகளை மூடுதல்:


  • விரலால் படுக்கையின் மீது ஒரு கோடிட வேண்டும்.
  • அதன் மீது விதை நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை தூவ வேண்டும்.
  • கையினால் மண்ணை தூவி விதைகளை மூட வேண்டும்.
  • 500 கிலோ தொழு உரத்தை பாத்திகளின் மேல் தூவிவிட்டு விதைகளை மூடிவிட்டு மேற்பரப்பை இளக்கமாக்கவும்

>  குறிப்பு :


  • விதைகளை ஆழமாக விதைத்தால் முளைப்புத்திறன் பாதிக்கப்படும்.

>  நீர் மேலாண்மை:


  • ஒவ்வொரு நாற்றாங்காலுக்கும் ஒரு உள்வாயில் அமைக்கவும்.
  • உள்வாயில் மூலம் தண்ணீர் விட்டு வாய்க்காலைச் சுற்றி தண்ணீர் விடவும். மேட்டுப்பாத்திகள் ஈரமடையும் வரை, வாய்க்காலில் தண்ணீர் விட்டு பின் நிறுத்திவிடவும்.
  • மண்ணின் வகையைப் பொருத்து, நீர் பாசன இடைவெளி மாறுபடும்.

>  பாசன எண்ணிக்கை <=> செம்மண் <=> கடின மண்


  • 1 பாசனம் <=> விதை்த உடன் <=> விதைத்த உடன்
  • 2 வது பாசனம் <=> விதைத்த பின் 3 –ம் நாள் <=> விதைத்த பின் 4 –ம் நாள்
  • 3 வது பாசனம் <=> விதைத்த பின் 7-ம் நாள் <=> விதைத்த பின் 9-ம் நாள்
  • 4 வது பாசனம் <=> விதைத்த பின் 12-ம் நாள் <=> விதைத்த பின் 16-ம் நாள்
  • 5 வது பாசனம் <=> விதைத்த பின் 17 –ம் நாள் <=> --

>  குறிப்பு :


  • செம்மண்ணிற்கு மூன்றாவது நாள்நீர் பாய்ச்சி, கடின மேற்பரப்பு இலகுவாக்கப்படுகிறது. இதனால் நாற்றுகள் எளிதாக முளைக்கும்.
  • முறையாக, சீரான நீர் பாய்ச்சி, நாற்றங்கால் பாத்தியில் பிளவுகள் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

>  நாற்றுகளை நடவிற்காக பிடுங்கி நடுதல்:


  • விதைத்த 17-20 ஆம் நாட்களில் நாற்றுகளை, நடவிற்காக பிடுங்கலாம்.

>  நடவு வயலை தயார் செய்தல் நிலத்தை உழுதல்:


  • மண் நன்றாக கட்டிகளின்றி உடையும் வரை அச்சு கலப்பை கொண்டு 2 முறையும், மர கலப்பை கொண்டு மூன்று முறையும் உழ வேண்டும்.

>  உரம் அல்லது தொழுவுரம் இடுதல்:


  • ஹெக்டருக்கு 12.5 டன் தொழுவுரம் அல்லது மட்கிய நார் உரம் உழுவதற்கு முன் இடவேண்டும். நாட்டுக்கலப்பை கொண்டு உரங்களை மண்ணுடன் ஒருங்கிணைத்தல் வேண்டும்.

>  குறிப்பு :


  • உரங்கள் வயலில் நன்றாக பரப்பவில்லையென்றால் ஊட்டச்சத்துகள் வீணாகும்.

>  உர பயன்பாடு:


  • மேற்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் மண் பரிசோதனையின் பரிந்துரைப்படி உரங்கள் அளிப்பதால் பயிர் விளைச்சலில் இலக்குகளை அடையலாம். உயர் தீவர பயிர் அமைப்பை கொண்ட மண் அதாவது கேழ்வரகு – மக்காச் சோளம் – தட்டைபயறு இம்மண்ணிற்கு பொட்டாசியம் 310 கி/ஹெக்டருக்கு தேவைப்படும். முடிந்தவரை மண் பரிசோதனையின் படி தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்தை மண்ணிற்கு அளிக்க வேண்டும். மண்பரிசோதனை செய்யவில்லையென்றால் தழைச்சத்து 60கி, மணிசத்து30 கிலோ, மற்றும் சாம்பல் சத்து 30 கிலோ ஒரு ஹெக்டருக்கு இட வேண்டும்.
  • நடவிற்கு முன் தழைச்சத்தில் பாதியளவும், சாம்பல்சத்தில் பாதியளவும், மணிசத்து முழுவதையும் சேர்த்து அடியுரமாக இட வேண்டும்.
  • உரகலவையை கடைசி உழவிற்கு முன் மண்ணில் இட்டு நாட்டுக் கலப்பை கொண்டு உழுது மண்ணுடன் உரகலவையை ஒன்றிணைக்க வேண்டும்.
  • 10 பாக்கெட்டுகள் /ஹெக்டர் (2000 கிராம்) மற்றும் 10 பாக்கெட்டுகள் (2000 கிராம் /ஹெக்டர் பாஸ்பரஸ் பாக்டீரியா அல்லது 20 பாக்கெட்டுகள் அசோபாஸ் (4000 கிராம்/ஹெக்டர்) இவற்றுடன் 25 கிலோ மண் மற்றும் 25 கிலோ தொழுவுரம் கலந்து நடவிற்கு முன் இட வேண்டும்.

>  படுக்கை மற்றும் வாய்க்கால் அமைத்தல்:


  • 10 ச.மீ – 20 ச.மீ என்ற அளவிற்கு படுக்கை அமைத்தல் வேண்டும்.
  • தேவையான அளவிற்கு பாசன வாய்க்கால்களை அமைக்க வேண்டும்.

>  நுண்ணூட்டக் கலவை அளித்தல்:


  • தமிழ்நாடு வேளாண்மைத்துறை அறிவுறுத்தலின் படி 12.5 கிலோ நுண்ணூட்டக் கலவையுடன் போதுமான மண் கலந்து அதை 50 கிலோ/ஹெக்டர் என்ற அளவில் அளிக்க வேண்டும்.
  • நுண்ணூட்டக்கலவையை பாத்திகளின் மீது சமமாக இட வேண்டும்.
  • கலவையை மண்ணில் இட்டு கலக்க கூடாது.

>  பிராதான நில நிர்வாகம் நாற்று நடுதல்:


  • படுக்கை சமமாக இருந்தால் நீர் போக எளிதாக இருக்கும்.
  • ஒரு குத்துக்கு 2 நாற்றுகளாக நடுதல் வேண்டும்
  • நாற்றுகளை 3 செ.மீ ஆழத்தில் நட வேண்டும்.
  • 18 – 20 நாட்களுடைய நாற்றுகளை நட வேண்டும்
  • 30x10 செ.மீ இடைவெளியில் நட வேண்டும்.
  • நேரடி விதைப்பாக இருந்தால் 22.5x10 செ.மீ இடைவெளியில் விதைக்க வேண்டும்.
  • வேர்களை நனைக்க அசோஸ்பைரில்லம் சேற்றுக் குழம்பு தயாரிக்க, அசோஸ்பைரில்லம் 5 பாக்கெட்டுகள் (1000 கிராம் /ஹெக்டர்) மற்றும் பாஸ்போபாக்டீரியா 5 பாக்கெட்டுகள் மற்றும் அசோபாஸ் 10 பாக்கெட்டுகள் இவற்றை 40 லிட்டர் தண்ணீரில் கலந்து சேற்று குழம்பு தயார் செய்தல் வேண்டும். இச்சேற்றுக் குழம்பில் நாற்றுகளை நடுவதற்கு முன் 15 -30 நிமிடம் நனைக்க வேண்டும்.

>  களை நிர்வாகம்:


  • விதைத்த 3 நாட்களுக்கு பிறகு களை முளைப்பதற்கு முன் ஆக்ஸிபுளோர்பன் 0.05 கிலோ/ஹெக்டர் 500 லிட்டர் தண்ணீரில் பேக் - பேக்-பேக்/நேப்சேக்/ராக்கர் தெளிப்பான் உதவியால் தெளிக்கவும். விதைத்த 20 நாட்களுக்கு பிறகு கையால் களையெடுக்க வேண்டும்.
  • மண்ணில் தேவையான அளவு ஈரப்பதம் இருக்கும்பட்சத்தில் களைகொல்லியை தெளிக்க வேண்டும். அல்லது களைகொல்லி தெளித்தவுடன் பாசனம் செய்ய வேண்டும்.
  • களை முளைப்பதற்கு முன் களைகொல்லி தெளிக்கவில்லை என்றால் விதைத்த பிறகு 10 மற்றும் 20 நாட்களில் இரண்டு முறை கையினால் களை எடுக்கவும்
  • மானாவாரி நேரடி விதைப்பு முறையில் களை முளைத்த பிறகு, ஹெக்டருக்கு 0.5 கிலோ 2,4-டி.இ.இ அல்லது 2,4-டி சோடியம் உப்பினை விதைத்த 10 வது நாளில் ஈரபதத்தினை பொறுத்து தெளிக்கவும்.

>  கை களையெடுத்தல்:


  • மண்வெட்டியால் இளகிய மண்ணாக இருந்தால் நடவு செய்த 15ம் நாளில், கடின மண்ணாக இருந்தால் நடவு செய்த 17 ம் நாளில் கையினால் களையெடுக்க வேண்டும் பின்னர் அதேபோல் 30 மற்றும் 32ம் நாட்களில் களையெடுக்க வேண்டும்.
  • களையை 2 அல்லது 3 நாட்கள் உலர விட்டு பின் பாசனம் செய்ய வேண்டும்.

>  குறிப்பு:


  • களைகொல்லி பயன்படுத்துவதாக இருந்தால் கையினால் களையெடுக்க வேண்டியதில்லை.

>  அறுவடை செய்தல் அறுவடையை தீர்மானித்தல்:


  • ராகி பயிர் அனைத்தும் ஒரே சீராக முதிர்ச்சியடைவதில்லை எனவே இரண்டு முறையாக அறுவடை செய்ய வேண்டும்.
  • தானிய கதிரில் 50% கதிர்கள் பழுப்பு நிறமடைந்தபிறகு அதை அறுவடை செய்யலாம்.

>  பயிர் முதல் அறுவடை:


  • முற்றி பழுப்பு நிறமடைந்த அனைத்து கதிர்களையும் அறுவடை செய்யவேண்டும்.
  • தானியத்தை காயவைத்து, கதிரடித்து தூற்றி சுத்தம் செய்ய வேண்டும்.

>  இரண்டாம் அறுவடை:


  • முதல் அறுவடைக்கு பிறகு 7ம் நாளில், அனைத்து தானியகதிர்களையும் பச்சையாக இருக்கும் கதிரையும் சேர்த்து அறுவடை செய்ய வேண்டும்.
  • அறுவடை செய்த தானியங்களை உலர்த்துவதற்கு முன் குவியலாக நிழலில் ஒரு நாள் வைப்பதன் மூலம் வெப்பநிலை அதிகரித்து தானியத்தை தரமாக்க வேண்டும்.
  • உலர்ந்த தானியத்தை கதிரடித்து, புடைத்து, சுத்தம் செய்து சாக்கு பைகளில் சேமிக்க வேண்டும்.

>  கதிரடித்தல்:


  • தானியக்கதிரை அறுவடை செய்யும் போது முற்றாத கதிரை தவிர்த்து உலர்த்தி, சுத்தம் செய்து தரப்படுத்த வேண்டும். தானியகதிரில் ஈரப்பதம் 15% அளவிற்கு இருக்கும் போது அதை கையினால் அல்லது மூங்கில் குச்சியால் கதிரடித்து சுத்தம் செய்து சேமித்து வைக்க வேண்டும்.

>  முன்தூய்மிப்பு மற்றும் உலர்த்துதல்:


  • தானிய விதைகள் வெயிலில் உலர்த்துவதன் முன் முன்தூய்மிப்பு செய்ய வேண்டும். விதைகள் தரப்படுத்துவதற்கு முன் உலர்த்தவேண்டும்.

>  சேமிக்கும் போது பூச்சிகளிடமிருந்து பாதுகாப்பு:


  • தானியம் நிலை: தானிய நிலைக்கு விதைகளை 10% குறைவான ஈரப்பதத்திற்கு உலர்த்த வேண்டும்.
  • விதை நிலை: 100 கிலோ விதைக்கு வெண்களிமண் ஒரு கிலோ அல்லது மாலத்தியான் 5% டி. சாக்கு அல்லது பாலித்தீன் உறை கொண்ட சாக்கு பைகளில் சேமிக்கவும்.

>  குறிப்பிட்ட சிக்கல்கள்:


  • வேர் அசுவிணி பூச்சி : டைமெத்தோயேட் 3 மில்லி லிட்டரை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து பாதிக்கப்பட்ட செடியின் வேர் சூழ் மண்டலத்தை அந்த பூச்சிகொல்லி கலவையில் நனைக்க வேண்டும்.
  • மானாவாரி கேழ்வரகு : அசோஸ்பைரில்லத்துடன் தொழுவுரம் கலந்து வயலுக்கு அளிப்பதால் 40 கிலோ /ஹெக்டருக்கு நைட்ரஜனுக்காக செலவு செய்ய வேண்டியதில் 50 % செலவு சேமிக்கப்படுகிறது.
  • மானாவாரியில் கேழ்வரகில் வயதான நாற்றுகளின் கட்டுப்பாடு : 21 நாட்கள் தாண்டிய கேழ்வரகு நாற்றுகள் நடவு செய்யும் போது, மகசூல் இழப்பை குறைக்க (ஒரு குத்திற்கு 3 நாற்றுகள்) 3/குத்து மற்றும் தழைச்சத்து பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம் 25% மகசூல் இழப்பை குறைக்கலாம்.
  • ரெனிஃபார்ம் நூற்புழுவின் தாக்குதலை கட்டுப்படுத்த நாற்றங்காலில் ஒரு சதுர மீட்டருக்கு 100 கிராம் வேம் பயிர் வளர்ப்பினை இட வேண்டும் மற்றும் அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபேக்டீரியம் கொண்டு விதை நேர்த்தி, நாற்று நனைத்தல் செய்ய வேண்டும் மற்றும் மண்ணில் இட வேண்டும்.

>  ராகி : மானாவாரி


>  மழை :


  • 450-500 மிமீ சராசரி மழை கேழ்வரகிற்கு போதுமானது.

>  பருவகாலம்:


  • கேழ்வரகு நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பருவங்களில் வளர்ந்து வருகிறது. இது ஒரு மானாவாரி பயிராகவும், பொதுவாக தமிழ்நாட்டில் ஜீன், ஜீலையில் வருகின்றது. தமிழ்நாட்டில் குளிர் காலத்தில் (ராபி) இது செப்டம்பர்- அக்டோபர் மாதத்திலும், கோடைகால பாசன பயிராக ஜனவரி - பிப்ரவரி மாதத்தில் நடவு செய்யப்படுகிறது.

>  பண்படுத்துதல் :


  • சாகுபடிக்குரிய நிலத்தை பயிரிடுவதற்கு முன்பே, கோடை உழவு செய்து, ஈரப்பதத்தை சேமிக்க வேண்டும். ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இறக்கை கலப்பை கொண்டு ஒரு முறை ஆழமாக உழுது, இரண்டு முறை நாட்டு மரக்கலப்பை கொண்டும் உழவு செய்வதும் அவசியம். கொத்துக் கலப்பை அல்லது பலபல் கொண்ட கொத்து கொண்டு நல்ல மென்மையான விதைப் பாத்திகள் விதைப்பிற்கு முன் தயார் செய்யவும்.

>  விதை வீதம் மற்றும் நடவு:


  • நல்ல மகசூல் பெறுவதற்கு, ஒரு எக்டருக்கு 4-5 லட்சம் பயிர் எண்ணிக்கை அவசியம். இதற்கு குறைவாகவோ அல்லது அதிகமாகவோ பயிர் எண்ணிக்கை இருந்தால், மகசூல் குறையும். கேழ்வரகு சாகுபடியில் பல முறைகள் உள்ளன. வரிசைக்கு வரிசை 22.5 – 30 செ.மீ இடைவெளி கொடுக்க வேண்டும். கேழ்வரகு விதைகள் மிகவும் சிறியதாக உள்ளதால்(400 விதைகள்/கிராம்) ஒரு ஹெக்டருக்கு 15 -20 கிலோ விதைகள் அதாவது 4 மில்லியன் விதைகள் தேவைப்படும். விதையிடும் கருவியைப் பயன்படுத்தி, செடிக்கு செடி 7.5-10 செ.மீ இடைவெளி விட்டு விதைக்க வேண்டும்.
  • விதையிடும் கருவி மூலம் வரிசை விதைப்பில் விதையுடன் உரமும் சேர்த்து அளிப்பதால் ஊட்டச்சத்துகள் பயன்பாடு செடிக்கு திறம்பட கிடைக்கிறது
  • மானாவாரி பயிரில் அதிக மகசூல் பெற சரியான அளவு பயிர் எண்ணிக்கை பராமரிக்க வேண்டும். குறைவான மழையளவு உள்ள பகுதிகளில், விதைப்பிற்கு பின் தேவையான அளவு ஈரம் இல்லாமல் இருந்தால், முளைப்புத்திறன் பாதிக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலைகளில், விதை கடினமாக்குதல் முறையை பின்பற்றினால் முளைப்புத்திறன் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், நாற்றுகளுக்கு, வீரியம் உண்டாவதுடன், வறட்சியைத் தாங்கும் திறன் ஏற்படுகிறது.

>  விதைகளை கடினமாக்குதலின் செயல்முறை:


  • விதைகளை 6 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். 1 கிலோ விதைக்கு 1 லிட்டர் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
  • தண்ணீரை வடித்துவிட்டு விதைகளை ஈரத்துணியில் 2 நாட்கள் கட்டி வைக்க வேண்டும்.
  • இந்த நிலையில் விதைகள் முளைக்க துவங்கிவிடும்.
  • ஈரத் துணியிலிருந்து விதைகளை அகற்றி பின்னர் வறண்ட துணியில் 2 நாட்கள் நிழலில் உலர வைக்க வேண்டும்.
  • இவ்வாறு கடினமாக்கப்பட்ட விதைகளை விதைப்பிற்கு பயன்படுத்த வேண்டும்.

>  உரமிடுதல்:


  • மானாவாரி கேழ்வரகு பயிரில் உரமிடுதல் குறிப்பாக தழைச்சத்து மற்றும் மணிச்சத்து சரியான முறையில் அளிக்க வேண்டும். பரிந்துரைக்கப்படும் உரபயன்பாடு மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகின்றது. பொதுவாக பரிந்துரைக்கப்படும் அளவு தழைச்சத்து/மணிச்சத்து/சாம்பல்சத்து முறையே 40:20:20 கிலோ/ஹெக்டர். பரிந்துரைக்கப்பட்ட மணிச்சத்து மற்றும் சாம்பல்சத்து முழுவதும் விதைத்தவுடனும், தழைச்சத்து அளவை 2 அல்லது 3 ஆக பிரித்து ஈரப்பதத்தை பொறுத்து அளிக்க வேண்டும். நல்ல மழையளவும் ஈரப்பதமும் உள்ள பகுதிகளில் பரிந்துரைக்கப்பட்ட தழைச்சத்தில் 50% விதை விதைக்கும் போதும் மீதி உள்ள 50% இரண்டு சம பகுதியாக பிரித்து விதைத்த பிறகு 25-30 மற்றும் 40-45 நாட்களில் அளிக்க வேண்டும். குறைந்த மழையளவு உள்ள பகுதியில், 50% விதை விதைக்கும் போதும் மீதி உள்ள 50% விதைத்த பிறகு 35 நாட்களில் அளிக்க வேண்டும்.

>  உயிர் உரங்கள்:


  • ஒரு கிலோ விதைக்கு 25 கிராம் அசோஸ்பைரில்லம் ப்ரேசில்லன்ஸ் மற்றும் ஆஸ்பர்ஜில்லஸ் அவமோரியை கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். விதை நேர்த்தி ரசாயனத்தில் விதைகளை முதலில் விதைநேர்த்தி செய்து பிறகு உயிர் உரக்கலவையில் விதைநேர்த்தி செய்ய வேண்டும்.

>  உயிர் உரங்களைக் கொண்டு விதை நேர்த்தி செய்தல்:


  • பயிருக்கு தேவையான உயிர் உரத்தை ஒரு கிலோவுக்கு 25 கிராம் என்ற அளவில் பயன்படுத்த வேண்டும்.
  • விதைகளில் நன்றாக ஒட்டுவதற்கு ஒட்டும் கரைசல் அவசியம். இதற்கு 250 மில்லி தண்ணீரில், 25 கிராம் வெல்லம் (அ) சர்க்கரையை கரைத்து, 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும். இவ்வாறு தயாரித்த பின் ஆறவைக்க வேண்டும்.
  • விதைகளின் மேல் நன்றாக கரைசல் ஒட்டும் அளவிற்கு கலந்து, பிறகு உயிர் உரத்தை விதைகளுடன் கலந்து விதைகளின் மேல் படுமாறு நன்றாகக் கலக்கி விட வேண்டும்.
  • விதைகள் ஒன்றோடொன்று ஒட்டிக் கொள்ளாதவாறு தனியாக நிழலில் உலர்த்த வேண்டும்.
  • இவ்வாறு விதை நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை விதைக்கப் பயன்படுத்த வேண்டும்.

>  களை கட்டுப்பாடு:


  • வரிசை விதைப்பு பயிருக்கு 2-3 இடையுழவு அவசியம். மழை உத்திரவாதமுள்ள மற்றும் பாசன வசதி உள்ள பகுதிகளில், 2, 4D சோடியம் உப்பு @ 0.75 a.i./ கிலோ/ஹெக்டர் போன்ற களை முளைத்த பின் பயன்படுத்தும் களைக்கொல்லியை விதைத்த 20-25 நாட்களுக்கு பிறகு தெளித்து களை கட்டுப்படுத்த வேண்டும்.
  • ஐசோபுரோடியுரான் @ 0.5 a.i./ஹெக்டர் என்ற களை முளைக்கும் முன் களைக்கொல்லி தெளித்து களையைக் கட்டுப்படுத்தலாம். இரண்டு முறையான கை களையெடுப்பின் மூலம் இடையுழவு செய்யமுடியாத பகுதிகளில் களை முளைப்பு கட்டுப்படுத்தப்படும்.
  • மானாவாரி நேரடி விதைப்பு கேழ்வரகில் களை முளைத்த பிறகு களைக்கொல்லி தெளிப்பு 2,4 டி சோடியம் உப்பு (அல்லது) EE தயாரிப்பை ஹெக்டருக்கு 0.5 கிலோ விதைத்த 10 நாட்களுக்கு பிறகு மற்றும் ஹெக்டருக்கு 0.75 கிலோவை விதைத்த 15 நாட்களுக்கு பிறகு தெளிப்பதால் களையை நன்றாக கட்டுப்படுத்தி விளைச்சலை அதிகரிக்கிறது.

>  பயிரிடும் முறைகள் பயிர் சுழற்சி:


  • பச்சை பயறு/உளுந்து/கொள்ளு/சோயாபீன்/மொச்சை அல்லது வேர்கடலை இப்பயிர்களுடன் ராகியை தென் மாநிலங்களில் பயிர் சுழற்சி முறையில் பயிரிடுகின்றனர். இம்முறையில் ரசாயன உரங்கள் குறைத்து பயன்படுத்துவதால் அதிக வளைச்சல் கிடைக்கின்றது.

>  கலப்புப் பயிர்:


  • மானாவாரி பகுதியில் கேழ்வரகுடன் பொதுவாக துவரையை கலப்புப்பயிராக 4:1 என்ற விகிதத்தில் பயிர் செய்வதால் அதிக விளைச்சல் கிடைக்கும்.

>  அறுவடை பின்சார் தொழில்நுட்பம் :


  • இந்தியாவில் விளையும் உணவு தானியத்தில் 25 சதவீதம் ராகி விளைகிறது. அரிசி மற்றும் கோதுமையைவிட ஊட்டச்சத்து நிறைந்தது ஆகும். ராகியில் அமைந்துள்ள புரதமானது புராலமின் மற்றும் குளுட்டனின் மற்றும் உடலுக்குத் தேவையான அனைத்து அமினோ அமிலங்களும், ராகியில் காணப்படுகின்றன. இது நார்ச்சத்து நிறைந்தது ஆகும். பைட்டேட் மற்றும் டேனினும் பி வைட்டமினும் நிறைந்தது. முளைகட்டி குழந்தைகளுக்கு மால்ட் தயார் செய்து பழங்காலந்தொட்டு நம் பழக்கத்தில் உள்ளது.
⇒   5.பனிவரகு
  • பனி வரகு ஒரு முக்கியமான சிறு தானியப் பயிர் இந்தியாவில் பயிரிடப்படுகிறது. இதன் விரைவான முதிர்ச்சி மூலம் வறட்சியைத் தவிர்க்க முடியும். இது ஒரு குறுகிய காலப்பயிர் என்பதால் வறட்சியைத் தாக்குப் பிடித்து வறண்ட பகுதிகளில் தீவிர சாகுபடிக்கு உகந்ததாக உள்ளது. மானாவாரியில் காரீப் பருவத்திலும் மற்றும் நீர்ப்பாசனப் பகுதிகளில் கோடைகால ஊடுபயிராக தீவிர பயிர் சுழற்சி இடையே பயிரிடப்படுகிறது.

>  ஆரம்பம் மற்றும் வரலாறு:


  • பனி வரகு தோராயமாக இந்தியாவில் தோன்றியிருக்கலாம். இங்கிருந்து மற்ற நாடுகளுக்கும் பரவியிருக்கலாம். இது பர்மா, இந்தியா மற்றும் மலேசியா காடுகளில் காணப்படும். Panicum psilopodium வகையில் இருந்து தோன்றியிருக்கலாம்.
  • பனி வரகு ஒரு பழமை வாய்ந்த தானியப்பயிராகும். இது இந்தியா, ஜப்பான், சீனா, எகிப்து, அரேபியா மற்றும் மேற்கு ஐரோப்பா போன்ற நாடுகளில் பயிரிடப் படுகிறது. இந்தியாவில் மத்தியப்பிரதேசம், கிழக்கு உத்திரப்பிரதேசம், பீகார், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஆந்திரப்பிரதேசம் மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் பயிரிடப்படுகிறது.

>  பருவம் மற்றும் இரகங்கள்:


  • பயிர் <=> விளையும் மாவட்டங்கள்
  • பனிவரகு <=> வேலூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி
  • மாவட்டம்/பருவம் <=> இரகங்கள்
  • மானாவாரி <=> செப்டம்பர்-அக்டோபர் (மதுரை, திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி & தூத்துக்குடி) <=> கோ 4, கே 2, கோ(PV)5
  • பாசனப்பயிர் <=> பிப்ரவரி-மார்ச் <=> கே 2 , கோ 4, கோ(PV)5

>  பயிர் மேலாண்மை காலநிலைத் தேவைகள்:


  • பனி வரகு ஒரு வெப்ப காலநிலைப் பயிராகும். இது உலகின் வெப்பமான பகுதிகளில் பரவலாக வளர்ந்து வருகிறது. இது மிகவும் வறட்சி எதிர்ப்பு தன்மை உடையது மற்றும் மழை பற்றாக்குறை பகுதிகளில் பயிரிட முடியும். இது ஓரளவிற்கு அதிகப்படியான தண்ணீர் தேக்கத்தைத் தாங்கி வளரக்கூடியது.

>  மண்:


  • பனி வரகு கரிசல் மண் மற்றும் களிமண் நிலங்களில் நன்கு வளரக் கூடியது. பெரிய மணல் போன்ற மண் சாகுபடிக்கு ஏற்றதல்ல. அதிகப்படியான அங்ககத் தன்மையுடன் மணல் கலந்த களிமண் சாகுபடிக்கு மிகவும் ஏற்றது.

>  நிலம் தயாரித்தல்:


  • முந்தைய பயிர் அறுவடைக்குப்பின் வயலை நன்கு உழுது மண்ணை சூரிய ஒளியில் வெளிக்கொணர வேண்டும். இதனால் மண்ணின் ஈரப்பதம் அதிகரிக்கும். பருவ மழை தொடங்கியதும் மண்ணை பிளேட் ஹோரோவால் இரண்டு முதல் மூன்று முறை வரை உருவகப்படுத்தி சமப்படுத்திடல் வேண்டும். கோடை காலப்பயிர் என்றால் நிலம் தயாரிப்பதற்கு முன்பாக ஒருமுறை நீர்ப் பாய்ச்ச வேண்டும். மண் தயாரான பின்பு ஹேரோ கலப்பை கொண்டு விதை படுக்கை தயாரித்து பின்னர் தளமிட வேண்டும்.

>  விதை மற்றும் விதைப்பு:


  • விதைகள் செரசான் 2.5 கிராம் வீதம் கிலோ ஒன்றிற்கு கலந்து விதை நேர்த்தி செய்திடல் வேண்டும்.

>  விதைப்பு பருவம்:


  • காரீப் பருவத்தில், பருவ மழை தொடங்கியதும் ஜுலை மாதத்தின் முதல் 15 நாட்களுக்குள் விதைக்க வேண்டும். கோடை கால பயிர் என்றால் ஏப்ரல் மாதம் உகந்த பருவம் ஆகும்.

>  விதையளவு மற்றும் விதைப்பு முறை:


  • பனிவரகு விதை தெளிப்பு அல்லது வாய்க்காலில் 3-4 செ.மீ. ஆழத்திற்குத் துளையிடுதல் முறையில் விதைக்கலாம். பயிர் நடவு இடைவெளி 25x10 செ.மீ. அளவாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. வரிசை விதைப்பு முறையானது முளைப்புத் திறனை அதிகரிக்கும், விதையளவைக் குறைப்பதுடன் இடையுழவிற்கு ஏற்றது. ஒரு எக்டேருக்கு 8-12 கிலோ விதைகள் தேவைப்படும்.

>  இயற்கை எரு மற்றம் உர நிர்வாகம்L:


  • பனிவரகு குறைந்த வயதுடைய பயிர் என்பதால் மற்ற தானியப் பயிர்களை விட குறைந்த அளவே உரம் தேவைப்படும். நீர்ப்பாசனப் பகுதிகளில் 40 -60 கிலோ தழைச்சத்து, 30 கிலோ மணிச்சத்து, 20 கிலோ சாம்பல் சத்து இட வேண்டும்.1/2 மடங்கு தழைச்சத்து, முழு அளவான மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்தினை அடியுரமாக இட வேண்டும். மீதமுள்ள 1/2 மடங்கு தழைச்சத்தினை முதல் முறை நீர் பாய்ச்சும் போது இட வேண்டும்.

>  நீர் மேலாண்மை:


  • பனி வரகு காரீப் பருவத்தில் பயரிடும் போது பொதுவாக நீர் பாய்ச்சுதல் தேவைப்படாது. தூர் பிடிக்கும் பருவத்தில் மண் உலர்ந்து காணப்பட்டால் ஒரு முறை நீர் பாய்ச்சலாம். கோடை கால பயிராகப் பயரிடும் போது மண்ணின் தன்மை மற்றும் காலநிலைக்கேற்ப இரண்டு முதல் நான்கு முறை நீர் பாய்ச்சுதல் தேவைப்படும்.
  • முதல் மற்றும் இரண்டாம் நீர் பாய்ச்சுதலை முறையே 25 – 30 மற்றம் 40-45 விதைத்த நாட்களுக்குப் பிறகு பாய்ச்ச வேண்டும்.

>  களை கட்டுப்பாடு:


  • விதைத்ததிலிருந்து 35 நாட்கள் வரை வயலில் களை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இரண்டு முறை 15 – 20 நாட்கள் இடைவெளியில் கை கொத்து அல்லது சக்கர மண் வெட்டி கொண்டு களை எடுக்கலாம்.

>  நோய் கட்டுப்பாடு:


  • தலை கரிப்பூட்டை நோய் பொதுவாக பனிவரகில் காணப்படும். இதனை செரசான் விதை நேர்த்தி 3 கிராம் / கிலோ கிராம் விதைக்கு என்ற விகிதத்தில் விதை நேர்த்தி செய்து கட்டுப்படுத்தலாம் அல்லது சூடான தண்ணீரில் 55° செல்சியசில் 7- 12 நிமிடங்கள் நனைப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.
  • சில சமயங்களில் காணப்படும் பாக்டீரியா கீற்று நோயினை 5 சதவீத மெக்னீசிய ஆர்சனேட் கொண்டு கிலோ விதைக்கு ஒரு கிராம் என்ற விகிதத்தில் விதை நேர்த்தி செய்து கட்டுப்படுத்தலாம்.

>  பூச்சி கட்டுப்பாடு தண்டு ஈ:


  • திமெட் குருணை 15 கிலோவை நிலம் தயாரித்தலின் போது இடுவதன் மூலம் தண்டு ஈயைக் கட்டுப்படுத்தலாம்.

>  அறுவடை:


  • பெரும்பாலான பனிவரகு ரகங்கள் விதைத்த 65-75 நாட்களில் அறுவடைக்குத் தயாராகி விடும். விதைகள் மூன்றில் இரண்டு பங்கு பழுத்தவுடன் அறுவடை செய்யலாம். கை அல்லது மாடுகளைக் கொண்டு கதிர் அடிக்கலாம்.
⇒   6.சாமை

>  பருவம் மற்றும் இரகங்கள்:


>   பயிர் <=> விளையும் மாவட்டங்கள்


  • சாமை <=> தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை, ஈரோடு, சேலம், நாமக்கல், கோயமுத்தூர், மதுரை, திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி.

>   மாவட்டம்/பருவம் <=> இரகங்கள்


  • ஜூன் - ஜூலை (கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்ட மலைப் பகுதிகள்) ஜூலை-ஆகஸ்ட் (தர்மபுரி) செப்டம்பர்-அக்டோபர் <=> கோ 3, கோ (சாமை) 4 ,பையூர் 1, பையூர் 2, கோ 3, கோ (சாமை) 4,கோ 3, கோ (சாமை) 4
  • விதை மற்றும் விதைப்பு:வரிசை நடவுக்கு 10 கிலோ/எக்டர்
  • கொர்ரு அல்லது விதைப்பி மூலம் விதைப்பதற்கு 12.5 கிலோ/எக்டர்

>  விதை நேர்த்தி:


  • ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் திரம் அல்லது கார்பெண்டசிம் கொண்டு விதை நேர்த்தி செய்யவும்.

>  நிலம் தயாரித்தல்:


  • நிலத்தினை 2 – 3 முறை சிறிய இரும்பு கலப்பை அல்லது நாட்டுக் கலப்பை கொண்டு நன்றாக உழ வேண்டும்.

>  உரமிடுதல்:அடியுரம்


  • தொழு உரம்: 12.5 டன்/எக்டர்
  • தழைச்சத்து : 44 கிலோ/எக்டர்
  • மணிச்சத்து : 22 கிலோ/எக்டர்
  • இடைவெளி:வரிசை நடவு - 25 x 10 செ.மீ, நேரடி விதைப்பு- செடிகளுக்கு இடையே 10 செ.மீ இடைவெளி இருக்க வேண்டும்.

>  களையெடுத்தல்:


  • விதைத்த 15 வது நாளிலும் 40 வது நாளிலும் இரண்டு முறை களையெடுக்க வேண்டும்.

>  பயிர்க்கலைத்தல்:


  • களையெடுத்த பிறகு அல்லது விதைத்த 20 வது நாளில் பயிர்க் கலைத்தல் வேண்டும்.

>  பயிர் பாதுகாப்பு:


  • பூச்சி மற்றும் நோய் பாதிப்பு பெரிதாக காணப்படுவதில்லை.
⇒   7.தினை

>  பருவம் மற்றும் இரகங்கள்:


>  பயிர் விளையும் மாவட்டங்கள்:


  • தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், சேலம், நாமக்கல், ஈரோடு, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கரூர், மதுரை, தேனி, திருநெல்வெலி மற்றும் தூத்துக்குடி.
  • மாவட்டம்/பருவம் <=> இரகங்கள்
  • மானாவாரி <=> ஜூன்-ஜூலை (கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்ட மலைப்பகுதிகள்) <=> கோ 6, கோ (தினை) 7
  • மானாவாரி <=> செப்டம்பர்-அக்டோபர் (கோயம்புத்தூர் மற்றும் தென் மாவட்டங்கள்) <=> கோ 6, கோ (தினை) 7
  • பாசனப்பயிர் <=> பிப்ரவரி-மார்ச் <=> ------
  • பாசனப்பயிர் <=> செப்டம்பர் - அக்டோபர் <=> கோ 6, கோ (தினை) 7

>  விதை மற்றும் விதைப்பு:


  • வரிசை நடவு : 10 கிலோ/எக்டர்
  • நேரடி விதைப்பு : கொர்ரு அல்லது விதைப்பி மூலம் விதைப்பதற்கு 12.5 கிலோ/எக்டர் தேவைப்படும்.
  • விதை நேர்த்தி : ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் திரம் அல்லது கார்பெண்டசிம் கொண்டு விதை நேர்த்தி செய்யவும்.
  • நிலம் தயாரித்தல் : நிலத்தினை சிறிய இரும்பு கலப்பை அல்லது நாட்டுக் கலப்பை கொண்டு நன்றாக உழ வேண்டும்.
  • உரமிடுதல் : அடியுரம்
  • தொழு உரம் 12.5 டன்/எக்டர்
  • தழைச்சத்து 44 கிலோ/எக்டர்
  • மணிச்சத்து 22 கிலோ/எக்டர்
  • இடைவெளி : வரிசை நடவு - 22 x 10 செ.மீ, நேரடி விதைப்பு- செடிகளுக்கு இடையே 10 செ.மீ இடைவெளி இருக்க வேண்டும்.
  • களையெடுத்தல் : விதைத்த 15 வது நாளிலும் 40 வது நாளிலும் இரண்டு முறை களையெடுக்க வேண்டும்.
  • பயிர்க்கலைத்தல் : விதைத்த 20 வது நாளில் பயிர்க் கலைத்தல் வேண்டும்.
  • பயிர் பாதுகாப்பு : பூச்சி மற்றும் நோய் பாதிப்பு பெரிதாக காணப்படுவதில்லை.
⇒   8.வரகு

>  வரகு சாகுபடி முறைகள் பருவம் மற்றும் இரகங்கள்:


  • மாவட்டம் <=>வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கடலூர், விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மதுரை, திண்டுக்கல், தேனி மற்றும் இராமநாதபுரம்
  • மானாவாரி <=>ஜூன்-ஜூலை- ஜூலை-ஆகஸ்ட்<=>இரகங்கம் <=>கோ 3
  • விதை மற்றும் விதைப்பு:வரிசை நடவுக்கு 10 கிலோ/எக்டர்; கொர்ரு அல்லது விதைப்பி மூலம் விதைப்பதற்கு 12.5 கிலோ/எக்டர்

>  விதை நேர்த்தி:


  • ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் திரம் அல்லது கார்பெண்டசிம் கொண்டு விதை நேர்த்தி செய்யவும்.

>  நிலம் தயாரித்தல்:


  • நிலத்தினை சிறிய இரும்பு கலப்பை அல்லது நாட்டுக் கலப்பை கொண்டு நன்றாக உழ வேண்டும்.

>  உரமிடுதல்:


>  அடியுரம் தொழு உரம்:


  • 12.5 டன்/எக்டர்; தழைச்சத்து : 44 கிலோ/எக்டர் ; மணிச்சத்து : 22 கிலோ/எக்டர்

>  இடைவெளி:


  • வரிசை நடவு - 45 x 10 செ.மீ; நேரடி விதைப்பு- செடிகளுக்கு இடையே 10 செ.மீ இடைவெளி இருக்க வேண்டும்

>  களையெடுத்தல்:


  • விதைத்த 15 வது நாளிலும் 40 வது நாளிலும் இரண்டு முறை களையெடுக்க வேண்டும்.

>  பயிர்க்கலைத்தல்:


  • களையெடுத்த பிறகு அல்லது விதைத்த 20 வது நாளில் பயிர்க் கலைத்தல் வேண்டும்.

>  பயிர் பாதுகாப்பு:


  • பூச்சி மற்றும் நோய் பாதிப்பு பெரிதாக காணப்படுவதில்லை
⇒   9.குதிரைவாலி

>  பருவம் மற்றும் இரகங்கள்:


  • பயிர் <=> குதிரைவாலி

>   பருவம் <=> இரகங்கள்


  • மானாவாரி <=> செப்டம்பர்-அக்டோபர் <=> கோ 1, கோ(குதிரைவாலி)2
  • பாசனப்பயிர் <=> பிப்ரவரி-மார்ச் <=> கோ 1, கோ(குதிரைவாலி)2

>  குதிரைவாலி :


  • இது வறட்சியை தாங்கி வளரும் தன்மையுடையது மேலும் தண்ணீர் தேங்கினாலும் தாக்குபிடிக்ககூடியது. குதிரைவாலிஅதிகம் மானாவாரியில் பயிரிடப்படுகிறது. இது 40 சதவீத புரதசத்து கொண்டது. குதிரைவாலி தானியம் அதிகம் ஏழைகளால் உண்ணப்படுகின்றது மற்றும் ஆல்கஹால் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.

>  தோற்றம் மற்றும் வரலாறு:


  • இந்திய பண்டைய இலக்கியங்களில் குதிரைவாலி பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. சீனாவில் இரன்டாயிரம் ஆண்டுகளாக பயிரிடப்பட்டு உள்ளது. வல்லுநர்களிள் ஆராய்ச்சிபடி குதிரைவாலி மத்திய ஆசியாவில் தோன்றி ஐரோப்பா மற்றும் அமெரிக்க கண்டங்களுக்கு பரவியிருக்கலாம்.
  • குதிரைவாலி உலகளவில் இந்தியா, சீனா, ஜப்பான், மலேசியா மற்றும் கிழக்கு இந்திய நாடுகளில் பயிரிடப்படுகிறது. சீனா மற்றும் ஜப்பானில் நெற்பயிர் உற்பத்தி இழப்பு ஏற்படும் போது குதிரைவாலி மாற்றுப்பயிராக பயிரிடப்படுகிறது. ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்க கண்டங்களிலும் சிறிதளவில் பயிரிடப்படுகிறது.
  • இந்தியளவில் மத்தியபிரதேசம், உத்திரபிரதேசம் தமிழ்நாடு, ஆந்திரபிரதேசம், கர்நாடாக, மகாராஷ்டிரம் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் பயிரிடப்படுகிறது.
⇒   பயிர் மேலாண்மை :

>  காலநிலை தேவைகள்:


  • குதிரைவாலி வறட்சியை தாங்கி வளரும் தன்மை கொண்டதால் மானவாரி பயிராக பயிரிடப்படுகிறது. இது கடல் மட்டத்திலிருந்து 2000 மீட்டர் வரை பயிரிடப்படுகிறது. குதிரைவாலி வெப்பம் மற்றும் வெப்பம் சார்ந்த காலநிலைகளில் நன்கு வளரக்கூடியது. குதிரைவாலி மற்ற பயிர்களை காட்டிலும் மாறுபட்ட சீதோஷ்ண நிலைகளை தாங்கி வளரக்கூடியது.

>  மண்:


  • குதிரைவாலி தண்ணீர் தேங்கிய ஆற்றுப் படுகையில் ஒரளவிற்கு வளரக்கூடியது. இது மணல் கலந்த களிமண்நிலங்களில் நன்கு வளரக்கூடியது. கற்கள் நிறைந்த மண் மற்றும் குறைந்த சத்துக்கள் உடைய மண் சாகுபடிக்கு ஏற்றதல்ல.

>  நிலம் தயாரித்தல்:


  • இரண்டு முறை நிலத்தை கலப்பை (அ) ஹேரோ கலப்பை கொண்டு உழுது சமப்படுத்தி விதைப்படுக்கையை தயார்படுத்துதல் வேண்டும்.

>  விதை மற்றும் விதைப்பு செய்தல்:


  • குதிரைவாலி பருவமழை துவங்கிய உடன் ஜீலை மாதத்தின் முதல் பதிணைந்து நாட்களுக்கு விதைக்க வேண்டும், விதைகளை தெளித்தல்(அ) பார்பிடித்து 3-4 செ.மீ துளையிட்டு விதைக்கலாம். ஒரு ஹெக்டேருக்கு 8-10 கிலோ விதை தேவைப்படும். வரிசைக்கு வரிசை இடைவெளியாக 25 செ.மீவிடலாம்.

>  எரு மற்றும் உர மேலாண்மை:


  • ஒரு ஹெக்டேருக்கு 5-10 டன்கள் தொழு உரம் இடலாம். தழை, மணி மற்றும் சாம்பல் சத்தினை 40:30:50 கிலோ ஒரு ஹெக்டேருக்கு என்ற விகிதத்தில் இடவேண்டும். உரம் முழுவதையும் விதை விதைப்பின்போது அளிக்க வேண்டும். நீர்பாசனப் பகுதிகளில் பாதியளவு தழைச்சத்தை விதைத்த 25-30 நாட்களுக்கு பிறகு இடலாம்.

>  நீர் மேலாண்மை:


  • பொதுவாக குதிரைவாலிக்கு நீர்பாசனம் தேவையில்லை வறன்ட சூழ்நிலை நிலவினால் ஒருமுறை நீர்பாசனம் பூங்கொத்து வரும் தருனத்தில் அளிக்கவேண்டும். அதிகப்படியான மழை பொழியும் காலங்களில் வடிகால் வசதி ஏற்படுத்தி நீரை வெளியேற்றவேண்டும்.

>  களை மேலாண்மை:


  • வயலில் விதைத்த 25-30 நாட்கள் வரைகளை இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும் இரண்டு முறை களை எடுத்தல் போதுமானது. கைகொத்து அல்லது சக்கர கொத்தி மூலம் களை எடுக்கலாம்.
⇒   நோய் கட்டுப்பாடு:

>  பூஞ்சாண காளாண் நோய்:


  • இது ஓரு பூஞ்சாண காளாண் நோயாகும் .பாதிக்கப்பட்ட செடியினை பிடுங்கி எறிவதன் முலம் கட்டுப்படுத்தலாம். விதைகளை ஆரோக்கியமான செடிகளில் இருந்து தேர்ந்தெடுக்க வேண்டும்.

>  கரிப்பூட்டை நோய்:


  • இதுவும் ஓரு வகை பூஞ்சாண காளாண் நோயாகும். இதனை விதை நேர்த்தி மூலம் அக்ரோசன் 2.5 கிராம் ஒரு கிலோ விதைக்கு என்ற விகிதத்தில் விதை நேர்த்தி செய்ய வேண்டும். சுடுதண்ணீரில் நனைத்தும் (55 செல்சியஸ் 7 – 12 நிமிடங்களில்) விதைக்கலாம்.

>  துரு நோய் :


  • இதுவும் ஓரு வகை பூஞ்சாண காளாண் நோயாகும். டைத்தேன் எம்-45 2 கிலோவை 1000 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிப்பதன் மூலம் நோயைக் கட்டுப்படுத்தலாம்.
⇒   பூச்சி கட்டுப்பாடு

>  தண்டு துளைப்பான் :


  • திமெட் குருணை 15 கிலோ ஒரு ஹெக்டருக்கு என்ற விகிதத்தில் இடுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

>  அறுவடை மற்றும் கதிரடித்தல்


  • வயல் அறுவடைக்கு தயாரானவுடன் அரிவாள் கொண்டு அறுத்து வயலில் அடுக்கி வைக்கப்பட வேண்டும். கதிர்களை காளைகளின் கால்களில் போட்டு நசுக்கி தானியங்களைப் பிரித்தெடுக்கலாம்.
⇒   3.பயறு வகைகள்

>  1.உளுந்து


  • இரகங்கள் <=> விதையின் <=> அளவு (கிகி, எக்டர்)
  • டி 9, கோ 5, வம்பன் 1, வம்பன்2, டிஎம்வி 1 <=> 20 <=> 10
  • ஏடிடீ5, டிஎம்வி1 (நெல் தரிசு) <=> 25 <=> -
⇒   பயிர் மேலாண்மை

>  நிலம் தயாரித்தல் நில மேம்பாடு:


  • நில மேம்பாட்டிற்கு ஒரு எக்டருக்கு சுண்ணாம்புக்கல் 2 டன் மற்றும் தொழு உரம் 12.5 அல்லது மக்கிய தென்னை நார் கழிவு 12.5 டன் இடவேண்டும்

>  விதை நேர்த்தி:


  • ஒரு கிலோ விதைக்கு டிரைக்கோடெர்மா விரிடி 4 கிராம் அல்லது சூடோமோனஸ் 10 கிராம் கொண்டு விதைநேர்த்தி செய்யவும் அல்லது கார்பென்டாசிம் (அ) திரம் 2 கிராம் ஒரு கிலோ விதையுடன் கலந்து 24 மணிநேரம் கழித்து விதைக்கவும். பயனுள்ள ரைசோபியம் பாக்டீரியாக்களை பூசண மருந்து கலந்த விதையுடன் கலக்கக் கூடாது. ட்ரைக்கோடெர்மா அல்லது கூடமோனாஸ் கலந்த விதையுடன் பயனுள்ள பாக்டீரியாக்களை கலந்து விதைக்கலாம்.

>  பாக்டீரியா ராசியுடன் விதைநேர்த்தி:


  • தமிழ் நாடு வேளாண்மை பல்கழைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட ரைசோபியம் சி ஆர்.யு -7, 3 பாக்கேட் (600 கிராம் / எக்) மற்றும் தாவர வளர்ச்சி ஊக்கிவிக்கும் பாக்டீரியாக்கள் 3 பாக்கெட் (600 கிராம் / எக்) மற்றும் பாஸ்போபாக்டீரியா 3 பாக்கெட் (600 கிராம / எக்) உடன் கஞ்சி கலந்து விதை நேர்த்தி செய்யவேண்டும் விதைநேர்த்தி செய்யாவிட்டால், 10 பாக்கெட் ரைசசோபியம் (2000 கிராம் / எக்) ரூ.10 பாக்கெட் தாவர வளர்ச்சி ஊக்குவிக்கும் பாக்டீரியாக்கள் (2000 கிராம் / எக்) மற்றும் 10 பாக்கெட் பாஸ்போபாக்டீரியா (2000 கிராம் / எக்) உடன் 25 கி.கி தொழு உரம் மற்றும் 25 கி.கி.மணலுடன் கலந்து விதைப்பதற்கு முன்னால் இடவேண்டும்.

>  விதைப்பு:


  • விதைகளை 30 × 10 செ.மீ. இடைவெளியில் விதைக்க வேண்டும். நெல் தரிசில் பயிரிடுவதாக இருந்தால், அறுவடைக்கு 5 முதல் 10 நாட்கள் இருக்கும் போது விதைகளை மண்ணில் தூவவேண்டும். தூவும் போது மண்ணில் ஈரப்பதம் சரியாக இருக்குமாறு பார்த்துக்கொள்வது அவசியம் வரப்பு ஒரங்களில் பயிரிடுவதாக இருந்தால் 30 செ.மீ. இடைவெளியில் விதைகளை ஊன்ற வேண்டும்.
⇒   ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை:

>  உரமிடுதல்:


  • விதைப்பதற்கு முன் அடியுரமாக மானாவாரிப் பயிராக இருந்தால் எக்டருக்கு 12.5 கிலோ தழைச்சத்து, 25 கிலோ மணிச்சத்து 12.5 கிலோ சாம்பல் சத்து மற்றும் 10 கிலோ கந்தகச்சத்து இடவேண்டும். இறவைப் பயிராக இருந்தால் எக்டருக்கு 25 கிலோ தழைச்சத்து, 50 கிலோ மணிச்சத்து 50 கிலோ சாம்பல் சத்து மற்றும் 20 கிலோ கந்தகச்சத்து இடவேண்டும். நெல் தரிசில் பயிரிடுவதாக இருந்தால் எக்டருக்கு 2 சதவீதம் டை அம்மோனியம் பாஸ்பேட்டை பூக்கும் தருணத்தில் மற்றும் 15 நாட்கள் கழித்தும் தெளிக்க வேண்டும். மானாவாரி மற்றும் இறவை பயிர்களுக்கு டை அம்மோனியம் பாஸ்பேட் 2 சதவீதம் அல்லது யூரியா 2 சதவீதம் பூக்கும் தருணத்திலும் பின்பு 15 நாட்கள் கழித்தும் தெளிக்க வேண்டும்.
Image result for agriculture

>  குறிப்பு:


  • மணிச்சத்தை சூப்பர் பாஸ்பேட் உரம் மூலம் இடவில்லை எனில் ஜிப்சம் மூலமாக கந்தகத்தை இடவும்.
  • நடவு வயலில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நுண்உரக் கலவையை எக்டருக்கு 5 கிலோவை ஊட்டமேற்றிய தொழுவுரமாக அளிக்கவும்.(ஊட்டமேற்றிய தொழுவுரம் தயாரிக்க 1:10 என்ற விகிதத்தில் நுண்உரக் கலவை மற்றும் தொழுவுரத்தை கலந்து ஒரு மாதம் நிழலில் உலர்த்த வேண்டும்.

>  உளுந்தின் மகசூலை அதிகரிக்க 1% யூரியாவை இலைவழியாக தெளித்தல்:


  • மகசூலை அதிகரிக்க வினையியல், உயிர் இயைபு வழி பண்புகள், இலைத் தெளிப்பாக யூரியா 1% விதைத்த 30 மற்றும் 45ம் நாளில் தெளிக்க பரிந்துரைக்கப்படுகிறது. டெல்டா பகுதிகளில் நெல் தரிசு பயறுகளுக்கு தற்போது பரிந்துரைக்கப்பட்ட 2% டி.ஏ.பி கரைசலை இலைவழித் தெளிக்கும் முறையைப் பயன்படுத்தலாம்.

>  வறட்சியைத் தாங்குவதற்கு இலைவழித் தெளித்தல்:


  • உளுந்தில் வறட்சி காலத்தில் இடைப்பருவ மேலாண்மை முறையாக 2% பொட்டாசியம் குளோரைடு + 100 பிபிஎம் போரான் பரிந்துரைக்கப்படுகிறது. ராபி பருவத்தில் பொட்டாசியம் குளோரைடு தெளிப்பதன் மூலம் அதிக மகசூல் பெற முடியும்.

>  உளுந்தில் நுண்ணூட்டப் பொருள் கொண்டு சிக்கனமாக விதைநேர்த்தி செய்தல்:


  • உயிர் உரங்கள் மற்றும் துத்தநாகம், மாலிப்டினம் மற்றும் கோபால்ட் போன்ற நுண்ணூட்டச்சத்துகள் கொண்டு விதைக்கு மேல் பூச்சு செய்யலாம். ஒரு கிலோ விதைக்கு 0.5 கிராம் பயன்படுத்த வேண்டும்.

>  பயறு வகை பயிர்களுக்கு தழைச்சத்துக்கு மாற்றாக உயிர்ம ஆதாரங்கள்:


  • 50 சதவிகித நைட்ரஜனுக்கு மாற்றாக உயிர்ம ஆதாரம் (ஏக்கருக்கு 850 கிலோ மண்புழு உரம்). பயறு வகை பயர்களில் கார அமிலத் தன்மை 6.0க்கும் குறைவான மண்ணில் சுண்ணாம்பு அளிப்பது பரிந்துரைக்கப்படுகிறது.

>  நீர் நிர்வாகம்:


  • விதைத்தவுடன் ஒரு தண்ணீரும், பிறகு உயிர்த்தண்ணீர், மூன்றாவது நாளிலும் பாய்ச்ச வேண்டும். காலநிலை மற்றும் மண்ணின் தன்மைக்கேற்ப 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் கட்ட வேண்டும். பயிரின் எல்லா நிலைளிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். துளிர்க்கும் பருவத்தில் வறட்சி இருந்தால் 0.5 சதவீதம் பொட்டாசியம் குளோரைடு கரைசலை இலைகளில் தெளிக்க வேண்டும்.

>  இலைவழி நுண்ணூட்டம்:


  • டிஏபி அல்லது யூரியா, என்ஏஏ மற்றும் சலிசலிக் அமிலக் கரைசல் தெளித்தல்:
  • இலை வழி நுண்ணூட்டமாக ஒரு லிட்டர் தண்ணீரில் என்ஏஏ 40 மில்லி கிராம் மற்றும் சலிசலிக் அமிலம் 100 மில்லி கிராம் கலந்து பூக்கும் தருணத்திலும் மற்றும் 15 நாட்கள் கழித்தும் தெளிக்கவேண்டும்
  • நெல் தரிசு பயறு வகைப்பயிர்களுக்கு ஒரு லிட்டர் தண்ணீரில் டிஏபி 20 கிராம் பூக்கும் தருணத்திலும் மற்றும் 15 நாட்கள் கழித்தும் தெளிக்கவேண்டும்.
  • மானாவாரி மற்றும் இறவை பயிர்களுக்கு ஒரு லிட்டர் தண்ணீரில் டிஏபி 20 கிராம் அல்லது யூரியா 20 கிராம் கலந்து பூக்கும் தருணத்திலும் மற்றும் 15 நாட்கள் கழித்தும் தெளிக்கவேண்டும்

>  களை கட்டுப்பாடு மற்றும் பின்செய் நேர்த்தி:


  • களை முளைப்பதற்கு முன் களைக்கொல்லியான பென்டிமெத்தலின் பாசன நிலையில் ஏக்கருக்கு 3.3 லிட்டர், மழை நேரமாக இருந்தால் @ 2.5 லிட்டரை விதைத்த மூன்றாம் நாளில் தட்டை விசிறி நுன்குழல் கொண்ட பேக்பேக் அல்லது நேப்சாக் அல்லது ராக்கர் தெளிப்பானில் ஒரு எக்டருக்கு 500 லி 20ம் நாளில் ஒரு முறை கைக்களை எடுக்க வேண்டும் அல்லது களை முளைத்த பின் தெளக்கும் களைக் கொல்லியான குயிசல்பாப் இதைல் எக்டருக்கு 50 கிராம் ai மற்றும் aiயை விதைத்த 15-20 நாளில் தெளிக்க வேண்டும். களைக்கொல்லி தெளிக்கவில்லை என்றால், விதைத்த 15வது நாளிலும் மற்றும் 30வத நாளிலும் கைக்களை எடுக்க வேண்டும்.
  • பாசன உளுந்திற்கு களை முளைக்கு முன் ஐசோப்ரோட்ரான் எக்டருக்கு 0.5 கிலோ அளிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து விதைத்த 30ம்நாளில் கைக்களை எடுக்க வேண்டும்.

>  பன்முக பூக்கும் தொழில்நுட்பம்:


  • பட்டுக்கோட்டை வட்டம், தஞ்சாவூர் மாவட்டத்தில் உளுந்து மற்றும் பச்சைப் பயிரின் சிறப்பு தொழில்நுட்பம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. வண்டல் மண், கரிம பொருள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. முன் கோடையில் பயிரிட்டால் மற்ற பயிர்களைப் போன்று உரங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. அதனுடன் கூடுதலாக நைட்ரஜன் 25 முதல் 30 கிலோ யூரியாவுடன் சேர்த்து கொடுக்கப்படுகிறது. பயறு வகை பயிர்கள் உறுதியற்ற வளர்ச்சி பண்புகளைக் கொண்டவை. விதைத்த 40-45ம் நாள் மேலுரமிடல் வேண்டும். பயிரின் 60-65ம் நாள் முதிர்ந்த காய்களுடன் காணப்படும். அடுத்த 20-25ம் நாள் இரண்டாம் முறை முதிர்ந்த காய்கள் காணப்படும். எனவே 100 நாட்களில் இரண்டு முறை அறுவடை செய்ய முடியும்.

>  விதைக்கும் காலம்


  • ஜனவரி மூன்றாம் வாரம் முதல் பிப்ரவரி இரண்டாம் வாரம் வரை
Image result for agriculture

>  விதைகள் விதைத்தல்


  • தொடர் பயிரிடும் முறையில், உகந்த மண் ஈரப்பதத்தில் நெற்பயிரின் அறுவடைக்கு 5-10 நாட்கள் முன்னரே விதைகளை விதைக்க வேண்டும்.
  • கூட்டு அறுவடை இயந்திரம் மூலம் அறுவடை செய்யும் பகுதிகளில் நெற்பயிரை இயந்திரம் மூலம் அறுவடை செய்யும் முன்னரே விதைகளை விதைக்க வேண்டும்.

>  டைஅமோனியம் பாஸ்பேட், என்.ஏ.ஏ மற்றும் சாலிசிலிக் அமிலம் தெளித்தல்


  • என்.ஏ.ஏ 40 மிகி/லி மற்றும் சாலிசிலிக் அமிலம் 100 மிகி/லி பூக்கும் முன் இலைத் தெளிப்பாக அளிக்க வேண்டும் மற்றும் 15 நாட்கள் கழித்து மீண்டும் ஒரு முறை அளிக்க வேண்டும்.
  • டி.ஏ.பி 20 கி/லி பூக்கும் தருணத்தில் இலைத் தெளிப்பாக அளிக்க வேண்டும் மற்றும் 15 நாட்கள் கழித்து மீண்டும் ஒரு முறை அளிக்க வேண்டும்.
  • சாலிசிலக் அமிலம் 100 மிகி/லி பூக்கும் முன் இலைத் தெளிப்பாக அளிக்க வேண்டும் மற்றும் 15 நாட்கள் கழித்து மீண்டும் ஒரு முறை அளிக்க வேண்டும்.

>  அறுவடை செய்தல்:


  • முதிர்ந்த காய்களை பறித்து உலர்த்த வேண்டும்.
  • வேரோடு பிடுங்கவும் அல்லது முழு தாவரத்தையும் வெட்டி எடுக்கவும்., குவித்து வைத்து உலர்த்தவும்.

>  பயிர் பாதுகாப்பு:


  • உளுந்து பயிரைத் தாக்கும் நோய்கள்
  • உளுந்து பயிரைத் தாக்கும் பூச்சிகள்
⇒   2.பச்சைப்பயிறு

>  பயிர் மேலாண்மை நிலம் தயாரித்தல்


  • வயலை நன்கு உழுதபின் பாத்திகள் அமைக்கவும். மண்ணின் கடினத்தன்மையை நீக்க எக்டருக்கு சுண்ணாம்புக்கல் 2 டன் மற்றும் தொழுஉரம் 12.5 டன் அல்லது மக்கிய தென்னை நார் கழிவு 12.5 டன் இடுவதன்மூலம் மண்வளத்தை பாதுகாத்து கூடுதல் மகசூல் பெறலாம்

>  விதை நேர்த்தி


  • ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்டிபன்டாசிம் அல்லது திரம் அல்லது 4 கிராம் ட்ரைக்கோடெர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் கொண்டு விதை நேர்த்தி செய்யவேண்டும். விதைப்பு நஞ்சையில் விதைகளை 30 × 10 செ.மீ. இடைவெளியில் ஊன்ற வேண்டும். நெல் தரிசில் பயிரிடுவதாக இருந்தால் விதைகளை நெல் அறுவடைக்கு 5 முதல் 10 நாட்கள் இருக்கும்போது சீராக நிலத்தில் தெளிக்க வேண்டும். அப்போது வயலில் தகுந்த ஈரம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

>  பாக்டீரியா ராசியுடன் விதை நேர்த்தி


  • விதை நேர்த்தி செய்ய ஒரு பாக்கெட் (200கி/எக்டர்) ரைசேரபியல் கல்சர் சி.ஆர்.எம் 6 மற்றும் ஒரு பாக்கெட் (200கி/எக்டர்) பாஸ்போ பாக்டீரியா, ஒரு பாக்கெட் (200கி/எக்டர்) தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தயாரித்த பி.ஜி.பி.ஆர் -ஐ அரிசிக் கஞ்சியுடன் கலந்து உபயோகிக்கவும். விதை நேர்த்தி செய்யவில்லையென்றால் பாஸ்போ பாக்டீரியா 10 பாக்கெட் (2 கிலோ) மற்றும் 10 பாக்கெட் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தயாரித்த பி.ஜி.பி.ஆர் – ஐ 25 கிலோ தொழுவுரம் மற்றும் 25 கிலோ மண் கலந்து விதைக்கவும்.

>  ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை


  • மானாவாரிப்பயிர் 12.5 கிலோ தழைச்சத்து 25 கிலோ மணிச்சத்து மற்றும் 12.5 கிலோ சாம்பல் சத்து மற்றும் 10 கிலோ கந்தகச் சத்து இடவேண்டும். இறவைப்பயிர் 25 கிலோ தழைச்சத்து, 50 கிலோ மணிச்சத்து 25 கிலோ சாம்பல் சத்து மற்றும் 20 கிலோ கந்தகச்சத்து தரக்கூடிய உரங்களை இட வேண்டும். அடியுரமாக 25 கிலோ ஜிங்க் சல்பேட் இட வேண்டும்.

>  குறிப்பு:


  • மணிச்சத்தை சூப்பர் பாஸ்பேட் உரம் மூலம் இடவில்லை எனில் ஜிப்சம் மூலமாக கந்தகத்தை இடவும்.
  • பாசன நிலையில் மண்ணில் 25 கிலோ துத்தநாக சல்பேட்/எக்டர் அளிக்கவும்.
  • தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் நுன்உரக் கலவையை எக்டருக்கு 5 கிலோ ஊட்டமேற்றிய தொழுவுரமாக அளிக்கவும். (ஊட்டமேற்றிய தொழுவுரம் தயாரிக்க 1:10 என்ற விகிதத்தில் நுன்உரக் கலவை மற்றும் தொழுவுரத்தை சேர்த்து தகுந்த ஈரப்பதத்தில் ஒரு மாதம் நிழலில் உலர்த்தவும்)
  • புதிய டெல்டா பகுதி, தஞ்சாவூரில் பாசன பச்சைப்பயிரில் பன்முக பூக்கும் தொழில்நுட்பம்
  • அதிக மகசூல் மற்றும் வருமானம் பெற எக்டருக்கு 25:50:25:20 கிலோ NPKS + எக்டருக்கு 25 கிலோ தழைச்சத்தை 3 சம பாகங்களாக பிரித்து விதைத்த 30,45 மற்றும் 60ம் நாளில் அளிக்கவும் + 2% டி.ஏ.பி விதைத்த 45 மற்றும் 60ம் நாளில் தெளிக்க வேண்டும்.
  • பச்சை பயிரில் மகசூலை அதிகரிக்க 1% யூரியாவை இலைவழியாக தெளித்தல்
  • மகசூலை அதிகரிக்க வினையியல், உயிர் இயைபு வழி பண்புகள், இலைத் தெளிப்பாக யூரியா 1% விதைத்த 30 மற்றும் 45ம் நாளில் தெளிக்க பரிந்துரைக்கப்படுகிறது. டெல்டா பகுதிகளில் நெல் தரிசு பயறுகளுக்கு தற்போது பரிந்துரைக்கப்பட்ட 2% டி.ஏ.பி கரைசலை இலைவழித் தெளிக்கும் முறையைப் பயன்படுத்தலாம்.
  • பச்சைப் பயறு நுண்ணூட்டப் பொருள் கொண்டு சிக்கனமாக விதைநேர்த்தி செய்தல்
  • உயிர் உரங்கள், துத்தநாகம், மாலிப்டினம் மற்றும் கோபால்ட் போன்ற நுண்ணூட்டச்சத்துகள் முறையே ஒரு கிலோ விதைக்கு 4, 1, 0.5 கிராம் கொண்டு விதை நேர்த்தி செய்யலாம்.

>  நீர் நிர்வாகம்:


  • விதைத்தவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். விதைத்த மூன்று நாட்கள் கழித்து உயிர்த் தண்ணீர் கட்ட வேண்டும். 10-15 நாட்களுக்கு ஒருமுறை மண் மற்றும் கால நிலைகளுக்கு ஏற்றவாறு தண்ணீர் பாய்ச்சுதல் வேண்டும். நன்செய் வரப்புகளுக்கு விதைத்த ஒரு வாரம் கழித்து பானை மூலம் பாசனம் செய்ய வேண்டும். பூக்கும் மற்றும் காய் பிடிக்கும் தருணத்தில் நீர் பாசனம் மிக முக்கியமானதாகும். எல்லா பருவங்களிலும் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

>  இலைவழி நுண்ணூட்டம்


  • டிஏபி அல்லது யூரியா, என்ஏஏ மற்றும் சாலிசிலிக் அமிலக் கரைசல் தெளித்தல்
  • இலை வழி நுண்ணூட்டமாக ஒரு லிட்டர் தண்ணீர்ல் என்ஏஏ 40 மில்லி கிராம் மற்றும் சாலிசிலிக் அமிலம் 100 மில்லி கிராம் கலந்து பூக்கும் தருணத்திலும் மற்றும் 15 நாட்கள் கழித்தும் தெளிக்கவேண்டும். நெல் தரிசு பயறு வகைப்பயிர்களுக்கு ஒரு லிட்டர் தண்ணீரில் டிஏபி 20 கிராம் அல்லது யூரியா 20 கிராம் கலந்து பூக்கும் தருணத்திலும் மற்றும் 15 நாட்கள் கழித்தும் தெளிக்கவேண்டும்

>  களை கட்டுப்பாடு மற்றும் பின்செய் நேர்த்தி


  • களை முளைப்பதற்கு முன் களைக்கொல்லியான பென்டிமெத்தலின் பாசன நிலையில் ஏக்கருக்கு 3.3 லிட்டர், மழை நேரமாக இருந்தால் @ 2.5 லிட்டரை விதைத்த மூன்றாம் நாளில் தட்டை விசிறி நுன்குழல் கொண்ட பேக்பேக் அல்லது நேப்சாக் அல்லது ராக்கர் தெளிப்பானில் ஒரு எக்டருக்கு 500 லி 20ம் நாளில் ஒரு முறை கைக்களை எடுக்க வேண்டும் அல்லது களை முளைத்த பின் தெளிக்கும் களைக் கொல்லியான குயிசல்பாப் இதைல் எக்டருக்கு 50 கிராம் ai மற்றும் aiயை விதைத்த 15-20 நாளில் தெளிக்க வேண்டும்.
  • களைக்கொல்லி தெளிக்கவில்லை என்றால், விதைத்த 15வது நாளிலும் மற்றும் 30வத நாளிலும் கைக்களை எடுக்க வேண்டும்.

>  பன்முக பூக்கும் தொழில்நுட்பம்


  • பட்டுக்கோட்டை வட்டம், தஞ்சாவூர் மாவட்டத்தில் உளுந்து மற்றும் பச்சைப் பயிரின் சிறப்பு தொழில்நுட்பம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. வண்டல் மண், கரிம பொருள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. முன் கோடையில் பயிரிட்டால் மற்ற பயிர்களைப் போன்று உரங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. அதனுடன் கூடுதலாக நைட்ரஜன் 25 முதல் 30 கிலோ யூரியாவுடன் சேர்த்து கொடுக்கப்படுகிறது. பயறு வகை பயிர்கள் உறுதியற்ற வளர்ச்சி பண்புகளைக் கொண்டவை. விதைத்த 40-45ம் நாள் மேலுரமிடல் வேண்டும். பயிரின் 60-65ம் நாள் முதிர்ந்த காய்களுடன் காணப்படும். அடுத்த 20-25ம் நாள் இரண்டாம் முறை முதிர்ந்த காய்கள் காணப்படும். எனவே 100 நாட்களில் இரண்டு முறை அறுவடை செய்ய முடியும்.
  • விதைக்கும் காலம் <=> ஜனவரி மூன்றாம் வாரம் முதல் பிப்ரவரி இரண்டாம் வாரம் வரை

>  விதைத்தல்


  • தொடர் பயிரிடும் முறையில், உகந்த மண் ஈரப்பதத்தில் நெற்பயிரின் அறுவடைக்கு 5-10 நாட்கள் முன்னரே விதைகளை விதைக்க வேண்டும்.
  • கூட்டு அறுவடை இயந்திரம் மூலம் அறுவடை செய்யும் பகுதிகளில் நெற்பயிரை இயந்திரம் மூலம் அறுவடை செய்யும் முன்னரே விதைகளை விதைக்க வேண்டும்.

>  டைஅமோனியம் பாஸ்பேட், என்.ஏ.ஏ மற்றும் சாலிசிலிக் அமிலம் தெளித்தல்


  • என்.ஏ.ஏ 40 மிகி/லி மற்றும் சாலிசிலிக் அமிலம் 100 மிகி/லி பூக்கும் முன் இலைத் தெளிப்பாக அளிக்க வேண்டும் மற்றும் 15 நாட்கள் கழித்து மீண்டும் ஒரு முறை அளிக்க வேண்டும்.
  • டி.ஏ.பி 20 கி/லி பூக்கும் தருணத்தில் இலைத் தெளிப்பாக அளிக்க வேண்டும் மற்றும் 15 நாட்கள் கழித்து மீண்டும் ஒரு முறை அளிக்க வேண்டும்.

>  அறுவடை


  • காய்கள் 80 சதம் முதிர்ச்சி அடைந்தவுடன் செடிகளை அறுத்து கட்டி வைத்து பின்பு வெயிலில் காய வைத்து, கையினாலோ அல்லது இயந்திரங்களை வைத்து மணிகளைப் பிரித்து எடுக்க வேண்டும்.

>  பயிர் பாதுகாப்பு


  • பாசிப்பயிர் பயிரைத் தாக்கும் பூச்சிகள்
  • பாசிப்பயிறு பயிரைத் தாக்கும் நோய்கள்
⇒   3.தட்டைப்பயிறு

>  பயிர் மேலாண்மை நிலம் தயாரித்தல்


  • வயலை நன்கு உழுதபின் பாத்திகள் அமைக்கவும்.மண்ணின் கடினத்தன்மையை நீக்க எக்டருக்கு சுண்ணாம்புக்கல் 2 டன் மற்றும் தொழுஉரம் 12.5 டன் அல்லது மக்கிய தென்னை நார் கழிவு 12.5 டன் இடுவதன்மூலம் மண்வளத்தை பாதுகாத்து கூடுதல் மகசூல் பெறலாம்

>  விதைநேர்த்தி


  • ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் திரம் அல்லது கார்பென்டாசிம் அல்லது திரம் 4 கிராம் அல்லது டிரைகோடர்மா விரிடி 4 கிராம் அல்லது 1 கிராம் சூடோமோனஸ் உடன் விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு விதைநேர்த்தி செய்யவேண்டும். பூச்சிக்கொல்லியுடன் நேர்த்தி செய்யப்பட்ட விதைகள் மீண்டும் பாக்டீரியாவுடன் நேர்த்தி செய்யப்படுவதற்கு 24 மணி நேர இடைவேளை வேண்டும்.
  • COC 10 எனும் மேம்படுத்தப்பட்ட ரைசோபிய ராசி விளைச்சலை அதிகரிக்க உகந்ததாகும்
  • தமிழ் நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட, 3 பாக்கெட் (600 கிராம், எக்) ரைசோபியம் COC 10 மற்றும் 3 பாக்கெட் (600 கிராம், எக்) பாஸ்போபாக்டீரியாவை அரிசிக் கஞ்சியுடன் கலந்து விதை நேர்த்தி செய்யவேண்டும். விதை நேர்த்தி செய்யவில்லையென்றால், 10 பாக்கெட் ரைசோபியவுடன் 25 கி.கி. தொழு உரம் மற்றும் 25 கி.கி. மணலுடன் கலந்து விதைப்பதற்கு முன் விதை நேர்த்தி செய்யவேண்டும். அரிசிக் கஞ்சியானது ஒட்டும் திரவமாகப்பயன்படுகிறது. நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை 15 நிமிடங்கள் உலர்த்தி பிறகு விதைக்க வேண்டும்.
  • கடின விதை நேர்த்தி: தட்டைப்பயிர் விதைகளை மூன்றுக்கு ஒன்று என்ற அளவில் 100 பிபிஎம் (10 கிராம் / 100 லிட்டர் தண்ணீர்) நீர்த்த துத்தநாக சல்பேட் கரைசலில் நான்கு மணி நேரம் ஊறவைத்து பின் நிழலில் உலர்த்த வேண்டும்.

>  உரமிடுதல்


  • அடியுரமாக மானாவாரிப் பயிருக்கு எக்டருக்கு 12.5 கிலோ தழைச்சத்து, 25 கிலோ மணிச்சத்து 12.5 கிலோ சாம்பல் சத்து மற்றும் 10 கிலோ கந்தகச்சத்து கொடுக்கக்கூடிய உரங்களை அளிக்கவேண்டும். இறவைப் பயிராக இருந்தால் 25 கிலோ தழைச்சத்து 50 கிலோ மணிச்சத்து மற்றும் 25 கிலோ சாம்பல் சத்து அளிக்க வேண்டும்.அடியுரமாக 25 கிலோ ஜிங்க்சல்பேட் இட வேண்டும்.

>  குறிப்பு


  • மணிச்சத்தை சூப்பர் பாஸ்பேட் உரம் மூலம் இடவில்லை எனில் ஜிப்சம் மூலமாக கந்தகத்தை இடவும்

>  நீர் நிர்வாகம்


  • விதைத்தவுடன் ஒரு தண்ணீரும், பின் மூன்று நாட்கள் கழித்து உயிர்த் தண்ணீர் கட்ட வேண்டும். மண் மற்றும் பருவ நிலைகளைப் பொறுத்து 10 அல்லது 15 நாட்கள் இடைவெளியில் நீர் கட்ட வேண்டும். நன்செய் வரப்புகளுக்கு விதைத்த ஒரு வாரம் கழித்து தினமும் நீர் ஊற்ற வேண்டும். பூக்கும் மற்றும் காய்க்கும் பருவம் நீர்கட்ட வேண்டிய முக்கிய நிலைகளாகும்.

>  டை அமோனியம் பாஸ்பேட் (அ) யூரியா என்.ஏ.ஏ மற்றும் சாலிசிலிச் அமிலம் தெளித்தல்:


  • டி.ஏ.பி. 20 கிராம்/லிட்டர் (அ) யூரியா 20 கிராம்/லிட்டரை பூக்கும் பருவத்திலும் அதனை தொடர்ந்து 15 நாட்களுக்கு பிறகும் இருமுறை இலைவழித் தெளிக்க வேண்டும்.
  • என்.ஏ.ஏ.40 மி.கி/லிட்டரை பூக்கும் போதும் அதன்பிறகு 15 நாட்கள் கழித்தும் இலைவழித்தெளிக்க வேண்டும்.
  • 100 மி.கி/லிட்டர் சாலிசிலிக் அமிலத்தை பூக்கும் போதும் அதன் பிறகு 15 நாட்கள் கழித்தும் இலைவழித் தெளிக்க வேண்டும்.

>  களை மேலாண்மை


  • பென்டிமெத்தாலின் 2.5 லிட்டரை களை முளைக்கும் முன் களைக்கொல்லியாக விதைத் மூன்றாம் நாளில் தட்டை விசிறி நுனிக்குழாய் கொண்ட பேக்பாக்/நேப்சாக் /ராக்கர் தெளிப்பான் மூலம் எக்டருக்கு 500 லிட்டர் தண்ணீர் கொண்டு தெளிக்க வேண்டும். அதனை தொடர்ந்து விதைத்த 30வது நாளில் கைக்களை எடுக்க வேண்டும்.
  • களைக்கொல்லி தெளிக்கவில்லை என்றால், விதைத்த 15 வது நாளிலும் மற்றும் 30வது நாளிலும் இருமுறை கைக்களை எடுக்க வேண்டும்.

>  பயிர் பாதுகாப்பு


  • தட்டைப் பயிரைத் தாக்கும் பூச்சிகள்
  • தட்டைப்பயிறு பயிரைத் தாக்கும் நோய்கள்
⇒   4.அவரை

>  பருவம் <=> இரகங்கள் <=>மாவட்டம்/பருவம்


>  ஆடிப்பட்டம் (ஜூலை- ஆகஸ்ட்)


  • காஞ்சிபுரம், திருவள்ளூர், தர்மபுரி, கோயம்புத்தூர், மதுரை, திண்டுக்கல், தேனி, வேலூர், திருவண்ணாமலை, இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி , சேலம், நாமக்கல்,தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, ஈரோடு <=> கோ 13, கோ (Gb) 14 <=> கோ 12, கோ 13, கோ (Gb) 14

>  புரட்டாசிப்பட்டம் (செப்டம்பர்- நவம்பர்)


  • காஞ்சிபுரம், திருவள்ளூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கரூர், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம். தர்மபுரி, சேலம், நாமக்கல்,புதுக்கோட்டை, ஈரோடு, கோயம்புத்தூர், மதுரை, திண்டுக்கல், தேனி, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி , தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம். <=> கோ 13, கோ (Gb) 14 கோ 13, கோ (Gb) 14 <=> கோ 12, கோ 13, கோ (Gb) 14

>  கோடைக்காலம் (ஏப்ரல்)


  • காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம். <=> கோ 12, கோ 13, கோ (Gb) 14
  • தர்மபுரி, சேலம், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், <=> கோ 12, கோ 13, கோ (Gb) 14
  • நாகப்பட்டினம். கன்னியாகுமரி, புதுக்கோட்டை, ஈரோடு, கோயம்புத்தூர், மதுரை, திண்டுக்கல், தேனி, இராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, சிவகங்கை <=> கோ 12, கோ 13, கோ (Gb) 14

>  பயிர் மேலாண்மை


  • நிலம் தயாரித்தல்,நிலத்தை நன்றாக உழ வேண்டும் ,விதை நேர்த்தி.
  • விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு விதைகளை கார்பன்டாசிம் அல்லது திரம் 2 கிராம் / ஒரு கிலோ விதைக்கு என்ற அளவில் விதை நேர்த்தி செய்யவேண்டும்

>  பாக்டீரியா பயிர் வளர்ப்புடன் விதை நேர்த்தி


  • பூசணக் கொல்லியுடன் விதை நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை பாக்டீரியா பயிர் வளர்ப்புடன் விதை நேர்த்தி செய்ய வேண்டும். இரண்டு விதை நேர்த்திக்கும் இடையே குறைந்தட்சம் 24 மணி நேர இடைவெளி இருக்க வேண்டும். ஒரு எக்டருக்கு தேவையான விதைகளை விதை நேர்த்தி செய்ய மூன்று பாக்கெட் பாக்டீரியா பயிர் வளர்ப்பு போதுமானதாகும். இந்த பாக்டீரியா பயிர் வளர்ப்பினை அரிசி கஞ்சியுடன் சேர்த்து தயாரிக்க வேண்டும். நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை 15 நிமிடங்கள் நிழலில் உலர்த்த வேண்டும்.

>  களை நிர்வாகம்


  • விதைத்த மூன்றாவது நாளில் பென்டிமெத்தலின் களைக்கொல்லியினை எக்டருக்கு 2 லிட்டர் என்ற அளவில் 500 லிட்டர் தண்ணீருடன் கலந்து கைத் தெளிப்பான் கொண்டு தட்டை விசிறி வடிவ நாசிலை உபயோகித்து தெளிக்கவும். பின்பு விதைத்த 40 45 நாட்கள் கழித்து கைக்களை எடுக்கவும் இல்லையென்றால்
  • விதைத்த 25 நாட்களுக்குள் ஒரு களையும், பின்பு 45-வது நாளில் ஒரு களையும் எடுக்க வேண்டும்

>  நீர் நிர்வாகம்


  • விதைத்தவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். விதைத்த மூன்று நாட்கள் கழித்து உயிர்த் தண்ணீர் கட்ட வேண்டும். மண் மற்றும் பருவநிலையைப் பொறுத்து 7-10 நாட்களுக்கு ஒரு முறை நீர் கட்ட வேண்டும். பயிர் பூக்கும் தருணத்திலும் காய்க்கும் தருணத்திலும் நீர் கட்ட வேண்டியது மிக அவசியம். வளர்ச்சிப் பருவத்தில் தண்ணீர் தேங்காமல் இருப்பது அவசியம். பயிர் நிலத்தில் ஈரம் குறைவாக இருந்தால் 0.5 சதம் பொட்டாசியம் குளோரைடு கரைசலை இலைவழி உரமாக தெளிக்கவேண்டும்.

>  கவாத்து செய்யும் தொழில்நுட்பம் / கிளைகளை வெட்டுதல்


  • வரிசைக்கு வரிசை 10 அடியும் செடிக்கு செடி 4 அடி இடைவெளியும் இருக்க வேண்டும். குழிகளை தோண்டிய பிறகு ஒரு குழிக்கு 2-3 விதைகளை குழியின் மத்தியில் தூவ வேண்டும். பின் குழிக்கு ஒரு குச்சி கொண்டு முட்டுக் கொடுக்க வேண்டும். கொடி பந்தலை அடைந்த பின், முலையைக் கிள்ளி விட வேண்டும். ஒவ்வொரு கிளையையும் 3 அடி நீளத்துக்கு விட்டு கவாத்து செய்ய வேண்டும். பூக்கும் காலம் தொடர்ந்த பின், கிளைகளின் நுனியினை மூன்று கணுக்களை விட்டு கவாத்து செய்ய வேண்டும். பயிரின் இனப்பெருக்க பருவம் முழுவதும் இதனை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.

>  அறுவடை


  • நன்கு முற்றிய காய்ந்த காய்களை பறித்து தானியமாக பயன்படுத்தலாம். பச்சை காய்களை பறித்து காய்கறியாக பயன்படுத்தலாம்.

>  பயிர் பாதுகாப்பு


  • அவரை பயிரைத் தாக்கும் பூச்சிகள்
⇒   5.மொச்சை

>  பருவம் மற்றும் இரகங்கள்


  • மாவட்டம்/பருவம் <=>நீலகிரி தவிர அனைத்து மாவட்டங்களும் (வருடம் முழுவதும்)
  • இரகங்கள்<=> கோ 2

>  பயிர் மேலாண்மை


  • நிலம் தயாரித்தல் ,நிலத்தை நன்றாக உழ வேண்டும்
  • பூசணக் கொல்லியுடன் விதை நேர்த்தி
  • விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு விதைகளை கார்பன்டாசிம் அல்லது திரம் 2 கிராம் / கிலோ விதைக்கு என்ற அளவில் விதை நேர்த்தி செய்யவேண்டும்
  • பாக்டீரியா பயிர் வளர்ப்புடன் விதை நேர்த்தி
  • பூசணக் கொல்லியுடன் விதை நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை பாக்டீரியா பயிர் வளர்ப்புடன் விதை நேர்த்தி செய்ய வேண்டும். இரண்டு விதை நேர்த்திக்கும் இடையே குறைந்தட்சம் 24 மணி நேர இடைவெளி இருக்க வேண்டும். ஒரு எக்டருக்கு தேவையான விதைகளை விதை நேர்த்தி செய்ய மூன்று பாக்கெட் பாக்டீரியா பயிர் வளர்ப்பு போதுமானதாகும். இந்த பாக்டீரியா பயிர் வளர்ப்பினை அரிசி கஞ்சியுடன் சேர்த்து தயாரிக்க வேண்டும். நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை 15 நிமிடங்கள் நிழலில் உலர்த்த வேண்டும்.

>  உரமிடுதல்


  • உரங்களை விதைப்பிற்கு முன் அடியுரமாக இட வேண்டும்.
  • மானாவாரி : 12.5 கிலோ தழைச்சத்து + 25 கிலோ மணிச்சத்து + 12.5 கிலோ சாம்பல்சத்து +10 கிலோ கந்தகச்சத்து*/எக்டர்
  • இறவை : 25 கிலோ தழைச்சத்து + 50 கிலோ மணிச்சத்து + 25 கிலோ சாம்பல்சத்து + 20 கிலோ கந்தகச்சத்து*/எக்டர்
  • குறிப்பு : மணிச்சத்தை சூப்பர் பாஸ்பேட் உரம் மூலம் இடவில்லை எனில் ஜிப்சம் மூலமாக கந்தக சத்தை இடவும்.
  • அடியுரமாக இறவைப் பயிருக்கு எக்டருக்கு 25 கிலோ ஜிங் சல்பேட் இடவும்

>  களை நிர்வாகம்


  • விதைத்த மூன்றாவது நாளில் பென்டிமெத்தலின் களைக்கொல்லியினை எக்டருக்கு 2 லிட்டர் என்ற அளவில் 500 லிட்டர் தண்ணீருடன் கலந்து கைத் தெளிப்பான் கொண்டு தட்டை விசிறி வடிவ நாசிலை உபயோகித்து தெளிக்கவும். பின்பு விதைத்த 40 - 45 நாட்கள் கழித்து கைக்களை எடுக்கவும் இல்லையென்றால் விதைத்த 25 நாட்களுக்குள் ஒரு களையும், பின்பு 45-வது நாளில் ஒரு களையும் எடுக்க வேண்டும்

>  நீர் நிர்வாகம்


  • விதைத்தவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். விதைத்த மூன்று நாட்கள் கழித்து உயிர்த் தண்ணீர் கட்ட வேண்டும். மண் மற்றும் பருவநிலையைப் பொறுத்து 7-10 நாட்களுக்கு ஒரு முறை நீர் கட்ட வேண்டும். பயிர் பூக்கும் தருணத்திலும் காய்க்கும் தருணத்திலும் நீர் கட்ட வேண்டியது மிக அவசியம். வளர்ச்சிப் பருவத்தில் தண்ணீர் தேங்காமல் இருப்பது அவசியம். பயிர் நிலத்தில் ஈரம் குறைவாக இருந்தால் 0.5 சதம் பொட்டாசியம் குளோரைடு கரைசலை இலைவழி உரமாக தெளிக்கவேண்டும்.

>  அறுவடை


  • நன்கு முற்றிய காய்ந்த காய்களை பறித்து தானியமாக பயன்படுத்தலாம். பச்சை காய்களை பறித்து காய்கறியாக பயன்படுத்தலாம்.
⇒   6.கொண்டைக்கடலை

>  பருவம் மற்றும் இரகங்கள்


  • மாவட்டம் / பருவம்<=>வேலூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கரூர், தர்மபுரி, புதுக்கோட்டை, ஈரோடு, கோயமுத்தூர், மதுரை, திண்டுக்கல்,தேனி, விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி<=>நவம்பர் (குளிர்காலம்) மானாவாரி
  • இரகங்கள்<=> கோ 3, கோ 4
⇒   பயிர் மேலாண்மை

>  விதை அளவு (எக்டருக்கு)


  • கோ 3 : 90 கிலோ / எக்டர்
  • கோ 4 : 75 கிலோ / எக்டர்

>  நிலம் தயாரித்தல்


  • முன்சேய் நேர்த்தி நிலத்தை 3-4 முறை புழுதிபட நன்கு உழ வேண்டும்

>  விதை நேர்த்தி


  • விதைகளிலிருந்து பரவும் நோய்களான வேர் அழுகல் நோய், வாடல் நோய் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன் ஒரு கிலோ விதையுடன் கார்பெண்டாசிம் 2 கிராம் அல்லது திரம் 4 கிராம் அல்லது 4 கிராம் ட்ரைகோடர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனஸ் புளுரோசன்ஸ் கலந்து 24 மணி நேரம் கழித்து விதையுடன் 3 பொட்டலாம் ரைசோபியம் நுண்ணுயிர் கலக்க வேண்டும். விதைப்பு விதைகளை ஒரு சதவீத பொட்டாசியம் டைஙைட்ரஜன் பாஸ்பேட் கரைசலில் 4 மணி நேரம் ஊறவைத்து நிழலில் உலர்த்தி பின் விதைக்க வேண்டும்

>  நுண்ணுயிர் கலத்தல்


  • விதைகளை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயாரிக்கப்பட்ட ரைசோபியல் பயிர் வளர்ப்பு ஒரு பாக்கெட் (200 கிராம்/எக்டர்) அல்லது பாஸ்போ பாக்டீரியாவை (200 கிராம்/எக்டர்) கொண்டு அரிசி கஞ்சியுடன் சேர்த்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். விதை நேர்த்தி செய்யவில்லை என்றால், 10 பாக்கெட் ரைசோபியம் (2 கிலோ / எக்டர்) மற்றும் 10 கிலோ பாஸ்போ பாக்டீரியாவை (2 கிலோ / எக்டர்) 25 கிலோ தொழுவுரம் மற்றும் 25 கிலோ மண்ணுடன் கலந்து விதைப்பிற்குமுன் வயலில் இட வேண்டும்.
  • ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து இடவேண்டும்
  • உரஅளவு அடியுரமாக ஒரு எக்டருக்கு மானாவாரிப் பயிராக இருந்தால் 12.5 கிலோ தழைச்சத்து, 25 கிலோ மணிச்சத்து, மற்றும் 12.5 கிலோ சாம்பல் சத்து, இறவைப்பயிராக இருந்தால் 25 கிலோ தழைச்சத்து, 50 கிலோ மணிச்சத்து மற்றும் 25 கிலோ சாம்பல் சத்து தரக்கூடிய இரசாயன உரங்களை இடவேண்டும்.

>  களை கட்டுப்பாடு மற்றும் பின்செய் நேர்த்தி:


  • களை முளைப்பதற்கு முன் களைக்கொல்லியான பென்டிமெத்தலின் @ 2.5 லிட்டரை விதைத்த மூன்றாம் நாளில் தட்டை விசிறி நுன்குழல் கொண்ட பேக்பேக் அல்லது நேப்சாக் அல்லது ராக்கர் தெளிப்பானில் ஒரு எக்டருக்கு 500 லிட்டர் தண்ணீர் கொண்டு தெளிக்க வேண்டும். இதனை தொடர்ந்து விதைத்த 25-30ம் நாளில் ஒரு முறை கைக்களை எடுக்க வேண்டும்.
  • களைக்கொல்லி தெளிக்கவில்லை என்றால், விதைத்த 15வது நாளிலும் மற்றும் 30வத நாளிலும் கைக்களை எடுக்க வேண்டும்.

>  அறுவடை


  • காய்கள் முற்றிய பின் அறுவடை செய்யவும் காய்களை உடைத்து விதைகளை மட்டும் பிரித்தெடுக்கவும்

>  பயிர் பாதுகாப்பு


  • கொண்ட கடலை பயிரைத் தாக்கும் பூச்சிகள்
  • கொண்டக்கடலை பயிரைத் தாக்கும் நோய்கள்
⇒   7.கொள்ளு

>  பருவம் மற்றும் இரகங்கள்


>  மாவட்டம் / பருவம் <=> இரகங்கள்


  • நவம்பர் (குளிர்காலம்) (மானாவாரி) <=> நீலகிரி மற்றும் கன்னியாகுமரி தவிர மற்ற மாவட்டங்கள் <=> கோ 1, பையூர் 1,பையூர் 2

>  பயிர் மேலாண்மை


  • நிலம் தயாரித்தல் : நிலத்தை புழுதிபட நன்கு உழ வேண்டும்
  • விதையும் விதைப்பும் : விதை அளவு எக்டருக்கு தனிப்பபயிராக பயிரிட 20 கிலோ தேவைப்படும்
  • விதைநேர்த்தி : ஒரு கிலோ விதைக்கு இரண்டு கிராம் கார்டிபண்டாசிம் அல்லது நான்கு கிராம் திரம் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்
  • உயிர் உரத்துடன் விதை நேர்த்தி
  • விதைகளை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயாரிக்கப்பட்ட ரைசோபியல் பயிர் வளர்ப்பு ஒரு பாக்கெட் (200 கிராம்/எக்டர்) அல்லது பாஸ்போ பாக்டீரியாவை (200 கிராம்/எக்டர்) கொண்டு அரிசி கஞ்சியுடன் சேர்த்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். விதை நேர்த்தி செய்யவில்லை என்றால், 10 பாக்கெட் ரைசோபியம் மற்றும் 10 கிலோ பாஸ்போ பாக்டீரியாவை 25 கிலோ தொழுவுரம் மற்றும் 25 கிலோ மண்ணுடன் கலந்து விதைப்பிற்குமுன் வயலில் இட வேண்டும்.
  • விதைப்பு: கை விதைப்பு மூலம் முழுவதும் சீராகத் தூவ வேண்டும்

>  உரமிடுதல்


  • விதைப்பதற்கு முன் அடியுரமாக எக்டருக்கு 12.5 மக்கிய குப்பை உரம் அல்லது தொழு உரம் இடவும். இவை தவிர தழைச் சத்து எக்டருக்கு 12.5 கிலோ மற்றும் மணிச்சத்து 25 கிலோ மற்றும் 12.5 கிலோ சாம்பல் சத்து கொடுக்கக் கூடிய இரசாயன உரங்களை இட வேண்டும்.

>  களை கட்டுப்பாடு மற்றும் பின்செய் நேர்த்தி


  • 20 முதல் 25 நாட்களுக்குள் களைகொத்து மூலம் ஒரு முறை களை எடுக்க வேண்டும்

>  அறுவடை :


  • அனைத்து காய்களும் முதிர்ச்சி அடைந்தவுடன் அறுவடை செய்தல் வேண்டும். காய்களை கதிரடித்து பருப்புகளை பிரிக்க வேண்டும்.
⇒   8.துவரை

>  பயிர் மேலாண்மை நிலம் தயார் செய்தல்


  • நிலத்தை நன்கு ஆழமாக உழுது ஏக்டருக்கு 12.5 டன் தொழுவுரம் அளிக்கவும் அல்லது கடைசி உழவிற்குப் பின் மட்கிய தேங்காய்நார்க் கழிவை அளிக்கவும் வரப்பு மற்றும் பள்ளம் அமைக்கவும்.

>  விதை நேர்த்தி:


  • விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன் ஒருகிலோ விதைக்கு கார்பென்டாசிம் திரம் 2 கிராம் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். அல்லது ஒரு கிலோ விதைக்கு ட்ரைக்கோ டெர்மா விரிடி 4 கிராம் அல்லது சூடோமோனஸ் புளுரசன்ஸ் 10 கிராம் கொண்டு விதை நேர்த்தி செய்யவும்.

>  உயிர் உரங்களைக் கொண்டு விதை நேர்த்தி செய்தல்


  • பூஞ்சைக் கொல்லி (அல்லது) உயிர்க் கட்டுப்பாட்டுக்காரணி கொண்டு விதை நேர்த்தி செய்தபின் 24 மணிநேரம் கழித்து மீண்டும் பாக்டீரியா பயிர் வளர்ப்பு கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். ஒரு எக்டருக்கு தேவையான விதையை விதை நேர்த்தி செய்ய ரைசோபியல் கல்சர் சி.ஆர்.ஆர் / சி.பி.ஆர், பாஸ்போ பாக்டீரியா (பேசில்லஸ் மெகாடீரியம்) மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தயாரித்த பி.ஜி.பி.ஆர் (சூடோமோனஸ் எஸ.பி) ஒரு பாக்கெட் (200கி) அளிக்கவும். செம்மண்ணாக இருந்தால் வி.பி.ஆர் 1 ஆற்றல் வாய்ந்ததாக இருக்கும்.
  • விதை நேர்த்தி செய்வதற்கு மட்டும் ரைசோபியம் உடன் சேர்ப்பானாக அரிசி கஞ்சி சேர்க்க வேண்டும். பி.எஸ்.பி மற்றும் பி.ஜி.பி.ஆர். கொண்டு விதை நேர்த்தி செய்யாவிட்டால் பாஸ்போ பாக்டீரியா 10 பாக்கெட் (2 கிகி) (பேசில்லஸ் மெகாடீரியம்) மற்றும் (2கிகி) பி.ஜி.பி.ஆர் (சூடோமோனஸ் எஸ.பி) உடன் 25கிகி தொழுவுரம் மற்றும் 25 கிகி மண் கலந்து விதைப்பதற்கு முன் அளிக்கவும்.

>  பயறு வகை பயிர்களின் உயிர்ம ஆதரங்கள் கொண்டு நைட்ரஜன் சமன் செய்தல்


  • 50 சதவிகித நைட்ரஜனை உயிர்ம ஆதாரங்கள் கொண்டு சமன் செய்யலாம். (எக்டருக்கு 850 கிகி மண்புழு உரம்) மண்ணில் கார அமில தன்மை 6 க்கும் குறைவாக இருக்கும் போது, பயறுவகை பயிர்களுக்கு சுண்ணாம்பு அளிக்க வேண்டும்.

>  நீர் நிர்வாகம்:


  • விதைத்தவுடன் ஒரு தண்ணீரும், பிறகு உயிர்த்தண்ணீர் மூன்றாவது நாளிலும், பூ பிடிக்கும் பருவத்திலும் 50 சதவிகித பூ பூக்கும் பருவத்திலும் காய் வளர்ச்சிப் பருவத்திலும் நீர் பாய்ச்ச வேண்டும். நீர் தேங்கி நிற்பதை தவிர்த்திட வேண்டும்.

>  களை கட்டுப்பாடு


  • களை முளைப்பதற்கு முன் களைக்கொல்லியான பென்டிமெத்தலின் ஏக்கருக்கு 0.75 கிலோ (2.5 லிட்டர்/எக்டர்) விதைத்த மூன்றாம் நாளில் தட்டை விசிறி நுன்குழல் கொண்ட பேக்பேக் அல்லது நேப்சாக் அல்லது ராக்கர் தெளிப்பானில் ஒரு எக்டருக்கு 500 லி தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும். பிறகு பாசனம் செய்ய வேண்டும். இதனைத் தொடர்ந்து விதைத்த 30-35ம் நாள் கைக்களை எடுக்க வேண்டும்.
  • களைக்கொல்லி தெளிக்கவில்லை என்றால், விதைத்த 20வது நாளிலும் மற்றும் 35வத நாளிலும் கைக்களை எடுக்க வேண்டும்.
  • ஆட்கள் பற்றாக்குறை இருந்தால், விதைத்த 3ம் நாளில் பென்டிமெத்தலின் 0.75 கிலோ (2.5லி/எக்டர்) அளிக்கவும். தொடர்ந்து களை முளைத்த பிறகு இமாசிதிபர் @ 60 கி ai/எக்டரை 15 நாளிலும் (களை 2-3 இலை பருவத்தில்) மற்றும் குயிசலோபாப் இதைல் @ 50 கி ai/எக்டரை 20ம் நாளிலும் களை முளைத்த பின் (களைகளில் 2-3 இலைகள் இருக்கும்பொழுது) பரந்த இலை மற்றும் புல்தரை களைகளை கட்டுப்படுத்துவதற்கு பரிந்துரைக்கப்படுகிறது. இரண்டும் இருந்தால், டேங்கில் இமாசிதிபர் @ 60 கி ai/எக்டர் மற்றும் குயிசலோபாப் இதைல் @ 50 கி ai/எக்டர் களை முளைத்த 15-20ம் நாள் (களை 2-3 இலை பருவத்தில்) தெளிக்க பரிந்துரைக்கப்படுகிறது.
  • விதைத்த 3ம் நாள் களை முளைப்பதற்கு முன் மெட்டலாகுளோர் எக்டருக்கு 1.0 கிகி தெளிக்க வேண்டும். தொடர்ந்து விதைத்த 40ம் நாள் கைக்களை எடுக்க வேண்டும்.

>  டைஅமோனியம் பாஸ்பேட் அல்லது யூரியா, என்.ஏ.ஏ மற்றும் சாலிசிலிக் அமிலம் தெளித்தல்


  • பூக்கும் முன் இலைத் தெளிப்பாக என்.ஏ.ஏ 40 மிகி/லி ஒரு முறை மற்றும் 15 நாட்கள் கழித்து மீண்டும் ஒரு முறை தெளிக்க வேண்டும்.
  • டி.ஏ.பி 20 கி/லி அல்லது யூரியா 20 கி/லி பூக்கும் தருணத்தில் இலைத் தெளிப்பாக அளிக்க வேண்டும் மற்றும் 15 நாட்கள் கழித்து மீண்டும் ஒரு முறை அளிக்க வேண்டும்.
  • சாலிசிலக் அமிலம் 100 மிகி/லி பூக்கும் முன் இலைத் தெளிப்பாக அளிக்க வேண்டும் மற்றும் 15 நாட்கள் கழித்து மீண்டும் ஒரு முறை அளிக்க வேண்டும்.

>  அறுவடை செய்தல்


  • காய் 80% முதிர்ந்தவுடன் முழு பயிரையும் அறுவடை செய்ய வேண்டும்.
  • 2 – 3 நாட்களுக்கு குவியலாக வைக்க வேண்டும்.
  • உலர்த்த வேண்டும்.

>  துவரையை நடவு செய்தல்


  • நீ்ண்டகால துவரை வகைகளை மட்டும் தேர்வு செய்யவும்.
  • மானாவாரியாக அல்லது பாசன நிலையில் ஆகஸ்ட் மாதத்திற்குள் நடவு செய்யவும்.
  • 6X4 அங்குல அளவு மற்றும் 200 மைக்ரான் தடிமன் கொண்ட பாலித்தீன் பையை தேர்வு செய்யவும்.
  • பாலித்தீன் பையில் நிலத்தின் மண் : மணல் : தொழுவுரம் அகியவற்றை 1:1:1 என்ற அளவில் நிரப்பி நீர் தேங்குவதை தடுக்க 3-4 துளைகள் இட வேண்டும்.
  • விதையை 0.2 % கால்சியம் குளோரைடில் ஒரு மணி நேரம் ஊற வைத்து பின்னர் விதையை கடினமாக்க 7 மணி நேரம் நிழலில் உலர்த்த வேண்டும்.
  • கடினமான விதைகளை 4கி /கிலோ மற்றும் 100 கிராம் ரைசோபியம் மற்றும் 100 கிராம் பாஸ்போ பாக்டீரியம் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். விதைகளை @2/ பாலித்தீன் பையில் 1 செ.மீ ஆழத்தில் விதைக்க வேண்டும்.
  • விதைகளை பாலித்தீன் பைகளில் நடவிற்கு 30-45 நாட்கள் முன்பாகவே விதைக்க வேண்டும்.
  • நடவிற்கு முன் நன்கு ஆழமாக உழு வேண்டும். தொடாந்து 2-3 முட்கலப்பை கொண்டு உழ வேண்டும்.
  • இறவை பயிரில் நீண்ட கால இரகங்களுக்கு தனிப் பயிராக இருந்தால் 15 சதுர செ.மீட்டரில் 5’ X 3’ அளவில் குழி தோண்ட வேண்டும் மற்றும் ஊடுபயிராக இருந்தால் 6’ x 3’ அளவில் தோண்ட வேண்டும். மானாவாரியாக இருந்தால் 5’x3’ அளவிற்கு தோண்ட வேண்டும். குறுகிய கால இரகங்களுக்கு 15 சதுர செ.மீட்டரில் 3’ x 2’ அளவில் குழி தோண்ட வேண்டும்.
  • நீர் தேங்கிய பகுதிகளில், குழி தோண்டுவதற்கு முன்னர் வாய்க்கால் அமைக்க வேண்டும்.
  • நடவு செய்த 20-30ம் நாளில் கனிம உரங்கள் @ 25:50:25கி தழைச் சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து யூரியா, டி.ஏ.பி மற்றும் பொட்டசியம் ஆகியவற்றை நாற்றுகளை சுற்றி இட வேண்டும்.
  • அடிப்படையாக துத்தநாக சல்பேட் எக்டருக்கு 25 கிகி என்ற அளவில் தொழுவுரம் அல்லது மணலுடன் கலந்து அளிக்கவும்.
  • நடவு செய்த 20 – 30 நாள் முனைய வளர்ச்சியை தடுக்க தாவரங்களை நுனியில் கிள்ளி விட வேண்டும். (மேல் 5 செ.மீ அகற்றுதல்)
  • பூ உதிர்வதைத் தடுக்க 0.5மிலி/ லி ப்ளேனோபிக்ஸ் தெளிக்கவும்.

>  ஊட்டச்சத்து குறைபாடுகள்


  • இரும்பு : இலைகளில் பச்சையத்தின் அளவு குறைகிறது – நைட்ரஜன் அல்லது மற்ற கூறுகள் பற்றாக்குறையால் இலை வெளிறி காணப்படும்.

>  பயிர் வினையியல்


  • பூ பூக்கத் தொடங்கும் பருவத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயறு வகை வொண்டரை ஏக்கருக்கு 2 கிகி இலைத் தெளிப்பாக அளிப்பதன் மூலம் பூ உதிர்தல் குறைகிறது. அதிக மகசூல் கிடைக்கிறது மற்றும் வறட்சியை தாங்கி வளருகிறது.
⇒   9.சோயா மொச்சை

>  பருவம் மற்றும் <=>இரகங்கள்


  • ஆடிப்பட்டம் (ஜீன்-ஜீலை) புரட்டாசிப்பட்டம்(செப்டம்பர்-அக்டோபர்) மாசிப்பட்டம் (பிப்ரவரி-மார்ச்) <=> கோ 1 (இறவை), கோ 2,கோ (சோயா) 3
  • நெல் தரிசு <=> கோ 1, கோ2

>  வயது:


  • சோயா மொச்சை 90 நாட்களில் வளர்ந்து பயனளிக்கக்கூடியது, 40 நாட்களில் 50 சதம் பூக்கும் திறன் கொண்டது. நெல்லில் தரிசாக பயிரிட கோ 1, கோ ஏடிடி1 ஏற்றது.

>  பயிர் மேலாண்மை நிலம் தயாரித்தல்


  • முன்செய் நேர்த்தி நிலத்தை நன்கு உழுதபின், பாத்தியாகவும், வாய்க்காலாகவும் பிரிக்கவும்.

>  விதை அளவு


  • கோ 1 , கோ(சோயா) 3 - 80 கிலோ/எக்டர், மிதமான பயிர் எண்ணிக்கை - 6,66,000/ எக்டர்
  • கோ 2 - (மானாவாரி) தனிப்பயிர் 60-70 கிலோ/ எக்டர், ஊடுபயிர் 25 கிலோ/ எக்டர்

>  விதைநேர்த்தி:


  • விதையிலிருந்து பரவும் நோய்களான வேர் அழுகல் நோய், வாடல் நோய், இலைப்புள்ளி நோய், நுனிக்கருகல் நோய் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன் ஒரு கிலோ விதைக்கு கார்பென்டாசிம் 2 கிராம் கலந்து விதை நேர்த்தி செய்யவும்.

>  நுண்ணுயிர் கலத்தல்:


  • தமிழ்நாடு வேளாண்மை பல்கழைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட ரைசோபியம் (COS1) 3 பாக்கெட் (600 கிராம் / எக்) மற்றும் பாஸ்போபாக்டீரியா 3 பாக்கெட் (600 கிராம் / எக்) உடன் கஞ்சி கலந்து விதை நேர்த்தி செய்யவேண்டும். விதைநேர்த்தி செய்யாவிட்டால், 10 பாக்கெட் ரைசோபியம் (2000 கிராம் / எக்) மற்றும் 10 பாக்கெட் (2000 கிராம் / எக்) பாஸ்போபாக்டீரியா உடன் 25 கி.கி. தொழு உரம் மற்றும் 25 கி.கி உரம் மற்றும் 25 கி.கி மணலுடன் கலந்து விதைப்பதற்கு முன்னால் இடவேண்டும். பாக்டீரியாவால் விதைநேர்த்தி செய்யப்பட்ட விதைகளை 15 நிமிடத்திற்குஉலர்த்த வேண்டும்

>  விதைத்தல்:


  • விதைகளை 2-3 செ.மீ. ஆழத்தில் 30 x 10 செ.மீ. இடைவெளியில் ஊன்ற வேண்டும்

>   நீர் நிர்வாகம்:


  • விதைத்தவுடன் நீர் பாய்ச்ச வேண்டும் விதைத்த மூன்று நாட்கள் கழித்து உயிர் தண்ணீர் கட்ட வேண்டும். பின்னர் மண் மற்றும் காலநிலைகளுக்குத் தகுந்தவாறு குளிர்காலத்தில் 10 முதல் 15 நாட்கள் இடைவெளியில் கோடை காலத்தில் 7 முதல் 70 நாட்கள் இடைவெளியிலும் நீர் பாய்ச்ச வேண்டும். சோயா மொச்சை அதிகமாக ஈரம் இருக்குமாயின் பாதிக்கப்படும். வயலில் நீர்தேங்கி இருப்பதை தவிர்க்கவேண்டும். பூக்கும் பருவத்திலிருந்து முதிர்ச்சிப் பருவம் வரை நீர் பற்றாக்குறை பாதிப்பதில்லை. வறட்சியின் தாக்கத்தை சரிக்கட்ட கயோலின் 3 சதவிகிதக் கரைசல் அல்லது பாரபின் 1 சதவிகித கரைசலை இலையின் மீது தெளிக்க வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் சோயாமொச்சசை மற்றும் ஆமணக்கு விதைப்பில் 0.60 பாசன கூட்டு விகிதத்தில் பாசனம் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. அதிகபட்ச பயன் கிடைப்பதற்கு 10 முதல் 12 நாட்களுக்கு ஒரு முறை பாசனம் செய்வது சிறந்ததாகும்.

>  களை மேலாண்மை


  • இறவைப் பயிருக்கு எக்டருக்கு பெண்மித்திலின் 3.3 லிட்டர் அல்லது ஆலகுளோர் 4.0 லிட்டர் விதைத்தவுடன் தெளித்து உடன் நீர் பாய்ச்ச வேண்டும். இதன் மூலம் விதைத்தலில் இருந்து 30 நாட்களுக்குள் களைகளைக் கட்டுப்படுத்தலாம்.
  • விதைத்த 30 நாட்களுக்குப் பின்னர் களைகளை ஒரு முறை எடுத்து நீர் பாய்ச்ச வேண்டும். களைக்கொல்லி தெளிக்கவில்லையெனில் விதைத்த 20 மற்றும் 35 நாட்களுக்குப் பின்னர் கைக்களை எடுக்க வேண்டும்.
  • முளைத்த பின் களைக்கொல்லியான இமாசிதிபரை விதைத்த 20 நாட்களில் தெளிக்க வேண்டும். அதனை தொடர்ந்து 30 நாளில் ஒரு முறை கைக்களை எடுக்க வேண்டும்.
  • ஊடுபயிர்: கரும்பில் ஊடுபயிராக சாகுபடி செய்ய சோயா மொச்சை உகந்த பயிராகும். சோயாமொச்சையைத் தனிப் பயிராகவும் சாகுபடி செய்யலாம். மேலும் இப்பயிரை வாழை மரவள்ளி, பருத்தி, மஞ்சள், தென்னை ஆகிய பயிர்களிலும் ஊடுபயிராகப் பயிரிடலாம்
  • அறுவடை: இலைகள் பழுத்து உதிர்ந்தவுடன் நிலமட்டத்தில் அறுத்துச் செடிகளைக் காயவைத்து பின் தாம்பு கட்டி மணிகளைப் பிரித்துத் தூற்றிச் சுத்தம் செய்ய வேண்டும். சோயாவை நெல் தரிசாக ஜனவரி மாதம் முதல் மார்ச் நடுவரையிலும் பயிர் செய்யலாம். எக்டரக்கு 75 கிலோ விதைகள் தேவைப்படும்.

>  மானாவாரி சோயாமொச்சை


  • இரகங்கள் : கோ 1, ஏ டீ டி 1
  • பருவம்: தென் மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ காலங்களில் பயிரிட சோயா மொச்சை ஏற்றது. வடமேற்கு மண்டல பகுதிகளில் மானாவாரி சோயா மொச்சையை ஜீலை மத்தியில் விதைக்கலாம்.

>  பூசணகொல்லி மற்றும் உயிர் உரங்களுடன் விதை நேர்த்தி


  • விதைகளை விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு மு்னனர் ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பன்டாசிம் அல்லது திரம் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும் அல்லது ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைகோடிடர்மா விரிடி (அ) 10 கிராம் சூடோமோனாஸ் ப்ளுரசன்ஸ் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டுமு்.
  • ஒரு எக்டர் விதைப்பிற்கு தேவையான விதைகளை 3 பாக்கெட் ரைசோபியம் மற்றும் 3 பாக்கெட் பாஸ்போபேக்டீரியா கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

>  உரமிடுதல்


  • மண் பரிசோதனை மூலம் பரிந்துரைக்கப்பட்ட உரங்களை இட வேண்டும் இல்லையெனில் பொதுவாக பரிந்துரைக்கப்பட்ட எக்டருக்கு 20:40:20:20 கிலோ தழை, மணி, சாம்பல் மற்றும் கந்தக சத்தினை போதுமான ஈரப்பதத்தில் இட வேண்டும்.
  • அனைத்து தழை, மணி, சாம்பல் மற்றும் கந்தக சத்தினை அடியுரமாக இடவேண்டும்.

>  இடைவெளி


  • மீ. இடைவெளியும் செடிக்கு செடி 5 செ.மீ. இடைவெளியும் கொடுத்து நட வேண்டும்.

  • >  விதைப்பு


    • விதைகளை ஊன்ற வேண்டும் (அ) துளை மூலம் விதைக்க வேண்டும்.

    >   களை மேலாண்மை


    • இறவைப் பயிருக்கு எக்டருக்கு பெண்மித்திலின் 3.3 லிட்டர் அல்லது ஆலகுளோர் 4.0 லிட்டர் விதைத்தவுடன் தெளித்து உடன் நீர் பாய்ச்ச வேண்டும். இதன் மூலம் விதைத்தலில் இருந்து 30 நாட்களுக்குள் களைகளைக் கட்டுப்படுத்தலாம்.
    • விதைத்த 30 நாட்களுக்குப் பின்னர் களைகளை ஒரு முறை எடுத்து நீர் பாய்ச்ச வேண்டும். களைக்கொல்லி தெளிக்கவில்லையெனில் விதைத்த 20 மற்றும் 35 நாட்களுக்குப் பின்னர் கைக்களை எடுக்க வேண்டும்.
    • முளைத்த பின் களைக்கொல்லியான இமாசிதிபரை விதைத்த 20 நாட்களில் தெளிக்க வேண்டும். அதனை தொடர்ந்து 30 நாளில் ஒரு முறை கைக்களை எடுக்க வேண்டும்.

    >  நெல் தரிசில் சோயாமொச்சை


    • ஜனவரி மாத இடையிலிருந்து மார்ச் இடையில் வரைக்கும் விதைக்கலாம். விதையளவு - 75 கிலோ/எக்டர்

    >  சிறப்பு சூழ்நிலைகள்


    • கோ1 சோயா விதைப்பிற்கு தகுந்த காலம் கரிபில் ஜீன் 15 முதல் 30 வரை
    • வடமேற்கு மண்டலத்தில் சோயா கோ2 இரகத்தை கரும்பில் ஊடுபயிராக பயிர் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது
    • பத்து வருடங்களுக்கு மேல் உள்ள தென்னை மரங்களுக்கு இடையே ஊடுபயிராக பயிரிட சோயா பரிந்துரைக்கப்படுகிறது.
    • மண்புழுஉரம் (50கிராம்/கிலோ) மற்றும் 30 10 செ.மீ. இடைவெளி மற்றும் 2% டிஏபியை பூக்கும் தருணத்தில் தெளித்தல் போன்றவை அதிக மகசூலை பெற பரிந்துரைக்கப்படுகிறது.
    ⇒   10.வாள் அவரை

    >  பயிர் மேம்பாடு


    • எஸ்.பி.எஸ்1 வாள் அவரை அறிமுகம் செய்யப்பட்டது. இவை ஒளியுணர்வு இல்லாத காய்கறி பயிர்களில் ஒன்றாகும். இந்த அவரை 110-120 நாட்களுக்குள் முதிர்ச்சி அடைந்து விடும். இதனை வருடம் முழுவதும் பயிர் செய்யலாம் மற்றும் பாசனத்திற்கு மிகவும் எற்றது. விதைத்த 75 வது நாளில் இதன் காய்கள் அறுவடைக்கு வந்துவிடும். தனிப்பயிராக எக்டருக்கு 1356 கிலோ விதை மகசூலையும், 7500 கிலோ காய் மகசூலையும் தரவல்லது. மேலும் இதனை வரப்புப் பயிராகவும், ஊடுபயிராகவும் மற்றும் நிழல் பயிராகவும் பயிரிடலாம்.

    >  பருவம் :


    • ஜூன் - ஜூலை (மானாவாரி), செப்டம்பர் - அக்டோபர் (நபி), பிப்ரவரி - மார்ச் (கோடை).

    >  எஸ். பி. எஸ் 1 இரகத்தின் விவரங்கள்


    • வெளியிட்ட ஆண்டு:1990 ,தாவர தோற்றம்:குட்டை, நேரான, படரும் தாவரம்,நிறம்:பச்சை,கிளைகள் (எண்ணிக்கை):4 - 6,பூங்கொத்து:இலைக்கோணத்தில் பூங்கொத்து,மலர்:தடித்த, வெளிர் ஊதா
    • காய்கள்:நீளம், தொங்கும், பச்சை, தட்டையான மற்றும் சதை பகுதி உடையது,100 விதை எடை (கி):131.6

    >  விதை நிறம்:பால் வெள்ளை


    • 50% பூக்கும் காலம்:45 - 50
    • சிறப்பு அம்சங்கள்:குறைந்த காலம் (110 - 120 நாட்கள்), காய்கறி மற்றும் தானிய பயிர், மிகவும் சத்தான மற்றும் சுவையானது (25.9% புரதச்சத்து), பூச்சி மற்றும் நோய் பாதிப்பு பெரிதாக காணப்படுவதில்லை.

    >  பயிர் மேலாண்மை


    • விதை அளவு (கிலோ/எக்டர்) : 110-120 (தனிப்பயிர்)
    • உரங்கள் (கிலோ/எக்டர்) : 25 தழைச்சத்து, 50 மணிச்சத்து
    • இடைவெளி : 45 x 30 செ.மீ (இறவை), 30x20 செ.மீ மானாவாரி
    ⇒   4.எண்ணெய் வித்துக்கள்

    >  1.நிலக்கடலை


    • மாவட்டம் / பருவம் <=> விதைக்கும் மாதம் <=> இரகங்கள்
    • கோயம்புத்தூர், திருப்பூர் <=>
    • சித்திரைப்பட்டம் <=> ஏப்ரல்-மே <=> TMV 7, CO 3, COGn 4, VRI 2, VRI 3,TMVGn 13
    • ஈரோடு,தேனி,திண்டுக்கல்
    • மார்கழிப்பட்டம் <=> கோயம்புத்தூர்,திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல் <=> டிசம்பர்- ஜனவரி <=> TMV 7, CO 3, COGn 4, VRI 2, VRI 3, ALR 3, VRIGn5, VRIGn 6, TMVGn 13
    • ஆனிப்பட்டம் <=> ஜூன்- ஜூலை <=> TMV 7, VRI 2, VRIGn 5, VRI Gn 6,TMVGn 13
    • இராமநாதபுரம், திருநெல்வேலி <=>
    • தைப்பட்டம் <=> கரூர், புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர் <=> ஜனவரி- பிப்ரவரி <=> TMV 7, CO 3, COGn 4, VRI 2, VRI 3, ALR 3, VRIGn5,VRIGn 6, TMVGn 13
    • மார்கழிப்பட்டம் <=> சிவகங்கை <=> டிசம்பர்- ஜனவரி <=> TMV 7, CO 3, COGn 4, VRI 2, VRI 3, ALR 3, VRIGn5, VRIGn 6, TMVGn 13
    • ஐப்பசிப்பட்டம் <=>கரூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை <=> அக்டோபர்- நவம்பர் <=> TMV 7, CO 3, COGn 4, VRI 2, VRI 3, ALR 3, VRIGn5, VRIGn 6, TMVGn 13
    • ஆனிப்பட்டம் <=> விருதுநகர் <=> ஜூன்-ஜூலை <=> TMV 7, VRI 2, VRIGn 5, VRI Gn 6,TMVGn 13
    • ஆடிப்பட்டம் <=> இராமநாதபுரம், திருநெல்வேலி <=> ஜூலை-ஆகஸ்ட் <=> TMV 7, VRI 2, VRIGn 6,TMVGn 13
    • புரட்டாசிப்பட்டம் <=> தூத்துக்குடி <=> செப்டம்பர்- அக்டோபர் <=> TMV 7, VRI 2, VRIGn 6,TMVGn 13
    • கார்த்திகைப்பட்டம் <=> விழுப்புரம் <=> நவம்பர்- டிசம்பர் <=> TMV 7, VRI 2, VRIGn 6,TMVGn 13
    • சித்திரைப்பட்டம் <=> திருவாரூர், காஞ்சிபுரம் <=> ஏப்ரல்-மே <=> TMV 7, CO 3, COGn 4, VRI 2, VRI 3,TMVGn 13
    • மார்கழிப்பட்டம் <=> கடலூர் <=> டிசம்பர்- ஜனவரி <=> TMV 7, CO 3, COGn 4, VRI 2, VRI 3, ALR 3, VRIGn5, VRIGn 6, TMVGn 13
    • ஐப்பசிப்பட்டம் <=> வேலூர், திருவண்ணாமலை <=> அக்டோபர்- நவம்பர் <=> TMV 7, CO 3, COGn 4, VRI 2, VRI 3, ALR 3, VRIGn5, VRIGn 6, TMVGn 13
    • கார்த்திகைப்பட்டம் <=> திருவள்ளூர், கடலூர், வேலூர் <=> நவம்பர்- டிசம்பர் <=> TMV 7, CO 3, COGn 4, VRI 2, VRI 3, ALR 3, VRIGn5, VRIGn 6, TMVGn 13
    • ஆனிப்பட்டம் <=> காஞ்சிபுரம் <=> ஜூன்-ஜூலை <=> TMV 7, VRI 2, VRIGn 5, VRI Gn 6,TMVGn 13
    • ஆடிப்பட்டம் <=> திருவண்ணாமலை <=> ஜூலை-ஆகஸ்ட் <=> TMV 7, VRI 2, VRIGn 6,TMVGn 13
    • புரட்டாசிப்பட்டம் <=> விழுப்புரம் <=> செப்டம்பர்- அக்டோபர் <=> TMV 7, VRI 2, VRIGn 6,TMVGn 13
    • கார்த்திகைப்பட்டம் <=> பெரம்பலூர், அரியலூர் <=> நவம்பர்- டிசம்பர் <=> TMV 7, VRI 2, VRIGn 6,TMVGn 13
    • மார்கழிப்பட்டம் <=> நாமக்கல், தர்மபுரி <=> டிசம்பர்- ஜனவரி <=> TMV 7, CO 3, COGn 4, VRI 2, VRI 3, ALR 3, VRIGn5, VRIGn 6, TMVGn 13
    • வைகாசிப்பட்டம் <=> சேலம், கிருஷ்ணகிரி <=> மே- ஜூன் <=> TMV 10, COGn 5, TNAU CO 6, VRIGn 7,
    • கார்த்திகைப்பட்டம் <=> நாமக்கல் <=> நவம்பர்- டிசம்பர் <=> TMV 7, CO 3, COGn 4, VRI 2, VRI 3, ALR 3, VRIGn5, VRIGn 6, TMVGn 13
    • வைகாசிப்பட்டம் <=> சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி <=> மே- ஜூன் <=> TMV 10, COGn 5, TNAU CO 6, VRIGn 7,
    • ஆனிப்பட்டம் <=> பெரம்பலூர், அரியலூர் <=> ஜூன்-ஜூலை <=> TMV 7, VRI 2, VRIGn 5, VRI Gn 6,TMVGn 13
    • ஆடிப்பட்டம் <=> திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் <=> ஜூலை-ஆகஸ்ட் <=> TMV 7, VRI 2, VRIGn 6,TMVGn 13
    • மார்கழிப்பட்டம் <=> திருச்சிராப்பள்ளி <=> டிசம்பர்- ஜனவரி <=> TMV 7, CO 3, COGn 4, VRI 2, VRI 3, ALR 3, VRIGn5, VRIGn 6, TMVGn 13
    • ஆனிப்பட்டம் <=> தஞ்சாவூர், நாகப்பட்டினம் <=> ஜூன்-ஜூலை <=> TMV 7, VRI 2, VRIGn 5, VRI Gn 6,TMVGn 13
    • மார்கழிப்பட்டம் <=> <=> டிசம்பர்- ஜனவரி <=> TMV 7, CO 3, COGn 4, VRI 2, VRI 3, ALR 3, VRIGn5, VRIGn 6, TMVGn 13

    >  நிலம் தயாரித்தல்


    • மணற்பாங்கான வண்டல், செம்மண் மற்றும் கருவண்டல் நிலங்கள் ஏற்றவை. சட்டிக் கலப்பையைப் பயன்படுத்தி உழுதபின் 3 அல்லது 4 முறை இரும்புக்கலப்பை அல்லது நாட்டுக் கலப்பையைக் கொண்டு கட்டிகள் நன்கு உடையும் வரை உழவேண்டும்.

    >  உளிக்கலப்பையைக் கொண்டு மண் கடின அடுக்கை உடைத்தல்


    • குறைந்த ஆழத்தில் மண் கடின அடுக்கு உடைய நிலத்தை உளிக்கலப்பையைக் கொண்டு 50 செ.மீ இடைவெளியில் ஒரு திசையில் உழவேண்டும். பின்னர் அதற்கு நேர் எதிர் திசையில் உழவேண்டும். இவ்வாறு 3 வருடத்திற்கு ஒரு முறை செய்யவேண்டும். பின்னர் 12.5 டன் தொழு உரம் அல்லது நன்கு மக்கிய தென்னை நார்க்கழிவு இடவேண்டும்.

    >  உரமிடுதல்


    • தழைச்சத்து மற்றும் மணிச்சத்தை மூன்று பிரிவுகளாக பிரித்து அடிப்படையாக 50% + விதைத்த 20-ம் நாளில் 25 % மற்றும் விதைத்த 45-ம் நாளில் 25 % மும் அளிக்க பரிந்துரைக்கப்படுகிறது.

    >  படுக்கை அமைத்தல்


    • தண்ணீர் கிடைக்கும் தன்மை, நில சரிவு மற்றும் மண்ணின் தன்மையைப் பொறுத்து 10 மீ முதல் 20 மீ அளவிற்கு படுக்கைகள் அமைக்கவும்.
    • டிராக்டர் இல்லாவிடில் படுக்கை அமைக்க ஆட்களை பயன்படுத்தலாம்.
    • வரப்புகளுக்கு இடையே 60 செ.மீட்டரில் வாய்க்கால் அமைக்கவும் மற்றும் வரப்பின் இரண்டு பக்கங்களிலும் விதைக்கவும்.
    • 60 செ.மீ அகலத்திற்கு படுக்கை அமைக்கவும் மற்றும் இரண்டு பக்கங்களிலும் 15 செ.மீ அகலத்திற்கு வாய்க்கால் அமைக்கவும் மற்றும் படுக்கைகளில் விதைக்கவும்.

    >  பாலித்தீன் கொண்டு ஈரப் பாதுகாப்பு மூட்டம்


    • நிலக்கடலை சாகுபடியில் அகன்ற படுக்கைகள் மற்றும் வாய்கால் முறை ICRISAT ல் நிரூபிக்கப்பட்ட தொழில்நுட்பமாகும். சாதகமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு நிலக்கடலை காய்களை அதிகரிக்க அகன்ற படுக்கைகள் மற்றும் வாய்க்கால் அமைக்கவும். இதில் அளவில் சிறிய மாற்றங்கள் செய்து பாலித்தீன் கொண்டு ஈரப் பாதுகாப்பு மூட்டம் செய்ய படுக்கைகள் அமைக்கவும். 60 செ.மீ அகலத்திற்கு படுக்கைகள் மற்றும் படுக்கைகளின் இரண்டு பக்கங்களிலும் 15 செ.மீ அளவில் வாய்க்கால் அமைக்கவும். 4.5 மீ x 6.0 மீ அளவிற்கு 5 படுக்கைகள் அமைக்க வேண்டும். படுக்கை தயாரித்து உரம் அளித்த பின்னர் மண்ணின் மேற்பரப்பில் கருப்பு பாலித்தீன் தாளை பரப்பவும். எக்டருக்கு 50 கிகி பாலீத்தீன் தேவைப்படும். 30 x10 செ.மீ அளவிற்கு துளையிட்டபின் தாளை பரப்பவும். விதை அளவு சாதாரண நிலக்கடலை சாகுபடிக்கு தேவையான அளவு போதுமானது.

    >  நுண்ணூட்டச் சத்துக்கள் அளித்தல்


    • தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நுண்உரக் கலவையை எக்டருக்கு 12.5 கிகி ஊட்டமேற்றிய தொழுவுரமாக அளிக்கவும். (ஊட்டமேற்றிய தொழுவுரம் தயாரிக்க 1:10 என்ற விகிதத்தில் நுண்உரக் கலவை மற்றும் தொழுவுரம் சேர்த்து தகுந்த ஈரப்பதத்தில் நிழலில் உலர்த்தவும்.
    • விதைத்த உடனே அளிக்க வேண்டும். நுண்உரக் கலவையை மண்ணில் இணைக்க வேண்டாம்.
    • நிலக்கடலையில் பூவை தக்க வைத்தல், நெற்று நிரப்புதல் மற்றும் வறட்சியைத் தாங்கும் தன்மையை அதிகரிக்க விதைத்த 35-ம் நாள் (50 சதவிகத பூக்கும் சமயத்தில்)இரண்டு தெளிப்பாக நிலக்கடலை ரிச் எக்டருக்கு 5.0கிகி (ஒவ்வொரு தெளிப்பிற்கும்) மற்றும் விதைத்த 45-ம் நாள் (காய் முற்றும் பருவம்) 500 லிட்டர் தண்ணீர் பரிந்துரைக்கப்படுகிறது.

    >  ஊட்டச்சத்து குறைபாடு துத்தநாக குறைபாடு


    • இலை நரம்பிற்கு இணையாக இலேசான மஞ்சள் நிறக்கோடுகள் இலையின் பரப்பில் தோன்றும். முதிர்ந்த நிலையில் நரம்பில் பச்சைப் பற்றாக்குறை மற்றும் நுனிமொட்டு வளர்வது தடைபடும். துத்தநாகம் குறைவாக உள்ள மண்ணிற்கு எக்டருக்கு 25 கிலோ துத்தநாக சல்பேட் இடவேண்டும்.

    >  இரும்பு குறைபாடு


    • நரம்புகளுக்கிடையே பச்சையக்குறைவு, நுனி மற்றும் வேர்களின் வளர்ச்சி குறையும். இந்த குறைபாட்டை நீக்க இரும்பு சல்பேட் கரைசலை, விதைத்த 30 மற்றும் 50வது நாட்களில் தெளிக்கவேண்டும்.

    >  போரான் குறைபாடு


    • இளம் இலைகளின் வளர்ச்சி தடைப்பட்டு, குட்டையான புதர் அமைப்பைத் தரும். காய் வளர்ச்சி பாதிக்கப்பட்டு. விதையில்லாக் காய்களைத் தரும். போரான் குறைபாடுள்ள மண்ணிற்கு 10 கிலோ போராக்ஸ் மற்றும் 200 கிலோ ஜிப்சம் விதைத்த 45வது நாளில் இடவேண்டும்.

    >  கந்தகக் குறைபாடு


    • குன்றிய வளர்ச்சி, ஒரே மாதிரி பச்சையக் குறைபாடுள்ள தாவரங்கள் சன்னமான தண்டு மற்றும் வலை போன்ற அமைப்பு ஆகியவை கந்தகக் குறைபாட்டின் அறிகுறிகள் ஆகும்.
    ⇒   2.சூரியகாந்தி

    >  பருவம் மற்றும் இரகங்கள்


    >  அ.மானாவாரி


    • ஆடிப்பட்டம் (ஜீன்-ஜீலை) <=> இரகங்கள் மார்டன், கோ 4, வீரிய ஒட்டு
    • கோயமுத்தூர், ஈரோடு, சேலம், நாமக்கல்,திருநெல்வேலி, திண்டுக்கல், தர்மபுரி,திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கரூர் <=>டி.சி.எஸ்.எச்.1 கே.பி.எஸ்.எச்1, கே.பி.எஸ்.எச் 44, பி.ஏ.சி. 1091, எம்.எஸ்.எப்.எச்.17
    • கார்த்திகைப்பட்டம் (அக்டோபர்-நவம்பர்) <=> இரகங்கள் மார்டன், கோ 4
    • கடலூர், விழுப்புரம், விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம், மதுரை. திண்டுக்கல், தேனீ, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூார், கரூர், திருநெல்வேலி <=> வீரிய ஒட்டு டி.சி.எஸ்.எச்.1.கே.பி.எஸ்.எச்1, கே.பி.எஸ்.எச்.44, பி.ஏ.பி.1091, எம்.எஸ்.எப்.எச்.17

    >  ஆ. இறவை


    • மார்கழிப்பட்டம் (டிசம்பர்-ஜனவரி) <=> இரகங்கள் மார்டன், கோ 4
    • சேலம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு, கோயம்புத்தூர், மதுரை, திண்டுக்கல், தேனீ, திருநெல்வேலி, தூத்துக்குடி <=> கே.பி.எஸ்.எச்1, கே.பி.எஸ்.எச் 44, பி.ஏ.சி. 1091, எம்.எஸ்.எப்.எச்.17
    • சித்திரைப்பட்டம் (ஏப்ரல்-மே) <=> இரகங்கள் மார்டன், கோ 4
    • கோயம்புத்தூர், ஈரோடு, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கரூர் <=> வீரிய ஒட்டு .சி.எஸ்.எச்.1. கே.பி.எஸ்.எச்1, கே.பி.எஸ்.எச்.44, பி.ஏ.பி.1091, எம்.எஸ்.எப்.எச்.17

    >  மண்வகை


    • நல்ல வடிகால் வசதியுள்ள எல்லா மண் வகையும் சூரியகாந்தி சாகுபடிக்கு ஏற்றது. கரிசல் பூமியில் நன்றாக வளர்ந்து அதிக மகசூல் கொடுக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள எல்லா மண் வகையிலும், எல்லா மாவட்டங்களிலும் சாகுபடி செய்யலாம்.

    >  நிலம் தயாரித்தல்


    • நிலத்தில் 12.5 டன் மக்கிய தொழு உம் அல்லது தென்னை நார்க் கழிவு இட்டு நன்றாக உழுது பண்படுத்தி மண்ணை நன்றாகப் புழுதியாக்க வேண்டும்

    >  விதை நேர்த்தி


    • மானாவாரியில் விதைக்கும் முன் விதையை சிங்க் சல்பேட் 2 % கரைசலில் 12 மணிநேரம் ஊறவைத்து. நிழலில் உலர்த்திய பின்னர் விதைப்பு செய்யலாம், கார்பென்டாசிம் 2 கிராம்/ கிலோ விதையுடன் கலந்து 24 மணி நேரம், கழித்து விதைப்பு செய்ய வேண்டும். அல்லது டிரைகோடர்மா 4 கிராம்/ கிலோ என்ற அளவில் விதை நேர்த்தி செய்யலாம். அசோஸ்பைரில்லம் : 3 பாக்கெட் அசோஸ்பைரில்லம் (600 கிராம்/ ஹெ) மற்றும் 3 பாக்கெட் (600 கிராம்/ ஹெ) பாஸ்போபாக்டீரியா அல்லது 6 பாக் அசோபாஸ் கஞ்சியுடன் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். விதைநேர்த்தி செய்யப்பட்ட விதைகளை 15 நிமிடம் உலர்த்தி, உடனடியாக விதைக்க வேண்டும்

    >  விதைப்பு


    • ஒரு குழிக்கு இரண்டு விதை என்ற அளவில் பாரின் பக்கவாட்டில் 3 செ.மீ. ஆழத்தில் விதைக்கவும், நடவு செய்த 10-15வது நாளில் வளர்ச்சி இல்லாத செடிகளை களைந்து குழிக்கு ஒர் நல்ல செடி இருக்கும்படி பராமரிக்க வேண்டும்.

    >  பயிர் இடைவெளி


    • ஒட்டு இரகங்கள் : 60 x 30 செ.மீ
    • இரகங்கள் : 45 x 30 செ.மீ

    >  நுண்ணுயிர் உரம்


    • உயிர் உரம் மண்ணில் இடுதல் 10 பாக் (2000 கிராம் / ஹெ) அசோஸ்பைரில்லம் மற்றும் 10 பாக் (2000 கிராம் / ஹெ) பாஸ்போபாக்டீரியம் அல்லது 20 பாக் அசோபாஸ் (4000 கிராம், ஹெ) உடன் 25 கி.தொழுஉரம் மற்றும்
    • 25 கிலோ மணலுடன் கலந்து, விதைப்பதற்கு முன்னால் இட வேண்டும்.

    >  நுண்ணூட்டம் இடுதல்


    • 12.5 கிலோ நுண்ணூட்டக் கலவையை 40 கிலோ மணலுடன் கலந்து விதைக்கு முன் சாலில் இட்டு பின்னர் விதைப்பு செய்ய வேண்டும். மாங்கனீசு பற்றாக்குறை உள்ள நிலத்திற்கு 0.5% கரைசலை விதைத்த 30, 40 மற்றும் 50ஆம் நாட்களில் தெளிக்க வேண்டும்.

    >  நீர் நிர்வாகம் கீழ்க்கண்டவாறு நீர்ப் பாய்ச்ச வேண்டும்


    • முதல் தண்ணீர் : விதைத்தவுடன்
    • 2ம்தண்ணீர் : உயிர்த் தண்ணீராக 7ம்நாள்
    • 3-ம் தண்ணீர் : விதைத்த 20ம் நாள்
    • 4-ம் தண்ணீர் : மொட்டு பிடிக்கும் பருவம்
    • 5,6-ம் தண்ணீர் : பூ பிடிக்கும் தருணத்தில் (இரண்டு முறை)
    • 7,8-ம் தண்ணீர் : விதைப் பிடிக்கும் தருணத்தில் (இரண்டு முறை)

    >  களை கட்டுப்பாடு மற்றும் பின்செய் நேர்த்தி


    • ப்ளுக்ளோரலின் அல்லது பென்டிமெத்தலின் 2 லிட்டர் எக்டருக்கு தெளித்த பின் நீர்ப்பாய்ச்சுதல் வேண்டும். களைக் கொல்லி இட்டபின் 30 - 35 நாளில் ஒரு கைக்களை எடுப்பது அவசியம். விதைத்தபின் 15 மற்றும் 30ம் நாளில் களைக்கொத்தி கொண்டு களை எடுக்க வேண்டும்.

    >  போரான் தெளிப்பு


    • பூக்கொண்டைகளில் வெளிவட்ட மஞ்சள் பூக்கள் மலர ஆரம்பிக்கும் சமயத்தில் வெண்காரத்தை (போரான்) 0.2 (2கி.லிட்.தண்ணீர்) கலந்து பூக்கொண்டைகள் நனையுமாறு தெளிக்கவும், இது மணிகள் நன்றாக பிடிக்க உதவும்.

    >  மணிகள் அதிகம் பிடிக்க


    • மகரந்தச் சேர்க்கை ஏற்படும் தருணமான காலை 9 மணி முதல் 11 மணிக்குள் மெல்லிய துணி கொண்டு பூவின் மேல்பாகத்தை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மெதுவாக ஒவ்வொரு பூக்கொண்டையையும் தேய்க்க வேண்டும். எட்டிலிருந்து பத்து நாட்களுக்கு 5 முறை இப்படி ஒவ்வொரு பூவிலும் செய்யவேண்டும். அத்துடன் பூக்கள் மலரும் தருணத்தில் எக்டருக்கு மூன்று பெட்டி வீதம் தேனீ வளர்த்தல் நல்ல பலன் தரும். அருகருகே உள்ள பூக்கொண்டையினை ஒன்றோடொன்று முகம் சேர்ந்து இலேசாகத் தேய்த்துவிட்டாலும் சிறந்த பலன்

    >  அறுவடை


    • பூவின் அடிப்பாகத்திலுள்ள இதழ்கள் மற்றும் பின்புறம் மஞ்சள் நிறமடைந்து பூக்கொண்டையிலுள்ள விதைகள் கடினத்தன்மை அடைந்திருப்பது முதிர்ச்சிடைந்தமைக்கு அறிகுறியாகும். உலர்ந்த பூக்கொண்டைகளைப் பறித்து உலர்த்திய பின் விதைகளைத் தனியே பிரித்தெடுத்து சுத்தம் செய்யவேண்டும். அறுவடைக்குப் பின்செய் நேர்த்தி அறுவடைக்குப்பின் விதைகளை 8 முதல் 9 சத ஈரப்பதம் வரும் வரை நன்கு உலர வைக்க வேண்டும்.
    ⇒   3.எள்

    >  பருவம் மற்றும் இரகங்கள்


    >  I. மேற்கு மண்டலம் (இறவை)


    • கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு<=> மாசிப்பட்டம் <=> பிப்ரவரி- மார்ச் <=> TMV 3, TMV 4, TMV 6, TMV 7, CO 1, VRI (SV) 1, SVPR 1, VRI (SV) 2 TMV 3, TMV 4, TMV 6, TMV 7, CO 1, VRI (SV) 1, SVPR 1, VRI (SV) 2

    >  மேற்கு மண்டலம் (மானாவாரி)


    • ஆனிப்பட்டம் <=> கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல்<=> ஜூன்- ஜூலை <=> CO 1, TMV 3,TMV 7
    • கார்த்திகை<=>தேனி<=>நவம்பர்- டிசம்பர் <=> CO 1, TMV 3, TMV 5, TMV 7, SVPR 1, VRI(SV) 2

    >  II. தெற்கு மண்டலம் (இறவை)


    • திருநெல்வேலி, கரூர் <=>சித்திரைப்பட்டம் <=> ஏப்ரல்- மே <=> TMV 3, TMV 4, TMV 6, TMV 7, CO 1,VRI (SV) 1, SVPR 1, VRI (SV) 2
    • புதுக்கோட்டை <=> மார்கழி <=> டிசம்பர்- ஜனவரி <=> TMV 3, TMV 4, TMV 6, TMV 7, CO 1,VRI (SV) 1, SVPR 1, VRI (SV) 2

    >  தெற்கு மண்டலம் (மானாவாரி)


    • மதுரை <=> ஆனிப்பட்டம் <=> ஜூன்-ஜூலை <=> CO 1, TMV 3,TMV 7
    • விருதுநகர், புதுக்கோட்டை, <=>ஆடிப்பட்டம் <=> ஜூலை-ஆகஸ்ட் <=> CO 1, TMV 3,TMV 7
    • கரூர் <=>புரட்டாசிப்பட்டம் <=> செப்டம்பர்- அக்டோபர் <=> CO 1, TMV 3, TMV 5, TMV 7, SVPR 1,VRI(SV) 2
    • இராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி<=>கார்த்திகைப்பட்டம் <=> நவம்பர்- டிசம்பர் <=> CO 1, TMV 3, TMV 5, TMV 7, SVPR 1,VRI(SV) 2

    >  III. வட கிழக்கு மண்டலம் (இறவை)


    • காஞ்சிபுரம், கடலூர், வேலூர் <=>மார்கழிப்பட்டம் <=> டிசம்பர்- ஜனவரி <=> CO 1, TMV 3, TMV 5, TMV 7, SVPR 1,VRI(SV) 2
    • திருவண்ணாமலை <=>மாசிப்பட்டம் <=> பிப்ரவரி- மார்ச் <=> TMV 3, TMV 4, TMV 6, TMV 7, CO 1, VRI (SV) 1, SVPR 1, VRI (SV) 2
    • விழுப்புரம்<=>சித்திரைப்பட்டம் <=> ஏப்ரல்- மே <=> TMV 3, TMV 4, TMV 6, TMV 7, CO 1,VRI (SV) 1, SVPR 1, VRI (SV) 2
    • திருவள்ளூர்<=>ஆனிப்பட்டம் <=> ஜூன்-ஜுலை <=> CO 1, TMV 3,TMV 7

    >  வட கிழக்கு மண்டலம் (மானாவாரி)


    • வேலூர், திருவண்ணாமலை<=>ஆனிப்பட்டம் <=> ஜூன்-ஜூலை <=> CO 1, TMV 3,TMV 7
    • காஞ்சிபுரம், கடலூர்<=>ஆடிப்பட்டம் <=> ஜூலை-ஆகஸ்ட் <=> CO 1, TMV 3,TMV 7
    • திருவள்ளூர்<=>புரட்டாசிப்பட்டம் <=> செப்டம்பர்- அக்டோபர் CO 1, TMV 3, TMV 5, TMV 7, SVPR 1,VRI(SV) 2
    • விழுப்புரம்<=>கார்த்திகைப்பட்டம் <=> நவம்பர்- டிசம்பர் <=> CO 1, TMV 3, TMV 5, TMV 7, SVPR 1,VRI(SV) 2

    >  IV. வட மேற்கு மண்டலம் (இறவை)


    • நாமக்கல்<=>மார்கழிப்பட்டம் <=> டிசம்பர்- ஜனவரி <=> TMV 3, TMV 4, TMV 6, TMV 7, CO 1, VRI (SV) 1, SVPR 1, VRI (SV) 2
    • சேலம், பெரம்பலூர், அரியலூர்<=>மாசிப்பட்டம் <=> பிப்ரவரி- மார்ச் <=> TMV 3, TMV 4, TMV 6, TMV 7, CO 1, VRI (SV) 1, SVPR 1, VRI (SV) 2

    >  வட மேற்கு மண்டலம் (மானாவாரி)


    • சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி<=>ஆனிப்பட்டம் <=> ஜூன்-ஜூலை <=> CO 1, TMV 3,TMV 7
    • பெரம்பலூர், அரியலூர்<=>ஆடிப்பட்டம் <=> ஜூலை-ஆகஸ்ட் <=> CO 1, TMV 3,TMV 7

    >  V. டெல்டா மண்டலம் (இறவை)


    • தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி<=>மாசிப்பட்டம் <=> பிப்ரவரி- மார்ச் <=> TMV 3, TMV 4, TMV 6, TMV 7, CO 1, VRI (SV) 1, SVPR 1, VRI (SV) 2
    • திருவாரூர்<=>சித்திரைப்பட்டம் <=> ஏப்ரல்- மே <=> TMV 3, TMV 4, TMV 6, TMV 7, CO 1, VRI (SV) 1, SVPR 1, VRI (SV) 2

    >  டெல்டா மண்டலம் (மானாவாரி)


    • தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்<=>தைப்பட்டம் <=> ஜனவரி- பிப்ரவரி <=> VRI(SV) 1
    • திருச்சிராப்பள்ளி<=>புரட்டாசிப்பட்டம் <=> செப்டம்பர்- அக்டோபர் <=> CO 1, TMV 3, TMV 5, TMV 7, SVPR 1,VRI(SV) 2

    >  நிலம் தயாரித்தல்


    • மணற்பாங்கான வண்டல், செம்மண் மற்றும் கருவண்டல் நிலங்கள் ஏற்றவை. நிலத்தை இருமுறை டிராக்டர் கலப்பையால் (அ) மூன்று முறை இரும்பு கலப்பையால் (அ) ஐந்து முறை நாட்டு கலப்பையால் உழவேண்டும். சிறு விதைகளும் முளைக்குமாறு மண்ணில் உள்ள கட்டிகளை உடைத்து நுண்மைப்படுத்த வேண்டும். மண்ணில் உள்ள கடினமான கட்டிகளை உடைக்க உளிக் கலப்பையைக் கொண்டு 0.5 மீட்டர் ஆழத்தில் இருந்து, செங்குத்தான திசைகளில் உழவேண்டும். பிறகு 12.5 டன் தொழு உரம் (அ) மக்கிய தென்னை நார்க்கழிவு போடவேண்டும். இறவை எள் சாகுபடிக்கு, கிடைக்கும் நீர் மற்றும் நிலத்தின் சரிவைப் பொறுத்து 10 சதுர மீட்டர் அல்லது 20 சதுர மீட்டர் அளவிற்கு படுக்கை தயாரிக்கவேண்டும். நீர் தேங்குவதைத் தடுக்க சமன்படுத்த வேண்டும். நெல் சாகுபடிக்கு பிறகு எள் போடும் நிலமானது சரியான ஈரப்பதத்தில் ஒரு முறை உழுதபின், விதை விதைத்த பிறகு மற்றொரு உழவினால் மூடவேண்டும்.

    >  விதையும் விதைப்பும்


    • விதை அளவு எக்டருக்கு 5 கிலோ.

    >  விதைநேர்த்தி


    • ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைகோடெர்மா கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். விதைப்பிற்கு முன் விதை நேர்த்தி செய்யவும். நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை பூசணகொல்லியுடன் விதை நேர்த்தி செய்வதை தவிர்க்கவும். (அல்லது) ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் திரம் (அ) 2 கிராம் கார்பன்டாசிம் கொண்டு விதை நேர்த்தி செய்யவும்.

    >  விதைக்கும் முறை


    • விதைகளை வரிசையில் விதைக்க வேண்டும்.
    • விதையின் அளவில் நான்கு மடங்கு மணலுடன் விதையை கலந்து நிலத்தின் மேற்பரப்பில் சீராகத் தூவ வேண்டும்.
    • 3 செ.மீ. ஆழத்தில் விதைகளை விதைத்து, மண் கொண்டு மூட வேண்டும்.
    • கோடை பாசன நிலையில, வி.ஆர்.ஐ (எஸ்.வி.) 1 என்னும் இரகத்தினை விதைப்பதற்கு பிப்ரவரி 15 முதல் மார்ச் 15 வரை உகந்த காலமாகும்.

    >  இடைவெளி


    • வரிசைக்கு வரிசை 30 செ.மீ. இடைவெளியும், செடிக்கு செடி 30 செ.மீ. இடைவெளியும் கொடுக்க வேண்டும். நெல் தரிசில், விதைகளை வீசி விதைக்க வேண்டும். பின்னர் ஒரு சதுர மீட்டருக்கு 11 செடிகள் வீதம் பயிர் கலைத்தல் வேண்டும்.

    >  உரமும் உரமிடுதலும்,தொழு உரம்


    • எக்டருக்கு12.5 டன் மக்கிய தொழு உரம் கடைசி உழவிற்கு முன்பு இடவும்.

    >  இரசாயன உரம்


    • மண் பரிசோதனை படி உரமிடுதல் சிறந்தது. அவ்வாறு செய்யாவிடில் பொதுவான பரிந்துரையின் படி பின்பற்றவும். மானாவாரி: எக்டருக்கு 23:13:13 கிலோ தழை, மணி, சாம்பல் சத்து (அ) 17:13:13 கிலோ தழை, மணி, சாம்பல் சத்துடன் 3 பாக்கெட் அசோஸ்பைரில்லம் (600கி/எக்டர்) மற்றும் 3 பாக்கெட் (600 கிராம் /எக்டர்) பாஸ்போபேக்டீரியா (அ) 6 பாக்கெட் அசோபாஸை(1200 கிராம்/எக்டர்) இட வேண்டும். இறவை: எக்டருக்கு 35:23:23 கிலோ தழை, மணி, சாம்பல் சத்து (அ) 21:23:23 கிலோ தழை, மணி, சாம்பல் சத்துடன் 3 பாக்கெட் அசோஸ்பைரில்லம் (600கி/எக்டர்) மற்றும் 3 பாக்கெட் (600 கிராம் /எக்டர்) பாஸ்போபேக்டீரியா (அ) 6 பாக்கெட் அசோபாஸை(1200 கிராம்/எக்டர்) இட வேண்டும்.
    • தழை, மணி, சாம்பல் சத்து முழுவதையும் அடியுரமாக அளிக்க வேண்டும். எக்டருக்கு 5 கிலோ மாங்கனீஸ் சல்பேட்டை சேர்த்து கொள்ளவும்.
    • பரிந்துரைக்கப்பட்ட 100% தழை, மணி, சாம்பல் சத்தினை அளித்த நிலக்கடலை பயிரை தொடர்ந்து இறவை எள் பயிரிடும்போது, பரிந்துரைக்கப்பட்ட உரங்களில் தழைச்சத்து முழுவதையும், 50% மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்தினையும் இட வேண்டும்.
    • 30 செ.மீ. இடைவெளியில் 5 செ.மீ. ஆழத்தில் வாய்க்கால் தோண்டி உரக்கலவையினை அதில் இட்டு, 3 செ.மீ. ஆழத்திற்கு மண் கொண்டு மூட வேண்டும்.
    • இவ்வாறு வாய்க்காலில் இடவில்லை எனில், உரங்களை சீராக படுக்கையின் மீது தூவ வேண்டும்.
    • எக்டருக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பலக்லைக்கழகம் நுண்ணூட்டக்கலவை 7.5 கிலோவை செறிவூட்டப்பட்ட தொழுவுரமாக மானாவாரி எள்ளுக்கும், எக்டருக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் நுண்ணூட்டக்கலை 12.5 கிலோவை செறிவூட்டப்பட்ட தொழுவுரமாக இறவை எள்ளுக்கு இட வேண்டும். (ஊட்டமேற்றிய தொழுவுரம் தயாரிக்க 1:10 என்ற விகிதத்தில் நுன்உரக் கலவை மற்றும் தொழுவுரத்தை சேர்த்து தகுந்த ஈரப்பதத்தில் ஒரு மாதம் நிழலில் உலர்த்தவும்)

    >  களைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி


    • விதைத்த 15 நாட்கள் கழித்து கைக்களையும், 35 நாட்கள் கழித்து இரண்டாவது கைக்களையும் எடுத்துக் களைகளைக் கட்டுப்படுத்தவேண்டும்.

    >  நீர் நிர்வாகம்


    • எள்ளிற்கு மண்ணின் தன்மை, பருவகாலம் ஆகியவற்றைப் பொருத்து சுமார் 5 அல்லது 6 முறை நீர்ப்பாய்ச்சவேண்டும். முதல் முறை விதை விதைத்தவுடன் 7வது நாள் உயிர்த் தண்ணீர், 25வது நாள் பூக்கும் தருவாயில் 2 முறை, காய் பிடிக்கும் தருவாயிலும், முதிர்ச்சியடையும் போதும் 2 முறையாக சுமார் 6 முறை நீர்ப்பாய்ச்சவேண்டும். பூ பூக்கும் பருவம் காய் பிடித்து முற்றும் பருவத்தில் நீர் பாய்ச்சுவதைக் கவனமாகக் கடைப்பிடிக்க வேண்டும். இறவைப் பயிரில் விதைத்த 65 நாட்களுக்குப்பின் நீர்ப்பாய்ச்சக்கூடாது.

    >  அறுவடைக்கான அறிகுறிகள்


    • 4 செடியில் கீழிலிருந்து 25 சத இலைகள் உதிர்ந்துவிடும்.
    • காய்கள் மற்றும் தண்டுப்பாகங்கள் பழுப்பு நிறமாக மாறும்.
    • செடியின் அடியிலிருந்து மேலாக உள்ள 10வது காயில் உள்ள விதைகள் கறுப்பாக (முதிர்வு) மாறியிருக்கும்.
    • மேற்கண்ட அறிகுறிகள் தென்படும்பொழுது அறுவடை செய்துவிடவேண்டும். தவறினால் காய்கள் வெடித்து சிதறி மகசூல் மிகவும் குறையும்.
    ⇒   4.பேய் எள்

    >  பருவம் மற்றும் இரகங்கள்


    >  மானாவாரி


    • ஆடிப்பட்டம் (ஜூன்- ஜூலை) <=>தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேவ்ராயன் மலை, கொல்லிமலை, ஜவாது மலை, தாளவாடிமலை பகுதிகள் <=> பையூர் 1
    • புரட்டாசிப்பட்டம் (செப்டம்பர்-அக்டோபர்) <=>தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேவ்ராயன் மலை, கொல்லிமலை, ஜவாத் மலை, தாளவாடிமலை பகுதிகள் <=> பையூர் 1

    >  இரகங்களின் விவரங்கள்


    • இரகம்:பையூர் 1
    • பெற்றோர்:காம்போசிட் 2-ல் கூட்டுவழித்தேர்வு
    • வயது (நாள்):80
    • விளைச்சல் (கி/ஹெ):260
    • எண்ணெய் சத்து (%) :44.6
    • உயரம் (செ.மீ):80-85
    • கிளைகள்:அதிகம்
    • விதை:பெரியது
    • விதையின் நிறம்:பழுப்பு
    • 50 % பூத்தல் (நாட்கள்):50

    >  பயிர் மேலாண்மை நிலம் தயாரித்தல்


    • நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை டிராக்டர் கலப்பையால் (அ) ஐந்து முறை நாட்டு கலப்பையால் உழவேண்டும். பின்பு மண்ணில் உள்ள கட்டிகளை உடைத்து நுண்மைப்படுத்த வேண்டும்.

    >  தொழு உரமிடுதல்


    • நிலம் தயாரித்த பிறகு 12.5 டன் தொழுஉரம் (அ) மக்கிய தென்னை நார் கழிவு இடவேண்டும். தொழு உரமானது உழுவதற்கு முன்னால் இடப்படவில்லையெனில், கடைசி உழவுக்கு முன்பு தொழு உரத்தை இட்டு மூடவேண்டும்

    >  விதையும் விதைப்பும்


    • விதை அளவு ஹெக்டேருக்கு 5 கிலோ

    >  விதை நேர்த்தி


    • ஒரு கிலோ விதையுடன் 4 கிராம் திரம் அல்லது கார்பென்டாசிம் மருந்தைக் கலந்து 24 மணிநேரம் கழித்து விதைக்க வேண்டும். இவ்வாறு விதைநேர்த்தி செய்வது வேர்அழுகல் நோயிலிருந்து பயிரினைப் பாதுகாக்கும்

    >  விதைக்கும் முறை


    • விதைகளை 2 முதல் 3 செ.மீ. ஆழத்தில் வரிசையாக நடவு செய்ய வேண்டும்
    • விதைகளை கொரு அல்லது நாட்டுக் கலப்பை மூலமாக வரிசையில் நடவு செய்யலாம்

    >  இடைவெளி


    • நடவு செய்யும் போது வரிசைகளுக்கு இடையே உள்ள இடைவெளியானது 30 செ.மீ. ஆகவும், வரிசையில் உள்ள செடிகளுக்கு இடையே உள்ள இடைவெளியானது 10 செ.மீ. இருக்குமாறும் விதைக்க வேண்டும் விதைத்த 15-ம் நாள், செடிக்குச் செடி 10 செ.மீ. இடைவெளிவிட்டு செடிகளை கலைத்து விட வேண்டும்

    >  உரமிடுதல்


    • பயிருக்குத் தேவையான தழைச்சத்தான 20 கிஹெ அடியுரமாக இடவேண்டும்

    >  களைக்கட்டுப்பாடு


    • விதைத்த 20 நாள் மற்றும் 35 நாள் ஆகிய இருமுறை களைகளை களைக்கொத்தி மூலமாகவோ அல்லது கைக்களையாகவோ எடுக்க வேண்டும்.

    >  அறுவடை


    • முதிர்ந்த இலைகள் மற்றும் முழுச் செடியும், பழுப்பு நிறமாக மாறுவது முதிர்ச்சியைக் குறிக்கும். அறுவடை செய்யப்பட்ட பயிரினை களத்தில் வைத்து. கொண்டைகளைப் பறித்து உலர்த்திய பின்பு விதைகளைத் தனியே பிரித்தெடுத்து வெயிலில் உலர்த்தி சுத்தம் செய்ய வேண்டும். அறுவடைக்குப்பின் விதைகளை நன்கு உலர்த்திய பின்பே கோணிகளில் சேமிக்க வேண்டும்.
    ⇒   5.குசும்பா

    >  பருவம் மற்றும் இரகங்கள்


    >  மானாவாரி


    • 1. கார்த்திகைப்பட்டம் (நவம்பர்-டிசம்பர்) <=>எல்லா மாவட்டங்களும் <=> கே 1, கோ 1

    >  சிறப்பு அம்சங்கள்


    • முட்கள் உடையது, தென் மாவட்டங்களுக்கு ஏற்றது. முட்கள் அற்றது, அல்டர்னேரியாவை தாங்கி வளரும், வாடல் நோய்க்கு மிதமான எதிர்ப்புத்திறன் கொண்டது.

    >  பயிர் மேலாண்மை நிலம் தயாரித்தல்


    • நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை டிராக்டர் கலப்பையால் (அ) ஐந்து முறை நாட்டு கலப்பையால் உழவண்டும். பின்பு மண்ணில் உள்ள கட்டிகளை உடைத்து நுண்மைப்படுத்த வேண்டும்

    >  தொழு உரமிடுதல்


    • நிலம் தயாரித்த பிறகு 12.5 டன் தொழுஉரம் (அ) மக்கிய தென்னை கழிவு இடவேண்டும். தொழு உரமானது உழுவதற்கு முன்னால் இடப்படவில்லையெனில், கடைசி உழவுக்கு முன்பு தொழு உரத்தை இட்டு மூடவேண்டும்.

    >  விதையும் விதைப்பும்


    • விதை அளவு ஹெக்டேருக்கு 10 கிலோ

    >  விதை நேர்த்தி


    • ஒரு கிலோ விதையுடன் 4 கிராம் திரம் அல்லது கார்பென்டாசிம் மருந்தைக் கலந்து 24 மணிநேரம் கழித்து விதைக்க வேண்டும். இவ்வாறு விதைநேர்த்தி செய்வது வேர்அழுகல் நோயிலிருந்து பயிரினைப் பாதுகாக்கும்

    >  விதைக்கும் முறை


    • விதைகளை 2 முதல் 3 செ.மீ. ஆழத்தில் வரிசையாக நடவு செய்ய வேண்டும்
    • விதைகளை கொரு அல்லது நாட்டுக் கலப்பை ரமூலமாக வரிசையில் நடவு செய்யலாம்

    >  இடைவெளி


    • நடவு செய்யும் போது வரிசைகளுக்கு இடையே உள்ள இடைவெளியானது 45 செ.மீ. ஆகவும், வரிசையில் உள்ள செடிகளுக்கு இடையே உள்ள இடைவெளியானது 15 செ.மீ. இருக்குமாறும் விதைக்க வேண்டும்
    • விதைத்த 15-ம் நாள், செடிக்குச் செடி 15 செ.மீ. இடைவெளிவிட்டு செடிகளை கலைத்து விட வேண்டும்

    >  உரமிடுதல்


    • பயிருக்குத் தேவையான தழைச்சத்தான 20 கி / ஹெ அடியுரமாக இடவேண்டும்

    >  களை கட்டுப்பாடு


    • விதைத்த 25 நாள் மற்றும் 40 நாள் ஆகிய இருமுறை ககைளை, களைக்தொத்தி மூலமாகவோ அல்லது கைக்களையாகவோ எடுக்க வேண்டும்

    >  அறுவடை


    • முதிர்ந்த இலைகள் மற்றும் முழுச் செடியும், பழுப்பு நிறமாக மாறுவது முதிர்ச்சியைக் குறிக்கும். அறுவடை செய்யப்பட்ட பயிரினை களத்தில் வைத்து, கொண்டைகளைப் பறித்து உலர்த்திய பின்பு விதைகளைத் தனியே பிரித்தெடுத்து வெயிலில் உலர்த்தி சுத்தம் செய்ய வேண்டும். அறுவடைக்குப்பின் விதைகளை நன்கு உலர்த்திய பின்பே கோணிகளில் சேமிக்க வேண்டும்.
    ⇒   6.ஆமணக்கு

    >  பருவம் மற்றும் இரகங்கள்


    >  மானாவாரி


    • ஆடிப்பட்டம் (ஜூன்-ஜூலை) <=> எல்லா மாவட்டங்களும் <=> இரகங்கள் : TMV 5, TMV 6
    • ஆடிப்பட்டம் (ஜூன்-ஜூலை) <=> கலப்பினம் : TMVCH 1, YRCH 1

    >   இறவை


    • வைகாசிப்பட்டம் (மே - ஜூன்) <=> எல்லா மாவட்டங்களும் <=> கலப்பினம் : YRCH 1
    • கார்த்திகைப்பட்டம் (நவம்பர் - டிசம்பர்) <=>எல்லா மாவட்டங்களும் <=> கலப்பினம் : YRCH 1
    • பங்குனி பட்டம் (மார்ச்- ஏப்ரல்) <=>எல்லா மாவட்டங்களும் <=> கலப்பினம் : YRCH 1
    தோட்டநிலம் (வரப்பு)
    • பல்லாண்டு பயிராக <=>எல்லா மாவட்டங்களும் <=> இரகம் : CO 1

    >  நிலம் தயாரித்தல்


    • அமில நிலங்களைத் தவிர பிற நிலங்களில் பயிரிடலாம். நாட்டுக் கலப்பையினால் இரண்டு மூன்று தடவை உழவேண்டும்.

    >  விதையும் விதைப்பும்


    >  இடைவெளி


    • பின்வரும் இடைவெளியை பின்பற்றவும்.
    • இரகங்கள் 90 செ.மீ x 60 செ.மீ 90 செ.மீ x 90 செ.மீ
    • கலப்பினங்கள் 120 செ.மீ x 90 செ.மீ 150 செ.மீ x 120 செ.மீ
    • இறவையில் களிமண் உள்ள பகுதிகளுக்கு 150 X 150 செ.மீ. அகன்ற இடைவெளி கொடுக்க வேண்டும் டி.எம்.வி.5 குறுகிய கால இரகத்திற்கு 60 X 30 செ.மீ. இடைவெளி இருக்க வேண்டும்.

    >  தரமான விதைகளைத் தேர்ந்தெடுத்தல் :


    • சிறந்த தரமான விதைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பூச்சி மற்றும் பூஞ்சாண நோய்கள் தாக்கிய மற்றும் உடைந்த விதைகளை நீக்கி விடவேண்டும்.

    >  விதைநேர்த்தி :


    • ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் திரம் அல்லது கார்பென்டாசிம் கலந்து 4 மணி நேரம் வைத்திருந்து விதைப்பு செய்யவும்.
    • மானாவாரி பகுதியில், விதைப்பிற்கு 3 மணி நேரத்திற்கு முன்னர் 1% பொட்டாசியம் குளோரைடு கொண்டு விதை நேர்த்தி செய்த விதைகளை பருவமழை தொடங்கும் முன் விதைக்க வேண்டும்.

    >  விதைப்பு :


    • விதைகளை சிபாரிசு இடைவெளியில் விதைக்கவும். விதைகளை 4-6 செ.மீ ஆழத்தில் விதைப்பு செய்யவும். ஒரு குழிக்கு ஒரு விதை போதுமானது.

    >  விதைத்தல்


    • பரிந்துரைக்கப்பட்ட இடைவெளியில் விதைகளை விதைக்கவும்.
    • 4-6 செ.மீ. ஆழத்தில் விதைகளை விதைக்கவும்
    • ஒவ்வொரு குழியிலும் ஒரு விதை விதைக்கவும்

    >  பாடு நிரப்புதல்


    • விதைத்த 15 ஆம் நாள் பாடு நிரப்ப வேண்டும். அப்போதே குழிக்கு ஒரு செடி வீதம் விடுத்து பயிர் கலைத்தல் வேண்டும்.

    >  ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை


    >  உரமிடுதல்


    • உழவு செய்யப்படாத நிலத்தில் 12.5 டன், எக்டர் அல்லது மக்கிய தென்னை நார்க்கழிவு பரப்பி உழவேண்டும். மண் பரிசோதனைப் படி உரங்கள் இடவேண்டும். மண்பரிசோதனை செய்யாவிட்டால் கீழ்க்கண்டவற்றைப் பின்பற்றவேண்டும்.
    • கடைசி உழவின் போது எக்டருக்கு 30 கிலோ கந்தகத்தை ஜிப்சம் மூலம் இடுவதால் அதிக மகசூல் பெறலாம். மண் பரிசோதனை படி பரிந்துரைக்கப்பட்ட உரங்களை இட வேண்டும். இல்லையெனில் பொதுவான பரிந்துரையின்படி உரங்கள் அளிக்க வேண்டும்.

    >  பரிந்துரைக்கப்பட்ட NPK கிலோ/ எக்டர்


  • மானாவாரி <=> இரகங்கள் <=> 45 : 15 : 15 NPK கிலோ / எக்டர்மானாவாரி <=> கலப்பினங்கள் <=> 60 : 30 : 30 NPK கிலோ / எக்டர்இறவை <=> இரகங்கள் <=> 60 : 30 : 30 NPK கிலோ / எக்டர்இறவை <=> கலப்பினங்கள் <=> 90 : 45 : 45 NPK கிலோ / எக்டர்மீதம் உள்ள அளவுகளை ஒன்று (அ) இரண்டு முறை தகுந்த ஈரப்பதத்தில் மேலுரமாக இடவேண்டும்.மீதம் உள்ள தழை மற்றும் சாம்பல் சத்து உரங்களை இரண்டு சம பாகங்களாக பிரித்து விதைத்த 30 மற்றும் 60 வது நாளில் இட வேண்டும்.5 கிலோ துத்தநாக சல்பேட்டும் 25 கிலோ பெரஸ் சல்பேட்டும் இட வேண்டும்.
  • >  களை நிர்வாகம்


    • எக்டருக்கு பென்டிமெத்தாலின் 3 லிட்டர் (அ) ப்ளுக்ளோரலின் 2 லிட்டரை விதைத்த 3 ஆம் நாளில் களை முளைக்கும் முன் தெளிக்க வேண்டும். இதனை தொடர்ந்து விதைத்த 20 மற்றும் 40 நாளிலும் கைக்களை எடுக்க வேண்டும்.

    >  ஊடுபயிரிடுதல்


    • ஒவ்வொரு 6 வரிசை நிலக்கடலைக்கு இடையே ஒவ்வொரு வரிசை ஆமணக்கு பயிரிட வேண்டும். பருவமழை தாமதமாக கிடைக்கும் பகுதியில், உளுந்து + ஆமணக்கை 6:1 என்ற விகிதத்தில் பயிரிடலாம் அல்லது ஆமணக்கை உளுந்து (அ) பச்சைப்பயிராடு 1:2 என்ற விகிதத்தில் மானாவாரி பகுதிகளில் பயிரிடலாம். இறவையில் ஆமணக்கை வெங்காயத்தோடு 1:2 என்ற விகிதத்தில் 1.5 மீX1.0மீ இடைவெளியில் பயிரிடலாம்.

    >  அறுவடை


    • பயிரின் வயதினைக் கணக்கில் கொண்டு அறுவடை மேற்கொள்ளவேண்டும்.
    • ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆமணக்கு முத்துக்கள் காய்ந்து இருந்தால் அறுவடை செய்யலாம்.
    • முற்றிய விதைக் காத்தை இதர கொத்துக்களைப் பாதிக்காதவாறு அறுவடை செய்யவும்.
    • விதைகளை நிழலில் குவித்து வைக்காமல் சூரிய ஒளியில் உலர்த்தவும்.
    • காய்ந்த கொத்தை குச்சி கொண்டு, அடித்து விதை முத்துக்களை பிரித்தெடுத்து, காற்றில் இட்டு தூசியை நீக்கவும் அல்லது விதைப் பிரித்தெடுக்கும் கருவி கொண்டு விதைகளைப் பிரித்தெடுக்கவும்.
    ⇒   5.நார் பயிர்கள்

    >  1.பருத்தி


    >  பருவம் மற்றும் இரகங்கள்

    >  இறவை


    • குளிர்கால இறவை (ஆகஸ்ட் – செப்டம்பர்) <=>கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை, திண்டுக்கல், தேனி <=> MCU 5, MCU 5 VT, சுவின், TCHB 213*, MCU 12,MCU 13, சுரபி
    • தர்மபுரி <=> MCU 5, TCHB 213*, MCU 12, MCU 13, சுரபி
    • சேலம், நாமக்கல் <=> MCU 5, சுவின், TCHB 213*, MCU 12, MCU 13, சுரபி
    • கடலூர், விழுப்புரம் <=> LRA 5166, SVPR 2, SVPR 4, சுரபி,

    >  கோடைகால – இறவை (பிப்ரவரி – மார்ச்)


    • ஈரோடு <=> MCU 5, MCU 5 VT, MCU 12, MCU 13, சுரபி
    • மதுரை, திண்டுக்கல், தேனி <=> MCU 5, MCU 5 VT, SVPR 2, SVPR 4, சுரபி
    • இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, <=> MCU 5, MCU 5 VT, SVPR 2, SVPR 4, சுரபி

    >  மானாவாரி (செப்டம்பர் – அக்டோபர்)


    • மதுரை, திண்டுக்கல், தேனி <=> LRA 5166, K11, KC 2, SVPR 2,KC 3
    • இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை <=> LRA 5166, K 11, KC 2, SVPR 2,KC 3
    • திருநெல்வேலி, தூத்துக்குடி, தர்மபுரி <=> LRA 5166, K 11, KC 2, SVPR 2,KC 3

    >  நெல்தரிசு


    • தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சிராப்பள்ளி பகுதிகள், பெரம்பலூர், கரூர், கடலூர் மற்றும் விழுப்புரம் <=> MCU 7, SVPR 3, அஞ்சலி
    ⇒   பயிர் மேலாண்மை

    >  இறவைப் பருத்திக்கான சாகுபடிக் குறிப்புகள்


    >  நிலம் தயாரித்தல்


    • நிலத்தை நன்றாக உழுது பண்படுத்தவேண்டும். குறைந்த ஆழத்தில் மண் கடின அடுக்கு இருந்தால் நிலத்தை கத்திக் கலப்பையைக் கொண்டு 0.5 மீ இடைவெளியில் ஒரு திசையில் உழவேண்டும். பின்னர் அதற்கு நேர்செங்குத்தான திசையில் உழவேண்டும். இதனை மூன்று வருடத்திற்கு ஒரு முறை செய்யவேண்டும். மண் நன்கு பொடியாகும்படி உழுதபின்னர் எக்டருக்கு வேப்பம் புண்ணாக்கு 250 கிராம் இடுவதன் மூலம் கூன் வண்டின் தாக்குதலைத் தவிர்க்க முடியும்.

    >  இயற்கை உரமிடல்


    • எக்டருக்கு 12.5 டன் தொழு உரம் (அ) மக்கிய உரம் (அ) 2.5 டன் மண்புழு உரத்தை உழுவதற்கு முன் மண்ணின் மீது பரப்பி உழவு செய்யவேண்டும். அசோபோஸ் 2கிகி/எக்டர் அல்லது அசோஸ்பைரில்லம் + பாஸ்பரஸில் கரைக்கக்கூடிய பாக்டீரியா + இளஞ்சிவப்பு நிறமுடைய நிலைமாறும் மெத்திலோடிராபிக் எக்டருக்கு 2.2 கிகி ஒவ்வொரு முறையும் அடியுரமாக அளிக்க வேண்டும்.

    >  விதை நேர்த்தி


    • ஒரு கிலோ விதைக்கு 100 மிலி 70 சத வணிக கந்தக அமிலத்தைப் பயன்படுத்தி அமில நேர்த்தி செய்யவேண்டும். இதன் மூலம் விதைகளின் மேற்பரப்பில் உள்ள துசும்புகளையும், பூச்சி முட்டை நோய்க்கிருமிகள் ஆகியவை அழிக்கப்பட்டு, விதையுறை மிருதுவாக்கப்பட்டு முளைப்புத்திறன் அதிகரிக்கிறது. விதை நேர்த்தி செய்ய பிளாஸ்டிக் பக்கெட் (அ) கண்ணாடி பாத்திரங்களை பயன்படுத்தப்பட வேண்டும். உலோக பாத்திரங்களைப் பயன்படுத்தக்கூடாது. ஒரு கிலோ விதையை ஒரு பிளாஸ்டிக் பக்கெட்டில் போட்டு 100 மில்லி அமிலத்தை ஊற்றவேண்டும். கண்ணாடி (அ) மரக்குச்சியால் 4 நிமிடங்கள் நன்கு கலக்கவேண்டும். பிறகு வேறு ஒரு பக்கெட்டில் நீர் நிரப்பி அமிலநேர்த்தி செய்த விதைகளை நிழலில் உலர்த்தி சேகரித்து வைத்துக்கொள்ளவேண்டும்.

    >  பார்கள் அமைத்தல்


    • இரகங்களுக்கு ஏற்ற இடைவெளியில் 6-40 மீட்டர் நீளத்தில் பார்கள் அமைக்கவும் இதற்கு இடை இடையே நீர் பாய்ச்சுவதற்கேற்ப வாய்க்கால் அமைக்கவும், இதற்கு நீர் பிடிக்கும் கலப்பையைப் பயன்படுத்தலாம்.

    >  இராசயன உரமிடுதல்


    • மண் பரிசோதனைக்கு ஏற்ப தழை, மணி மற்றம் சாம்பல் சத்துக்களை இடவேண்டும். இல்லையெனில் கீழ்க்கண்டவாறு உர அளவை இடவேண்டும்.

    >  இரகங்கள்/ வீரிய ஒட்டு இரகங்கள் <=> தழை <=> மணி <=> சாம்பல்


    • எம்.சி.யு 5, எம்.சி.யு 5 விடி, எம்.சி.யு 12, எம்.சி.யு 13, எஸ்.வி.பி.ஆர் 2 <=> 80 <=> 40 <=> 40
    • எம்.சி.யு 7, எஸ்.வி.பி.ஆர் 3 <=> 60 30 30
    • வீரிய ஒட்டு இரகங்கள் <=> 120 <=> 60 <=> 60
    • அடியுரம் இட இயலாத சூழ்நிலையில்களில், விதைத்த 25 நாளில் உரமிடலாம்.
    • இரகங்களுக்கு 50 சத தழைச்சத்தும், சாம்பல் சத்து,மணி சத்தை முழுமையாகவும் அடியுரமாக இடவேண்டும். எஞ்சியுள்ள தழை மற்றும் சாம்பல் சத்தை 40-45ம் நாள் இடவும். வீரிய ஒட்டு இரகங்களுக்கு தழைச்சத்தை மூன்று முறையாக அடியுரம் 45 மற்றும் 60 நாள் இடவும்.
    • இலைத் தெளிப்பாக 2% டி.ஏ.பி + 1% பொட்டாசியம் குளோரைடு அல்லது பாலிபீடு மற்றும் மல்டி பொட்டாசியத்தை அளிப்பதன் மூலம் பருத்தி மகசூலை அதிகரிக்கலாம்.
    • உரங்களை பட்டையாக மூன்றில் இரண்டு பங்கு உயரத்தில் மேலிருந்து இட்டு மண்ணுடன் கலந்திடவேண்டும்.

    >  நுண்ணூட்டம் இடுதல்


    • தமிழ்நாடு நுண்உரக் கலவையை இரகங்களுக்கு எக்டருக்கு 12.5கிகி கலப்பினமாக இருந்தால் 15கிகி ஊட்டமேற்றிய தொழுவுரமாக அளிக்க வேண்டும். ஊட்டமேற்றிய தொழுவுரம் தயாரிக்க 1:10 என்ற விகிதத்தில் நுண்உரக் கலவை மற்றும் தொழுவுரத்தை சேர்த்து தகுந்த ஈரப்பதத்தில் ஒரு மாதம் நிழலில் உலர்த்த வேண்டும். அடிப்படை இலைவழித் தெளிப்பாக 2% மெக்னீசியம் சல்பேட் + காய் உருவாகும் பருவத்தில் 1% யூரியாவும் தெளிக்க வேண்டும்.
    • எக்டருக்கு 12.5 கிராம் நுண்ணூட்டக் கலவையை சுமார் 50 கிலோ மணலுடன் கலந்து விதைச் சாலில் தூவவேண்டும்.

    >  ஊட்டச்சத்துக் குறைபாடுகள்


    • துத்தநாகக் குறைபாடுள்ள நிலங்களுக்கு எக்டருக்கு 50 கிராம் துத்தநாக சல்பேட் இடவேண்டும். பயிர் வளர்ச்சியின் போது குறைபாடு தென்பட்டால் 0.5 சத துத்தநாக சல்பேட் கரைசலை விதைத்த 45,60 மற்றும் 75 நாட்களில் தெளிக்கவேண்டும்.
    • மக்னீசியம் குறைபாடு உள்ள நிலங்களுக்கு எக்டருக்கு 20 கிராம் மக்னீசியம் சல்பேட்டு இடவேண்டும்.
    • அடிப்படை இலைவழித் தெளிப்பாக 2% மெக்னீசியம் சல்பேட் + காய் உருவாகும் பருவத்தில் 1% யூரியாவும் தெளிக்க வேண்டும்.

    >  வயலில் சாகுபடி மேலாண்மை நுட்பங்கள்


    >  விதையளவு


    • கீழ்க்கண்ட விதையளவை இரகங்களுக்கும் வீரிய ஒட்டு இரகங்களுக்கு பயன்படுத்தவும்.
    • இரகங்கள்/ வீரிய ஒட்டு இரகங்கள் <=> பஞ்சுடன் <=> பஞ்சு நீக்கியது <=> பஞ்சில்லா விதை
    • எம்.சி.யு 5, எம்.சி.யு 5 விடி, எம்.சி.யு 12, எம்.சி.யு 13, எஸ்.வி.பி.ஆர் 2 <=>15.0 <=>7.5<=> -
    • கே.சி 2 <=>20<=> 15.0<=> -
    • சுவின் <=>- <=>- <=>6.0
    • டி.சி.எச்.பி <=>2.5 <=>2.0<=> -

    >  இடைவெளி


    • பருத்தியைத் தனிப்பயிராகப் பயிரிடுவதாக இருந்தால் கீழ்க்கண்டவாறு கடைப்பிடிக்கவும்.
    • இரகங்கள்/ வீரிய ஒட்டு இரகங்கள் <=> இடைவெளி (செ.மீ)
    • குறுகிய கால இரகங்கள் <=> 60 × 30
    • தனி இரகங்கள் <=> 75 × 30
    • அமெரிக்க × எகிப்திய இரகங்கள் <=> 120 × 60
    • அமெரிக்க × அமெரிக்க இரகங்கள் <=> 90 × 45

    >  இரட்டை வரிசை நடவுமுறை


    • இம்முறையில் சால்களுக்கு இடையில் அதிக இடைவெளி விட்டு சால்களின் இருபக்கங்களிலும் விதைகள் நட்டு, இரு சால்களுக்கு இடையில் தண்ணீர் கட்டுவதால் இரண்டு வரிசையிலும் உள்ள செடிகள் தேவையான தண்ணீரைப் பெறுகின்றன. மேலும் பருத்தியில் ஊடுபயிராக மற்ற பயிர்களை பயிர் செய்வதாக இருந்தால் ஒரு வரிசையில் பருத்தியையும் அடுத்த மூன்று வரிசைகளுக்கு ஊடுபயிராகப் பயறுவகைப் பயிர்களையும் பயிர் செய்யலாம். இதனால் பருத்தியைத் தனிப்பயிராகப் பயிரிடும்போது கிடைக்கும் பயிர் எண்ணிக்கையைப் பெறுவதுடன் ஊடுபயிர் மூலமாகக் கூடுதல் பெறமுடியும்.
    • இரகங்கள் / வீரிய ஒட்டு இரகங்கள் பருத்திக்கான இடைவெளி (செ.மீ) <=>இரட்டை வரிசைக்குள் <=> இரட்டை வரிசைக்கு இடையே <=> செடிகளுக்கு இடையே
    • இரகங்கள் <=> 60 <=> 90 <=> 30
    • சுவின் <=> 80 <=> 100 <=> 45
    • வீரிய ஒட்டு இரகம் <=> 100 <=> 140 <=> 60
    • இரண்டு வரிசைகளில் ஊடு பயிரை விதைக்கவேண்டும்.
    • ஊடு பயிர் விதையளவு (கி / எ) <=>இடைவெளி (செ.மீ)<=> வரிசைக்கு வரிசை <=> செடிகளுக்கு இடையில்
    • உளுந்து <=> 12.5 <=> 30 <=> 10
    • பாசிப்பயிறு <=> 12.5 <=> 30 <=> 10
    • தட்டைப்பயிறு <=> 7.5 <=> 30 <=> 20
    • சோயா <=> 20.0 <=> 30 <=> 10

    >  பூஞ்சாண விதைநேர்த்தி


    • பஞ்சு நீக்கிய ஒரு கிலோ விதைக்கு இரண்டு கிராம் ட்ரைகோடெர்மா விரிடி என்ற நன்மை செய்யும் ஒரு கிலோ விதைக்கு நான்கு கிராம் கலந்து உடன் விதைக்கவேண்டும். கார்பென்டாசிம் கலந்து விதையுடன் ட்ரைக்கோடெர்மா விரிடி கண்டிப்பாகக் கலக்கக்கூடாது. ஏனெனில் டிரைக்கோடெர்மா ஒரு உயிருள்ள நன்மை செய்யும் பூசணம், கார்பென்டாசிம் மருந்து அதனைக் கொன்றுவிடும். உயிர் உரங்களைக் கொண்டு ஏற்கெனவே கூறியபடி விதைநேர்த்தி செய்யவேண்டும்.

    >  விதையை கடினப்படுத்தல்


    • ஒரு சதம் புங்க இலைச்சாறில் அதே அளவுடன் விதையை ஊறவைத்து உலர வைப்பதன் மூலம் முளைப்பு மற்றும் செடியின் வீரியத்தை அதிகப்படுத்தலாம்.

    >  விதை முலாம் தயாரித்தல்


    • ஒரு கிலோ விதைக்கு அரப்பு இலை 100 கிராம், டி.ஏ.பி 40 கிராம், நுண்ணூட்டக் கலவை 15 கிராம், அசோஸ்பைரில்லம் 200 கிராம் எடுத்து ஐந்து சத மைதா பசையுடன் கலந்து விதை முலாம் தயார் செய்வதன் மூலம் முளைப்புத்திறன் மற்றும் செடியின் வீரியத்தைக் கூட்டலாம்.

    >  விதைத்தல்


    • விதைகளை 3 செ.மீ ஆழத்தில் குழிகளில் ஊன்றவேண்டும். இரகங்களுக்கு வளம் குறைந்த நிலங்களில் குத்துக்கு இரண்டு செடியும், வீரிய ஒட்டு இரகங்களுக்கு ஒரு செடியும் விட்டு மற்ற செடிகளை விதைத்த 15 ஆம் நாள் நீக்கவேண்டும்.

    >  இடைவெளி நிரப்புதல்


    • விதைத்த பத்தாவது நாள் முளைக்காமல் இருக்கும் இடங்களில் புதிய விதைகளைக் கொண்டு நிரப்பவேண்டும். இதனால் தேவையான பயிர் எண்ணிக்கையை பராமரிக்க முடியும்.

    >  களைகளைக் கட்டுப்படுத்த உழவியல் முறைகள்


    • களைகளைக் கட்டுப்படுத்த மறைமுகமான சில உழவியல் முறைகள் உண்டு. அவற்றில் முக்கியமானவை பயிர் சுழற்சி, பசுந்தாள் உரம் பயிர் செய்தல், தரிசு விடுதல் முதலியவை. அடர்த்தியான தீவனப்பயிர் (அ) பயறு வகை போன்றவற்றையும் இடையுழவு செய்யக்கூடிய பயிர்களையும் பயிர் செய்தல் களைகளை குறைக்கப் பெரிதும் உதவும்.

    >  களைக் கொல்லிகள்


    • எக்டருக்கு 3.3 லிட்டர் பெண்டிமெத்தாலின் (அ) புளூகுளோரலின் 2.2 லிட்டர் இவற்றில் ஏதாவது ஒரு களைக்கொல்லியைப் பயன்படுத்தி களையைக் கட்டுப்படுத்தவேண்டும். பருத்தி விதைத்த மூன்றிலிருந்த ஐந்து நாட்களுக்குள் 500 லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கவேண்டும். களைக்கொல்லி தெளிப்பதற்கு என்று தனியாக ஓர் தெளிப்பான் வைத்துக் கொள்ளவேண்டும். உலோகத்தினாலான தெளிப்பான்களைக் கண்டிப்பாகப் பயன்படுத்தக்கூடாது. இம்முறை தவிர 20 கிலோ மணலுடன் களைக்கொல்லியை கலந்து சீராக தூவியும் களைகளைக் கட்டுப்படுத்தலாம்.
    • களைக்கொல்லி 30 நாட்கள் வரை களைகளை கட்டுப்படுத்தும். பின்பு 45வது நாள் கைக்களை எடுத்து மண் அணைத்து களையைக் கட்டுப்படுத்தலாம். பருத்தியை நீண்ட வரிசைகளில் விதைக்கும் போது, விதைத்த 30-35 நாட்களில் கொண்டிக் கலப்பைக் கொண்டு ஊடுழவு செய்யவும். பத்து நாட்களுக்குப் பிறகு நாட்டுக் கலப்பை மூலம் சாலெடுத்துப் பிறகு பார் கலப்பை மூலம் பார் பிடிப்பது நன்கு கட்டுப்படுத்துவதுடன் குறைந்த செலவில் மண் அணைத்து உரமிடவும் வழிசெய்கிறது.

    >  மேலுரமிடல்


    • இரகங்களுக்கு 50 சத தழைச்சத்து மற்றும் சாம்பல் சத்து விதைத்த 45ம் நாள் இடவேண்டும்.
    • வீரிய ஒட்டு இரகங்களுக்கு மூன்றில் ஒரு பங்கை 45 ஆம் நாளும் மற்றொரு பங்கை 65 ஆம் நாளும் இடவேண்டும்.

    >   மண் அணைத்தல்


    • விதைத்த 45 ஆம் நாள் பார் சாலை களைந்து பார் எடுத்துக்கட்டி செடிகளுக்கு மண் அணைக்கவேண்டும்.

    >  வளர்ச்சி ஊக்கிகள் தெளித்தல்


    • நாப்தலின் அசிட்டிலிக் அமிலம் 40 பிபிஎம் கரைசலை மொக்குவிடும் பருவத்தில் தெளிக்கவேண்டும். முதல் முறை தெளித்து ஒரு மாதம் கழித்து இரண்டாவது முறையாக 90ம் நாள் தெளிக்கவேண்டும். 40 மில்லி நாப்தலின் அசிட்டிக் அமிலத்தை ஒரு லிட்டர் நீரில் கரைத்தால் 40 பிபிஎம் கரைசல் கிடைக்கும். இவ்வாறு செய்வதால் மொட்டுகள் உதிர்வது குறைக்கப்பட்டு காய்கள் அதிகம் பிடிக்க உதவுகிறது.

    >  கோடை இறவையில் பின் விதைப்பு மேலாண்மை


    • கோடை இறவை (மாசிப்பட்டம்) பருத்திக்க (திருவில்லிப்புத்தூர் பகுதிக்கு) ஒரு சத பொட்டாஷ் கரைசலை விதைத்த 50 மற்றும் 70 நாட்களில் தெளிப்பதன் மூலம் நல்ல பலன் பெறலாம்.

    >  நுனி கிள்ளுதல்


    • தழைச்சத்து உரங்கள் அதிகமாக இடுவதால் தேவைக்கு அதிகமாக உயரமாக வளர்ந்து விடுவதுண்டு. இதனால் செடிகள் அதிக பூச்சி நோய்களின் தாக்குதலுக்கு உள்ளாக நேரிடும். இச்சந்தர்ப்பங்களில் நுனி கிள்ளுதல் அவசியமாகிறது. இவ்வாறு செய்வதால் பக்கக் கிளைகள் உருவாகி பூக்களும், காய்களும் அதிக எண்ணிக்கையில் உண்டாகி காய்கள் உரிய காலத்தில் வெடிக்க உதவுகிறது. இரகங்களுக்கு 75-80ம் நாளில் 15வது கணுவிலும், ஒட்டு இரகங்களுக்கு 85-90ம் நாளில் 20வது கணுவிலும் தண்டின் நுனியை சுமார் 10 செ.மீ அளவுக்கு கிள்ளிவிடவேண்டும். காய்கள் திரட்சியாகவும், பருமானகவும் வரை 2 சத டி.ஏ.பி கரைசலை 45 மற்றும் 75ம் நாட்களில் தெளிக்கவேண்டும்.

    >  நீர் நிர்வாகம்


    • விதைத்த உடன் நீர்ப்பாய்ச்சவேண்டும். மீண்டும் விதைத்த மூன்றாம் உயிர்த் தண்ணீர் கட்டவேண்டும். தேவைப்பட்டால் விதைத்த 10-15ம் நாள் இடைவெளி நிரப்பும் சமயத்தில் ஒருமுறை தண்ணீர் கட்டவேண்டும். 20 நாட்கள் கழித்து 15-20 நாளுக்கு ஒரு முறை தண்ணீர் கட்டவேண்டும். நீர்ப்பாய்ச்சுதலை மண்ணின் ஈரம் காக்கும் தன்மை, மழை, செடியின் வளர்ச்சி முதலியனவற்றைக் கருத்தில் கொண்டு மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.
    • முளைக்கும் பருவம் : 1 முதல் 15 நாடகள் வரை
    • பயிர் வளர்ச்சி பருவம் : 16 முதல் 44 நாட்கள் வரை
    • பூக்கும் பருவம் : 45 முதல் 100 நாட்கள் வரை, டிசிஎச்பி 213 மற்றும் சுவின் 45 முதல் 87 நாட்கள் வரை எல்லா இரகங்களுக்கும்.
    • பயிர் முதிர்ச்சி பருவம் : 100 நாட்களுக்குப் பிறகு டிசிஎச்பி 213 மற்றும் 88 நாட்களுக்கு பிறகு அனைத்து இரகங்கள்.

    >  குறிப்பு


    • வானிலையை அடிப்படையாகக் கொண்டு நீர் பாய்ச்சும் பொழுது பாசன நீர், நீராவிமானியின் விகிதாச்சாரம் 0.40 மற்றும் 0.60 ஆகிய முறைகளில் வளர்ச்சி மற்றம் காய்க்கும் காலங்களில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும்.
    • மேலே கூறப்பட்ட நீர்ப்பாசன திட்டம் ஒரு வழிகாட்டியே, எனவே நீர்ப்பாசனத்தை காலநிலை மற்றும் மழைக்கு ஏற்ப மாற்றியமைக்கவேண்டும்.
    • மாற்றுச்சால் மற்றும் விடுசால் முறையில் நீர்ப்பாசனம் மேற்கொண்டு நீரில் தேவையை குறைக்கலாம்.

    >  விடுசால் நீர்ப்பாசனம்


    • களி மற்றும் வண்டல் மண் வகைகளுக்கு ஏற்றது.
    • ஒன்றுவிட்ட சால்களை நிரந்தரமாக விட்டுவிடவேண்டும். அவைகளை அகலமான பாத்திகளாக மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.
    • குறுகியகால பயிர்களான பயறுவகைப் பயிர்களை இவ்வகைப் பாத்திகளில் விதைக்கலாம். தனியாக நீர்ப்பாய்ச்ச வேண்டிய தேவை குறைகிறது.
    • இதன் மூலம் 500 நீர்த்தேவையை குறைக்கலாம்.

    >  மாற்றுச்சால் நீர்ப்பாசனம்


    • ஒவ்வொரு முறை நீர்ப்பாய்ச்சும் போதும் பாதிச்சால்கள் (ஒன்றுவிட்டு ஒன்று) மட்டும் நீர்ப்பாய்ச்சப்படுகிறது.
    • நீர்ப்பாய்ச்சும் இடைவெளி குறைக்கப்படவேண்டும்.
    • அடுத்த முறை நீர்ப்பாய்ச்சும் போது மீதிப்பாதி (ஒன்றுவிட்டு ஒன்று) சால்களில் நீர்ப்பாய்ச்சவேண்டும்.
    • இதுவும் களி மற்றும் வண்டல் மண் வகைகளுக்கு ஏற்றது.
    • தண்ணீர் தட்டுப்பாடு இருந்தால், கீழ்குறிப்பிட்டுள்ள முக்கிய வளர்ச்சிப் பருவங்களில் கண்டிப்பாக நீர்ப்பாய்ச்சவேண்டும்.
    • 40-45 நாள் (பூக்கும் பருவம்) - > ஒருமுறை
    • 60-65ம் நாள் (காய்க்கும் பருவம்) - > ஒருமுறை
    • 75-80ம் நாள் (காய் வளர்ச்சி பருவம்) - > ஒருமுறை
    • 90-100ம் நாள் (காய் முதிர்ச்சிப்பருவம்) - > ஒருமுறை
    • மேற்கண்ட நான்கு பருவங்களிலும் குறைந்தது ஒரு முறை வீதம் ஆக மொத்தம் நான்கு முறை தண்ணீர் கட்டுவது மிக மிக அவசியம். தண்ணீர் தட்டுப்பாடு அதிகம் உள்ள இடங்களில் மாற்றுச்சால் முறையில் (அதாவது ஒரு சால்விட்டு மறுசாலில்) மேற்கண்ட நான்கு பருவங்களிலும் நீர் பாய்ச்சுவதன் மூலம் சுமார் 50 சதம் அளவு தண்ணீரை மிச்சப்படுத்த முடியும். வசதியுள்ள விவசாயிகள், குறிப்பாக வீரிய ஒட்டு இரகப்பருத்திக்கு சொட்டு நீர் முறையைக் கையாளலாம். பாத்திகளில் நடுவதைவிட சால்களில் நடுவது தண்ணீரை சிக்கனப்படுத்தும்.
    Image result for agriculture

    >  அறுவடை


    • உயர்ந்த அளவில் விளைவிக்கும் பருத்தியை கட்டுக்கோப்பான அறுவடை செய்வதும் கிடைத்த மகசூலும் தரம் பிரித்து தக்கவாறு சேமித்து பின்பு விற்பனை செய்வதும், பருத்திச் சாகுபடியின் இறுதிக் கட்டத்தில் கடைப்பிடிக்க வேண்டிய மிக முக்கியமான பணியாகும்.
    • இந்த விதத்தில் பருத்தி மற்ற எல்லா பயிர் வகைகளிலிருந்தும் முற்றிலும் மாறுபாடுகிறது. ஏனைய பயிர்க்ள அடுத்தடுத்து ஒன்று அல்லது இரண்டு தடவைகளில் அறுவடையாகி விடும்போது, பருத்தி அறுவடை செய்வது சுமார் நான்கு முதல் எட்டு வாரங்கள் வரை நீடிக்கப்படுகிறது. இது தற்சமயம் நம் நாட்டில் பயிரிடப்படும் எல்லா பருத்தி இரகங்களிலும் உள்ள ஒரு தவிர்க்க முடியாத அம்சமாகும்.
    • கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் எல்லா காய்களும் வெடித்து, ஒன்றிரண்டு தடவைகளிலேயே எல்லா பருத்தியையும் அறுவடை செய்வது இன்றைய பொருளாதார சூழ்நிலையில் மிகவும் வரவேற்கத்தக்க ஒரு குறிக்கோளாகும். ஆனால் இதற்கேற்றபடி வெகு குறுகிய காலத்தில் மகசூல் கொடுக்கக்கூடிய இரகங்கள் உருவாக்கப்படவில்லை.
    • தமிழ்நாட்டில் பருத்தி புரட்டாசி பட்டத்தில், அதாவது குளிர் காலப்பயிராக பயிரிடப்படும்பொழுது, ஆடிக் கடைசி மற்றும் புரட்டாசி மாதங்களில் விதைக்கப்பட்டு தை மற்றும் மாசி மாதத்திலும் மாசிப் பட்டத்தில் விதைக்கப்படும் பொழுது ஆனி, ஆடி மாதங்களிலும் பருத்தி எடுக்கமுடியும். இந்த இரு பருவங்களிலும் நிலவும் பெரும்பாலும் மிகவும் உதவுகின்றன.
    • அறுவடைக்கான இந்த சூழ்நிலையை, குறிப்பாக பருத்திக் காய்கள் நன்கு வளர்ச்சியடைந்து, முதிர்ச்சி பெற்று, சீராக வெடித்து முழுப்பலனையும் கொடுக்குமளவுக்குப் பயன்படுத்தல் மிகவும் முக்கியம். நீண்டகால இரகங்களான சுவின், டி.சி.எச்.பி 213, மத்திய கால இரகமான எம்.சி.யு 5, எல்.ஆர்.ஏ 5166, எம்.சி.யு 12, எம்.சி.யு 13 மற்றும் இடைவிட இன்னமும் குறுகிய காலத்தில் விளைந்திடும் எம்.சி.யு 7, எஸ்.வி.பி.ஆர் 2 அவற்றின் வயதுக்கேற்றபடி, தகுந்த பருவங்களில் விதைத்து, மழையற்ற தெளிவான சூழ்நிலையில் எல்லாக் காய்களும் வெடிக்கும்படி செய்வது நல்லது.
    • பருத்திக் காய்களில் மேலிருந்து கீழாக லேசாக கீறல் தோன்றி, பின்பு சுமார் 2-3 நாட்களில் முழுவதுமாக நன்றாக மலர்ந்து வெடித்தபின் தான் பருத்தி எடுக்கவேண்டும். சரிவர வெடிக்காத காய்களிலிருந்து பருத்தி எடுக்கக்கூடாது. 120 நாளில் தொடங்கி வாரத்திற்கு ஒரு முறை அல்லது பத்து நாட்களுக்கு ஒரு முறை வீதம் நான்கு முறை பருத்தி எடுக்கலாம். நன்கு மலர்ந்து வெடித்த காய்களில் உள்ள நான்கு, ஐந்து சுளைகளையும் கைவிரல்களை காய்க்கு பக்கவாட்டில் கொடுத்த லாவகமாக எடுக்கவேண்டும். ஒரு கையால் காய்களைப் பறித்து இன்னொரு கையால் பருத்திச் சுளைகளை எடுப்பதைத் தவிர்க்கவேண்டும்.
    • காலை இளம் வெயில் நேரத்தில் பத்து மணிக்குள்ளாகவும், மாலை மூன்று மணிக்கு பின்புப் பருத்தி எடுப்பது நல்லது. நடுப்பகலில், வெப்பமான சூழ்நிலையில் எடுக்கப்படும் பருத்தியில், காய்ந்து ஒடிந்த புழவிதழ்களும், சருகுகளும் சேர்ந்து நல்ல பருத்தியோடு கலந்துவிடும் வாய்ப்பு உண்டு. மேலும் இந்தப் பச்சை காய்களை பின்பு வெயிலில் உலர்த்தி வெடிக்கச் செய்தோ அல்லது தடியால் அடித்து பருத்தியை காய்களிலிருந்து பிரித்து எடுப்பது இன்னும் புழக்கத்தில் இருந்து வருகிறது. இது தவிர்க்கப்பட வேண்டும்.
    • தும்பும் தூசியும் இல்லாதபடி எடுக்கப்படும் சுத்தமான பருத்திச் சுளைகளை தனியாக ஒரு துணிப்பையிலோ அல்லது சாக்குப் பையிலோ வைத்துக் கொண்டு செடியிலிருந்து கிடைக்கும் தரம் குறைந்த (அ) கொட்டை பருத்தியை தனியாக இன்னொரு பையிலுமாக வைத்துக் கொள்ளவேண்டும். துணிப்பையில் சேமிப்பதால், பருத்தி மாசுபடாமல் சுத்தமாக இருக்கிறது. எடுத்த பருத்தியை, வயலில் மண் தரை மேல் கொட்டி வைப்பதோ, நாள் முழுவதும் சூரிய வெப்பத்தில் காயும்படி போட்டு விடுவதோ கூடாது. மரநிழலிலோ அல்லது பண்ணையைச் சேர்ந்த வீட்டு முற்றங்களிலோ, கெட்டியான மண் (அ) சிமெண்டு தரையில் பருத்தியை அம்பாரம் போட்டு. பின்பு விற்பனைக்கு முன் நல்ல பருத்தி, கொட்டைப் பருத்தி, கொட்டைப் பருத்தியை மறுபடியும் தரம் பிரித்து. சாக்குப் பைகளில் தைத்து விற்பனைக்கு அனுப்பவேண்டும்.
    • ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் எங்கெங்கு பருத்தி தரம் பிரிக்கும் வசதிகள் உள்ளனவோ அவற்றை பருத்தி விவசாயிகள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும். தரக்கட்டுபாட்டுக்கு உட்படுத்தப்பட்ட பருத்திக்கு தனி மதிப்பும், கூடுதல் விலையும் உண்டு.

    >  மானாவாரி பருத்திக்கான சாகுபடிக் குறிப்புகள்


    >  பருவமும் இரகங்களும்


    • புரட்டாசியில் 375 மி.மீ வரை மழை கிடைக்க வாய்ப்புள்ளது, மதுரை மாவட்டத்தில் திருமங்கலம், விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர், தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி ஆகிய பகுதிகளுக்கு எல்.ஆர்.ஏ 5166 (அ) எஸ்.வி.பி.ஆர் 2 (அ) கே.சி.2, கே.சி.3 இரகங்களை தேர்வு செய்யலாம். புரட்டாசியின் பின்பகுதி மற்றும் ஐப்பசி மாதங்களில் மழை பெறும் இராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி பகுதிகளில் கே 11 மற்றும் கே.சி இரகத்தை தேர்வு செய்யலாம்.

    >  மானாவாரிக்கேற்ற நிலப்பண்பாடு


    >  நிலம் தயார் செய்தல்


    • முன் பருவப் பயிர் அறுவடை முடிந்தபின்பு உடனே நிலத்தை உழுது தயார் செய்யவேண்டும்.
    • நிரந்தரதமான அகலப்பாத்தி ஆழச்சாலைக் கையாளலாம்.

    >  கோடை உழவு


    • மழை நீரைத் தேக்கி தன்னுள் வைத்துக்கொள்ளும் அதிகரிக்கும் பொருட்டு கோடை உழவு செய்தல் மிக அவசியம். இது நீரை சேமிக்க உதவுவது மட்டுமன்றி களைகளைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. கோடை உழவு செய்யும்போது நிலத்தின் சரிவுக்கு குறுக்காக உழவு செய்யவேண்டும். எனவே, வழிந்தோடி வீணாகும் நீர் தடுக்கப்பட்டு உட்கிரகிக்கப்படுகிறது.

    >  தொழு உரம் இடுதல்


    • மண்ணின் உற்பத்தித் திறனை அதிகரிக்கச் செய்யும் பொருட்டு தொழு உரம், மக்கிய குப்பை (அ) ஆடு மாடுகள் கிடைபோடுதல் ஆகியவற்றை முறையே செய்யவேண்டும். ஒரு எக்டருக்கு 12.5 டன் தொழு உரம் இடுவதால், மண்ணின் அங்ககத் தன்மை நிலை நிறுத்தப்பட்டு பருத்தியின் விளைச்சலையும் அதிகமாகப் பெறலாம். இப்படி இடுவதன் மூலம் மண்ணின் நீர் சேமிப்புத் திறனும் அதிகரிக்கின்றது.
    • தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் நுண்உரக் கலவையை @ 7.5 ஊட்டமேற்றிய தொழுவுரமாக அளிக்கவும்.

    >  உர அளவு


    • மண் பரிசோதனைப்படி உரம் இடவேண்டும். இல்லையெனில் பொதுப் பரிந்துரையின்படி உரமிடவேண்டும்.

    >  இரகங்கள் உர அளவு (கி / எக்டர்) <=> தழை <=> மணி <=> சாம்பல்


    • கருங்கண்ணி இரகங்கள் <=> 20 <=> 0 <=> 0
    • கம்போடிய இரகங்கள் <=> 40 <=> 20 <=>40
    • சிபாரிசு செய்யப்பட்ட தழைச்சத்தில் பாதியையும் முழு அளவும் மணிச்சத்தை அடியுரமாகவும் இடவேண்டும். மீதித் தழைச்சத்தை 25-30 நாட்களுக்குள் மழை பெய்த பிறகு மேலுரமாக இடவேண்டும். இடுபொருள் செலவைக் குறைக்க அசோஸ்பைரில்லம் அசோட்டோபாக்டர் என்ற நுண்ணுயிர் கலவையை எக்டருக்கு 2000 கிராம் அளவில் இட்டு இரசாயன உரத் தேவையைக் குறைக்கலாம்.

    >  நுண்ணூட்டக்கலவை இடுதல்


    • வேளாண் துறையினரால் பரிந்துரைக்கப்பட்ட நுண்ணூட்டக் கலவையை 12.5 கிலோ சுமார் 50 கிலோ மணலுடன் கலந்து விதைச் சாலில் தூவவேண்டும். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் நுண்உரக் கலவையை எக்டருக்கு 7.5கிகி ஊட்டமேற்றிய தொழுவுரமாக அளிக்கவும். (ஊட்டமேற்றிய தொழுவுரம் தயாரிக்க 1:10 என்ற விகிதத்தில் நுண்உரக்கலவை மற்றும் தொழுவுரம் சேர்த்து தகுந்த வெப்பநிலையில் ஒரு மாதம் நிழலில் உலர்த்தவும்.

    >  மானாவாரி பி.டி பருத்தியில் மகசூலை அதிகரித்தல் மற்றும் சிவப்பாதலைக் குறைத்தல்


    • தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நுண்உரக்கலவை (இரகங்களுக்கு எக்டருக்கு 7.5 கிகி மற்றும் பி.டி பருத்தி எக்டருக்கு 10 கிகிராமை ஊட்டமேற்றிய தொழுவுரமாக அளிக்க வேண்டும்) மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பி.ஜி.ஆர் இலைத் தயாரிப்பு 1.5% அடர்வு காய் உருவாகும் பருவத்தில் தெளிக்க வேண்டும் அதனுடன் பரிந்துரைக்கப்பட்ட தழை, மணி மற்றும் சாம்பல் சத்தை விதை பருத்தியின் மகசூலை அதிகரிக்க மற்றும் இலை சிவப்பாதவை குறைக்க அளிக்கவும்.

    >  விதையளவு


    • பஞ்சு நீக் கிய விதைகள் எக்டருக்கு 15 கிலோவும், பஞ்சு நீக்கப்படாத விதைகள் 20 கிலோவும் தேவைப்படும். ஊடுபயிராக உளுந்து மற்றம் பச்சைப்பயிர் பயிரிடுவதாக இருந்தால் எக்டருக்கு 10 கிலோ தேவைப்படும். தட்டைப்பயிறுடன் பயிரிடுவதாக இருந்தால் 7.5 கிலோ போதுமானது. நிலத்தை நன்றாக உழுதபின் 150 செ.மீ அகலத்திற்கு மேட்டுப் பாத்திகள் அமைத்து அதன் பக்கவாட்டில் 30 செ.மீ அகலமும் 30-60 செ.மீ ஆழமும் உள்ள சால்களை அமைக்கவேண்டும். இதன் மூலம் மண்ணின் ஈரம் அதிக காலம் பராமரிக்கப்பட்டு பயிர் செழித்து வளர ஏதுவாகின்றது. இயலவில்லையெனில் சாதாரண சால் முறையைக் கடைபிடிப்பது சிறந்தது. விதை நேர்த்தி, இறவைப் பயிருக்கு செய்தது போலவே, மானாவாரிப் பயிருக்கு செய்யவேண்டியது அவசியம்.

    >  விதைப்பு


    • நிலத்தில் விதைகளை குறிப்பிட்ட ஆழத்தில் விதைக்கும்பொழுது பயிர்களின் முளைப்புத்திறன் அதிகரித்து பயிரின் எண்ணிக்கை பராமரிக்கப்படுகிறது. பருத்தி விதையை 5 செ.மீ ஆழத்தில் விதைக்கவேண்டும். கொரு என்ற விதைப்பான் (அ) டிராக்டரின் மூலம் விதைக்கக்கூடிய உழவு விதைப்பான் கொண்டும் விதைக்கலாம்.

    >  பயிர் இடைவெளி


    • தனிப்பயிராக இரகங்களையோ வீரிய ஒட்டு இரகங்களையோ சாகுபடி செய்யும் போது வரிசை இடைவெளியாக 45 செ.மீ செடிகளுக்கு இடையே 15 செ.மீ அளவும் விடவேண்டும்.
    • ஊடுபயிர் சாகுபடி செய்யும் போது ஓர் இரட்டை வரிசை பருத்தியை அடுத்து இரண்டு வரிசை பயறுவகை பயிர்கள் ஊன்றப்படுகின்றன. இதனால் பருத்தி செடியின் எண்ணிக்கை குறைவதில்லை.
    • இரகங்கள் பருத்திக்கான இடைவெளி (செ.மீ)<=>இரட்டை வரிசைக்குள் <=> இரு இரட்டை வரிசைக்கிடையில் <=> செடிகளுக்கு இடையில்
    • கே.11, எல்.ஆர்.ஏ 5166, எஸ்.வி.பி.ஆர் 2 <=> 30 <=> 60 <=> 15
    • பயறு வகைகளுக்கு 30 × 10 செ.மீ இடைவெளியில் ஒவ்வொரு இரட்டை இடைவெளியில் விதைக்கலாம். ஏ.பி.கே 1 என்ற உளுந்து இரகம் இதற்கு உகந்ததாகும்.

    >  அமில விதை நேர்த்தி

    இறவைப் பயிருக்கு செய்தது போலவே

    >  பஞ்சு நீக்கிய விதைகளில் பூஞ்சாணக் கொல்லி நேர்த்தி


    • இறவைப் பயிறுக்கேற்றாற் போலவே

    >  விதைப்பு


    • பலபயன் கருவியால் விதைப்பு மற்றும் உரமிடலை ஒரே சமயத்தில் செய்யலாம்.
    • கூம்பில் உரக்கலவையை இட்டு நிரப்பி இயக்கவேண்டும்.
    • மூன்று நபர்களைப் பயன்படுத்தி இருவர் பருத்தியையும் ஒருவர் பயறுவகை விதைகளையும் இடவேண்டும்.

    >  குறிப்பு


    • பருத்தி மற்றும் பயறு வகை விதைகளை 5 செ.மீ ஆழத்தில் கரிசல் மண்ணில் விதைக்கும் போது குறைந்த மழையால் அவை பாதிக்கப்படுவதில்லை. அதிக மழை பெய்யும் போது மட்டுமே நீர் இந்த ஆழத்திற்கு இறங்கி விதைகள் முளைக்கின்றன.

    >   இடைவெளி நிரப்புதல்


    • ஒவ்வொரு இடைவெளியிலும் 3-4 விதைகளை விதைக்கவேண்டும்.

    >  செடி களைப்பு


    • ஒரு குத்துக்கு இரண்டு செடிகளை விட்டு, விதைத்த 15 ஆம் நாள் செடிகளை களைத்து விடவேண்டும். பயறுவகை செடிகளை விதைத்த 20 ஆம் நாள் தட்டைப்பயறுக்கு 20 செ.மீ மற்றப் பயிர்களுக்கு 15 செ.மீ அளவில் விட்டு களைந்து விடவேண்டும்.

    >  களைக்கட்டுப்பாடு


    • பருத்திக்கு புளுகுளோரின் என்ற களைக் கொல்லியை எக்டருக்கு 2 லிட்டர் என்ற அளவில் நீருடன் கலந்து தெளித்தலின் மூலம் முதல் 25 நாட்களுக்குள் களைகளை தடுக்கலாம். பின்பு 30 (அ) 40வது நாளில் களைக் கொத்தியைக் கொண்டோ (அ) தந்துலு கலப்பையைக் கொண்டோ இரண்டாவது முறையாக களைகளை அப்புறப்படுத்தவேண்டும்.

    >  இலைவழி தெளித்தல்


    • பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்க ஒரு கிலோ யூரியாவை 1 லிட்டர் தண்ணிரில் கலந்து 45 மற்றும் 65 நாட்களில் இலைகளில் தெளிக்கவேண்டும்.

    >  பயிரிடை நேர்த்தி


    • விதைத்த 30 மற்றும் 45 ஆம் நாட்களில் நீண்டதகடுக்கத்தி கலப்பை கொண்டு உழுவது செடி வளர்ச்சி உகந்ததாகிறது. களையைக் கட்டுப்படுத்த மட்டுமன்றி நீரைச் சேமிக்கவும் உதவுகிறது. மண்ஈரம் காக்கும்பொருட்டு மண் போர்வை அமைத்து பயிர் வறட்சியில் வாடுவதைத் தடுக்கலாம். இதற்காக கசிவுநீர் மற்றும் பயிர்க் கழிவுகளைப் பயன்படுத்தலாம்.

    >  பயிர் வினையியல்


    • தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் காட்டன் ப்ளஸை ஏக்கருக்கு 2.5 கிகி 200லி தண்ணீரில் கலந்து இலைத் தெளிப்பாக அளிப்பதன் மூலம் பூ உதித்தல் குறைகிறது, காய் வெடித்தல் அதிகரிக்கிறது, விதை பருத்தி மகசூல் அதிகரிக்கிறது மற்றும் வறட்சியைத் தாங்கும் தன்மையை அளிக்கிறது.

    >  அறுவடை


    • குளிர்கால இறவைப் பருத்தியில் கூறப்பட்டுள்ள நடைமுறைகளையே கடைபிடிக்கவும்.
    ⇒   2.சணல்

    >  பயிர் மேலாண்மை


    • சணலை சாகுபடி செய்ய தகுந்த மாவட்டங்கள் கோயம்புத்தூர், கடலூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களாகும். மேலும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் சில பகுதிகளில் எங்கெல்லாம் நிச்சயமான நீர் நிலைகள் உள்ளனவோ, அங்கு சணல் சாகுபடி செய்யலாம்.

    >  மண் வகைகள்


    • மணல் கலந்த வண்டல், களிமண் சார்ந்த இடைப்பட்ட மண்வகைகள் சணல் சாகுபடி செய்ய ஏற்றவையாகும். கேப்சுலாரில் சணல் வகை நீர் தேங்கும் நன்செய் நிலங்களிலும் வளரக்கூடியது. ஆனால் ஒலிட்டோரியல் சணல் வகை நீர் தேங்கும் பகுதிகளில் வளராது.

    >  பருவம் :


    • மாசி - வைகாசி (பிப்ரவரி).

    >  இயற்கை மற்றும் செயற்கை உரமிடல்


    • ஐந்து டன் மக்கிய தொழு உரத்தை கடைசி உழவின்போது இடவேண்டும். எக்டருக்கு 20 கிராம் தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்களை அடியுரமாக இடவேண்டும். நீர் நிலைக்கு ஏற்ப பாத்தி அமைக்கப்பட வேண்டும்.

    >  இரகங்கள் :


    • சேப்சுலாரிஸ் சணல் - ஜே.ஆர்.சி 212,321,7447.
    • ஒலிட்டோரியல் -ஜே.ஆர்.ஓ 524, 878, 7835.
    • வயது - 120-140 நாட்கள்
    • சணல் வகை <=> விதையளவு (கி/எ) <=> இடைவெளி (செ.மீ) <=> ஒரு சதுர மீட்டருக்கு இருக்கவேண்டிய செடி எண்ணிக்கை
    • சணல் வகை <=> வரிசை விதைப்பு <=> தெளிப்பு
    • ஒலிட்டோரியல் <=> 5 <=> 7 <=> 25 x 5 <=> 80
    • கேப்சுலாரிஸ் <=> 7 <=> 10 <=> 30 x 5 <=> 67

    >  களை மேலாண்மை


    • இரண்டு முறை அதாவது விதைத்த 20-25 நாட்களில் ஒரு முறையும், 35-40 நாட்களில் ஒரு முறையும் களை எடுத்து கட்டுப்படுத்தலாம். புளுகுளோரலின் களைக்கொல்லியை ஒரு எக்டருக்கு 1.5 கிலோ என்ற அளவில் விதைத்த மூன்றாம் நாள் தெளித்து, உடன் நீர்ப்பாய்ச்சவேண்டும். இதைத் தொடர்ந்து 30-35 நாட்களில் ஒரு கைக்களை எடுக்கவேண்டும்.

    >  மேலுரம் இடல்


    • ஒவ்வொரு முறை களை எடுத்த பின்பும் அல்லது 20-25 நாட்கள் மற்றும் 35-40 நாட்களில் 10 கிலோ தழைச்சத்தை இடவேண்டும். வறட்சியான காலங்களில் 8 கிலோ யூரியாவை 2 சத கரைசலாக ஒரு லிட்டருக்கு 20 கிராம் யூரியா என்ற அளவில் 40-45 நாளிலும் மற்றும் 70-75 நாளிலும் தெளிக்கலாம்.

    >  நீர் மேலாண்மை


    • சராசரியாக சணல் பயிருக்கு 500 மில்லி மீட்டர் நீர் தேவைப்படும். விதைத்தவுடன் ஒரு முறையும் நான்காம் நாள் ஒரு முறையும் நீர் பாய்ச்சவேண்டும்.

    >  அறுவடை


    • சணல் சாதாரணமாக 100ல் இருந்து 110 நாட்களில் அறுவடைக்கு வரும். ஆனாலும் தேவைக்கேற்ப 135 நாட்கள் கழித்தும் அறுவடை செய்யலாம். அறுவடை செய்யப்பட்ட சணல் செடிகள் வயலில் 3-4 நாட்கள் பரப்பப்பட்டு இலையுதிரி வைக்கப்படவேண்டும். அதன் பிறகு மெல்லிய மற்றும் உருண்ட தண்டுகள் தனியாக பிரிக்கப்பட்டு கத்தைகளாக செளகரியத்திற்கேற்ப கட்டப்படவேண்டும்.

    >  மகசூல்


    • ஒரு எக்டரில் அறுவடையாகும் செடிகள் 45-50 டன்கள் வரை எடை உள்ளது. இதிலிருந்து எக்டருக்கு சுமார் 20-25 டன் சணல் கிடைக்க வாய்ப்புள்ளது.
    ⇒   6.சர்க்கரைப் பயிர்கள்

    >  1.கரும்பு சாகுபடி உத்திகள்


    >  பருவம் மற்றும் இரகங்கள்


    • தமிழ்நாட்டில் கரும்பு பொதுவாக டிசம்பர் மாதம் முதல் மே மாதம் வரை மூன்று பட்டங்களில் அதிகமாக நடவு செய்யப்படுகின்றது. இது தவிர திருச்சி, பெரம்பலூர், கரூர், சேலம், நாமக்கல் மற்றும் கோவை மாவட்டங்களில் ஜீன் முதல் செப்டம்பர் மாதம் வரை தனிப்பட்டமாக கரும்பு நடவு செய்யப்படுகிறது. பருவத்திற்கு ஏற்ப பட்டங்கள் பின்வருமாறு பிரிக்கப்படுகிறது.
    • முன்பட்டம் - டிசம்பர் - ஜனவரி
    • நடுப்பட்டம் - பிப்ரவரி - மார்ச்
    • பின்பட்டம் - ஏப்ரல் - மே
    • தனிப்பட்டம் - ஜீன் - ஜீலை
    • முன்பட்டத்திற்கு ஏற்ற இரகங்கள் தனிப்பட்டத்திற்கும் உகந்தவையாகும்

    >  கரும்பு நடவு வயல் தயாரிப்பு


    >  அ.களிமண்நிலம்


    • பொதுவாக களி மண் வயல்களில் நல்ல பொலபொலப்புத் தன்மை பெறும் வகையில் உழவு மேற்கொள்ள முடிவதில்லை
    • நெல் அறுவடைக்குப் பிறகு வயலின் குறுக்காகவும் வயலைச் சுற்றியும் நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் பாத்திகள் 6 மீட்டர் இடைவெளியில் 40 செ.மீ.ஆழம் மற்றும் 30 செ.மீ. அகலத்தில் அமைத்திட வேண்டும்
    • நடவு சால் மற்றும் சால் மேடுகள் 80 செ.மீ. இடைவெளியில் மண்வெட்டி கொண்டு அமைத்திட வேண்டும்
    • நடவு சாலினை 4 முதல் 5 நாட்கள் வரையிலும் களைகொத்தி கொண்டு கிளறி விடுதல் வேண்டும்

    >  அதிக தண்ணீர் தேங்கி பிரச்சினையாகும் நிலங்கள்


    • அதிகமாக தண்ணீர் தேங்கி நின்று மற்றும் அதனை வடித்து வெளியேற்ற முடியாத வயல்களில் 30 செ.மீ.இடைவெளியில் 5 மீட்டர் நீளம், 80 செ.மீ. அகலம் மற்றும் 15 செ.மீ. உயரம் கொண்ட மேட்டுப் பாத்திகள் அமைத்திட வேண்டும்.

    >  உ.இருமண் மற்றும் மணல்சாரி தோட்டக்கலை நிலங்கள்


    • ஆரம்பத்தில் இரண்டு தட்டு கலப்பை கொண்டு உழ வேண்டும். தொடர்ந்து எட்டு தட்டு கலப்பை கொண்டு உழ வேண்டும் மற்றும் உழும் கருவி பயன்படுத்தி ஆழ உழ வேண்டும். தொடர்ந்து ஒரு முறை சுழல் கலப்பை கொண்டு மண்ணை பொலபொலப்பாக்கி பண்படுத்துவதன் மூலம் களை மற்றும் பயிர்தூர் இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம்.
    • சீரான முறையில் நீர்ப்பாசனம் செய்திட நிலத்தினை நன்கு சமன்படுத்த வேண்டும்
    • நடவு சால் மற்றும் சால் மேடுகள் 80 செ.மீ. இடைவெளியில் விக்டரி அல்லது பார் அமைக்கும் கலப்பை கொண்டு அமைக்க வேண்டும். நடவு சால்கள் 20 செ.மீ. ஆழம் உடையதாக இருத்தல் வேண்டும்
    • நீர்ப்பாசன வாய்க்கால்கள் 10 மீட்டர் இடைவெளியில் இருத்தல் வேண்டும்

    >  அடியுரமாக அங்கக உரங்கள் இடுதல்


    • தோட்டக்கால் நிலங்களில் கடைசி உழவிற்கு முன்னதாக தொழுஉரம் 12.5 டன்/ எக்(ஆழ் குப்பை உரம் 25 டன்/ எக்(அ) ஆலை அழுக்கு 37.5 டன்/ எக் என்ற அளவில் இட வேண்டும். களி மண் நிலங்களில் மேற்கண்ட அங்கக உரங்களை நடவு சால்களில் இட்டு நன்கு கலந்து விடவேண்டும்.
    • கரும்புத் தோகை மற்றும் ஆலை அழுக்கு கொண்டு ஊட்டமேற்றிய குப்பை எரு தயாரித்தல்
    • காய்ந்த கரும்புத் தோகையை 15 செ.மீ. உயரத்திற்கு சுமார் 7 மீட்டர் நீளம் மற்றும் 3 மீட்டர் அகலப் பாத்திகளாக பரப்பவும். அதற்கு மேல் 5 செ.மீ. உயரத்திற்கு கரும்பு ஆலை அழுக்கினை பரப்பி விடுதல் வேண்டும். மசூரி ராக் பாஸ்பேட், ஜிப்சம் மற்றும் யூரியா உரங்களை முறையே 2:2:1 என்ற விகிதாச்சாரத்தில் கலந்து தோகை மற்றும் ஆலை அழுக்கு அடுக்கின் மீது 100 கிலோ தோகைக்கு 5 கிலோ உரக்கலவை என்ற விகிதத்தில் பரவலாகத் தூவி விட வேண்டும். பின்னர் அடுக்கு முழுவதும் நன்கு நனையும் வண்ணம் தண்ணீர் தெளிக்க வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள இடுபொருள்கள். ஒவ்வொன்றையும் அதே அளவில் மற்றும் அதே முறையில் திரும்பவும் கொடுத்து கடைசியாக அடுக்கின் மொத்த உயரம் 1.5 மீட்டர் அளவு வருமாறு செய்ய வேண்டும். தண்ணீர் தெளிப்பதற்கு பதிலாக கிடைக்கும் இடங்களில் தொழு உரக் கரைசல் பயன்படுத்தலாம். பின்னர் அடுக்கு முழுவதையும் மண் மற்றும் ஆலை அழுக்கு முறையே 11 என்ற விகித அளவில் கலந்த கலவை கொண்டு 15 செ.மீ. உயர அளவிற்கு மூடி விட வேண்டும். இவ்வடுக்கினை மூன்று மாதத்திற்கு மக்குவதற்காக அப்படியே விட்டுவிடவேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை அடுக்கு முழுவதும் நனையும் வண்ணம் நீர் தெளிக்க வேண்டும். மூன்று மாதமானதும் அடுக்கினை புரட்டி பின்னர் நன்கு கலந்து விட்டு ஒரு மாதத்திற்கு அப்படியே விட வேண்டும். நான்காவது மாத முடிவில் மறுபடியும் புரட்டி விட்டு பின் கலந்து 5வது மாத முடிவு வரை 15 நாள் இடைவெளியில் தண்ணீர் தெளிக்க வெண்டும். இம்முறையில் தயாரிக்கப்படும் கரும்புத்தோகை கம்போஸ்டில் தழை, மணி மற்றும் கால்சியம் சத்துக்களின் அளவு அதிகமாக இருப்பதோடு கரிமம் மற்றும் தழைச்சத்தின் விகிதாச்சாரம் கரும்புத் தோகையின் அளவை விட 10 மடங்கு குறைவாக இருக்கும்.

    >  அடியுரமாக இரசாயன உரங்கள் இடுதல்


    • மண் பரிசோதனை செய்யப்படவில்லையெனில் பொதுப்பரிந்துரையாக தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து முறையே எக்டருக்கு 300:100:200 கிகி அளிக்க வேண்டும். சூப்பர் பாஸ்பேட் (625 கிகி/எக்டர்) மண்வெட்டி கொண்டு அளிக்க வேண்டும்.
    • துத்தநாக சத்து மற்றும் இரும்புச்சத்துக் குறைபாடு உள்ள வயல்களில் முறையே 37.5 கிலோ/எக் துத்தநாக சல்பேட் மற்றும் 100 கிலோ/எக் பெரஸ் சல்பேட் இடுதல் வேண்டும்.
    • கந்தக பற்றாக்குறையுள்ள மணலில் ஜிப்சம் வடிவில் கந்தகத்தை எக்டருக்கு 500 கிகி அளிப்பதன் மூலம் கரும்பு விளைச்சல் மற்றும் சாறின் தரத்தை உயர்த்தலாம்.

    >  ஐ.ஏ.நடவு வயல் பராமரிப்பு


    >  கரும்பு நடவிற்கு விதைக்கரணை தயாரித்தல்


    • விதைக்கரணைகளை, நோய் மற்றும் பூச்சிகள் தாக்காத 6 முதல் 7 மாதமுடைய விதை நாற்றங்காலிலிருந்து தேர்வு செய்ய வேண்டும்
    • விதைக்கரணைகளில் ஒட்டியிருக்கும் காய்ந்த தோகைகளை ஆட்கள் கொண்டு கைகளால் நீக்க வேண்டும்
    • பிளவு இல்லாத விதை கரணைகளை பெற கூர்மையான கத்தி அல்லது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட கரணை வெட்டும் இயந்திரம் பயன்படுத்த வேண்டும்.
    • விதைக்கரணைகள் பக்கவாட்டில் விளந்து விடாமல் இருக்க கூரிய கத்தி கொண்டு தயார் செய்திடல் வேண்டும்
    • அடிப்பட்ட பருக்கள், பருக்கள் முளைத்த மற்றும் பிளவுபட்ட விதைக்கரணைகளை நீக்கி விட வேண்டும்
    • அசோஸ்பைரில்லம் விதை நேர்த்தி: நடவுக்கு முன்னர் 10 பொட்டலங்கள் (2 கிலோ/எக்) அஸோஸ்பைரில்லம் நுண்ணுயிருடன் தேவையான அளவு நீர் கலந்து அக்கலவையில் கரும்பு விதைக்கரணைகளை 15 நிமிடம் வரையில் நனைத்து பின் நடவு செய்ய வேண்டும்

    >   கரணை நேர்த்தி


    • ஆரோக்கியமான கரணைகளைத் தேர்வு செய்திடவேண்டும்
    • கரணைகளை 100 லிட்டர் தண்ணீரில் 50கி கார்பன்டிசம், 200மிலி மாலதியான் மற்றும் 1கிகி யூரியா கலந்து 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
    • கரணைகளை புல்தண்டு நோயிலிருந்து பாதுகாத்திட 1 மணி நேரத்திற்கு 50 டிகிரி சென்டிகிரேட் என்ற அளவில் வெப்ப நீராவி நேர்த்தி செய்திட வேண்டும்

    >  கரணை அளவு : 75,000 இரு பரு கரணைகள் எக்டருக்கு


    • கரும்பு நடவு முறையில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள்

    >  இயந்திர முறை நடவு


    • தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இயந்திர நடவு கருவி எக்டருக்கு ரூ.3750/- சேமிக்க உதவுகிறது மற்றும் நாள் ஒன்றிற்கு 1.5 எக்டர் பரப்பளவு நடவு செய்கிறது.
    • மனித ஆற்றலைக் குறைக்கிறது மற்றும் விதை அளவு எக்டருக்கு 5 டன்னாக குறைக்கிறது.
    • இணைவரிசை நடவுமுறையில் இரண்டு புறமும் கரணைகளை 150 + 30 செ.மீ இடைவெளியில் அஸ்ட்ராப் 8000 வகை (அறுவடை இயந்திரம்) கொண்டு அறுவடை செய்யுமாறு நட வேண்டும் மற்றும் 150 + 30 செ.மீ இடைவெளியில் நியூ ஹாலண்ட் 4000 வகை அறுவடை இயந்திரம் கொண்டு அறுவடை செய்யுமாறு ஒரு வரிசையில் நடவு செய்ய வேண்டும்.
    • நிலத்தடி சொட்டு நீர் பாசன முறையில் கரும்பை பயிர் செய்யும்போது சொட்டு நீர் குழாய்களை 20 செ.மீ ஆழத்தில் வாய்க்காலில் பதிக்க வேண்டும் மற்றும் விதை கரணைகளை சொட்டு நீர் குழாய்க்கு 5 செ.மீ மேல் இருக்குமாறு பதிக்க வேண்டும்.
    • செம்மை கரும்பு சாகுபடியில் 25-35 நாட்கள் வளர்ந்த நாற்றுகளை 5x2 அடி இடைவெளியில் விளைநிலத்தில் நட்டு சொட்டு நீர் பாசனம் அமைக்க வேண்டும்.
    • பரந்த இடைவெளி கரும்பு சாகுபடியில் ஊடுபயிராக தக்கைப் பூண்டு மற்றும் சணப்பை பயிரிடுவதன் மூலம் மண் வளம் மேம்படும் மற்றும் களைகளை கட்டுபடுத்தலாம். இது இளங்குருத்துப் புழு நோய் நிகழ்வைக் குறைக்கிறது மற்றும் கரும்பு விளைச்சல் அதிகரிக்கிறது.
    • கடின மண்ணில் வரப்பில் கரணைகளை 80 செ.மீ இடைவெளியில் நடுவதன் மூலம் கரணை அழுகல்நோயை தவிர்க்கலாம் வளர்ச்சியும் நன்றாக இருக்கும்.
    • நடவு செய்த மூன்று நாட்களுக்குள் வரப்பின் எதிர் திசையில்10 செ.மீ இடைவெளியில் ரைசோபிம் கொண்டு விதை நேர்த்தி செய்யப்பட்ட பசுந்தாள் விதைகளை எக்டருக்கு 10 கிலோ அளவு விதைக்க வேண்டும்.
    • அதிக இடைவெளியுள்ள பயிர்களில் நடவு செய்த 50-60 நாட்களில் பசுந்தாளை உழுதுவிட வேண்டும் மற்றும் நடவு செய்த 90-100 வது நாளில் பரிந்துரைக்கப்பட்ட தழைச்சத்துடன் மண் அணைக்க வேண்டும்.
    • சுழல் கலப்பை பொருத்திய எந்திரக் களையெடுக்கும் கருவியை கொண்டு களை எடுக்க வேண்டும் மற்றும் சால் அமைக்கும் கருவி கொண்டு மண் அணைப்பதன் மூலம் ஆட்கள் செலவை சேமிக்கிறது மற்றும் தொழிலாளர் வேலைபளுவைக் குறைக்கிறது.
    • நான்கு அடி வரிசை. ஒவ்வொரு வரிசையிலும் இரண்டு வரி நடவு. மண்ணின் வளத்தை அதிகரிக்க ஊடுபயிராக தக்கைப் பூண்டு/ சணப்பை நடவு செய்ய வேண்டும். இது மேலும் இளங்குருத்துப் புழு நோய் நிகழ்வைக் குறைக்கிறது மற்றும் விளைச்சலை அதிகரிக்கிறது.
    • கரணைகளை வரப்பின் ஒரு பக்கத்தில் நடவு செய்ய வேண்டும். வரப்பின் எதிர் புறத்தில் 10 செ.மீ உயரம் கொண்ட வரப்பில் ரைசோபியம் விதை நேர்த்தி செய்யப்பட்ட பசுந்தாள் விதைகளை 10 கிலோ/ எக்டர் விதைக்க வேண்டும்.
    • நடவு செய்த 50-60 நாட்களுக்குப் பிறகு பசுந்தாள் உரத்தை அளிக்க வேண்டும் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட தழைச்சத்து கொண்டு பகுதி மண் அணைத்தல் வேண்டும்.
    • களையெடுக்கும் கருவி கொண்டு களையெடுக்க வேண்டும் மற்றும் மண் அணைத்தல் மூலம் பணியாளர்கள் கூலி செலவைக் குறைக்கிறது மற்றும் மனித வேலைபளுவைக் குறைக்கிறது.

    >  போக்கிடங்களை நிரப்புதல்


    • வயலில் போக்கிடங்கள் இருந்தால் நடவு செய்த 30 நாட்களுக்குள் முளைத்த கரணைகளைக் கொண்டு நடவு செய்திட வேண்டும்
    • இரண்டு பதியம் கரணைகளைக் கொண்டு சந்து நிரப்புதல் வேண்டும்/ 15-20 நாட்களான பாலித்தீன் பை நாற்றுகளை நடவு செய்வதன் மூலம் பயிர் நன்றாக வளரும்.
    • போக்கிடங்களில் நடவு செய்த பிறகு மூன்று வாரங்கள் வரையிலும் வயலில் தேவையான ஈரப்பதம் இருக்குமாறு பார்த்துக் கொள்வது கரணைகள் நன்கு முளைத்து வளர ஏதுவாகும்

    >  தோகை பரப்புதல்


    • சால்மேடுகளில் காய்ந்த கரும்புத் தோகையை சீராக 10 செ.மீ உயரத்திற்கு நடவு செய்த ஒரு வாரத்திற்குள் பரப்புதல் வேண்டும். இதனால் வறட்சி காலங்களில் கரும்பு தாக்குப்பிடித்து வளர்வதற்கும் கரும்பின் நீர் தேவை குறைவதற்கும், களைச் செடிகளின் ஆதிக்கம் குறைவதற்கும் மற்றும் இளங்குருத்துப் புழுவின் தாக்குதல் குறைவதற்கும் வாய்ப்பு உள்ளது. களிமண் வகைகளில் தோகைபரப்புதலைநடவு செய்த 21 நாட்களுக்குப பிறகு செய்திட வேண்டும். கரையான் தொல்லை அதிகம் உள்ள இடங்களில் தோகை பரப்புதலை செய்யாமல் இருத்தல் நன்று

    >  ஊடுபயிர் சாகுபடி


    • தண்ணீர் தட்டுப்பாட்டு அற்ற பகுதிகளில் சோயா மொச்சை அல்லது உளுந்து அல்லது பச்சைப்பயறு போன்ற பயிர்களை கரும்பு நடவுசால் மேடுகளின் நடுவில் ஒரு வரிசையில் விதைக்கலாம். கொளுஞ்சி அல்லது சணப்பை ஊடுபயிராக நடவுசால் மேடுகளில் விதைத்த 45ம் நாள் பிடுங்கி கரும்பு வரிசைக்கு அருகே வைத்து மண் அணைப்பதின் மூலமாக மண்ணின் சத்துக்கள் அதிகரிப்பதோடு கரும்பில் அதிக மகசூல் அடையலாம். மேலும் கோ1 என்ற சோயா மொச்சை ஊடுபயிர் செய்வதின் மூலம் கரும்பின் மகசூல் குறையாமல் சோயா மொச்சையிலிருந்து ஒரு எக்டரக்கு 800 கிலோ வரையில் மகசூல் எடுக்கலாம்

    >  களை நிர்வாகம்


    • களை அதிகமாக உள்ள இடத்தில் பயிர் வரிசையில் ஒரு வரி களையெடுக்க வேண்டும் மற்றும் விதைத்த 30,60 மற்றும் 90ம் நாட்களில் மண்வெட்டி கொண்டு வரப்புகளில் களையெடுக்க வேண்டும்.
    • அட்ராஜின் 2கிலோ தெளிக்கவும் அல்லது எக்டருக்கு 750மிலி ஆக்ஸிப்ளுர்ஃபென் 600 லிட்டர் தண்ணீரில் கலந்து முளைக்குமுன் களைக்கொல்லியாக நடவு செய்த 3ம் நாளில் விசிறி வடிவ குழாய் கொண்ட நேப்சாக் தெளிப்பான் கொண்டு தெளிக்கவும்.
    • விதைத்த 3-ம் நாள் களை முளைப்பதற்கு முன் அட்ராஜின் எக்டருக்கு 1.0 கிலோ அளிக்கவும். தொடர்ந்து விதைத்த 45-ம் நாள் களை முளைத்தபின் கிளைபோசேட் எக்டருக்கு 1.0 லிட்டர் அளிக்கவும். விதைத்த 90-ம் நாள் கைக்களை எடுக்க வேண்டும். களை முளைப்பதற்கு முன் களைக்கொல்லி தெளிக்கப்படவில்லையெனில், களை முளைத்த பின் விதைத்த 21-ம் நாளில் கிராமசோன் லிட்டர் + 2,4-D சோடியம் உப்பு எக்டருக்கு 2.5 கிலோ 600 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்க வேண்டும்.
    • ஒட்டுண்ணிக் களைகள் பிரச்சனை இருப்பின் களை முளைத்த பின் 2,4-D சோடியம் உப்பு எக்டருக்கு ஒரு கிலோ 500 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும். அருகில் பருத்தி அல்லது வெண்டை செடி இருந்தால் 2,4-D தெளிப்பதை தவிர்க்கவும். 20% யூரியாவை நேரடியாக அளிப்பதன் மூலம் சுடு மல்லியை கட்டுப்படுத்தலாம்.
    • நடவுக்கு முன்னர் தெளிப்பாக விதைப்பதற்கு 21 நாட்கள் முன்னர் கிளைபோசேட் 2.0 கிலோவை அமோனியம் சல்பேட் 2% கலந்து அளிக்க வேண்டும்.தொடர்ந்து களை முளைத்த பின்ளர் கிளைபோசேட் 2.0 கிலோவை அமோனியம் சல்பேட் 2% கலந்து விதைத்த 30-ம் நாள் அளிக்க வேண்டும். இதன் மூலம் கோரைபுற்களை கட்டுப்படுத்தலாம். களை இல்லாத சூழலை உருவாக்கலாம்.
    • களைக் கொல்லிகள் வேலை செய்யாவிட்டால் சிறிய மண்வெட்டி கொண்டு வரப்புகளில் நடவு செய்த 25, 55 மற்றும் 85-ம் நாளில் களையெடுக்க வேண்டும். வாய்க்காலில் கைக்கொத்து கொண்டு களைகளை நீக்க வேண்டும்.
    • களை முளைத்த பின் நேரடி தெளிப்பாக ஃபெர்னோசோன் (2, 4 –D சோடியம் உப்பு) 2கிராம் + 10 கிராம் யூரியா ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து படர் கொடி களைகளை அழிக்க தெளிக்கலாம்.

    >  ஊடு பயிரிட்ட கரும்பு வயலில் களை நிர்வாகம்


    • சோயாமொச்சை, உளுந்து மற்றும் மணிலா போன்ற ஊடு பயிர் சாகுபடி செய்யப்பட்ட கரும்பு வயல்களில் களைகள் முளைக்கும் முன் தெளிக்கக்கூடிய களைக்கொல்லியான தயோபென்கார்ப் 1.25 கிலோ/ எக் என்ற அளவில் தெளிக்கலாம். கரும்பில் ஊடுபயிர் செய்வதால் பொதுவாக கரும்பின் மகசூல் மற்றும் சர்க்கரைக் கட்டுமானம் குறைவதில்லை

    >  மண் அணைத்தல்


    • மூன்றாவது தவணையாக இரசாயன உரம் இட்ட 90வது நாட்களுக்குப் பிறகு விக்டரி கலப்பை கொண்டு சால்மேடுகளை இருபுறமும் உடைத்து விடுவதன் மூலம் சீரிய முறையிலும் சிக்கனமாகவும் மண் அணைக்கலாம். கரும்பு நடவு செய்த 150வது நாள் மண்வெட்டி அல்லது விக்டரி கலப்பை கொண்டு மண் அணைக்கலாம்.

    >  தோகை உரித்தல்


    • துளைப்பான் தாக்குதலை தவிர்க்க 150 மற்றும் 210வது நாளில் உலர் கரும்பு இலைகளை நீக்க வேண்டும்.

    >  விட்டம் கட்டுதல்


    • கரும்பில் நடவு செய்த 210ம் நாள் கரும்பின் இரண்டு வரிசையில் உள்ள கரும்புகளை குறுக்காக ஒன்று சேர்த்து விட்டம் கட்டவேண்டும்

    >  மேலுரமிடுதல்


    >  மண்ணில் இடுதல்


    • தண்ணீர் பற்றாக்குறை இல்லாத இடங்களில் 275 கிலோ தழைச்சத்து மற்றும் 112.5 கிலோ சாம்பல் சத்து/ எக் என்ற அளவில் மூன்று சம பாகங்களாகப் பிரித்து கரும்பு நடவு செய்த 30, 60 மற்றும் 90ம் நாள் இடுதல் வேண்டும்
    • கிணற்றுப் பாசனமுடைய பகுதிகளில் 225 கிலோ தழைச்சத்து மற்றும் 112.5 கிலோ சாம்பல் சத்து/ எக் என்ற அளவில் மூன்று சம பாகங்களாகப் பிரித்து கரும்பு நடவு செய்த 30, 60 மற்றும் 90ம் நாள் இடுதல் வேண்டும்
    • கிணற்றுப் பாசனமுடைய பகுதிகளில் 225 கிலோ தழைச்சத்து மற்றும் 112.5 கிலோ சாம்பல் சத்து/ எக் என்ற அளவினை மூன்று சம பாகங்களாகப் பிரித்து நடவு செய்த 30, 60 மற்றும் 90வது நாட்களில் இடுதல் வேண்டும்.

    >  தழைச்சத்து சேமிப்பு


    >  வேப்பம்புண்ணாக்கு கலந்த யூரியா


    • 67.5 கிலோ தழைச்சத்து/ எக் ரூ.27.5 கிலோ வேப்பம்புண்ணாக்கினை நடவு செய்த 30, 60 மற்றும் 90 நாட்களில் இட வேண்டும்

    >  குறிப்பு:


    • வேப்பம்புண்ணாக்கு கலத்தல் தேவையான அளவு வேப்பம்புண்ணாக்கினைப் பொடி செய்து அதனை யூரியா உரத்துடன் நன்கு கலந்து 24 மணி நேரத்திற்கு வைத்து பின்னர் உபயோகிக்கலாம். இதன் மூலம் 75 கி தழைச்சத்து/எக் மிச்சமாகிறது.

    >  அசோஸ்பைரில்லம்


    • பொட்டலம் (2400 கிராம்/ எக்) அசோஸ்பைரில்லம் அல்லது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் நுண்ணுயிர் கலவை எண் 1 உடன் 25 கிலோ தொழு உரம் மற்றும் 25 கிலோ மண் கலந்து நடவு செய்த 30வது நாள் கரும்புப் பயிர் குத்துக்களுக்கு அருகே இட வேண்டும். இதே போல் கரும்பு நட்ட 60வது மற்றும் 90வது நாட்களில் இதே அளவில் இடுதல் வேண்டும். (கிணற்று நீர்ப்பாசனமுடைய இடங்களுக்கு)
    Image result for agriculture

    >  தொடராக இடுதல்


    • கரும்புப் பயிர் வரிசைக்கு பக்கவாட்டில் களைக் கொத்தி கொண்டு சுமார் 5 செ.மீ. ஆழசால் அமைத்து அதில் உரங்களை தொடராக இட்டு பின்னர் மண் கொண்டு மூட வேண்டும்.

    >  ஆழ்துளை முறையில் இடுதல்


    • 255 கிலோ தழைச்சத்தினை யூரியா மற்றும் பொட்டாஷ் சேர்த்து15 செ.மீ. ஆழத்தில் கரும்புப் பயிரின் ஒவ்வொரு குத்துக்கு அருகே இடுவதன் மூலம் 20 கிலோ தழைச்சத்தினை கரும்பின் மகசூல் பாதிக்காத வகையில் சேமிக்கலாம்

    >  நுண்ணூட்டச்சத்து உரங்கள்:


    • துத்தநாக பற்றாக்குறையுள்ள மண்: அடியுரமாக எக்டருக்கு 37.5 கிலோ துத்தநாக சல்பேட் அளிக்கவும்.
    • கரும்பில் துத்தநாக பற்றாக்குறை அறிகுறிகள்: இலைத் தெளிப்பாக 0.5% துத்தநாக சல்பேட்டை 1% யூரியாவுடன் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் பற்றாக்குறை மறையும் வரை தெளிக்க வேண்டும்.
    • இரும்பு பற்றாக்குறையுள்ள மண்: அடியுரமாக எக்டருக்கு 100 கிலோ ஃபொரோஸ் சலடபேட் அளிக்கவும்.
    • கரும்பில் இரும்பு பற்றாக்குறை அறிகுறிகள்: இலைத் தெளிப்பாக 1% ஃபொரோஸ் சலடபேட்டை 1% யூரியாவுடன் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் பற்றாக்குறை மறையும் வரை தெளிக்க வேண்டும்.
    • தாமிர பற்றாக்குறையுள்ள மண்ணில் தாமிர சல்பேட்டை எக்டருக்கு 5 கிலோ மண் வழியாக அளிக்க வேண்டும். மாற்றாக இலைத் தெளிப்பாக 0.2% தாமிர சல்பேட்டை இரண்டு முறை பயிர் வளர்ச்சியின் ஆரம்பத்தில் அளிக்க வேண்டும்.
    • பொதுவான நுண்ணூட்டச்சத்து கலவை: கரும்பிற்கு எக்டருக்கு 50 கிலோ நுண்ணூட்டச்சத்துக் கலவையை அளிக்க வேண்டும். நுண்ணூட்டச்சத்துக் கலவை 20 கிலோ ஃபெரோஸ் சல்பேட், 10 கிலோ மாங்கனீசு சல்பேட், 10 கிலோ துத்தநாக சல்பேட், 100 கிலோ மக்கிய தொழுவுரத்துடன் கலந்த 5 கிலோ போரக்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இவை நடவிற்கு முன்னர் மண்ணில் அளிக்க பரிந்துரைக்கப்படுகிறது.
    • (அல்லது) கரும்பின் மகசூலை அதிகரிக்க தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நுண்ணூட்டக் கலவையை எக்டருக்கு 50 கிலோ ஊட்டமேற்றிய தொழுவுரமாக அளிக்கலாம்.

    >  நுண்ணூட்டச்சத்து மற்றும் பேரூட்டச்சத்தின் பரிந்துரைக்கப்பட்ட அளவு


    >  பேரூட்டச்சத்து


    • கரும்பு – நடவு பயிர் (சர்க்கரை ஆலைக்காக உற்பத்தி செய்யப்படும் கரும்பு) எக்டருக்கு 300:100:200 கிலோ தழைச்சத்து , மணிச்சத்து and சாம்பல் சத்து இட வேண்டும்.
    • கரும்பு – மறுதாம்பு பயிர் (சர்க்கரை ஆலைக்காக உற்பத்தி செய்யப்படும் கரும்பு) எக்டருக்கு 300 + 25% அதிக தழைச்சத்து : 100 : 200 kg மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து இட வேண்டும்.
    • வெல்லத்திற்காக உற்பத்தி செய்யப்படும் கரும்பு (நடவு மற்றும் மறுதாம்பு பயிர்) எக்டருக்கு 225 : 62.5 : 112.5 கிலோ தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து

    >  கரும்பிற்கான உயிர் உரம்


    • அசோஸ்பைரில்லம் என்பது கரும்பு வேர்களுக்கு ஊட்டமளிக்கும் பொதுவான தழைச்சத்தாகும் மற்றும் வருடத்திற்கு ஒரு ஏக்கருக்கு 50 முதல் 75 கிலோ வளிமண்டல தழைச்சத்தை நிவர்த்தி செய்கிறது. தற்சமயம் பயிரில் வாழும் பாக்டீரியம் (குலுகன்அசிடோபேக்டர் டைஅசோட்ராபிகஸ்) கரும்பில் அசோஸ்பைரில்லமை விட அதிகமாக தழைச்சத்தை நிலை நிறுத்துகிறது. இவை கரும்பு பயிர் முழுவதிற்கும் தழைச்சத்தை எடுத்துச் செல்கிறது மற்றும் தழைச்சத்தின் அளவை அதிகரிக்கிறது. மண்ணில் பாஸ்பேட், இரும்பு மற்றும் துத்தநாக சத்தை வேர் வரை கொண்டு செல்கிறது. இது பயிர் வளர்ச்சியை அதிகரிக்கிறது மற்றும் கரும்பின் மகசூலையும் சாறில் இனிப்புத் தன்மையையும் அதிகரிக்கிறது. இது அசோஸ்பைரில்லத்தைவிட அதிக செயல்திறன் வாய்ந்தது. த.வே.ப.கழக பயோபெர்ட் -1 பாஸ்போபாக்டீரியாவை பாஸ்பரஸ் கரைப்பானாக கரும்பு பயிருக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

    >  குலுகன்அசிடோபேக்டர் டைஅசோட்ராபிகஸ் கொண்டு கரணை நேர்த்தி செய்தல்


    • கரணைகளை நடுவதற்கு முன் எக்டருக்கு 10 பாக்கெட் (2 கிலோ)குலுகன்அசிடோபேக்டர் டைஅசோட்ராபிகஸை 250 லிட்டர் தண்ணீரில் கலந்து நேர்த்தி செய்ய வேண்டும்.

    >  குலுகன்அசிடோபேக்டர் டைஅசோட்ராபிகஸ் கொண்டு அடியுரமிடுதல்


    • எக்டருக்கு 12 பாக்கெட் (2.4 கிலோ) விதைத்த 30, 50 மற்றும் 90-ம் நாள் நீர்ப்பாய்ச்சிய நிலையில் அடியுரமாக அளிக்க வேண்டும்.

    >  அதே முறையில் பாஸ்போ பாக்டீரியா அளித்தல்


    • அடியுரம் இடாவிட்டால் அதே முறையில் விதைத்த 30, 50 மற்றும் 90-ம் நாள் நீர்ப்பாய்ச்சிய நிலையில் அடியுரமாக அளிக்க வேண்டும்.
    • நுண்ணுயிர் நேர்த்தி நடவிற்கு சற்று முன்பு அளிக்க வேண்டும். நுண்ணுயிர் உரம் அளித்தவுடன் நடவு செய்து நீர்ப்பாய்ச்ச வேண்டும்.
    • நுண்ணுயிர் உரத்தை இரசாயன உரத்துடன் கலக்க வேண்டாம்.
    • பரிந்துரைக்கப்பட்ட தழைச்சத்தை 25% குறைப்பதன் மூலம் நுண்ணுயிர் உரம் அளித்ததன் பலனை அடையலாம்.

    >  நீர் நிர்வாகம்


    • கரும்புப் பயிருக்கு அதன் வளர்ச்சிப் பருவங்களுக்கு ஏற்ப நீர் பாய்ச்சுதல் வேண்டும்

    >  முளைப்புப் பருவம் (0-35 நாட்கள்)


    • கரும்புப் பயிருக்கு அதன் முளைப்புப் பருவத்தில் குறைந்தபட்சமாக 2 முதல் 3 செ.மீ. ஆழத்திற்கு குறுகிய இடைவெளியில் நீர் பாய்ச்சுதல் மணல்சாரி இடங்களில் கரும்பின் முளைப்புத் திறனை மேம்படுத்தும். தெளிப்பு நீர்ப்பாசனம் பயிரின் முளைப்பு கால வளர்ச்சிப் பருவத்திற்கு ஏற்றதாகும். பின்னர் கிளைப்பு, வளர்ச்சி மற்றும் முதிர்ச்சிப் பருவத்தில் முறையே 0.75, 0.75 மற்றும் 0.50 பாசன நீர் மொத்த ஆவியாகுதல் (IW/CPE) விகிதத்தில் நீர் பாய்ச்சிட வேண்டும்
    • பருவம் <=> மணல் நிலம் <=> களிமண்
    • கிளைப்புப் பருவம் (36 முதல் 100 நாட்கள்) <=> 8 <=> 10
    • வளர்ச்சிப் பருவம் (101 முதல் 270 நாட்கள் <=> 8 <=> 10
    • முதிர்ச்சி பருவம் (271 நாட்கள் முதல் அறுவடை வரை) <=> 10 <=> 14

    >  சொட்டு நீர்ப்பாசனம்


    • 6 முதல் 7 மாத கரும்பு நாற்றங்காலிலிருந்து தேர்வு செய்யப்பட்ட விதைக்கரணைகளை 30 × 30 × 30 / 150 செ.மீ என்ற இடைவெளியில் இரு வரிசை பாரில் நடவு செய்யவும்
    • ஒரு வரிசையில் மீட்டர் ஒன்றிற்கு எட்டு கரணைகளை வரப்பின் இரண்டு பக்கத்திலும் நடுவதன் மூலம் வாய்க்கால் நடவு முறையை அமைக்கலாம்.
    • 12 மிமீ அகல சொட்டு நீர்ப்பாசன பக்கவாட்டு குழாய்களை நடவு சால்மேட்டின் மத்தியில் இருபக்கவாட்டு குழாய்களுக்கான இடைவெளி 240 செ.மீ. இருக்கும் விதத்தில் அமைக்க வேண்டும். இந்த பக்கவாட்டு குழாய்களிலிருந்து 75 செ.மீ. இடைவெளியில் ஒரு மணி நேரத்திற்கு 8 லிட்டர் பாசன சொட்டு நீர் வெளியாகும் விதமாக வடிவமைக்க வேண்டும். பக்கவாட்டு குழாய்களின் நீளம் 30 லிருந்து 40 மீட்டர்க்கு மேல் போகாமல் இருக்க வேண்டும்
    • 62.5 கி/ எக் என்ற அளவில் மணிச்சத்தினை அடியுரமாக நடவிற்கு முன்னர்இடவேண்டும்
    • தழை மற்றும் சாம்பல் சத்தினை முறையே 275 1125 கி/ எக். என்ற அளவில் சொட்டு நீர்க் குழாய்களின் வழியே ’வென்ட்சூரி’ உபகரணம் கொண்டு 10 முதல் 12 பகுதியாக நடவு செய்த 15 முதல் 180 நாட்கள் வரை கொடுக்க வேண்டும்
    • குறைந்த மற்றும் மிதமான ஊட்டச்சத்து வயல்களில் 50 சத தழை மற்றும் சாம்பல் சத்துக்களை அதிக அளவில் இட வேண்டும்
    • தண்ணீரானது மண் மற்றும் பயிரிலிருந்து ஆவியாக வெளியேறுதலைப் பொருத்து கரும்பிற்கு மூன்று நாட்களுக்கு ஒரு முறை சொட்டு நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்
    • நிலத்தடியில் 120+40 செ.மீ பக்கவாட்டு இடைவெளியில் கரும்பை இரண்டு புறமும் நடவு செய்ய வேண்டும்.

    >  சொட்டு நீர் பாசன உரமிடுதல் மகசூலை அதிகரிக்கும்


    • பரிந்துரைக்கப்பட்ட 125 % தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்தை (275:63:112..5 கிலோ/எக்டர்) குழி வழி முறை உரப்பாசனம் அளிப்பதன் மூலம் மகசூலை அதிகரிக்கலாம்.

    >  எதிர்பாராசூழ்நிலைக்கேற்ற நிவாரணத் திட்டம் ,இடர்பாடான சூழ்நிலைகளில் படிப்படியாக சால்களை அகலப்படுத்துதல்


    • நடவு சமயத்தில் 30 செ.மீ. அகலத்தில் நீர்ப்பாசனம் வாய்க்கால் அமைத்து பின்னர் அதனை 45 செ.மீ. அளவிற்கு நடவு செய்த 45ம் நாள் முதல் மண் அணைக்கும்போது அகலப்படுத்தி மேலும் 90ம் நாள் மேற்கொள்ளும் ஆழப்படுத்துவதின் மூலம் 35 சதவிகிதத் தண்ணீரினைச் சேமிக்கலாம்

    >  வறட்சி நிர்வாகம்


    • கரும்பு விதைக்கரணைகளை 80 கிலோ நீர்த்த சுண்ணாம்புடன் 400 லிட்டர் தண்ணீர் கலந்த கலவையில் 1மணி நேரம் ஊறவைத்தல்
    • 30 செ.மீ. ஆழமான நடவு சால்களில் கரணைகளை நடவு செய்தல்
    • பொட்டாஷ் மற்றும் யூரியா 2.5 சத சரைசலை வறட்சி காலங்களில் 15 நாட்கள் இடைவெளியில் தெளித்தல்
    • 6 சத கயோலின் (60 கிராம் கயோலின் 1 லிட்டர் தண்ணீருக்கு) தெளித்து நீர்த்தேவையினைக் குறைத்தல்
    • தண்ணீர் தட்டுப்பாடான பகுதியில் மாறுசால் அல்லது விடுசால் பாசனம் நன்மைக்குறியதாகும்
    • நடவு செய்த 120ம் நாள் கூடுதலாக 125 கி பொட்டாஷ்/ எக் என்ற அளவில் இட வேண்டும்
    • கடைசி உழவின் பொழுது தென்னை நார்க்கழிவு 25 டன்/ எக் என்ற அளவில் இடுதல்
    • காய்ந்த சோகைகளை 5வது மாதம் உரித்து கரும்பு வரிசைக்கு இடையே பரப்புதல்

    >   வறட்சி மேலாண்மை


    • நீர் பற்றாக்குறையை சரிகட்ட எத்தரல் 200 பி.பி.எம். அல்லது சுண்ணாம்புக் கரைசல் (80 கிலோ சுண்ணாம்பை 400 லிட்டர் நீரில் கரைத்து கிடைக்கும் கரைசல்) போன்றவற்றில் விதைக்க கரணைகளை ஒரு மணி நேரம் நனைத்து வைத்திருந்த 30 செ.மீ. ஆழத்தில் நடவு செய்ய வேண்டும். பின்பு நீர் பற்றாக்குறை காலங்களில் பொட்டாஷ் மற்றும் யூரியா 2.5 சதவிகித கரைசல் ஒவ்வொன்றையும் 15 லிட்டர் நீரில் கரைத்து கிடைக்கும் கரைசல்) கரைசலை தெளிப்புச் செய்ய வேண்டும். நீர்ப்பற்றாக்குறையான சூழ்நிலைகளில் மாற்று சால் மற்றும் சால் விட்டு சால் பாசன முறைகளைக் கையாளுவது நன்மை பயப்பனவாக அமைகிறது.

    >   அறுவடை முன் நேர்த்திகள்


    >  அ.கரும்பு முதிர்ச்சி ஊக்கி தெளித்தல்


    • சோடியம் மெட்டா சிலிகேட் 4 கிலோ / எக் என்ற அளவில் 750 லிட்டர் தண்ணீர் கலந்து கரும்பு நடவு செய்த 6ம் மாதம் தெளிக்க வேண்டும். பின்னர் அதே இரசாயனத்தை 8 மற்றும் 10வது மாதத்தில் இருமுறை தெளிப்பதன் மூலம் கரும்பு மகசூல் மற்றும் சர்க்கரை கட்டுமானத்தை அதிகரிக்கலாம்.

    >  ஆ.கரும்பின் முதிர்ச்சி அறிதல்


    • கரும்பின் முதிர்ச்சியை பிரிக்ஸ் மீட்டர் என்ற கருவியின் மூலம் அறியலாம். 18 முதல் 20 சத பிரிக்ஸ் அளவு கரும்பின் முதிர்ச்சியை குறிக்கும். கரும்பின் நுனி மற்றும் கீழ் பகுதி பிரிக்ஸ் அளவு 11 விகித அளவில் இருத்தல் வேண்டும்.
    ⇒   அறுவடை
    • முன்பட்ட கரும்பு இரகங்களை 10 முதல் 11 மாதத்திற்குள்ளும் பின்பட்ட இரகங்களை 11 முதல் 12 மாதத்திற்குள்ளும் அறுவடை செய்ய வேண்டும்
    • கரும்பினை அதன் உச்ச கட்ட முதிர்ச்சி காலத்தில் அறுவடை செய்ய வேண்டும். அறுவடை செய்யும்போது நடவுப் பயிராக இருந்தாலும் அல்லது மறுதாம்புப் பயிராக இருந்தாலும் தரையோடு தரையாக பூமி மட்டத்திற்கு அறுவடை செய்ய வேண்டும்
    ⇒   மறுதாம்பு பயிர்

    >  நடவு கரும்பின் அறுவடைக்கு பின் செய்ய வேண்டியவை


    • கரும்பு அறுவடைக்குப் பின் கீழ்க்கண்ட செய் நேர்த்திகளை 10 நாட்களுக்குள் முடிப்பதன் மூலமாக கட்டை கரும்பின் துளிர்ப்பு மற்றும் வளர்ச்சி சீராக அமையும் கரும்பு தோகைகளை வயலில் இருந்து வெளியே எடுத்துவிட வேண்டும்.
    • தோகைகளை எரித்தல் கூடாது.மண் நிறைக்க நீர்ப்பாசனம் செய்யவும் நல்ல ஈரப்பதத்தில் கூரிய மண்வெட்டி கொண்டு மண் மட்டத்திற்கு கீழ் 4-6 செ.மீ. அளவிற்கு கரும்பு கட்டையை சீவ வேண்டும். கூப்பர் கலப்பை கொண்டு கரும்பு பயிரின் இரு கரைகளையும் உடைத்துவிட வேண்டும். கட்டைக் கரும்பின் போக்கிடங்களை கட்டை சீவிய 30 நாட்களுக்குள் நிரப்ப வேண்டும். இதற்கு அதே நிலத்தில் இருந்து எடுக்கப்பட்ட கரும்பு குத்துக்களை பிரித்து நடவு செய்யலாம். அல்லது பாலித்தீன் பை நாற்றுகளைக் கொண்டும் போக்கிடங்களை நிரப்பலாம். நடவு பயிருக்கு பரிந்துரை செய்யப்படும் அதே அளவில் அங்கக உரம் மற்றும் சூப்பர் பாஸ்பேட் உரத்தினை இடுதல் வேண்டும்

    >  மறுதாம்புப் பயிர் நிர்வாகம் ஐஐ.பயிர் நிர்வாகம்


    • 25 சத அதிகப்படியான தழைச்சத்தினை கட்டைவிட்ட 5-7 நாட்களில் அளித்தல்
    • பயிர் இரும்புசத்து பற்றாக்குறையால் மஞ்சளாக மாறும் போது அன்னபேதி உப்பினை 2.5 கி/எக் என்ற அளவில் கட்டைவிட்ட 15ம் நாள் தெளித்தல் பயிர் மீண்டும் மஞ்சளாக இருந்தால்15 நாள் இடைவெளியில் திரும்பவும் தெளிக்க வேண்டும். கடைசி தெளிப்பபுடன் எக்டருக்கு 2.5 கிலோ யூரியாவையும் சேர்த்துக்கொள்ளலாம்
    • கட்டைவிட்ட 20வது 40வது மற்றும் 60வது நாளில் களையெடுத்தல்
    • முதல் மேலுரத்தினை 25ம்நாளும், 2வது மேலுரத்தினை 45 முதல் 50 நாட்களுக்குள் இடுதல்
    • இறுதி மேலுரத்தினை 70-75 நாட்களுக்குள் இட வேண்டும்
    • கட்டைவிட்ட 50 வது நாளில் பகுதி மண் அணைத்தல்
    • 90வது நாள் கடைசி மண் அணைத்தல்
    • 120வது மற்றும் 180வது நாள் தோகை உரித்தல்
    • 180 வது நாள் விட்டம் கட்டுதல்
    • 11 மாதத்திற்கு பிறகு அறுவடை செய்தல்

    >  ஊ. கரும்பு விதை (நாற்றங்கால் பயிர்)


    • கரும்பு நடவு பயிர் பயிரிடுவதற்கு 6 முதல் 7 மாதத்திற்கு முன்னர் கரும்பு விதை நாற்றங்கால் நடவு செய்ய வேண்டும்.

    >  நாற்றங்கால் நடவு மாதம் <=> நடவு கரும்பு மாதம்


    • ஜீன் <=> டிசம்பர் - ஜனவரி (முன்பட்டம்)
    • ஜீலை <=> பிப்ரவரி - மார்ச் (நடுபட்டம்)
    • ஆகஸ்ட் <=> ஏப்ரல் - மே (பின்பட்டம்)
    • டிசம்பர் ஏப்ரல் <=> ஜீன்-ஜீலை (சிறப்பு பட்டம்)

    >  விதை நாற்றங்கால் சாகுபடியில் கவனிக்க வேண்டியவை


    • தோகை உரித்தல் கூடாது
    • விட்டம் கட்டுதல் கூடாது
    • 6 முதல் 7 மாதத்தில் அறுவடை
    • கரணை தயார் செய்யும் பொழுது காய்ந்த சோகைகளை கைகளால் நீக்க வேண்டும்
    • பரு அடிபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்
    • விதைக்கரும்பினை மற்ற இடங்களுக்கு எடுத்து செல்ல வேண்டும் என்றால் முழு கரும்பாகவும் தோகை நீக்காமலும் இருக்க வேண்டும்
    • 50 கிலோ யூரியாவை மேலுரமாக விதை கரும்பு அறுவடைக்கு ஒரு மாதம் முன்னர் இடுதல் அவசியம்
    • நோய், பூச்சிதாக்குதல் இன்றி பராமரிக்க வேண்டும்

    >  பயிர் வினையியல்


    • எக்டருக்கு 1.0, 1.5 மற்றும் 2 கிலோ த,வே.ப.கழக கரும்பு பூஸ்டரை 200 லிட்டர் தண்ணீருடன் கலந்து விதைத்த 45, 60 மற்றும் 75-ம் நாள் அளிப்பதன் மூலம் கரும்பின் வளர்ச்சி மற்றும் எடையை அதிகரிக்கலாம். கணுவின் நீளம், கரும்பு மகசூல் மற்றும் இனிப்புத் தன்மையை அதிகரிக்கிறது மற்றும் வறட்சியை தாங்கும் தன்மையை அளிக்கிறது.
    ⇒   2.சர்க்கரைச்சோளம்

    >  பயிர்மேம்பாடு


    >  பருவம் மற்றும் இரகங்கள்


    • ஆடிப்பட்டம் <=>(ஜீலை-ஜீலை)<=> எஸ்.எஸ்.வி.84 ஆர்.எஸ்.எஸ்.வி.9 <=>நீலகிரி மாவட்டம் தவிர தமிழகத்தின் எல்லா மாவட்டங்களும்
    • புரட்டாசிப்பட்டம்<=>(செப்-அக்டோபர்) <=> எஸ்.எஸ்.வி.84 <=>ஆர்.எஸ்.எஸ்.வி.9 தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், நீலகிரி தவிர மற்ற எல்லா மாவட்டங்களும்
    • சித்திரைப்பட்டம்<=>(மார்ச்-ஏப்ரல்) எஸ்.எஸ்.வி.84 <=>ஆர்.எஸ்.எஸ்.வி.9 <=> நீலகிரி தவிர மற்ற எல்லா மாவட்டங்களும்

    >  குறிப்பு:


    • ஜீலை மாதத்தின் பிற்பகுதி ஆகஸ்டு மற்றும் நவம்பர் முதல் ஜனவரி மாதங்கள் வரை விதைப்பு செய்யக் கூடாது

    >  சர்க்கரைச்சோள இரகம் பற்றிய குறிப்பு


    • இரகம்:எஸ்.எஸ்.வி.84
    • வயது (நாட்கள்):110-115
    • பயிரிடும் பகுதிகள்:எல்லா மாவட்டங்களிலும் (நீலகிரி நீங்கலாக)
    • பட்டம்:தை, சித்திரை, ஆடி (இறவை) புரட்டாசி (மானாவாரி)
    • தானிய மகசூல் (கி,எக்):1770 (இறவை)
    • தட்டை மகசூல் (டன்,எக்):43.58 (இறவை)
    • தண்டின் உயரம் (செ.மீ.):273.9
    • சாறு பிழியும் திறன் (சதம்):47.1
    • பிரிக்ஸ் அளவு (டிகிரி):16.5
    • மொத்த கரையும் திடப்பொருள் (சதம்):14.1
    • நீர்க்கும் சர்க்கரை அளவு (சதம்):2.1
    • சர்க்கரை (சதம்):11.8
    • எத்தனால் உற்பத்தி (லி, எக்டர்):2,500-3,000
    • வணிக ரீதியான சர்க்கரை (சதம்):9.20
    • வணிக ரீதியான சர்க்கரை (கு,எக்டர்):24.30
    • இலை உறையின் நிறம்:பச்சை
    • கணுவின் நிறம்:பச்சை
    • இலை நடு நரம்பின் நிறம்:வெளிர்ப்பச்சை
    • கதிரின் வடிவம்:நீளமான உருளை
    • கதிரின் தன்மை:ஒரளவு குவிந்து
    • தானியத்தின் நிறம்:முத்துப்போன்ற வெண்மை
    • சிறப்புகள்:எல்லா பருவத்திற்கும் இறவையில் சாகுபடிக்கு ஏற்றது

    >  விதை நேர்த்தி


    • விதைகளை விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன் ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் வீதம் கேப்டான் அல்லது திரம் பூஞ்சாண மருந்து அல்லது 4 கிராம் மெட்டாக்ஸில் மருந்துடன் கலந்து விதைப்பதால் அடிச்சாம்பல் நோயிலிருந்து பயிரைக் காப்பாற்றலாம்.
    • ஒரு எக்டேருக்குத் தேவையான விதைகளை 3 பாக்கெட் (600 கிராம்) அஸோஸ்பைரில்லம், 3 பாக்கெட் (600 கிராம்) பாஸ்போ பாக்டீரியம் அல்லது 6 பாக்கெட் (1200 கிராம்) அஸோபாஸ் நுண்ணுயிர்க் கலவையுடன் தேவையான அளவில் அரிசிக் கஞ்சி கலந்து விதைநேர்த்தி செய்யலாம்

    >  குறிப்பு:


    • பயிர்களின் குருத்து ஈ மற்றும் தண்டு துளைப்பான் தாக்குதலைத் தவிர்க்க விதைகளை ஒரு கிலோ விதைக்கு 4 மிலி குளோர்பைரிபாஸ் (20 ஈசி) அல்லது 4 மி.லி. மானோகுரோட்டோபாஸ் (35 ஈசி) அல்லது 4 மி.லி. பாசலோன் (35 ஈசி) மருந்தினை 0.5 கிராம் ஒட்டும் பசையுடன் 20 மி.லி. நீரில் கலந்து கரைசலுடன் கலந்து பின் விதைகளை நிழலில் உலரவைத்து பிறகு விதைக்கலாம்

    >  நிலம் தயாரிப்பு


    • நல்ல வடிகால் வசதியுடன் கூடிய நிலத்தை தேர்வு செய்து புழுதிபட நன்கு உழுது பின் 45 செ.மீ. இடைவெளியில் பார்களை அமைக்க வேண்டும்

    >  விதைப்பு


    • ஒரு எக்டருக்கு 10 கிலோ விதைகள் தேவைப்படும்.இவ்விதைகளை விதை நேர்த்தி செய்த பின் 45 செ.மீ. இடைவெளியில் அமைக்கப்பட்ட பார்களுக்கு பக்கவாட்டில் செடிக்குச் செடி 15 செ.மீ. இடைவெளி விட்டு சுமார் 2 செ.மீ. ஆழத்தில் குழிக்கு 2 விதைகள் வீதம் விதைக்க வேண்டும் விதைத்த குழிகளை மணல் கொண்டு மூட வேண்டும்

    >  குறிப்பு:


    • குருத்து ஈ தாக்குதல் அதிகம் காணப்படும் பகுதிகளில் எக்டருக்கு 12.5 கிலோ விதைகளைப் பயன்படுத்தி, பூச்சிகளால் தாக்கப்பட்டு இளம் செடிகளை பயிர்கலைக்கும் சமயம் அகற்றிவிட்டோ அல்லது சிறிய நாற்றங்கால் விதைகளை விதைத்து அதில் சேர்க்கப்பட்ட நாற்றுகளை இடைவெளியில் நடவு செய்தோ பயிர் எண்ணிக்கையைப் பராமரிக்கலாம்

    >  உரமேலாண்மை


    • கடைசி உழவின் போது எக்டருக்கு 12.5 டன்கள் நன்கு மக்கிய தொழுஉரம் இட வேண்டும்
    • ஒரு எக்டருக்கு 10 பாக்கெட்டுகள் (2 கிலோ) அஸோஸ்பைரில்லத்துடன் 10 பாக்கெட் (2 கிலோ) பாஸ்போ பாக்டீரியம் அல்லது 20 பாக்கெட் (4கிலோ) அஸோபாஸ் நுண்ணுயிர்க் கலவையை இடவேண்டும்
    • ஒரு எக்டருக்கு சோளத்திற்கு இடவேண்டிய நுண்ணூட்டச்சத்து கலவையை 12.5 கிலோ அளவில் 50 கிலோ மணலுடன் கலந்து பார்களின் மேலாகத் தூவவேண்டும்
    • நிலத்தில் எடுக்கப்பட்ட மண்ணைப் பரிசோதனை செய்து அதற்குப் பரிந்துரை செய்யப்பட்ட அளவில் இரசாயன உரமிடுதல் அவசியம், பரிசோதனை செய்யாத நிலையில் ஒரு எக்டருக்கு சராசரிப் பரிந்துரையாக தழைச்சத்து 120 கிலோ, மணிச்சத்து 40 கிலோ, சாம்பல் சத்து 40 கிலோ என்ற அளவில் இடவேண்டும்.

    >  உரமிடும் காலம் மற்றும் அளவு


    • நுண்ணூட்டச்சத்து மற்றும் நுண்ணுயிர் உரம் ஆகியவற்றை அடியுரமாக இடவேண்டும்
    • பரிந்துரை செய்யப்பட்ட தழைச்சத்து அளவில் பாதியும், முழு அளவில்மணி மற்றும் சாம்பல் சத்தினை அடியுரமாக இடவேண்டும்
    • பரிந்துரை செய்யப்பட்ட தழைச்சத்தில் 25 சதவீதம் அளவை முறையே விதைத்த 15 மற்றும் 30வது நாளில் மேலுரமாகவும் இடவேண்டும்

    >  களைக்கட்டுப்பாடு


    • விதைப்பு செய்த மூன்று நாட்களுக்கு அட்ரசின் 50 சத நனையும் தூள் களைகொல்லி 500கிராம் வீதம் ஒரு எக்டேரில் தெளித்து (நிலத்தில் ஈரப்பதத்தில்) களைகளைக் கட்டுப்படுத்தலாம். பிறகு விதைத்த 45வது நாளில் ஒரு கைக்களை எடுக்கவேண்டும்
    • களைக்கொல்லியை பயன்படுத்தாத நிலையில் விதைத்த 15 முதல் 20 நாளில் ஒரு முறையும் பிறகு 30 முதல் 40வது நாளில் ஒரு முறையும் கைக்களை எடுக்கவேண்டும்

    >  நிர்வாகம்


    • சர்க்கரைச் சோளத்தில் அதிக தட்டை மற்றும் தானிய மகசூல் பெற நீர்ப்பாசனம் அவசியம். சுமார் 400 முதல் 450 மீ.மீட்டர் அளவில் தண்ணீர் தேவைப்படும்

    >  நிலம் <=> பயிரின் பருவம் <=> நீர்ப்பாசன எண்ணிக்கை <=> விதைத்த நாட்கள்


    • சாதாரண நிலம் <=> விதைகள்முளைப்பு <=> 1 <=> முதல் நாள்
    • சாதாரண நிலம் <=> இளம்பயிர் <=> 2 <=> 4வது மற்றும் 15வது நாள்
    • சாதாரண நிலம் <=> வளரும் பயிர் <=> 1 <=> 28வது நாள்
    • சாதாரண நிலம் <=> பூக்கும் பருவம் <=> 3 <=> 40வது, 52வது மற்றும் 64வது நாள்
    • சாதாரண நிலம் <=> முதிர்ச்சி பருவம் <=> 2 <=> 75வது, 88வது நாள்
    • கடினமண் நிலம் விதைகள் முளைப்பு <=> 1 <=> முதல் நாள்
    • கடினமண் நிலம் இளம்பயிர் <=> 2 <=> 4வது மற்றும் 17வது நாள்
    • கடினமண் நிலம் வளரும் பயிர் <=> 1 <=> 30வது நாள்
    • கடினமண் நிலம் பூக்கும் பருவம் <=> 3 <=> 40வது 52வது மற்றும் 64வது நாள்
    • கடினமண் நிலம் முதிர்ச்சி பருவம் <=> 1 <=> 90வது நாள்
    • நீர்ப்பாசனம் மிகவும் முக்கியம்

    >  அறுவடை


    • சாகுபடி செய்யும் இரகங்களின் வயதை மனதிற் கொண்டு பயிரைக் கவனித்து வரவேண்டும். சுமார் 100 முதல் 110 நாட்களில் பயிர்கள் விதை முதிர்ச்சி அடைந்து விடும் இத்தருவாயில் தானியங்கள் வெளிர் நிறமடைந்து கதிருடன் சேர்ந்திருக்கு காம்பு பாகம் கருத்து காணப்படும். இதுவே அறுவடை செய்ய ஏதுவான தருணமாகும். சர்க்கரை ஆலைகளின் அனுமதி பெற்று அறுவடை செய்யலாம்.
    • கதிர்களைக் தனியாக அறுவடை செய்து வெயிலில் உலர்த்த வேண்டும்.
    • பசுந்தட்டைகளை அதன் அடியினில் வேர்பாகத்தைத் தவிர்த்து அரிவாள் கொண்டும் அறுவடை செய்ய வேண்டும். இலைகளை நீக்க வேண்டும்
    • பத்து முதல் 15 தட்டைகளை ஒன்றாகச் சேர்த்து இலைகளால் அல்லது கயிறுகளால் கட்டுகளாகக் கட்டி சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்ப வேண்டும்
    • அறுவடை செய்யப்பட்ட தட்டைகளை வெயிலில் காய விடாமல், பசுந்தோகைகள் கொண்டு மூடி வைக்க வேண்டும்
    • அறுவடை செய்யப்பட்ட பசுந்தட்டைகள் 48 மணி நேரத்திற்குள் அறவைக்கு கொண்டு செல்லப்படவேண்டும்

    >  விதை சேமிப்பு


    • விதைகளை 10% கீழ் ஈரப்பதம் இருக்குமாறு உலர்த்த வேண்டும். நெல் அந்துப்பூச்சிகளை கட்டுப்படுத்த 100 கிலோ தானியங்களை 1 கிலோ கயோலினுடன் கலந்து வைக்கலாம்.
    • சேமிப்புகிடங்குகளில்வைக்கப்பட்டுள்ளபைகளின்மீதுமாலத்தியான் 50EC யை 10 மி.லி/லிட்டருக்குகொண்டு 100 சதுரமீட்டருக்கு 3 லிட்டர்வீதம்தெளிக்கவேண்டும்

    >  சர்க்கரை சோளத்திலிருந்து எத்தனால்


    • மகசூல் திறன் – 80 – 100 டன் / எக்டர்
    • நீண்ட கால முதிர்ச்சி மகசூல் - 100 டன் / எக்டர்
    • எத்தனால் மகசூல் – 2639 லி/ எக்டர் (பிரேசில்) – 7000 லிட்டர் (சீனா) – 3000 லிட்டர் (தென் ஆப்ரிக்கா) – 4790 லிட்டர் (அமெரிக்கா)
    • இந்தியாவின் தேசிய இரகம் எஸ்.எஸ்.வி 84 -40-50 டன் / எக்டர் தட்டு, 40% - சாறு மகசூல் மற்றும் எத்தனால் – 4500 லிட்டர் / எக்டர் (NRCS அறிக்கை)
    ⇒   3.சர்க்கரை வள்ளிக் கிழங்கு

    >  சாகுபடி உத்திகள்


    >  முன்னுரை


    • சர்க்கரைக் கிழங்கு ஒரு இருபருவம் மற்றும் சர்க்கரை உற்பத்தி தரும் கிழங்குப் பயிர். இது பொதுவாக குளிர் பிரதேச நாடுகளில் வளரும். உலக சர்க்கரை உற்பத்தியில் சுமராக 30 விழுக்காடுகள் வரை சர்க்கரை உற்பத்தி இந்த பயிரிலிருந்து கிடைக்கின்றது. 45 நாடுகளில் இப்பயிர் சாகுபடி செய்யபடுகின்றது. இப்போது வெப்ப மண்டல பகுதிக்கேற்ற சர்க்ரைக் கிழங்கு ரகங்கள் வெப்ப மற்றும் மித வெப்ப மண்டல நாடுகளிலும் மற்றும் குறிப்பாக தமிழ்நாட்டில் உயிரிய எரிசக்தி பயிராகவும் எத்தனால் உற்பத்திக்கு ஒரு மாற்று பயிராகவும் லாபகரமாக சாகுபடி செய்ய முயற்சிக்கப்படுகின்றது. இந்த எத்தனால், பெட்ரோல் மற்றும் டீசலுடன் 5 முதல் 10 சதவீதம் வரை கலந்து உயிரிய எரிசக்தி பொருளாக உபயோகிக்கலாம். சர்க்கரைக் கிழங்கின் எஞ்சிய உப பொருட்களான இலைகளையும், ஆலையில் எஞ்சிய கிழங்கு கூழையும் மற்றும் புண்ணாக்கையும் மாட்டுத் தீவனமாகவும், இயற்கை உரமாகவும் உபயோகிக்கலாம்.இன்று சர்க்கரைக் கிழங்கு ஒரு வணிகப் பயிராக சாகுபடி செய்வதற்குரிய சாதகமான சூழ்நிலையை அடைந்துள்ளது. அவையாவன
    • வெப்ப மண்டல பகுதிக்கேற்ற சர்க்கரைக் கிழங்கு வீரிய ஒட்டு இரகங்கள்
    • 5 முதல் 6 மாத குறைந்த வயதுள்ள வீரிய ஒட்டு இரகங்கள்
    • 60 முதல் 80 செ.மீ. மிதமான நீர்த்தேவை
    • 12 முதல் 15 விழுக்காடு சர்க்கரைச் சத்து
    • உவர் மற்றும் களர் நிலங்களில் சாகுபடி செய்ய ஏற்றது
    • சர்க்கரைக் கிழங்கின் அறுவடை காலம் மார்ச் முதல் மே மாதங்களில் வருவதால் அந்த காலக்கட்டத்தில் சர்க்கரை ஆலைகளில் கரும்பு அரவையில்லாமல் இருப்பதால் அந்த மனித ஆற்றல் சக்தியை சர்க்கரை கிழங்கின் சர்க்கரை மற்றும் எத்தனால் உற்பத்திக்கு உபயோகித்து, சர்க்கரை ஆலையை வருட முழுவதும் பணி நடைபெற உதவி புரிகின்றது.
    • தமிழக வெப்ப மண்டல பகுதிக்கேற்ற வீரிய ஒட்டு இரகங்கள்
    • இந்தஸ், சுப்ரா மற்றும் காவேரி இந்த ஒட்டுரகங்களின் வயது ரகத்தை பொருத்தும், தட்ப வெப்ப நிலையைப் பொருத்தும் 5 முதல் 6 மாதங்கள்ஆகும்

    >  வெப்பநிலை மற்றும் பருவம்


    • வெப்பமண்டல பகுதிக்கேற்ற வீரிய ஒட்டு இரகங்களுக்கு வளர்ச்சிப் பருவம் முழுவதும் நல்ல சூரிய வெளிச்சம் தேவை. இப்பயிர் ஆவணி-ஐப்பசி மாதங்களில் (செப்டம்பர்-நவம்பர்) விதைப்பு செய்வதால், வடகிழக்கு பருவமழை மூலம் சுமாராக 300-350 மி.மீ. மழை கிடைக்கப்பெற்று பயிர் வளர்ச்சி மற்றும் கிழங்கின் பெருக்கம் அதிகமடையும். அதிக மழைப் பொழிவு,அதிக மண் ஈரம் அல்லது தொடர்ச்சியான கன மழை இவை அனைத்தும் கிழங்கின் வளர்ச்சியையும் மற்றும் கிழங்கின் சர்க்கரை உருவாக்கும் தன்மையும் கெடுக்கும். விதைகள் முளைப்பதற்கு 20-25° செ, வளர்ச்சிப் பருவத்திற்கு 30-35° செ மற்றும் சர்க்கரைச் சத்து கூடியடைய 25-35° செ வெப்பமும் தேவை.

    >  மண்


    • நல்ல வடிகால் வசதியுள்ள நீர் தேங்காத 45 செ.மீ. ஆழமுள்ள இரு மண்பாடு உள்ள மணல் சார்ந்த மண் வகைகள் மற்றும் களிமண் சார்ந்த மண் வகைகள் சர்க்கரைக் கிழங்கிற்கு ஏற்றது. மண்ணின் கார அமிலத் தன்மை 6, 5 முதல் 9 வரை இருக்கலாம். மேலும் இப்பயிர் களர் மற்றும் உவர் நிலங்களிலும் நன்கு வளரக்கூடியது. மண்ணில் அதிக அளவு அங்ககச்சத்து விரும்பத்தக்கது.

    >  நிலத்தயாரிப்பு


    • நிலத்தை சுமாராக 45 செ.மீ. ஆழத்திற்கு உழவு செய்து மீண்டும் 2-3 முறைகள் உழவு செய்து விதைகள் நன்கு முளைப்பதற்குரிய மண் பக்குவம் செய்யவேண்டும். பின்பு 50 செ.மீ. இடைவெளியில் பார்கள் அமைக்கவேண்டும்.

    >  இயற்கை மற்றும் செயற்கை உரங்கள்


    • சர்க்கரைக் கிழங்கிற்கு ஹெக்டேருக்கு 12.5 டன் தொழு உரத்தை கடைசி உழவின் போதும் மேலும் அடியுரமாக ஹெக்டேருக்கு 75 கிலோ தழைச்சத்து, 75 கிலோ மணிச்சத்து மற்றும் 75 கிலோ சாம்பல் சத்தும் கடைசி உழவின் போது அல்லது விதைக்கும் முன்பு இடவேண்டும். உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபேக்டீரியா ஒவ்வொன்றும் 10 பொட்டலங்கள் (2 கிலோ) மண்ணில் இடவேண்டும். மேலுரமாக 37.5 கிலோ தழைச்சத்தை விதைத்த 20-25 வது நாளிலும் மீண்டும் ஒருமுறை 37.5 தழைச்சத்தை 50வது நாளிலும் இடவேண்டும்.

    >  விதை மற்றும் விதைப்பு


    • ஒரு ஹெக்டேருக்கு 1,00,000 – 1,20,000 “ விதை நேர்த்தி” செய்த விதைகள் தேவை. அதாவது 20000 விதைகள் கொண்ட 600 கிராம் எடையுள்ள 6 பைகள் தேவைப்படும் (3.6 கிலோ/ ஹெக்டேருக்கு), விதைகளை பாருக்குப்பார் 50 செ.மீ. இடைவெளியில் விதைக்கு விதை 20 செ.மீ. இடைவெளி விட்டு குழிக்கு ஒரு விதை வீதம் 2 செ.மீ. ஆழத்தில் விதைகளை பாரின் மேற்பரப்பில் ஊன்ற வேண்டும். ஊடு நடவு 10 நாட்களுக்குள் செய்து முடிக்க வேண்டும். அதிக வேர் மகசூல் பெற 45x15 செ.மீ இடைவெளி விட்டு விதைக்கவும்.

    >  களை எடுப்பு மற்றும் பார் அணைத்தல்


    • பொதுவாக சர்க்கரைக் கிழங்கு பயிருக்கு களைச் செடியில்லா சூழ்நிலையை சுமாராக 75 நாட்கள் வரை களை மேலாண்மை செய்யவேண்டும். பிரிட்டில்லாக்ளோர் 1.0 லிட்டர் அல்லது பென்டிமெத்தலின் 33.75 லிட்டர் களைக் கொல்லியினை 300 லிட்டர் நீரில் கலந்து விதைத்த 0-2வது நாளில் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும். பின்பு விதைத்த 20வது நாளிலும் மற்றும் 45 வது நாளிலும் கைக்களை எடுக்கவேண்டும். பின்பு பார்களை ஒட்டி மண் அணைக்கவேண்டும். எக்டருக்கு 70% EC மெட்டாமைட்ரோன் @ 0.75 கிலோ + 70% EC பிரிட்டிலாக்குளோர் @ 0.40 கிலோவை களை முளைக்கும் முன் தெளிக்க வேண்டும். அதனை தொடர்ந்து விதைத்த 30-ம் நாளில் கைக்களை எடுக்க வேண்டும்.

    >  நீர்ப்பாசனம்


    • சர்க்கரைக் கிழங்கு எந்நிலையிலும் நீர் தேங்கி இருக்கக் கூடாது. நீர் தேங்கினால் வளர்ச்சி பாதிக்க வாய்ப்புள்ளது. விதைகள் விதைக்கும் முன்பு மண்ணில் போதுமான ஈரம் இருத்தல் அவசியம். எனவே விதைக்குமுன் மண்ணின் தன்மைக்கு ஏற்ப நீர் கட்டி போதுமான ஈரத்தை மண்ணில் நிலைப்படுத்த வேண்டும். களிமண் கலந்த மண்வகைகளுக்கு 8-10 நாட்களுக்கு ஒரு முறையும், மணல் சார்ந்த மண் வகைகளுக்கு 5-7 நாட்களுக்கு ஒரு முறையும் நீர்பாசனம் செய்ய வேண்டும். கிழங்கு அறுவடைக்கு 3-4 வாரங்களுக்கு முன்பு நீர்ப்பாசனம் செய்வதை நிறுத்த வேண்டும். நிலம் காய்ந்து சற்று இறுகியிருந்தால் கிழங்கை எளிதாக மண்ணிலிருந்து அறுவடை செய்வதற்கு ஏதுவாக அறுவடைக்கு சற்று முன்பாக நீர்ப்பாசனம் செய்யவேண்டும். பொதுவாக சர்க்கரைக் கிழங்கிற்கு சிறிதுசிறிதாக, குறைந்த அளவு அடிக்கடி நீர் கட்டினால் பயிர் வளர்ச்சிக்கு தேவையான மண் ஈரம் நிலைப்படுத்தப்படும். தேவையான நீரின் அளவு 800 - 850 மி.மீ.

    >  அறுவடை மற்றும் மகசூல்


    • சர்க்கரைக் கிழங்கு பொதுவாக 5 முதல் 6வது மாதத்தில் முதிர்ச்சியடையும், முதிர்ந்த செடியின் அடிப்பக்க இலைச்சுற்று அடுக்குகள் வெளிறிய மஞ்சள் வண்ணமாகவும் மற்றும் சர்க்கரை மானியில் 16 முதல் 20 விழுக்காடு பிரிக்ஸ் அளவு தெரிந்தாலும் கிழங்கை அறுவடை செய்யலாம். சர்க்கரைக் கிழங்கை நாம் மெதுவாக எந்த வித சேதாரம் இல்லாமல், ஒட்டியுள்ள மண் துகள்கள் எல்லாம் நீக்கி நல்லதரமுள்ள கிழங்குகளாக அறுவடை செய்ய வேண்டும். மகசூல் கிழங்கு 80 – 100 டன் /ஹெக்டேருக்கு சர்க்கரைக் கிழங்கு அறுவடை செய்து 48 மணி நேரத்திற்குள்ள தொழிச்சாலைக்கு எடுத்துச் செல்லவேண்டும். அறுவடையை அதற்கேற்றாற்போல் நிர்ணயிக்கவேண்டும்.

    >  பூச்சிகள் மற்றும் நோய்கள் கட்டுப்படுத்தும் முறைகள்


    >  ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்


    • சூடோமோனாஸ் புளோரசென்ஸ் 10 கி ஒரு கிலோ விதைக்கு என்ற அளவில் விதை நேர்த்தி
    • கோடை உழவு
    • ட்ரைகோடெர்மா விரிடி அல்லது சூடோமோனாஸ் புளோரசென்ஸ் 2.5 கிலோ/ ஹெ 50 கிலோ தொழுஉரம் கலந்து விதைப்புக்கு முன்பு இடவேண்டும்
    • ஆமணக்குப்பயிர் வயலைச் சுற்றி பயிரிடுதல்
    • பயிர் சுழற்சி செய்தல்
    • ஹெக்டேருக்கு 5 விளக்குப் பொறி வைத்து கண்காணித்தல்
    • இனக்கவர்ச்சிப் பொறி வைத்தல்
    • வளர்ந்த புழுக்கள் மற்றும் முட்டைக் குவியல்களை கைகளால் அகற்றுதல்

    >  தேவைக்கு ஏற்ப செய்ய வேண்டியவை


    • ஸ்போடாப்டிரா பாலி ஹெட்ராசிஸ் வைரஸ் கரைசல் 1.5 × 1012 பிஒபி/ ஹெக்டர் என்ற அளவில் தெளித்தல்
    • 5 வேப்பங்கொட்டை சாறு தெளித்தல்
    • நெல் தவிடு 12.5 கிலோ, வெல்லம் 1.25 கிலோ இதனுடன் கார்பரில் 50 % - 1.25 கிலோ என்ற மருந்தைக் கலந்து 7.5 லிட்டர் நீரில் கலந்து ஆங்காங்கே வைத்தல்
    • பொருளாதார சேத நிலையை விட அதிகமாக இருப்பின் கீழ்க்காணும் ஏதேனும் ஒரு மருந்தைத் தெளிக்கவும் குளோர்பைரிபாஸ் 2 மில்லி/ லிட்டர், டைகுளோரோவாஸ் 1 மில்லி/ லிட்டர் அல்லது பெனிட்ரோதையான் 1 மில்லி /லிட்டர்
    • இலைப்பேன் கட்டுப்படுத்த இமாடகுளோரோபிட் 0.2 மில்லி/ லிட்டர் அல்லது டைமெத்தயேட் 2 மில்லி/லிட்டர் நீரில் தெளிக்கவும்
    • வேர் அழுகலைக் கட்டுப்படுத்த வேப்பம்புண்ணாக்கு 150 கிலோ/ ஹெக்டர்
    • செர்க்கோஸ்போரா இலைப்புள்ளியைக் கட்டுப்படுத்த மேங்கோசெப் 2.5 கிராம்/ லிட்டர் அல்லது குளோரோதாலோநில் 2 கிராம்/ லிட்டர் நீர் என்ற அளவில் தெளிக்கவும்
    ⇒   7.மற்ற பயிர்கள்

    >  1.புகையிலை


    >  பிறப்பிடம் மற்றும் பரவல்


    • ஜீனஸ் நிகோடினா என்பது 60 க்கும் மேற்பட்ட இனங்கள் இதில் அடங்கும், அதில் நிகோடினா டுபாகோ, மற்றும் நிகோடினா ரஷ்டிகா பொதுவாக சாகுபடி செய்யப்படும் வணிகப் புகையிலைகள் ஆகும். இதில் நிகோடினா ரஷ்டிகா இந்தியா, ரஷ்யா மற்றும் சில ஆசிய நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளபோதும் நிகோடினா டுபாகோ பரவலாக உலகின் பெரும்பாலான நாடுகளில் பயிரிடப்படுகிறது. நிகோடினா டுபாகோ மற்றும் நிகோடினா ரஷ்டிகா தோன்றிய முக்கிய மையமாக தென் அமெரிக்கா மற்றும் பெரு திகழ்கிறது.

    >  பயிரிடப்படும் பகுதி மற்றும் உற்பத்தி


    • இந்தியாவில் புகையிலை பெரும்பான்மையாக ஆந்திரா, குஜராத், கர்நாடகா, உத்திரப்பிரதேசம் மற்றும் பீகாரில் சாகுபடி செய்யப்படுகிறது. குஜராத்தில் 45 சதவீத பகுதியில் உற்பத்தியும் (0.13mஏக்கர்) மற்றும் 30 சதவீத உற்பத்தியும் (0.16 mt.) உள்ளது. மேலும், உற்பத்தித் திறன் ஆந்திராவைத் தொடர்ந்து குஜராத்திலும் (எக்டருக்கு 1700 கிலோ) அதிகமாக உள்ளது.

    >  புகையிலை வகைகள்


    • குஜராத்தில் உள்ள ஆனந்த் பகுதியில் முற்றிலும் இருதிசையிலும் புகையிலை பயிரிடப்படுகிறது. கர்நாடக நிப்பானி பகுதியில் இருதிசையிலும் புகையிலையைக் காணலாம். வட பீகார் மற்றும் வங்காளம் பகுதியில் ஹூக்கா உற்பத்தி மற்றும் குறைந்த அளவில் மெல்லும் உணவுப்பொருள் மற்றும் மூக்குப்பொடி வகைகளில் டுபாகோ மற்றும் ரஷ்டிகா வகைகள் பயன்படுத்தப் படுகின்றன. தமிழ்நாட்டில், மதுரை மற்றும் கோயம்புத்தூர் பகுதியில் சிகார், வடிகட்டி, சேர்ப்பான் மற்றும் மெல்லும் புகையிலைகள் பயிரிடப்படுகிறது.

    >  காலநிலை மற்றும் மண்


    • சராசரி வெப்பநிலையான 20° செல்சியசிலிருந்து 27° செல்சியஸ் இருக்கும் போது இந்தியாவில் புகையிலை பயிரிட உகந்த சூழ்நிலையாகும். மானாவாரிப் பயிராக சாகுபடி செய்யும் போது, அது பயிர் வளரும் பருவத்தில் பரவலான மழை குறைந்தது சுமார் 500 மிமீ தேவைப்படுகிறது. மழை பருவத்தில் 1200 மி.மீ அதிகமாக மழை பொழியும் பகுதியில் இது வளர்வதில்லை. பயிர் முதிர்ச்சியின் போது மழையால் கழுவப்படும் இலையின் மேலுள்ள பசை மற்றும் ரெசின்கள் விரும்பத்தகாத ஒன்றாகும். இந்தியாவில், சிகாரைத் தவிர, வடிகட்டி மற்றும் சேர்ப்பான் புகையிலைகள் மற்றும் தென் இந்தியாவில் மெல்லும் புகையிலைகள் அனைத்தும் வளரும் பருவத்தில் மிகவும் குறைந்த அளவில் மழை பெறுகின்றன.
    • இந்தியாவில், சுருட்டு மற்றும் சேர்ப்பான் புகையிலைகள் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், திருச்சி, மதுரை மாவட்டங்களில் சிவப்பு மற்றும் வண்டல் மண்ணில் பயிரிடப்படுகிறது. இதற்கு நைட்ரஜன், பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் chathukal பெரிய அளவில் தேவைப்படுகிறது. வண்டல் மண் பீ.டி.புகையிலைக்கு பொருத்தமானது. தமிழ்நாட்டில் மெல்லும் புகையிலை கோயம்புத்தூர், தஞ்சாவூர், சேலம் மற்றும் மதுரை மாவட்டங்களில் நல்ல வடிகால் வசதியுள்ள, சிவப்பு மண்ணில் பயிர் செய்யப்படுகிறது.

    >  நாற்றங்கால் மேலாண்மை


    • புகையிலை விதைகள் மிகவும் சிறிய மற்றும் முட்டை வடிவ தடித்த விதை தோலும் கொண்டது. இது, சுமார் 0.75 மி.மீ நீளமும் 0.53 மி.மீ அகலமும் மற்றும் 0.47 மி.மீ தடிமனையும் கொண்டுள்ளது. விதை உற்பத்தி செய்யப்படும் பொழுது வகைகள் மற்றும் நிலைமைகளைப் பொறுத்து, விதையின் அளவு மற்றும் எடை மாறுபடுகின்றன. நிகோடினா டுபாகோவில் விதையின் சராசரி எடை 0.08 லிருந்து 0.09 மிகி மற்றும் ஒரு கிராமில் 11,000 - 12,000 விதைகள் உள்ளன. நிகோடினா ரஷ்டிகாவில் விதை பெரியது மற்றும் மூன்று மடங்கு அதிகமாக உள்ளது. வளர்ந்து வரும் நாற்றுகள் சிறியது மற்றும் மென்மையானது எனவே, விதைகளை நாற்றங்காலில் விதைப்பதற்கு பொருத்தமற்றதாக உள்ளது. எனவே அவைகளை நாற்றங்கால் அல்லது விதை படுக்கைகள் அமைத்து நாற்றுகளை நடவு வயலில் நடவு செய்வதற்கு முன், ஒரு குறிப்பிட்ட அளவு வளரும் வரை கவனமாக வைத்திருக்க வேண்டும். சரியான நாற்றங்கால் இடம், நிலம் தயாரிப்பு மற்றும் உரங்கள், தண்ணீர் மற்றும் பூச்சிகள் மற்றும் நோய்களை சரியான நேரத்தில் கட்டுப்படுத்துவது அவசியம்.
    • பொதுவாக புகையிலை நாற்றங்கால் மணல் அல்லது மணல் கலந்த களிமண்ணில் வளர்க்கப்படுகின்றன. ஆந்திரப் பிரதேசப் பகுதிகளில் சிகரெட்-புகையிலை அதிகப்படியான களிமண் பகுதிகளில் பயிரிடப்பட்டாலும் நாற்றங்காலானது மணல் மற்றும் சிறு கற்கள் கொண்ட மண்ணில் வளர்க்கப்படுகிறது. அதிகப்படியான களிமண்ணில் நாற்றங்கால் தயார் செய்தால் அதிகப்படியான களிமண் அளவு மற்றும் உயர் மழைப்பொழிவினால் உள் வடிகால் வசதி குறையும் மற்றும் உயர் வெப்பநிலைநோய் பாதிப்புக்கு வழி வகுக்கும்.
    • நாற்றங்கால் தளத்தில் ஒரு நல்ல உள் பரப்பு வடிகால் மற்றும் வெளிச்சம் உள்ள இடத்தில் அமைக்க வேண்டும். 6 முதல் 7 வாரங்கள் வரை தக்கைப் பூண்டு அல்லது சணப்பை போன்ற பசுந்தாள் பயிர் வளர்த்து உழவு ஓட்டுதல் மற்றும் அது தின்ஹட்டா (மேற்கு வங்கம்) போன்ற இடங்களில் நடைமுறையில் உள்ளது.
    • ஒவ்வொரு ஆண்டும் நாற்றங்கால் தளத்தை மாற்றுவதன் மூலம் பூச்சிகள் மற்றும் நோய்கள் தாக்குதல் குறைக்க மற்றும் மற்ற வகைகளிலிருந்து வரும் மாசுகளையும் அகற்றி விடும். அந்த தளத்தை மாற்ற முடியாது என்றால், பழைய தளத்தை புகையிலை தண்டுகள், நெல் உமி, கரும்பு-குப்பை, போன்ற எளிதாக கிடைக்கும் மெதுவாக எரியும் கழிவு பொருட்களை எரித்து சுத்தப்படுத்தி படுக்கையை தயார் செய்து விதைப்பதற்கு முன் ஒரு சில நாட்களுக்கு பிறகு, சரியான ஈரப்பதத்தில் செய்யப்பட வேண்டும்.

    >  உழவு


    • பொதுவாக, ஆயத்த உழவு அனைத்து புகையிலைகளுக்கும் கிட்டத்தட்ட பொதுவானது. எனினும், நன்கு உழும் எண்ணிக்கை மண்ணின் இயல் குணங்களை பொறுத்து மண்ணுக்கு மண் வேறுபடுகிறது. விரைவில் பயிரின் முந்தைய அறுவடைக்கு பிறகு உழவு ஓட்டுதல் நடைமுறையில் உள்ளது. பருவ மழைக்காலத்தில் கனரக மண் உழவு செயல்படுத்த முடியாத போது களைகளை கையால் நீக்கி வயலைக் களைகள் இல்லாமல் வைத்துக் கொள்ள வேண்டும்.

    >  நுனி கிள்ளுதல்


    • இலைகள் இல்லாமல் நுனியில் மொட்டு அகற்றுதல் பூவின் தலை வளர்ந்ததும் அல்லது அதற்கு முன்னால் செய்தல் ஆகும்.

    >  பக்கவாட்டுக் கிளைகளை அகற்றுதல்


    • நுனி கிள்ளிய பின்னர் துணைத்தொடர் மொட்டுகள் வளர்ந்து மற்றும் உறிஞ்சிகள் என அழைக்கப்படும் தளிர்கள் வளர்கிறது. இந்த அடிக்கன்றுகளை அகற்றுவது, கன்றுகளை அகற்றுவது என்று அழைக்கப்படுகிறது.
    • நுனி கிள்ளுதல் மற்றும் பக்கவாட்டுக் கிளைகளை அகற்றுதலின் விளைவாக, ஆற்றல் மற்றும் சத்துக்களைப் பூக்களிலிருந்து இலைகளுக்குத் திசை திருப்புவது, இலைகளின் அளவும் மற்றும் இறுதியாக இலையின் தரத்தை அதிகரிக்கவும் ஆகும். சுருட்டுப் புகையிலையைத் தவிர, பெரும்பாலான புகையிலைகளை, நுனி கிள்ளுதல் மற்றும் பக்கவாட்டுக் கிளைகளை அகற்றுதல் மூலம் வளர்த்தல் ஆகும்.

    >  இரகங்கள் மற்றும் பருவங்கள்


    • புகையிலையின் வகை <=> மாநிலங்கள்
    • FCV புகையிலை <=> ஆந்திரா மற்றும் கர்நாடகா
    • பீ.டி.புகையிலை <=> குஜராத், கர்நாடகாவின் நிப்பானி பகுதி
    • சிகார் மற்றும் சுருட்டு <=> தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளம்
    • ஹுக்கா புகையிலை <=> அசாம், மேற்கு வங்காளம், பீகார் மற்றும் உத்திரப் பிரதேசம்.
    • சூயிங்கம் மற்றும் மூக்குப் பொடி <=> தமிழ்நாடு, மேற்கு வங்காளம், பீகார், அசாம், உத்திரப் பிரதேசம்
    • நாடு, பர்லி, இலங்கை HDBRG <=> ஆந்திரப்பிரதேசம்
    • பிக்கா புகையிலை <=> ஒரிசா
    • புகையிலையின் <=> வகைமாநிலங்கள்
    • FCV புகையிலை <=> சிறப்பு CTRI, ஜெயஸ்ரீ, சிறப்பு கோதாவரி, G 11
    • பீ.டி.புகையிலை <=> கிளு 20, சுரட்டி 20, ஆனந்த் 23, ஆனந்த் 119 மற்றும் ஹங்குமாத்ரி
    • சிகார் மற்றும் சுருட்டு <=> யாருமைக்கப்பல்,மொன்னக்கப்பல், மன்டிவல், அடுக்குமல்லி
    • ஹுக்கா புகையிலை <=> ஆனந்த் 145, எஸ் 57, V.D.1, VTK 1, WR 2 மற்றும் P.V. 7
    • சூயிங்கம் மற்றும் மூக்குப் பொடி <=> சிவப்பூர், சோனா, பாக்கியலஷ்மி, பூசா, பிரபா, மீனாட்சி
    • நாடு, பர்லி, இலங்கை HDBRG <=> பெடைவிட்டானம், ரங்காபுரம் மற்றும் விஸ்வநாத்

    >  பருவங்கள்


    • நாற்றங்காலுக்கு விதைப்பு மற்றும் நடவுக்கு உகந்த நேரம் இடத்திற்கு இடம் மாறுபடுகிறது மற்றும் ஒரே இடத்தில் இருந்தாலும் கூட வெவ்வேறு வகை மற்றும் வகைகளுக்கு வேறுபடுகிறது. பொதுவாக, நாற்றங்கால் தயாரிப்பது ஏப்ரல் முதல் மே வரையும் மற்றும் அக்டோபர் வரை நடலாம்.

    >  களை நிர்வாகம்


    • புகையிலையில் களைப் பிரச்சினைகள், விதைப்பாத்திகள் மற்றும் நடப்பட்ட பயிர் இரண்டிலும் தீவிரமாக உள்ளன. ஆர்பங்கி புகையிலையில் ஒரு முக்கிய களை ஆகிறது.

    >  நாற்றங்கால்


    • புகையிலை நாற்றங்காலில் களை எடுத்தலில் மிகவும் பொதுவான முறை, வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல நாடுகளில் கையால் களை எடுத்தல் ஆகும். வளர்ந்த நாடுகளில், ரசாயனப் பொருட்கள் சக்தியுள்ளதாக களை யைக் கட்டுப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. புகையிலை நாற்றங்காலுக்குப் பயன்படுத்தப்படும் தற்காலிக மண் கிருமி நாசினிகளில் சில:
    • மீத்தைல் புரோமைடு (8-10 கிலோ)
    • மேதம் (2-5 கிலோ)
    • கால்சியம் சைனமைடு (50-60 கிலோ)

    >  நடவுவயல்


    • நடப்பட்ட பயிரில் பயிருடனான களை போட்டி என்பது நடவு செய்த பிறகு முதல் 60 நாட்கள் வரை இருக்கும். நடப்பட்ட பயிரில், உள்வரிசை சாகுபடி பரந்த வரிசை இடைவெளி என்பது சாத்தியமே. எனவே, பயிர்களுக்கு கைக்களை தொடர்ந்து ஒன்று அல்லது இரண்டு சாகுபடிகளுக்குக் களை எடுத்தால் களைகளுக்குப் போதுமான கட்டுப்பாட்டைக் கொடுக்கின்றன. முன்னால் இருந்த மூலிகைகளுக்கு புகையிலை மிகவும் தூண்டக்கூடியதாக உள்ளது. PPI களைக்கொல்லிகள் திறன் மிகுந்த களை கட்டுப்பாட்டை வழங்குகிறது. பொதுவாக வயலில் நாற்றுகள் நடுவதற்கு முன் பரிந்துரைக்கப்படும் களைக்கொல்லிகள்
    • புரோனமைடு (1.5-2)
    • புளுகுளோரலின் (2-3)
    • ஐசோபுரோபலீன் (1.5-2)
    • ஐசோஆக்ஸபென் (1.5-2.5)
    • ஓராபங்கி செரூனூவா ஒட்டுண்ணி களையைக் கட்டுப்படுத்த DMTT குருணை 300-500 கிலோ ஒரு ஹெக்டேருக்கு என்ற விகிதத்தில் நடவு செய்வதற்கு 30-40 நாட்களுக்கு முன்னதாக இடுவது சிறந்ததாகும்.

    >   அறுவடை


    • புகையிலையின் வெவ்வேறு வகைகளுக்கு, முதிர்ச்சி அறிகுறிகள் மற்றும் அறுவடை முறைகள் வேறுபடுகின்றன. முக்கியமாக, அறுவடையில் இரண்டு முறைகள் உள்ளன. இலையைத் தேர்ந்தெடுத்தல் மற்றும் தண்டு வெட்டுதல் முறை:

    >  இலையைத் தேர்ந்தெடுத்தல்(பிரைமிங்)


    • பொதுவாகப் புகையிலையில், சிறிய இலைகள் முதிர்ச்சி அடையும் அதனைத் தொடர்ந்து மேல் இலைகள், இப்படியே வழக்கமாக ஏறுவரிசையில் நடக்கும். அறுவடையின் போது ஒரு சில இலைகளை அகற்றும் போது அவை முதிர்ந்திருக்கும். இந்த முறையைப் இலையைத் தேர்ந்தெடுத்தல் (பிரைமிங்) என அழைக்கிறோம். சிகரெட் மற்றும் சுருட்டுப் புகையிலைகளை இந்த முறையில் அறுவடை செய்கிறோம்.

    >  தண்டு வெட்டுதல் முறை


    • சிகரெட், சுருட்டு, மெல்லும் புகையிலை, பி.டி. மற்றும் ஹூக்கா புகையிலைகள் தண்டு வெட்டி முறை மூலம் அறுவடை செய்யப்படுகின்றன. இந்த முறையில், தாவரங்களை அரிவாள் கொண்டு தரையை ஒட்டி வெட்டி பொதுவாக இரவிலேயே தரையில் தரம் பிரிக்க விட்டு விட வேண்டும். அதைத் தொடர்ந்து கையாளும் முறை சீர்மையாக்கும் முறையைப் பொருத்து வேறுபடுகிறது. அறுவடைக்கு சரியான நேரம் அதிகபட்ச இலைகள் முதிர்ந்த நிலையில் உள்ளபோது ஆகும் .

    >  சீர்மையாக்குதல்


    • சீர்மையாக்கும் முறை என்பது பட்டினி நிகழ்வின் மெதுவான செயல்பாடு காற்றோட்டம், வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் கட்டுப்பாடு போன்ற பல்வேறு நிலைகள் மூலம் எட்டப்பட்ட பொருத்தமான உடல் மற்றும் இரசாயனப் பண்புகள், காய்ந்த இலையை உற்பத்தி செய்வதற்கு ஆகும். குணப்படுத்தும் முறையின் நிறைவாக, இலை உயிரியல் ரீதியாக இறந்தால் கூட, சில செயல்முறை என்சைம்கள் இருக்கலாம். புதிதாக அறுவடை செய்யப்பட்ட இலையை மூன்று கூறுகளாகப் பிரிக்கலாம். நிலையான குழு, டைனமிக் குழு மற்றும் நைட்ரஜன் குழு மூன்று வகுப்புகள் உள்ளன.
    • நிலையான குழுவில் சில மாற்றங்கள் நடைபெறும் மற்றும் நார் சத்து, செல்லுலோஸ், ஹெமிசெல்லுலோஸ், பெக்டின், டானின் முதலியன கொண்டுள்ளது. நைட்ரஜன் குழுவில் குறைவான மாற்றங்கள் நடைபெறும். கூறுகளான புரதங்கள், அம்மோனியாவுடன் கரையக்கூடிய நைட்ரஜன், நைட்ரேட், அமைடுகள் மற்றும் ஆல்கலாய்டுகள் உட்பட எல்லாம் அடங்கும். டைனமிக் குழுவில் முக்கிய மாற்றங்கள் நடைபெறும், அவைகள், சர்க்கரைகள், மாவுகள் மற்றும் கரிம அமிலங்களால் செய்யப்படுகிறது.

    >  தரம் பிரித்தல்


    • சீர்மைபடுத்திய பின்னர், இலைகளை வரிசைப்படுத்தி இலையின் நிறம் மற்றும் சேதம் கொண்டு இலைகள் தரப்படுத்தப்படும். FCV புகையிலையில் தரத்தின் மிக முக்கியமான உறுப்புகள், நிறம், அமைப்பு, அளவு, மாசு, பலம் வெள்ளை சாம்பலுடன் எரியும் மற்றும் உடன்பட்ட சுவை

    No comments:
    Write comments